Ads 468x60px

12/31/2011

என்னடா உலகமிது... Repost
கிழிந்த சட்டையுடன்
துணிக்கடைக்கு போனேன்....!
ஒரு சட்டையை காட்டியவன்
மற்றொன்றை காட்ட
மேலும்,கீழும் பார்த்தான்..!

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தானோ?


ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதி சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தை கவனித்தார்.

12/30/2011

கிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை!?


வனுக்கு  எந்த வேலையும் தெரியாது. மகா சோம்பேறி. எவர் சிபாரிசிலோ அவன் ராணுவத்தில் சேர்ந்தான்.  அதுவும் ராணுவச் சமையல்காரருக்கு உதவியாளனாக!!

12/29/2011

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கைது...


ட்வீட் எடு கொண்டாடு...

12/28/2011

இவள்தான் விலைமாது...!?
பாலில்லா முலையைப் பார்த்து 
என் ஒருவயது குழந்தை
பரிதாபமாக அழுகிறது...!

12/27/2011

நமக்கு நான்கு மனைவிகள்


ஒரு ராஜாவிற்கு நான்கு மனைவிகள். நால்வரின் அரசன் மிகவும் நேசித்தது நான்காமவளைத்தான். அவளுக்கு விலையுயர்ந்த ஆடை, நகைகள் வாங்கிக் கொடுத்து அலங்கரித்து கண்ணுக்கு கண்ணாக பார்த்துக் கொண்டான்.

12/26/2011

மூட்டை தூக்கினாரா பெரியார்?(மகான்களின் வாழ்க்கையில்)


திருச்சியில் ரயிலில் வந்து அமர்கிறார் பெரியார். பக்கத்தில் ஒரு துணி மூட்டை. அப்போது பெரியார் ஈ.வெ.ரா.  தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர். அப்போது அதே ரயில் பெட்டியில் தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யரும் வந்து பெரியார் பக்கத்தில் அமர்கிறார். பெரியாரைத் தெரிந்துகொண்டு நலம் விசாரிக்கிறார். "எங்கே போயிட்டு வர்றீங்க?" என்று கேட்டார் உ.வே.ச. "கதர்த் துணியை தெருத் தெருவாகப் போய் வித்திட்டு வறேன்" என்றார் பெரியார்.

சசிகலா தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா ?


துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது மரத்தில் மேலிருந்து தேள் ஒன்று விழுந்துவிட்டது. தத்தளித்தது. தண்ணீருக்குள் கையை விட்டுத் தேளைத் தூக்கினார் துறவி.

12/24/2011

தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு1851 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தில்  இருந்து “ நியூயார்க் டெய்லி டிரிபியூன்”  என்ற பத்திரிக்கை வெளிவந்தது.  இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான சார்லஸ் டயானா என்பவர் லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரை தொடர்பு கொண்டு  தங்கள் பத்திரிக்கையில் கட்டுதைகள் எழுதவேண்டும், லண்டன் நிருபராகப்  பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

12/23/2011

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க சென்னைக்கு வாங்க...


முல்லைப் பெரியாறுப் பிரச்சனை தென்மாவட்டங்களில் கொழுந்துவிட்டு எரிகிறது. மக்கள் சாரை சாரையாக கம்பம் நோக்கி பேரணி செல்கிறார்கள். தேனீ மக்கள் கடையடைப்பு, உண்ணாவிரதம் போன்ற தொடர் போராட்டங்கள் செய்து வருகிறார்கள். நாம் மட்டும் ஏன் நம் எதிர்பை இன்னும் காட்டவில்லை.

வாழ்ந்தால் இது போல வாழவேண்டும்!?


தமிழகத்தில் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ளது நமக்கு தெரியும்.

12/22/2011

கோழி முட்டை தண்டவாளத்தில் நிற்குமா?


கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஒன்றுகூடி மேலதிகாரிகளிடம். ' மாடு போல உழக்கும் எங்களுக்கு குறைந்த சம்பளம், எங்களை வேலை வாங்கும் மேலதிகாரிகளுக்கு மட்டும் ஆயிரங்கனக்கில் சம்பளம்" என்று முறையிட்டனர்.

