மெல்லிதயம் கொண்டோரே... - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

6/25/2011

மெல்லிதயம் கொண்டோரே...


சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். 

எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்...வாரீர்...

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.

13 comments:

 1. வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் .....

  ReplyDelete
 2. நெகிழ்ச்சியான அழைப்பு
  வர ஆசைதான்
  வர முடியாது என்பது கவலையாக இருக்கு நண்பா
  உங்கள் அழைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உருக்கமான அழைப்பு

  ReplyDelete
 4. //இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்//

  ஆம், தமிழகத்தில் இருக்கும் நண்பர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும். என்னால் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.

  ReplyDelete
 5. அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே?.///

  உண்மைதான். நம் ஊடகங்களின் தரம் தமிழன் என்கிற முறையில் வெட்கங் கொள்ள வைக்கிறது.

  ReplyDelete
 6. நல்லதே நடக்கும் நண்பா!

  ReplyDelete
 7. இது ஒரு ஆரம்பம்தான்.நல்லது நடக்கப் பிரார்த்திப்போம்!

  ReplyDelete
 8. நல்லதே நடக்க பிரார்த்திப்போம்

  ReplyDelete
 9. நல்லது நடந்தால் சந்தோசம் நண்பா....
  முயற்சிப்போம்...

  உங்கள் இனப் பற்றுதலுக்கு
  வாழ்த்துக்கள்.........

  ReplyDelete
 10. தமிழ் உணர்வுள்ள இயலாமையை உணர்த்தி இயலுவதை வேண்டும் பதிவு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 11. தங்களின் சமுதாய சிந்தனைக்கு ஒரு சல்யூட்

  ReplyDelete
 12. உணர்வெழுச்சியுடன் இந் நிகழ்வானது சிறப்புற அமைய வாழ்த்துகிறேன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot