திருமணத்துக்கு முன்பே “செக்ஸ்” - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

12/21/2010

திருமணத்துக்கு முன்பே “செக்ஸ்”

திருமணத்துக்கு முன்பே “செக்ஸ்”: செல்போன் பெருக்கத்தால் கள்ளத்தொடர்பு அதிகரிப்பு; ஆய்வில் தகவல்.

ஒரு காலத்தில் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கடித போக்குவரத்து மட்டுமே இருந்தது. பின்னர் டெலிபோன்கள் வந்தன. ஆனாலும் வசதி படைத்தவர்கள் வீடுகளில் மட்டுமே இருந்தனர்.
ஆனால் இப்போது செல்போன் வந்து விட்டது. ஆரம்பத்தில் ஒரு சிலரிடமே செல்போன் இருந்த நிலை மாறி இப்போது செல்போன் இல் லாதவர்களே இல்லை என்ற நிலைக்கு சென்றுள்ளது.
இது மக்களுக்கு பெரும் நன்மை அளித்தாலும் ஒருசில பாதிப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. இப்போதெல்லாம் திருமணத்துக்கு முன்பே செக்ஸ், கள்ளத்தொடர்பு போன்றவை அதிகரித்து உள்ளன. இதற்கு செல்போன் தான் காரணம் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் செயல்படும் சினாட் சமூக முன்னணி என்ற கிறிஸ்தவ அமைப்பு இந்த ஆய்வை நடத்தியது. அதில் செல்போன் பெருக்கத்தால் மக்கள் ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொண்டு விடுகிறார்கள்.

இதன் மூலம் ஆண்- பெண் நட்பு அதிகரித்து கள்ளத்தொடர்பு, திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு போன்றவை அதிகரித்து இருக்கிறது என தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் ஆர்வம் இளைஞர்களி டையே அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot