Ads 468x60px

7/29/2011

பட்டினியால் மடியும் பிஞ்சுகள் : "ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் உயிரிழக்கின்றனர்'இந்த செய்தியை படித்தவுடன், ஏன் என்று கேட்க தோன்றும். எதுவும் புது நோய் பரவியுள்ளதா எனவும் கருத நேரும். ஆனால் இக்குழந்தைகளின் இறப்புக்கு காரணம் பட்டினி, என்றால் நம்ப முடிகிறதா?

 இது நமது நாட்டில் அல்ல. ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் தான் இந்த கொடூரம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்நாட்டில் பல ஆண்டுகளாக பட்டினி பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஐ.நா., சபை தெற்கு சோமாலியா பகுதியை "பஞ்சத்துக்கு இலக்கான பகுதி' என அறிவித்துள்ளது. இப்பகுதியில் ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை பலியாகி வருகிறது. 

உலகை வசீகரிக்கும் பாகிஸ்தான் பெண் அமைச்சர்!


பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சராக ஹினா ரப்பனி கர்  
(hina rabbani khar)நியமிக்கப்பட்டு ஒரு வார காலம்தான் ஆகிறது. அதற்குள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துவிட்டார் ஹினா. அவரது புகைபடங்களை பிரசுரிப்பதிலும், அவர் தொடர்பான வீடியோ கிளிப்பிங்குளை ஒளிபரப்பவும் சர்வதேச ஊடகங்கள் போட்டிபோடுகின்றன.

இதுவரை "பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பாகிஸ்தான் அக்கறை காண்பிப்பதில்லை; தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் திகழ்கிறது..." என்றெல்லாம் பாகிஸ்தான் குறித்து எதிர்மறை கருத்துக்களையும், அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டு வந்த உலகின் முன்னணி நாளிதழ்கள் மற்றும் வார சஞ்சிகைகளெல்லாம், தற்போது மாடல் அழகி போன்ற வசீகர தோற்றமும், அறிவு திறனும் கொண்ட இளம் பெண் ஒருவரை அயலுறவுத் துறை அமைச்சராக நியமித்து, பாகிஸ்தான் தற்போது சந்தித்து வரும் நெருக்கடியை விவேகமாக எதிர்கொள்ள தொடங்கி உள்ளதாக புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கின்றன.


அல் காய்தா தலைவர் ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் வைத்து அமெரிக்க படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம், பாகிஸ்தானின் இமேஜ் உலக நாடுகளில் அதல பாதாளத்திற்கு சரிந்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் மீது எப்போதும் இருந்துவரும் குற்றச்சாட்டை, பின்லேடனின் பதுங்கல் நிரூபிக்கும் விதமாக அமைந்துவிட்டதால் பாகிஸ்தான், உலக நாடுகளிடம் அம்பலப்பட்டு போனது.


இதனைத் தொடர்ந்து அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானுக்கு சமீப காலமாக கடுமையான நெருக்கடிகள் வந்தன. குறிப்பாக பாகிஸ்தான் இராணுவத்திலும், உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யிலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவான சக்திகள் உள்ளதாக, அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ குற்றம்சாட்டியது.

ஆனால் பாகிஸ்தான் அதற்கு கடுமையாக மறுப்பு தெரிவித்து, ஆதாரமில்லாமல் குற்றம்சாட்ட வேண்டாம் என்று கூறவே, சிஐஏ-வின் தலைவர் விமானத்தை பிடித்து நேரடியாக இஸ்லாமாபாத் வந்திறங்கினார்.


அங்கு அவர் பாகிஸ்தான் இராணுவ மற்றும் உளவுத் துறை அதிகாரிகளை சந்தித்து, அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வீடியோ ஆதாரம் ஒன்றை காட்டியதாகவும், அதனை பார்த்து பாகிஸ்தான் அதிகாரிகள் வாயடைத்துபோய் தலையை தொங்கப்போட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.


இந்த சூழ்நிலையில்தான் மும்பையில் அண்மையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த சம்பவம் பாகிஸ்தான் மீது மீண்டும் உலக நாடுகளின் பார்வையை திருப்பவே, அந்நாடு வெகுவாகவே அவஸ்தைக்குள்ளானது.

வார்த்தையில் கலந்துகொண்டால் எதிர் தரப்பின் கடுமையை குறைக்க முடியும் என்றெண்ணி, வசீகரிக்கும் அழகு கொண்ட ஹினா ரப்பானி கர் என்ற 34 வயது அழகு பெண்ணை தனது அயலுறவுத் துறை அமைச்சராக கடந்த 20 ஆம் தேதி நியமித்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வரலாற்றில் அதன் அயலுறவுத் துறை அமைச்சராக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை நினைவுபடுத்தும் இந்த அழகு அமைச்சரும், பாரம்பரிய அரசியல் குடும்ப பின்னணி கொண்டவர்தான்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள முல்டான் என்ற இடத்த்ல் 1977 ஆம் ஆண்டு ஜனவரி 19ல் பிறந்த ஹினாவின் குடும்பம், செல்வ செழிப்பு மிக்க குடும்பமும் கூட. ஹினா குடும்பத்தினருக்கு சொந்தமாக ஏராளமான மீன் பிடி படகுகள் கொண்ட மீன் பிடித் தொழிலும், மாந்தோப்புகளும், கரும்பு வயல்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாய தொழில்களும் உள்ளன.


லாகூர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அறிவியலில் பி. எஸ்சி பட்டம்பெற்ற ஹினா, அமெரிக்க பல்கலைக்கழகம் ஒன்றில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் எம். எஸ்சி பட்ட மேற்படிப்பு பயின்றுள்ளார்.

இவரது தந்தை குலாம் ரப்பானி, பஞ்சாப் மாகாணத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர். இவரது மாமாதான் பஞ்சாப் மாகாண முதலமைச்சர்.