சசி பெயர்ச்சிக்கு காரணம் சனிப்பெயர்ச்சியா? - மனம் திறக்கிறார் 'சோ'


போயஸ் தோட்டத்தில் ஒரு சூறாவளி நடந்து முடிந்திருக்கிறது. நேற்று  நடைப்பெற்ற சனிப்பெயர்ச்சியை சசிப் பெயர்ச்சி என்று வர்ணித்து இருக்கிறார் பிரபல பத்திரிக்கையாளர் 'சோ' அவர்கள்.

12/21/2011

படிக்காததினால் அம்மா இப்படியெல்லாம் செய்றாங்களோ?
ட்டு குட்டியை
மடியில்போட்டு
ஈத்திக் கொண்டிருக்கும்
அம்மாவும்,
மாட்டுக்கு
லாடம்கட்ட
ஆணி அடித்துக் கொண்டிருக்கும்
அப்பாவும்,
படிக்கவில்லை
“ உயிர்களிடத்தில் அன்பு வேணும் ” 
( நன்றி இளம்பிறை)

சினிமா கிசுகிசு மட்டும்தான் படிப்பீங்களா?மக்கு தெரியாமலே
நாம் கொத்தடிமைகள்
உலகமயமாதல்...!

12/20/2011

இது எத்தனைப் பேருக்குத் தெரியும்? (மகான்களின் வாழ்க்கையில்)


இந்திய தேசியப் பாடல் "வந்தேமாதரம்"

ஜே, சசியை விரட்டிய மர்மம். ஒரு பகீர் ரிப்போர்ட்.


அதிமுகவிலும் கட்சியிலும் சரி, நடக்கும் ஆட்சியிலும் சரி ஆரம்பம் முதலே சசிகலா நந்தியாக மாறி குழப்பங்களை பல ஏற்படுத்தி வந்தபோதும் கூட பொறுமையாகவே இருந்த முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக தனது ஆட்சிக்கே உலை வைக்கும் அளவுக்கு அவர்கள் சிந்திக்கத் தொடங்கியதும், அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும் பொறுக்க முடியாமல் தான் சசிகலா அண்ட் 'கோ'வை அதிமுகவை விட்டு தூக்கி விட்டதாக தெரிகிறது.

12/19/2011

பிரபல பதிவர் சசியை ஏமாற்றிய கவிதைவீதி சௌந்தர்..?!


இது மொக்கைப் பதிவு. பிடிக்காதவர்கள் இப்படியே எஸ்கேப் ஆயிடுங்க..

அட... நீங்ககூட இப்படித்தானா?


வழக்கமாக
எழும் நேரத்திலேயே
இன்றும்
எழுந்து விட்டேன்...!

12/18/2011

மதி மயக்கும் மார்கழி மாதம்


மார்கழி மாத மயக்கம்


சூரியமான முறையில் கணிக்கப்படும் தமிழ் காலக் கணிப்பு முறைப்படி ஆண்டின் ஒன்பதாவது மாதம் மார்கழி ஆகும். சூரியன் தனு இராசியுனுள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையிலான 29 நாள், 20 நாடி, 53 விநாடி கொண்ட கால அளவே இம் மாதமாகும். வசதிக்காக இந்த மாதம் 29 நாட்களை உடையதாகக் கொள்ளப்படும்.

12/17/2011

பணக்காரனாக யோசனை சொல்லும் நாஞ்சில் மனோ..!


நாஞ்சில் மனோ என்பவர் ஒரு புகழ் பெற்ற பதிவர். இவருடைய பூர்வீகம் தமிழகம் என்றாலும் இப்போது ஒரு அரபு நாட்டில் வசிப்பவர்.

அட, உங்களுக்கு காதல் பிடிக்குமா?
 1.

ரு
இலக்கணம் தெரிந்து
நான்,
கவிதை எழுதவில்லை
எனினும் எழுதுகிறேன்
நம்புவது,
தமிழை அல்ல
உன்   அழகை...!

**********************************************************************************
 2.

பெண்ணே...
கொஞ்சம் வெளியே வா,
“ நிலாவைக் காணாமல் ”
என்
எதிர்வீட்டுக் குழந்தை
சாப்பிட மறுக்கிறது...!

********************************************************************************** 
 3.


ற்செயலாய்
வாசல் வந்து
நீ...
நின்றபோது
உன் அம்மா
“உள்ளேப் போ”
என்று சொன்னது
என் இதயத்திற்குள்
போகத்தானா?

********************************************************************************** 
 4.


ன்னுடன்
பேசிவிட்டு வந்த
உரையாடலை,
கலைக்க மனமில்லாமல்
மற்றவர்கள் மத்தியில்
மரமாய்...!

********************************************************************************** 
 5.


ப்படி
பாதுகாப்பேன்?
நீ...
நடந்துபோன
“கால்தடத்தை”...!

********************************************************************************** 


Repost

12/16/2011

திருமணத்திற்கு வராதீர்கள்... (மகான்களின் வாழ்க்கையில்)


புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கையைத் தன் உறவினர்கள், நண்பர்களுக்கெல்லாம் அனுப்பினார்.

ஸ்டாலின் சிறையில் அடைப்பா? பரபரப்புத் திருப்பங்கள்...கலைஞர் கருணாநிதிக்கு புதவனாகப் பிறந்திருந்தாலும் கறைபடாத கைகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார் ஸ்டாலின் அவர்கள் என்று மகிழ்ந்திருந்தோம். ஆனால் இப்போது அந்த எண்ணம் பொய்த்துவிடும் போல் இருக்கிறது.

12/15/2011

மனிதா.. அமிர்தம் இருக்க விஷத்தை ஏன் விரும்புகிறாய்?


அதோ.. அந்தப் பெரியவர் வீட்டு வாசலில் சிறுவர் பட்டாளம் விளையாடிக் கொண்டிருக்கிறது. திடீரென்று குய்யோ,முய்யோ என்று ஒரே கூச்சல். ஒரு கட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கொஞ்சம் உயரமாக தோற்றமளித்த ஒரு சிறுவன் அடுத்தவனை வாயில் வந்தபடி திட்டித் தீர்த்தான். அவன் வீசிய சுடு சொற்கள் பாவம் அந்தச் சிறுவனை வாட்டி வதைக்க அழுது கொண்டே வீட்டுக்கு ஓடினான்.

இப்படியும் ஒரு தமிழனா?


மழையையும்,
வெயிலையும்,
ஒன்றாகவே பாவிக்கும்
என்வீடு...!

12/14/2011

தமிழ்வாசி பிரகாஷ், வந்தேமாதரம் சசி யாருடைய டிரைவர் முட்டாள்?


தமிழ்வாசி பிரகாஷ் தனது டிரைவரை அழைத்து ஐநூறு ரூபாய் கொடுத்து ஒரு கார் வாங்கி வருமாறு கூறினார். பதில் ஏதும் பேசாமல் டிரைவர் பணத்தை வாங்கிக் கொண்டு போனார். உடனே பிரகாஷ் வந்தேமாதரம் சசியிடம், ஐநூறு ரூபாய்க்கு ஒரு கார் வாங்க முடியாதுன்னுகூட எங்க டிரைவருக்கு தெரியல. அவனுடைய முட்டாள்தனத்தைப் பார்த்தீர்களா? என்றார்.

தலையணை ரகசியங்கள்...

ன்னிடமிருந்து
எதையும்
நான் வாங்கியதில்லை,....

12/13/2011

இதுக்குப் பேர்தான் விசுவாசமா?(மகான்களின் வாழ்க்கையில்)


கலைவாணர் ஒரு பெரிய கிரெட்டேரியன் நாய் ஒன்றை பாசத்துடன் வளர்த்து வந்தார். அதற்க்கு'டிக்கி' என்று பெயர் வைத்தார். அது கலைவானரிடம் செல்லக் குழந்தைப் போலவே பழகியது.

நமக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்...!


எல்லா அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மிகவும் கடுமையாக  ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டிருக்கும் பிரச்சனை நடக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒரு கலக்கு, கலக்கிவிட்டது.

12/12/2011

முல்லைப் பெரியாறு. என்னதான் நடக்கிறது?


உலகம் செழிப்பதற்காக கடவுள் மழையைத் தருகிறார். அதைத் தடுத்து நிறுத்தி தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் விவசாயத்திற்காகவும், மக்களின் குடிநீருக்கு உபயோகப்படும் வகையில் அணைகள் கட்டி அந்த நீரை சேமித்து  பயன்படுத்துகிறோம். 

இது தமிழ் பெண்களின் சாபம்...!


ஆறாவதாய் 
பிறந்திருக்கிறது
பெண் குழந்தை 
இம்முறையும்...

12/11/2011

கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே..


