Ads 468x60px

11/28/2011

பெட்ரோல் விலை!? மறைக்கப்படும் மர்மங்கள்...


பெட்ரோல், இன்று இந்தியாவில் அடிக்கடி விலை ஏறும் ஒரு பொருள். எப்போது உயரும் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்று உலகளவில்   கச்சா எண்ணெய்யின் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது உயர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. ஆனால் இந்த விலை ஏற்றம் ஏன்?


இந்த பெட்ரோல் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

நாம் பயன்படுத்தும் பெட்ரோலை உற்பத்தி செய்ய 90 %  கச்சா எண்ணெய்யும், 10%  நம்நாட்டிலேயே தயாராகும் பொருட்களும் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் உற்பத்தி செய்ய வேண்டும் எனில் கச்சா எண்ணெய்க்கும் சேர்த்து ஆகும் செலவு ரூ 26.11(2008- 09 ம் ஆண்டு புள்ளி விபரப்படி) ஆகும். 2009- 10ம் ஆண்டு ரூ. 21.75 என்று அரசின் புள்ளி விபரங்களே கூறுகிறது.


ஆனால் ஆளும் மத்தியஅரசு எந்த வில் எல்லாம் வரியை கூட்ட முடியுமோ அப்படி கூட்டி இந்த பெட்ரோலின் விலையை உயர்த்து கிறது. 

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் கட்டும் வரிகள்:  (24.8.2011 அன்றைய நிலவரப்படி)


பெட்ரோலின் ஆதார விலை - ரூபாய் 24.23 காசுகள்,
அதற்கான சுங்கத்தீர்வை வரி - ரூபாய் 14.35 காசுகள்,
கல்விவரி - ரூபாய் 0.43 காசுகள்,
விற்பனை செய்பவர்களுக்கான கமிஷன் - ரூபாய் 1.05 காசுகள்,
அதன் சுத்திகரிப்பு செலவு - ரூபாய் 0.52 காசுகள்,
சுத்திகரிக்கும் பொது ஆகும் மூலதனச்செலவு - ரூபாய் 6.00,
மதிப்புக்கூட்டு வரி - ரூபாய் 5. 50 காசுகள்,
கச்சா எண்ணெய்க்கு விதிக்கப்படும் சுங்கவரி- ரூபாய் 1.10 காசுகள்,
பெட்ரோலுக்கான சுங்கவரி - ரூபாய் 1. 54 காசுகள்,
போக்குவரத்து செலவு- ரூபாய் 6.00, 
ஆக மொத்தம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 60.72 காசுகள் ஆகிறது. 

இப்படித்தான் பெட்ரோல் விலை வரிகளாலையே மூன்று மடங்காகிறது. இது தவிர சுத்திகரிக்கும் எண்ணெய் நிறுவனங்களின் லாபம் வேறு.

பின்பு ஏன் பெட்ரோல் விலை அடிக்கடி ஏறாது?

23 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"