ஃபெரோஷ் குல்சார் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டுள்ள ஹினாவுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள்.

தந்தையும், மாமாவும் அரசியலில் இருக்க ஹினாவுக்கு அந்த ஆசை வராமல் போகுமா என்ன? 2002 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் நாடாளுமனற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹினாவுக்கு, அரசியலில் அப்போது முதல் ஏறுமுகம்தான்.


2008 தேர்தலில் ஹினாவுக்கு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுக்க மறுக்கவே, பாகிஸ்தான் மக்கள் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு 84, 000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று மீண்டும் எம். பியானார்.

தொடர்ந்து பிரதமர் யூசுப் ரஸா கிலானி தலைமையிலான அமைச்சரவையில் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை இணையமைச்சராக பணியாற்றிய அவர், 2011 பிப்ரவரியில் அயலுறவுத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டார்.


இந்நிலையில் அயலுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த ஷா முகமத் குரேஷி அப்பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதும், 2011 பிப்ரவரி 13 ல் அயலுறவுத் துறையின் தற்காலிக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

7/28/2011

ஆந்திராவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விற்கப்படும் பெண்கள் (வீடியோ இணைப்புடன்)ந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரத்துக்கு கல்வி கற்கின்றமைக்கு வருகின்ற சூடான், சோமாலியா போன்ற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அப்பாவிப் பாமர ஏழை முஸ்லிம் பெண்களை செக்ஸ் வைத்துக் கொள்கின்றமைக்காக தற்காலிகமாக திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பது அம்பலத்துக்கு வந்து உள்ளது. 


திருமணம் செய்கின்றவர்களின் சக நண்பர்களும் இப்பெண்களுடன் உறவு வைத்துக் கொள்கின்றார்கள் என்பது அடுத்த அதிர்ச்சித் தகவல். பெண்களின் பெற்றோருக்கு வெளிநாட்டு மாணவர்கள் 50 ஆயிரம் இந்திய ரூபாய் வரை கொடுப்பார்கள்.

இப்படியும் ஒரு மாணவியா? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 6
சீருடை அழுக்கென்று
சினந்தேன் 
அந்த மாணவியை‌...

மறுநாள்
ஈரச் சீருடையோடு வந்தாள்..

உடம்புச் சூட்டில்
உலர்ந்துவிடும் என்று
மாட்டிவிட்டாளாம் அம்மா..

காய்ந்த வயிற்றிலும்
உலரவில்லை
ஈர விழியில் நனைந்த
ஓருடை..


7/27/2011

ராஜபக்ஷவுக்கு எதிராக கையெழுத்திட விஜய் மறுத்தது ஏன்? பரபரப்புத் தகவல்கள்!! (புகைப்படங்களுடன்)இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு எதிராக நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்த செய்திதான் கோடம்பாக்கத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒருபுறம் அவர் ஏன் கையெழுத்து போட மறுத்தார்? என்று பட்டிமன்றம் நடத்தாத குறையாக விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. 

இலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? பகிர் தகவல்


இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் வட பகுதியில் தமிழர் கட்சிகளின் கூட் டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் ராஜபக்சே தலை மையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், வட பகுதி யில் பெற்றுள்ள தோல்வி ராஜபக்சே அரசுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வட பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 18 மாகாண சபைகளை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடபகுதியில் இரண்டு மாகாண சபைகளை மட்டுமே பெற்றுள்ளது.

7/26/2011

இந்தியாவின் வருங்கால பிரதமர்.. இப்படி செய்யலாமா?


ந்தியாவின் வருங்கால பிரதமர், இந்தியாவின் எதிர்காலம் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களால் ராகுல் தற்போது வர்ணிக்கப்படுகிறார். 

தத்தம் பதவிகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளவும், உயர்த்திக் கொள்ளவுமே, இவர்கள் அவ்வாறு கூறுகின்றனர் என்பது, நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெகு விரைவிலேயே, சட்டசபை தேர்தலை சந்திக்கப் போகும் உ.பி.,யில் மட்டும், விவசாயிகளுக்காக, ராகுல் தினமும் போராடுகிறார்.

வயலில் இறங்கி நடக்கிறார்; ஏழைகள் வீட்டில் தேநீர் அருந்துகிறார்; தடையை மீறி ஊர்வலம் செல்கிறார். 

இதைப் பார்க்கும் போது, வேடிக்கையாக இருக்கிறது. ஏன், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் விவசாயிகள் இல்லையா அல்லது அவர்களுக்கு பிரச்னைகள் தான் இல்லையா?

இந்தியாவின் ஒரு பகுதியான தமிழகத்தில், நித்தம் உயிர் பலி கொடுக்கும் மீனவர்களுக்காக, ஒரு ஊர்வலமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த, இங்கு அவர் வரட்டுமே?

அப்போது கூறலாம், அவர் இந்தியாவின் எதிர்காலம் என்று!

உண்மைதானே உறவுகளே?

7/25/2011

இயலாமையை பகிர்ந்து கொள்ளும் இடமா இது ? - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 5

வீட்ல எப்பப் பார்த்தாலும்
டி.வி பாத்துட்டே இருக்கான் 
- ஆசிரியரிடம் பெற்றோர்.


ழுதிப் போடறத எதுவும் 
உங்க புள்ள படிக்கறதே இல்லை 
- பெற்றோரிடம் ஆசிரியர்.


யலாமையை
பகிர்ந்து கொள்ளும் 
இடமாகவே இருக்கிறது
ஒவ்வோர்
பெற்றோர் ஆசிரியர்
சந்திப்பும்..!

