Ads 468x60px

9/14/2011

எங்களுக்கு மீன் வேண்டாம் அதைப் பிடிக்க கற்றுகொடுங்கள்...


ந்த ஒரு மனிதனும், தான் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்து, அதன் மூலம் ஒரு பொருளை வாங்கினால், அதனுடைய மதிப்பே தனி. அதே பொருள் அவனுக்கு இலவசமாக கிடைக்கும் போது, அதன் மதிப்பை அறியமாட்டான். 

தவணை முறையில், ஒரு பைக் வாங்கினால், அதை கண்ணாக பாவித்து, பாதுகாத்து பயன்படுத்துவான். அதே பைக், மாமனாரால் இலவசமாக கிடைத்தால், அதை துச்சமாக நினைப்பான்; இது இயற்கையின் நியதி.

பசித்தவனுக்கு மீன்களைக் கொடுத்து உதவுவதைக் காட்டிலும், எப்படி மீன் பிடிப்பது என்பதை கற்றுக் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேறுவான் என்பது பழமொழி. 

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மக்களுக்கு, உழைக்கும் பண்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

துரியோதனன், யார் எந்த நேரத்தில் வந்தாலும், அறுசுவை உணவை வாரி வழங்குவானாம். அது அவர்கள் பசி தீரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் அல்ல; செஞ்சோற்றுக் கடன் தீர, அவர்களை தன் பக்கம் சாய்த்துக் கொள்ள கையாண்ட தந்திரம். 

அதுபோல் தான், தி.மு.க., வழங்கிய இலவசங்களும்.ஆனால், தமிழக மக்கள் தெளிவாகச் செயல்பட்டு, இலவசங்கள் எங்களுக்குத் தேவையில்லையென்று, அவற்றை துச்சமென எண்ணி, ஆட்சிக்கே ஒரு முற்றுப்புள்ளி வைத்து, பாடம் புகட்டிவிட்டனர்.

ஜெ., ஆட்சிக்கு வந்ததும், மீண்டும் இலவசங்கள் என அறிவித்தது, சற்று அதிர்ச்சியைக் கொடுக்கத் தான் செய்கிறது. அவர் சொல்லும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தாலும், விரைவில் படிப்படியாக இலவசங்கள் ஒழிக்கப்பட வேண்டும். வழங்கப்படுகிற இலவசங்கள், உண்மையில் வறுமைக்கோட்டிற்குக் கீழே இருப்பவர்களுக்குப் போய்ச் சேர்ந்து, பயன்பட்டால், அதை பாராட்டலாம். 

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது சாதாரண விஷயமா? அதை பெற்றுக்கொண்டு அப்படியே, "மாடி வீட்டு ஏழைகளுக்கு' கிலோ நான்கு அல்லது ஐந்து ரூபாய்க்கு விற்றுவிடுகின்றனர். நாற்பது ரூபாய் கொடுத்து, ஒரு கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு, நான்கு ரூபாய்க்கு கிடைக்கும் போது வேட்டை தான்.

இந்த இலவச அரிசி திட்டம், படிப்படியாக குறைக்கப்பட்டு முழுமையாக நிறுத்தப்படவேண்டும். தேவையற்ற இந்த செயலால், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். அனைத்து மக்களும் வாங்கும்படி, அரிசியின் விலையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளுவது தான், விவேகமான செயல்.

அதே போல் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி, போன்றவையும் இலவசமாக வழங்கப்படுவது, இதுவே கடைசி முறையாக இருக்க வேண்டும். மக்களையும், இளைய சமுதாயத்தையும், சோம்பேறிகளாக்காமல், கடுமையாக உழைக்கவும், விவசாயத்தைக் கையாண்டு உற்பத்தியை பெருக்க வழிவகுத்துக் கொடுப்பதுமே, அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

23 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"