Ads 468x60px

9/07/2011

விலை உயர்வின் விபரீதப் பின்னணி - ஒரு விரிவான அலசல்


உணவுப்பொருள் மீதான பணவீக்கம் இரட் டை இலக்கத்தை எட்டியுள்ளது. ஐந்து மாத இடைவெளிக்குப்பின் 10.05 சதவீதமாக உண வுப் பொருள் மீதான பணவீக்கம் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும் போது உணவுப்பொருட்களின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. வெங்காய விலை 57.1 சதவீத மும் உருளைக்கிழங்கு விலை 13.33 சதவீதமும் பழங்களின் ஒட்டுமொத்த விலை 21.58 சதவீத மும் காய்கறி விலை 18.72 சதவீதமும் அதிகரித் துள்ளது. முட்டை, இறைச்சி, மீன் ஆகியவற்றின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.


விலைவாசியைக் குறைக்க காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வழக்கம்போல ஆரூடம் கூறி வருகிறார். வரக் கூடிய மாதங்களில் உணவுப்பொருட்களின் விலை குறையும் என்றும், இதனால் இந்தப் பொருட்களின் மீதான பணவீக்கம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார். பருவ மழை சிறப்பாக இருப்பதால் வேளாண் பொருள் விளைச்சல் அதிகரிக்கும். இதனால் விலை குறையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாய விளைபொருளின் விலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் இடையில் முக்கியப் பங்குண்டு என்பது மறுக்கக்கூடிய ஒன்றல்ல. ஆனால் அதே நேரத்தில் இன்றைக்கு உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிப்பது இயற்கை மட்டுமல்ல, மத்திய-மாநில அரசுகள் பின்பற்றும் தாராளமய பொருளாதாரக் கொள்கை யும், இதனடிப்படையிலான முன்பேர வர்த்தக நடைமுறையும் விலை உயர்வுக்கு மிக முக்கியக் காரணமாக உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

முன்பேர வர்த்தக முறையின் தீங்கு குறித்து ஆயிரமாயிரம் காரணங்களை இடதுசாரிக்கட்சி களும் உள்நாட்டு சிறு வர்த்தக அமைப்புகளும் பட்டியலிட்டு இந்த முறைக்கு முடிவுகட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. 


முன்பேர வர்த்தக முறையில் சாதகமான பலன் என்பது குறித்து ஒரு காரணத்தைக்கூட மத்திய ஆட்சி யாளர்கள் முன்வைக்கவில்லை. ஆனால் அந்த முறையை தடை செய்ய இவர்கள் தயாராக இல்லை. வர்த்தகச் சூதாடிகள் பலன் பெறுகிறார் கள் என்பதைத் தவிர நாட்டுக்கோ, நாட்டு மக் களுக்கோ இந்த முறையால் நயா பைசா அளவுக்குக்கூட பயனில்லை.

இது ஒருபுறமிருக்க, ஒட்டுமொத்த விவசாய மும் நிலைகுலைந்து வருவது உணவுப்பொருள் மீதான பணவீக்கத்திற்கு ஒரு காரணமாக உள் ளது. அரசு பின்பற்றும் விவசாயிகளுக்கு விரோத மான கொள்கையால் உரமானியம் போன்றவை வெட்டப்படுகின்றன. 


விவசாயத்துறையே பன் னாட்டு நிறுவனங்களின் சூதாட்டக்களமாக மாற் றப்பட்டு வருகிறது. நமது நாட்டின் விவசாயத் தை அந்நியர்களிடம் முற்றாக ஒப்படைக்கவும் அரிசி, கோதுமைக்குக்கூட அடுத்த நாடுகளி டம் கையேந்தி நிற்பதற்கான நிலையை மத் திய ஆட்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

உணவுப்பொருள் இறக்குமதியில் பெரும் தொகை களவாடப்படுகிறது. எனவேதான் ஆட்சியாளர்களுக்கு உணவுப்பொருள் மீதான பணவீக்கம் உயர்வது குறித்து கவலையில்லை. இறக்குமதி செய்து கொள்ளையடிக்கலாம் என்று திட்ட மிடுகிறார்கள். விவசாயிகளும் சாதாரண எளிய மக்களும் எக்கேடுகெட்டால் அவர்களுக்கு என்ன?கவலைப்பட வேண்டியது மக்களும், மக்களுக்காகப் பாடுபடும் இயக்கங்கள்தான். சிந்திப்போம் உறவுகளே...

28 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"