7/23/2011

குடி குடியைக் கெடுக்குமா? TASMACஇரண்டு போலீஸ் அதிகாரிகள், குடித்துவிட்டு, வீதியில் சண்டை போட்டுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி, குடிபோதையில் ஒரு பெண்ணை கடத்தினார். போதையில் இருந்த ஒரு தந்தை, தன் மகளை கெடுத்துள்ளார். இன்னும், இதுபோன்ற எத்தனையோ விஷயங்கள் நடந்து வருகின்றன. 

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு அருவருப்பாக உள்ளது. ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டிய காவல் துறையினரும், தெய்வமாக மதிக்கப்படக்கூடிய தந்தை குலமும், இப்படி கேவலமாக நடந்துகொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தது யார்? 

7/22/2011

சில தண்டனைகள் இடம் மாறி விடுகின்றன - பள்ளியில் நடந்த சில உண்மைகள் - 4 நேற்று :


கெட்ட வார்த்தை 
பேசினான் என்று 
அடித்தேன் அவனை ..
அழுதுகொண்டே கேட்டான் 
அது கெட்ட வார்த்தையா சார் 
அப்படின்னா அர்த்தம் என்ன?


உறைத்தது எனக்கு..

7/21/2011

கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...

- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில் கொள்ளா இருப்பு...

- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் பணமும் கோடிகளில்...

- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...


7/20/2011

மாணவர்கள் தற்கொலை ஏன்?ஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தோல்வி, மாணவர் தற்கொலை, பிளஸ் 2 தேர்வில் தோல்வி, மாணவி மாயம் என, ஒவ்வொரு வருடமும், பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, இதுபோன்ற செய்திகள் வெளியாகத் தவறுவதில்லை. 


ஏன் இந்த அவலம்?


கல்வி என்பதை, போட்டிக் களமாக மட்டுமே பார்க்கும் நம்மவர்களின் மனோபாவமே, இதற்கு முழுக்காரணம். எந்த ஒரு துறையிலும், போட்டி என்பது ஆரோக்கியமான விஷயம் என்றாலும், போட்டி பிரதானம் ஆகிவிடும்போது, இதுபோல் அவலத்தில் தான் முடியும். 


இந்த போட்டி கலாசாரத்தால், கல்வி என்பது விலை பொருளாக மாறுவதை, இனி வரும் காலங்களில் யாராலும் தடுக்க முடியாது.பணம் கொழிக்கும் தொழிலாக கல்வி மாறிவிட்டதால், தனியார் நிறுவனங்கள் இதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன


ஒரு குழந்தையின் தொடக்கக் கல்விக்கே, லட்சக்கணக்கில் பணம் கேட்கும் கல்வி நிறுவனங்கள், அன்றாடம் முளைத்த வண்ணம் உள்ளன. இதுபோன்ற கல்வி நிறுவனங்கள், போட்டியில் வெற்றி பெறுவதை மட்டுமே முன்னிறுத்தி, மாணவர்களை தயார்படுத்துகின்றன.


தேர்வில் மாணவர்களை நல்ல மதிப்பெண் பெறச் செய்வதும், வளாக நேர்காணலில், முன்னணி நிறுவனங்களில் வேலை தேடித் தருவது மட்டுமே இவர்களின் இலக்கு. 


இதற்கு, அவர்கள் செய்யும் விளம்பரங்களே சாட்சி. எதிர்காலத்தில், சினேகாவையும், த்ரிஷாவையும், "சேர்ந்துக்கோ சேர்ந்துக்கோ' என்று விளம்பரங்களில் ஆட விட்டு, தங்கள் கல்லூரிக்கும், பள்ளிக்கும் ஆட்கள் சேர்த்தாலும் சேர்க்கலாம்.


அன்றாட வாழ்வில் ஏற்படும் சில தோல்விகளையும், சவால்களையும், மனவலிமையுடன் சந்திக்கும் பக்குவத்தையும், ஒரு நல்ல சமூகத்தையும் இவர்களால் எப்படி ஏற்படுத்த முடியும்?


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமையும் ஏமாப் புடைத்து என்ற வள்ளுவரின் கூற்றுப்படி உள்ள கல்வியே, ஒரு நல்ல சமூகத்தை அமைக்க உதவும்; அதுவே, இன்றைய தேவையும் கூட.


உண்மைதானே உறவுகளே...

வேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க?திர் கருத்தை
வெளிப்படுத்தினால்
மண்டைக்கனம்...


ரியானவற்றை
ஆமோதித்தால்
ஜால்ரா...


சும்மா இருப்பதே
சுகமென்றிருப்பின்
கழுவிய மீன்களில்
நழுவிய மீன்...


னித்துவமாய்
பேசினால்
தம்பட்டம்...


திராளியின்
முகம் பார்த்து
அகம் ஆய்ந்து
பேசக் கற்பதற்குள்
முடிந்து போகிறது
முக்கால்வாசி
ஆயுள்..

7/19/2011

எங்கே செல்லும் இந்த போதை - பள்ளி மாணவர்கள் : அதிர்ச்சி ரிப்போர்ட்


நாம் பயன்படுத்தும் ஆவணங்களிலுள்ள எழுத்துக்களை அழிக்க பயன்படுத்தப்படும் "ஒயிட்னர்' திரவ நெடியை நுகர்ந்து, பள்ளி மாணவர்கள் ஒருவித போதை ஏற்றிக்கொள்வதாக போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


பள்ளிச்சிறுவர்களுக்கு ஒயிட்னர் பாட்டில்களை வரைமுறையின்றி விற்பனை செய்த கடைக்காரர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டனர்; ஏராளமான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை மாநகர எல்லைக்குள் நடக்கும் சமூக விரோத செயல்கள் குறித்து பொதுமக்கள் எஸ்.எம். எஸ்., மூலம் தனக்கு தகவல் அனுப்பலாம் என, போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதையடுத்து, போலீஸ் கமிஷனரின் 94422 23277 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தினமும் 200க்கும் மேற்பட்ட எஸ். எம்.எஸ்., வந்து கொண்டிருக்கிறது. அடிதடி தகராறு, மோதல், பொதுஇடத்தில் ஒழுங்கீனம், சட்டவிரோதமாக மது விற்பனை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக வரும் தகவல்களின் பேரில் உடனடி நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.


