Ads 468x60px

7/27/2011

இலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? பகிர் தகவல்


இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் வட பகுதியில் தமிழர் கட்சிகளின் கூட் டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் ராஜபக்சே தலை மையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், வட பகுதி யில் பெற்றுள்ள தோல்வி ராஜபக்சே அரசுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வட பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 18 மாகாண சபைகளை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடபகுதியில் இரண்டு மாகாண சபைகளை மட்டுமே பெற்றுள்ளது.இலங்கையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு வடபகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடை பெற்றது குறிப்பிடத்தக்கது. மக்கள் ஆர்வத்து டன் வந்து வாக்களித்தனர். இலங்கைத் தமிழ் மக்கள் அமைதியையும் ஜனநாயகத்தையுமே விரும்புகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. ஆனால் ராஜபக்சேவுக்கு இதில் கொஞ்சம்கூட அக்கறை இருப்பதாக தெரியவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை அவரால் பெற முடிய வில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.

இலங்கையில் வாழும் தமிழ்மக்கள் அனுப வித்த, அனுபவித்துவரும் துன்பதுயரங்கள் உலக வரலாற்றில் மிகப்பெரிய சோக காவிய மாகும். உள்நாட்டுப்போரால் வாழ்க்கையை தொலைத்துவிட்டனர் அந்த மக்கள். முள்ளி வாய்க்கால் பகுதியில் இறுதியாக நடந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகினர். இன் னமும் கூட முள்வேலி முகாம்களில் எதிர்கா லம் குறித்த கேள்விக்குறியோடு உடலை சுமையாக நினைத்து வாழ்வோர் ஏராளம்.

இவர்களை தங்களது சொந்த வாழ்விடத்தில் குடியமர்த்தி, அவர்களுக்கு நிவாரணம் அளிக்க ராஜபக்சே அரசு உருப்படியான எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை. மாறாக தமிழர்கள் வசித்த பகுதிகளில் பெரும்பான்மை மக்களை குடியேற்றுவது, தமிழர்களின் பண்பாட்டு அடை யாளங்களை அழிக்க முயல்வது, மத வழிபாட்டு உரிமையை மறுப்பது, அவர்களின் தாய்மொழி யான தமிழ்மொழியை அங்கீகரிக்க மறுப்பது போன்ற கொடுமைகள் அந்த மக்களின் மனதில் ஆறாத ரணமாக மாறியுள்ளது. இந்த கோபம்தான் தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது.

தேர்தல் முடிவை வன்மத்துடன் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கு எதிரான செயல்களை அதிகரிக்க ராஜபக்சே அரசு முயலக்கூடாது. மாறாக ஏற்கெனவே வாக்குறுதி அளித்தபடி முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களை மறு குடியமர்த்தி, அவர்கள் தங்களது சொந்த வாழ்விடத்தில் கவுரவத்தோடும் கண்ணியத்தோ டும் வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளை யும் செய்ய வேண்டும்.

சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களுக்கு அடங்கி, உரிமைகளை இழந்து வாழ வேண்டும் என்ற சர்வாதிகார மனநிலையைக் கைவிட்டு, தமிழர்களும் இலங்கையின் குடி மக்கள்; அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்ற உணர்வோடு இனியேனும் நிவா ரண பணிகளை மேற்கொள்ளவும், காயம்பட்ட சமூகத்திற்கு மருந்திடவும் ராஜபக்சே அரசு முன் வரவேண்டும். தாங்கள் அனைத்து வகை யிலும் சமமாக நடத்தப்படுகிறோம் என்ற உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்படும் வகையில் நடந்து கொள்வது ராஜபக்சே அரசின் பொறுப்பாகும்.

40 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"