மேலும், எஸ்.எம்.எஸ்., அனுப்பிய நபர்களுக்கு உடனடியாக பதில் தகவலையும் கமிஷனர் அனுப்பி வருகிறார். மிக முக்கியமான தகவல்கள் வந்தால், அதை அனுப்பிய நபரை நேரில் அழைத்தும் விசாரிக்கிறார். நேற்று முன்தினம் கமிஷனர் அமரேஷ் புஜாரியை சந்தித்த ஆர். எஸ்.புரத்தைச் சேர்ந்த ஒருவர், "திடுக்' புகார் ஒன்றை தெரிவித்தார். "ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள பள்ளி முன் ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்யும் இரு கடைகள் உள்ளன. அங்கு, ஆவண எழுத்துக்களை அழிக்க பயன்படும் ஒயிட்னர் பாட்டில்கள், பள்ளிச் சிறுவர்களுக்கும் அதிகளவில் விற்கப்படுகின்றன.


அவற்றை வாங்கிச் செல்லும் சிறுவர்கள், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து ஒருவித போதை ஏற்றிக்கொண்டு மயக்க நிலைக்கு செல்கின்றனர். எனது மகனும் அவ்வாறான செயலில் ஈடுபட்டு பாதிக்கப்பட்டுள்ளான்' என புகார் தெரிவித்துள்ளார்.


இது குறித்து விசாரணை நடத்த ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார், சிறுவர்கள் சிலரை சந்தேகத்துக்குரிய கடைகளுக்கு அனுப்பி, ஒயிட்னர் பாட்டில்களை வாங்கச் செய்தனர்; கடைக்காரரும் விபரமேதும் கேட்காமல் விற்பனை செய்தார். 


இதுதொடர்பாக, ராபர்ட்சன் ரோட்டில் ஸ்டேஷனரி கடை நடத்தும் கணபதி, போலீஸ் காலனியைச் சேர்ந்த சத்யன்(40) என்பவரை கைது செய்தனர். இவரது கடையில் இருந்த ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோன்று, மற்றொரு கடைக்காரர் பெரோஸ்(30) என்பவரும் கைது செய்யப்பட்டு, ஒயிட்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கம்ப்யூட்டர் பிரிண்ட் அவுட் மற்றும் டைப் ரைட்டிங் ஆவணங்கள் தயாரிக்கும் போது, தவறுதலாக பதிவாகும் எழுத்துக்களை அழிக்க ஒயிட்னர் பயன்படுத்தப்படுகிறது.


இதை, 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. அதைமீறி, பள்ளிச் சிறுவர்களுக்கு கடைக்காரர்கள் விற்றுள்ளனர். இதனால், இந்திய தண்டனைச் சட்டம் 284 பிரிவில் வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்துள்ளோம். மேலும், இதுபோன்ற விற்பனையில் ஈடுபடும் பள்ளி அருகிலுள்ள கடைக்காரர்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். சில நாட்களுக்கு முன் கோவை நகரிலுள்ள தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், தான் தங்கியிந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


அவரது அறையை சோதனையிட்டபோது,ஒயிட்னர் பாட்டில்கள் அதிகளவில் கிடந்தன. அந்த மாணவர், அதிலுள்ள திரவ நெடியை நுகர்ந்து போதை ஏற்றும் பழக்கமுடையவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. தற்போது, பள்ளி மாணவனின் தந்தையும் புகார் கூறியிருப்பதால், ஒயிட்னர் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீதான கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருக்கிறோம் இவ்வாறு, போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார் . 


இப்படிப்பட்ட மாணவர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவோம் உறவுகளே...

7/17/2011

படித்ததில் பிடித்தது - மேலை நாட்டுக் கானல் நீர் ...!


ள்ளளவு தமிழ் -
கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே
தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ;
காட்சி ஊடக கடல்களில்
அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...!

மொழியின் நலிவு -
மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர்
இனத்தின் அழிவு -
மொழியின் நலிவினில் துவக்கம்...!

7/16/2011

இலங்கை கடற்படையில் சீன வீரர்கள்? உஷாரான உளவு பிரிவுகள் விசாரணைதமிழக மீனவர்களை, பிடித்து செல்லும் இலங்கை கடற்படையினருடன், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்திய உளவு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.


இலங்கை கடற்படை, அவ்வப்போது, தமிழக மீனவர்களை பிடித்து செல்வது வாடிக்கையாகி விட்டது. கடந்த மாதம், 23 மீனவர்கள் பிடித்து செல்லப்பட்டனர். தமிழக அரசு கோரிக்கைப்படி, மத்திய அரசு தலையிட்டதால், விடுவிக்கப்பட்டனர். 


போன வாரம் , 14 மீனவர்கள் சிறைபிடிக்கப் பட்டனர்.தமிழக மீனவர்களை பிடிக்க வரும், இலங்கை கடற்படை கப்பலில், சீன வீரர்களும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி, தமிழக கியூ பிரிவு, டிடாச்மென்ட், மெரைன் போலீசார் மற்றும் மத்திய அரசின், "இன்டலிஜென்ஸ் பீரோ' ஆகிய உளவு பிரிவினர், சமீபத்தில் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களிடம், விசாரித்து வருகின்றனர்.


கடந்தாண்டு, கச்சத்தீவில் சீன வீரர்கள் முகாமிட்டிருந்ததை, திருவிழாவிற்கு அங்கு சென்ற தமிழக மீனவர்கள் பார்த்தனர். இந்நிலையில், இலங்கை கடற்படை கப்பலில் வரும் சீன வீரர்கள், தமிழக எல்லை பகுதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து, கண்காணித்து வருகின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விழித்தேழுமா அரசு??

7/15/2011

குற்ற உணர்ச்சி..! - பள்ளியில் நடந்த சில உண்மைகள் -3


1.


வீட்டுப் பாடம் 
எழுதாதற்காய்
முட்டிப் போடச் சொன்னேன் 
சிறுவனை...
மனசுக்குள் உறுத்தியது 
அன்று 
கையெழுத்து வாங்க வேண்டிய 
நோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
தலைமை ஆசிரியரிடம் 
காட்டாதது.....


2.


குற்ற உணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு..


மாணவர்களின்
பிரிவு உபச்சார விழாவில்..


யாரோ சமைத்ததைதான்
பரிமாறினோம்...


சமைக்க சொல்லித் தரவேயில்லையே 
நான் 
இறுதிவரை...!

7/14/2011

இது இலவச மருத்துவமனை - டிரீட் மென்ட் பிரீ !!!வ‌ந்தவர் : இன்‌ஸ்பெக்டர் சார்.. எ‌ன் பையன‌க் காணோ‌ம்.. எ‌ப்படியவது இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள க‌ண்டு‌பிடி‌ச்‌சிடு‌ங்க.


இன்‌ஸ்பெக்டர் : ஏங்க இப்படி அவசரப்படறீங்க?


வ‌ந்தவர் : இல்லேன்னா ‌வீ‌ட்ல இரு‌ந்து எடுத்துக்கிட்டுப் போன ஐநூறு ரூபாயையும் செலவழிச்சுடுவான்.


**********************************************************************************

7/13/2011

காங்கிரஸ் (ஈழத்)தமிழர்களுக்கு செய்த துரோகம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்நாட்டின் பாதுகாப்பிலும், மக்கள் நலனிலும் மிகவும் அக்கறையுள்ளவர் போல் காட்டிக்கொள்வதில் இந்தியாவின் எந்த அரசியல்வாதியையும் விட திறமை வாய்ந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இருந்து, அணு உலைகளை விற்க முனைந்த அயல் நாட்டு அணு உலை தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக ‘அணு விபத்து இழப்பீடு சட்ட’த்தை நிறைவேற்றுவதில் காட்டிய உத்வேகத்தை நன்றாக கவனித்த எவருக்கும், பிரதமரின் அக்கறை நாட்டின் மீதா அல்லது தன்னை பிரதமர் ஆக்க பின் சக்தியாகத் திகழ்ந்த அமெரிக்காவின் மீதா என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க வாய்ப்பில்லை. 

7/12/2011

ஒரு பெண் இப்படியும் இருப்பாளா?


ன்புள்ள அப்பாவுக்கு...
நலம் ..
தாங்கள் நலமுடன் இருக்க
ஆண்டவனை 
வேண்டிக்கொள்கிறேன்.


அன்று,


தாமரைக் குளமும் 
பெருமாள் கோயிலும் 
பெரிதாய் இருக்கிறதென்று 
சொன்னீர்கள்...!


வீட்டுக் கொல்லையில்
பூச்செடிகளும் 
சின்ன காய்கறித் தோட்டமும் 
பார்த்துக்கொண்டே இருக்கலாம்
என்றீர்கள்...!

7/11/2011

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா இதில்தான் முதலிடம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
சீனாவின் முன்னேற்றத்தை ஒப்பிடும் போது, நாம் இன்னும் பின்தங்கிய நாடாகவே இருக்கிறோம் எனத் தோன்றுகிறது. பல துறைகளிலும், அபரிமிதமாக முன்னேறி வருகிறது சீனா. 

உலக ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சீனா சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால், ஒரு தங்க மெடல் வாங்கவே இந்தியா திணறுகிறது. 

பாழாய்ப் போன நம்பிக்கைகள்...! - பள்ளியில் நடந்த சில உண்மைகள் 2.


ம்மா அடிப்பதாய்
வகுப்பில் வந்து 
அழுவது
வாடிக்கையாகி விட்டது 
அந்தச்  சிறுமிக்கு ....


ன்று கேட்டேன்,
' அம்மா ஏன் 
அடிக்கடி அடிக்கறாங்க?'
" அம்மாவுக்கு 
என்னை பிடிக்காது "
ஏன்?
"என்னோட ஜாதகம்தான் 
அப்பா சாவுக்கு காரணமாம் "  


பாசத்தைவிடவும் 
வலிவாகவே இருக்கின்றன
இந்த
பாழாய்ப்  போன நம்பிக்கைகள்...! 


7/09/2011

எய்தவனிருக்க அம்பை நோவானேன் கலைஞரே?


னது பேரன் தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதற்குக் காரணம் ஊடகங்கள்தான் என்று நேரிடையாக குற்றஞ்சாற்றியுள்ளார் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி.

சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, தயாநிதி மாறன் பதவி விலகல் குறித்து கருத்து கேட்டதற்கு இவ்வாறு கருணாநிதி குற்றஞ்சாற்றியுள்ளார்.“இன்றைய உலகில், குறிப்பாக இந்தியாவில் ஊடகங்கள் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்த முடியும். அதற்கு தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல”என்று கூறி அருகிலிருந்த ஊடகவியலாளர்களை அழுத்தமாக நோகடித்துள்ளார்.

தமிழகத்தில் அழிகிறது காங்கிரஸ் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்


மிழக காங்கிரஸ் தலைவர் பதவியை, தங்கபாலு ராஜினாமா செய்தும் கூட, புதிய தலைவரை நியமிக்க, காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டுவது ஏன் எனப் புரியவில்லை.

"காங்கிரசுடன் கூட்டணி வைத்ததால் தான், தி.மு.க., தேர்தலில் தோற்றுவிட்டது' என, தி.மு.க., - பா.ம.க., கட்சிகள் புலம்ப ஆரம்பித்துவிட்டன. ஆனால், காங்கிரஸ் இதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

7/08/2011

ஐ.மு.கூட்டணி அரசின் அடங்காத செயல்...


ஐ.மு.கூட்டணி அரசாங்கம் டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாயும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தியிருக்கிறது. 


மத்திய அரசு ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் இவ்வாறு விலைகளை உயர்த்தியிருப்பது ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள விலைவாசி உயர்வால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள சாமானிய மக்களின் துன்ப துயரங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாத தடித்தன்மையைக் காட்டுகிறது; அதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களைக் காவுகொடுத்திடும் ஐ.மு.கூட்டணி அரசாங்கத்தின் கயமைத்தனத்தையும் தோலுரித்துக் காட்டு கிறது.


சர்வதேசச் சந்தையில் கச்சா எண் ணெய்யின் விலை உயர்ந்திருப்பதால் தான் நம் நாட்டிலும் இவற்றின் விலையை உயர்த்த வேண்டியதாயிற்று என்கிற அர சின் கூற்று வஞ்சகமான ஒன்று. உண்மையில் இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 90-92 அமெரிக்க டாலர்கள்தான்.

7/07/2011

தயாநிதி மாறன் பதவி விலகினார்...தி.மு.க.வும் ஒப்புதல்?


மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாகசுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளதை அடுத்து எதிர்கட்சிகள் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றன.

மனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்கள் - பள்ளியில் நடந்த சில உண்மைகள் 1.
போன வாரம் :


சிரியப் பணியில் 
முதன் முறையாய் 
அந்த ஆறாம் வகுப்பில்...


பாடம் நடத்துகையில்
ஒரு சிறுவனின் அழுகை 
காரணம் கேட்டேன் 
"அப்பாவின் ஞாபகம் " என்றான்..
"ஊருக்கு போயிருக்காரா?"
இல்ல, போன வருஷம் 
செத்துப் போயிட்டார்!?


ஞாபகம் ஏன் தீடீர் என்று?
"உங்க சட்டை மாதிரியே
அவரும் போட்டிருப்பார்"

7/06/2011

வாகன ஓட்டிகளே உஷார் !!!


லகிலேயே அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கும் நாடுகளில், இந்தியா முதலிடம் வகிக்கிறது என, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. ஆனால், அந்த இடத்தை தற்போது தமிழகம் பிடித்துள்ளது.

அந்த அளவுக்கு சாலைகளில் விபத்துகள் ஏற்பட, பற்பல காரணங்கள் உள்ளன.நம் நாட்டில், நீண்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 30 வயது நிரம்பிய ஒருவருக்கு, 20 வருட காலத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. 

20 ஆண்டுகள், அவரது உடல்நிலை மற்றும் கண் பார்வை நல்ல நிலையில் இருக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? அயல் நாடுகளில், இரண்டு வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப்
புதுப்பிக்கும்படி சட்டம் உள்ளது.


அடுத்தபடியாக, நான்கு வழி மற்றும் ஆறு வழிச் சாலைகளில், வலப்புறம் வந்து இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள குறுக்குச் சாலைகள் மிக ஆபத்தானவை. 

அயல் நாடுகளில், இதுபோல் இடையில் வந்து சேரும் குறுக்குச் சாலைகள், மேம்பாலம் அமைத்து, மறுபுறம் கொண்டுவரப்பட்டு, இடதுபுர ஓரத்தில் வந்து, பெரிய சாலையோடு சேரும்படி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அயல் நாடுகளைப் பார்த்து, ஆறுவழிச் சாலை அமைத்த நம் பொறியாளர்கள், இதைக் கவனிக்கத் தவறிவிட்டனர்.அதற்கடுத்து, நெடுஞ்சாலைகளில் விதி மீறல் செய்வோரைத் துரத்திப் பிடிக்க, ரோந்து ஹெலிகாப்டர்கள் தேவை. 

ரோந்து வாகனங்களால் துரத்திப் பிடிக்க முடியாது. சமீபத்தில், அமைச்சர் ஒருவர் உயிரிழக்க காரணமான லாரியை பிடிக்க முடியாமல், பல நாட்கள் ஆனது. லாரியையே பிடிக்க முடியவில்லையெனில், காரை எப்படி துரத்திப்பிடிக்க இயலும்?

அதற்கடுத்து, வாகன நடமாட்ட தேவைக்கேற்ப, சாலைகளை அகலமாக விரிவுபடுத்தல் அவசியம். வளைவுகளை நேர் செய்வதோடு, நல்ல தரமான, மேடு, பள்ளமில்லாத சாலைகளாக, அனைத்து சாலைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும்.இவை அனைத்தும் விரைந்து செய்ய முடியுமானால், சாலை விபத்தற்ற மாநிலமாக தமிழகத்தை நாம் நிச்சயமாக மாற்ற முடியும்.

சொல்லுங்கள் உறவுகளே...

7/05/2011

ரஜினிகாந்துக்கு சிறந்த வில்லன் விருது!


விஜய் தொலைக்காட்சியின் திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் எந்திரன் படத்தில் நடித்த  ரஜினிகாந்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கப் பட்டது.

சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் விருது அறிவிக்கும் மற்றும் வழங்கும் விழா நடைபெற்றது. விருதைப் பெறுவதற்கான போட்டியில் 149 படங்கள் பங்கேற்றன. ஒரு குழுவை அமைத்து விருதுகள் யாருக்கு என்று தேர்வு செய்யாமல், ரசிகர்களைக் கொண்டு தேர்வு செய்யும் முறையை விஜய் தொலைக்காட்சி கடைப்பிடித்துள்ளது.

பெரிய பரபரப்புடன் நடந்த இந்த விருது வழங்கும் விழாவில், ரஜினிகாந்திற்கு சிறந்த வில்லன் விருது வழங்கியது மட்டுமே பேசப்பட்ட விஷயமாக இருந்தது. தொலைக்காட்சியினர் சிறந்த வில்லன் பிரிவில் ரஜினிகாந்தைச் சேர்த்ததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் பேசிக் கொண்டனர். 

சிறந்த துணை நடிகையாக சரண்யாவும், சிறந்த துணை நடிகராக தம்பி ராமையாவும், சிறந்த நகைச்சுவை நடிகராக சந்தானமும் தேர்வானார்கள். பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும், சிவாஜிகணேசன் விருதை இயக்குநர் பாலச்சந்தரும் பெற்றுக் கொண்டனர்.

சிறந்த நடிகர் - விக்ரம்(ராவணன்)

சிறந்த நடிகை - அஞ்சலி(அங்காடித்தெரு)

சிறந்த வில்லன் - ரஜினிகாந்த்

சிறந்த இயக்குநர் -வசந்தபாலன்(அங்காடித்தெரு)

சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரகுமான் (விண்ணைத்தாண்டிவருவாயா)

சிறந்த படம் - அங்காடித்தெரு.

இது எப்படி இருக்கு...

கேப்டன் தோனியை காப்பாற்றுங்கள்!


கேப்டன் தோனியை தடையில் இருந்து காப்பாற்றும் பெரும் பொறுப்பு இந்திய பவுலர்களுக்கு உள்ளது. அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்க வேண்டும்.
 

7/04/2011

அகத்தியரின் வரலாறு கூறும் அறிவியல் உண்மை!


படித்தவர், பாமரர் அனைவரும் அகத்தியரை அறிவார்கள். ஆறுவகைச் சமயத்தினரும் அகத்தியரைப் போற்றுகின்றனர். குடுவையில் பிறந்தது, தென்புலம் தாழ்ந்த பொழுது பூமியைச் சமன் செய்தது, பார்வதி திருமணத்தைப் பொதிகையில் கண்டது, காவிரி கொணர்ந்தது போன்ற அகத்தியர் தொடர்பான வரலாறுகள் அனைத்திலும் அறிவியல் கூறுகள் பொதிந்துள்ளன.

சோதனைக்குழாய் குழந்தை

உலகின் முதல் சோதனைக்குழாய் குழந்தை அகத்தியர்தான் ! குடுவையில் கருத்தரித்து, வளர்ந்து வெளிப்பட்டதால் அவரை, கலயத்தில் பிறந்தோன் (கும்பசம்பவர்) என்றும், குடமுனி என்றும் கூறுவர். உயிர்கள் தாயின் கருப்பைக்கு வெளியே கருத்தரித்து வளர இயலும் என்ற அறிவியல் உண்மை, அகத்தியரின் பிறப்பிலேயே பொதிந்துள்ளது. 

அவ்வாறு, செயற்கை முறையில் உருவாக்கப்படும் உயிரினங்கள், தொடக்க நிலையில் இயல்புக்கு மாறான உருவத்தைப் பெற்றிருக்கும் என்பதும், இயல்பான வளர்ச்சி, மேம்பட்ட ஆய்வுகளுக்குப் பிறகே சாத்தியமாகும் என்பதும் அறிவியல் உண்மை. முதல் சோதனைக் குழாய் குழந்தையாகிய அகத்தியர் இயல்புக்குக் குறைவானே உயரமே பெற்றிருந்தார் என்பது இந்த உண்மையை நிரூபிக்கிறது.

அரசு ஒழுக்கமாக இருந்தால், சமூக ஆர்வலர்கள் எதற்காக வீதிக்கு வருகின்றனர்?


ழல் தடுப்பு மசோதாவை உருவாக்கும்போது, காந்தியவாதி அன்னா ஹசாரேவையும் ஆலோசனைக்காக சேர்த்துக் கொண்டது, மத்திய அரசு. அன்னா ஹசாரே, பாபா ராம்தேவின் அறைகூவலால், டில்லியில் கூடிய மக்கள் வெள்ளத்தைக் கண்டு மிரண்ட மத்திய அரசு, வேறு வழியில்லாமல், சமூக ஆர்வலர்களையும் அழைத்துப் பேசியது.

"லோக்பால் மசோதா உருவாக்க மேற்கொண்ட பரீட்சார்த்த முறைகளை, இனி எப்போதும் பின்பற்ற மாட்டோம். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் நடந்ததை, இனிமேல் முன்னுதாரணமாக எடுத்துக் காட்ட முடியாது. மற்ற அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமும், லோக்பால் மசோதா குறித்து கருத்து கேட்கப்படும். 

7/02/2011

ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் காங்கிரஸ் தேச நலனுக்காக இதையாவது செய்யுமா?


பிரம்மபுத்திரா நதியின் இடையே அணை கட்ட திட்டமிட்டு, வேலைகளை ஆரம்பித்திருக்கிறது சீனா. அங்கு அணை கட்டினால், நம் நாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் நீர்வரத்து நிச்சயம் குறையும். 

இரண்டு நாடுகளுக்கு இடையிலோ அல்லது அதன் வழியிலோ ஒரு நதி பாய்ந்தால், இரு நாடுகளின் ஒப்புதலுடன் தான் திட்டங்கள் மேற்கொள்ள வேண்டும். இடத்தை கொடுத்தால், மடத்தைப் பிடுங்கக்கூடிய கதை தான் சீனாவின் நிலைப்பாடாக உள்ளது.

7/01/2011

ராஜாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலையா ? கொலையாளி யார் ? பரபரப்பு தகவல்


மாஜி மத்திய அமைச்சர் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாமோ என்ற கோணத்திற்கு சி.பி.ஐ.,நெருங்கி இருப்பதாக சி.பி.ஐ., உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

சமீப காலமாக பாட்சா தற்கொலை செய்து கொண்டார் என்ற நிலையில் இருந்து இப்போது அவர் கொலை செய்யப்பட்டிருப்பார் என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் டில்லியில் இருந்து ஒரு மருத்துவக்குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளன. இந்த குழுவின் அறிக்கையின்படி பாட்சாவின் மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொலை தொடர்பு துறையில் அமைச்சராக இருந்து 2 ஜி ஸ்பெகட்ரம் ஊழலில் சிக்கி தற்போது சிறையில் இருக்கிறார் ராஜா. இவரது நெருங்கிய நண்பர் சாதிக்பாட்சா. சாதாரண நிலையில் இருந்த இவர் ராஜாவின் கண்பார்வையால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பல கோடிகளுக்கு அதிபதியானார். ராஜாவின் சொந்த பெரம்பலூர் மாவட்டம் பகுதியில் முக்கிய இடங்களை விலைக்கு வாங்குவது , விற்று லாபம் சம்பாதிப்பது என தொழில் செய்து வந்தார்.

இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். 

இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். 

ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சாவு குறித்து துளைத்தெடுத்து வரும் சி.பி.ஐ., விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கொலையாக இருக்குமோ என்ற யூகத்திற்கு சிறிய தடயம் சிக்கியிருப்பதாகவும், இவரது மருத்துவ ரிப்போர்ட்டை ஆய்வு செய்ய டில்லி அகில இந்திய மருத்துவ கழக டாக்டர்கள் ஆய்வு செய்ய பணிக்கப்பட்டுள்ளனர்.இவர்களது அறிக்கைக்கு பின்னர் பாட்சாவின் மரணம் குறித்த மர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த வழக்கில் திருப்பம் ஏற்படும் பட்சத்தில் , பாட்சாவை கொன்றது யார், கொலைக்கு யார் காரணம், சதிச்செயல்களில் ஈடுபட்டது யார் என்ற கேள்விகள் எழும். இதனையடுத்து ஸ்பெக்டரம் வழக்கில் திடுக் திருப்புமுனைகள் ஏற்படும். பாட்சாவை பொறுத்தவரை ராஜாவிற்கு நெருக்கமானவராக இருந்ததால் இவர் சி.பி.ஐ.,யிடம் அப்ரூவராகி உண்மைகளை சொல்லி விடுவாரோ என்ற அச்சம் சிலருக்கு இருந்ததது இந்த காரணமும் பாட்சாவின் சாவுக்கு ஒரு கருவியாக இருந்திருக்கலாம் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. நன்றி தினமலர்.

பெற்றோர்களே சிந்திப்பீர்...!


மச்சீர் கல்வி, நடைமுறைக்கு வருமா, வராதா என்ற எதிர்பார்ப்பும், விவாதமும் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அரசு, அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், நான்காம் வகுப்பு வரை, செயல்வழிக் கற்றல் - ஏ.பி.எல்., என்ற அட்டை வழிக் கற்பித்தல் முறை, நடைமுறையில் உள்ளது. 

இம்முறை தொடருமா, இல்லை நிறுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும், கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு மாற்றங்களுடன், தரமான முறையில், அதிக பொருட்செலவில் அச்சடித்துக் கொடுக்கப்பட்ட கற்றல் அட்டைகள், மூட்டை மூட்டையாக குவிந்து கிடக்கின்றன.

ஆந்திராவில், மலைக் கிராம மக்களின் குழந்தைகளுக்காக, செயல்வழிக் கற்றலை, முதன் முதலில் ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியது. இதை காப்பி அடித்துத் தான், கடந்த  அரசு, மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும், படிப்படியாக நடைமுறைப்படுத்தியது."அட்டை வழிக் கற்பித்தல் முறை, ஆசிரியர்களை சுறுசுறுப்பாக வேலை வாங்கும் திட்டம்' என, சிலர் குறிப்பிடுகின்றனர். 

"மாணவர்களையும், ஆசிரியர்களையும் சோம்பேறிகளாக்கி விடும்' என்கிறது இன்னொரு தரப்பு. "பெற்றோர் மத்தியில் இந்த கூத்து எடுபடவில்லை' என, சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

பள்ளிகளுக்கு கற்றல் அட்டைகள், பாடத்திற்கு ஏணிப்படி அட்டவணைகள் கொடுத்த பின், இன்றைய நிலையில், ஒன்று முதல், நான்காம் வகுப்பு வரை, ஏ.பி.எல்., முறை வேண்டுமா, வேண்டாமா என, ஓர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தினால், 95 சதவீதம் ஆசிரியர்கள், இம்முறை வேண்டாம் என்றே ஓட்டளிப்பர்.

மாதம்தோறும், தொடக்கப் பள்ளி மாணவனுக்கு, 100 ரூபாய் உதவித் தொகை, தரமான பாட நூல், தரமான பயிற்சி புத்தகம், தரமான சீருடைகள், மதிய உணவு, தேர்வு முறைகள், மதிப்பெண் பட்டியல் வழங்குதல், மாணவன் முன்னேற்ற அறிக்கை, பெற்றோருக்கு வழங்குதல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக பள்ளிப் பதிவேடுகள் வழங்க வேண்டும்.

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் ரெக்கார்டு ஷீட், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்களில் போலிகள் நுழையா வண்ணம் வழங்க, அரசு நடவடிக்கை, போதுமான கட்டமைப்பு வசதி, தர மேம்பாடு, உபகரணங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்த வேண்டும்.மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள அ.தி.மு.க., அரசு, இதை செய்யுமா?