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின் எதிரொலியாக தமிழகத்தில் சில மலையாளிகளின் கடைகள் தாக்கப்பட்ட செய்திகளைத் தமிழர்களாகிய நாம் சங்கடத்தோடு படித்திருப்போம். ஆனால், கேரள எல்லையில் வசிக்கும் கிராமப்புறத் தமிழர்கள் மீதும் கேரளத்துக்கு கூலி வேலைக்குச் செல்லும் பெண்கள் மீதும் சொல்லில் வடிக்க முடியாத வன்முறைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.

எல்லையில் இருக்கும் கிராமங்களில் இருந்து கேரளத்துக்கு தினமும் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் எண்ணிக்கை இருபதாயிரத்தைத் தாண் டும். குறிப்பாக, கேரளத்தில் இருக்கும் காபி, ஏலக்காய் எஸ்டேட்டுகளில் வேலை செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் தேனி, கம்பம், உத்தமபாளையம் பகுதிகளில் இருந்து சென்று வருபவர்கள்.

அதிகாலையில் எஸ்டேட்காரர்கள் அனுப்பும் வாகனங்களில் புறப்படும் இவர்கள், மாலையில் அதே வாகனங்களில் வீடு திரும்பிவிடுவது வழக்கம். இந்நிலையில், கடந்த டிச. 5-ம் தேதி இப்படிச் சென்ற வர்களை ஆங்காங்கே வழிமறித்த கேரளத்தைச் சேர்ந்த 'போராட்டக்காரர்கள்’ தமிழர்களை மோசமாகத் தாக்கியதுடன், தமிழகப் பெண்கள் மீது பாலியல் வன்முறையையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.

''அவங்களும் வேன்ல, ஜீப்லதான் வந்தாங்க. அச்சங்கோடு, மந்திப்பாறை, சேத்துக்குழினு அங்கங்க வழிமறிச்சுட்டாங்க. ஏன்டா... உங்க சோத்துக்கு நாங்க தண்ணி விட்டா, எங்க உசுருக்கே நீங்க உலை வைப்பீங்களான்னு கேட்க ஆரம்பிச்சு, தண்ணி வேணுமா... இந்தாங்கடா மூத்திரத்தைக் குடிங்கடான்னு எங்க மேலேயே...'' என்று சொல்ல ஆரம்பித்த அந்தக் கூலித் தொழிலாளியால் அதற்கு மேல் பேச முடிய வில்லை.

''எங்களை வரிசையா நிப்பாட்டி... ஒரு பள்ளிக்கூடத்துல அடைச்சு வெச் சுட்டாய்ங்க. அப்போ 500 பேருக்கு மேல நாங்க இருந்தோம்... பான்பராக், வெத்தலையை எங்க மூஞ்சி மேல துப்புனாங்க. 'இது, உங்க பொம்பள சி.எம். மேல துப்புறதா நினைச்சுத் துப்புறோம்’ன்னான் ஒருத்தன். வயசுப் பொண்ணுங்க சீலையைப் பிடிச்சு இழுத்து, இடுப்புல, மாருல... என்னால சொல்ல முடியலையே சாமீ'' என்று அலறினார் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

தோட்ட வேலைக்குச் செல்வோரில் சிறுமிகளின் எண்ணிக்கை கணிசமானது. அவர்களைத் தனியாக நிறுத்தி, தாவணியை உருவிவிட்டு, மார்பின் மீது முகத்தைத் தேய்த்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள்.

''அண்ணா நாங்க அழுதாலும் அடிச்சாங்கண்ணா. அழறதை நிப்பாட்டிட்டு கேவினாலும் அடிச்சாங் கண்னா'' என்றாள் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவள்.

''சப்பாத்து, வண்டிப்பெரியார், கட்டப்பனை, நெடுங்கண்டம்னு எல்லாப் பகுதியிலும் பிரச்னை. பெரிய கொடுமை என்னன்னா, கேரள போலீஸ் காரர்கள் பக்கத்துல இருக்கும்போதேதான் இத்தனை கொடுமையும் நடந்துச்சு. அதைவிடப் பெரிய கொடுமை... நூறடித் தூரத்துல நின்னு தமிழ்நாட்டு போலீஸ் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்துச்சு. யாராலும் ஒண்ணும் செய்ய முடியலை'' என்றார் கம்பம் எல்லையில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர்.

ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருக் கிறார்கள். அவர்களின் பெயரையும் நம்மிடம் சொன்னார்கள். அவர்களுடைய உயிர் பாதுகாப்பு கருதி பெயர்களை வெளியிட மாட்டோம் என்ற உறுதியுடன் இந்தச் சந்திப்பு நடந்தது. கம்பத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (37), கொடியம்மாள் (35) இருவரும் ''அய்யா... எங்க உசுரே போனாலும் பரவாயில்லை. இந்தக் கொடுமையை எழுதுங்க'' என்று துணிச்சலாக வாக்குமூலம் அளித்தார்கள். பேச்சியம்மாளை செருப்பால் அடித்திருக் கிறார்கள். கொடியம்மாளின் பின்புறத்தில் அச்சில் ஏற்ற முடியாத அசிங்கத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். இந்தக் கொடுமையின்போது பலத்த காயங்களுடன் உயிர் தப்பியவர்களில் ஜீப் ஓட்டுநர் ஜெய சீலனும் ஒருவர். இவர் மீது சிறுநீர் கழித்து இருக்கிறார்கள்.

இந்தக் கொடுமைகளுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத கொடுமைகள் கேரள எல்லையை ஒட்டி இருக்கும் _ கேரள அரசின் ஆளுகைக்கு கீழ் இருக்கும் _ தமிழர்கள் வசிக்கும் கிராமங்களில் அரங்கேறி இருக்கின்றன (அந்த மக்களின் பாதுகாப்பு கருதி ஊர்ப் பெயர்கள் தவிர்க்கப்படுகின்றன).

அச்சங்கடைப் பகுதியில் கார்கள், ஜீப்புகள் எரிக்கப்பட்டன. வழியில் தென்பட்ட தமிழர்கள் பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரள செக் போஸ்ட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்பம் அருகே உள்ள என்.டி. பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கார் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு இருக்கி றது. தமிழர்களின் டீக்கடைகளும் நாசமாக்கப் பட்டன.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் 300-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன. வாகனங் கள் தலைகுப்புறக் கவிழ்க்கப்பட்டதாக, வேலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் கம்பத்தைச் சேர்ந்த ருக்மான் கூறினார். வண்டிப்பெரியாரில் ஐயப்பப் பக்தர்கள் வந்த வண்டியை மறித்து செருப்புமாலை போட்டிருக்கிறார்கள். கடைசி நிலவரப்படி தமிழகத்தில் இருந்து செல்லும் ஐயப்ப பக்தர்கள் உத்தமபாளையம் அருகில் உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு ஐயப்பன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றி, ஊர் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன வெட்கமே இல்லாமல்! 

- சண்.சரவணக்குமார்

தேவையான இந்தப் பதிவை ஷேர் செய்யத் தூண்டிய மனோ மக்காவிற்கு நன்றிகள்.. கேரளா எல்லையில் வேலைக்கு சென்ற நம் தமிழ் பெண்களை மானபங்கப் படுத்தி இருக்கிறார்கள் சில கேரளா நண்பர்கள்(?) அவர்களுக்கு கடுமையான கண்டனங்கள் வேடந்தாங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

12/10/2011

இதில் புரட்சி ஏற்படுமா? பெற்றோர்களே சிந்திப்பீர்..


நாமெல்லாம் படிக்கும் பொது பள்ளியில் மணிக்கணக்காக படித்து  நாட்கணக்கில் 'நெட்டுரு' செய்தாலும் புரியாத பல விஷயங்கள் இப்போதுள்ள சிறுசுகளுக்கு சூப்பராக புரிந்து கொள்ள முடிகிறது அதற்கு முக்கிய காரணம் இணையம். 

12/09/2011

குடுப்பி


இன்று கிராமங்களில் விளையாடும் ஒரு விளையாட்டைப் பற்றி பார்ப்போம். போன பதிவில் தத்தக்கா, புத்தகா என்ற விளையாட்டைப் பற்றி பார்த்தோம் பார்க்காதவர்கள் இதை கிளிக் செய்து பார்க்கவும். அந்த வரிசையில் இன்று குடுப்பி என்ற விளையாட்டை தெரிந்து கொள்வோம். குடுப்பி என்பது இன்றும் கிராமங்களில் விளையாடும் ஒரு விளையாட்டாகும்.

12/08/2011

ஒரு 'கொலைவெறிக்கு' யூ-டியுப் தந்த அங்கீகாரம்


அண்மையில் மூணு என்ற படத்தில் இடம்பெற்ற "Y  திஸ் கொலைவெறி" பாடல் படத்தில் பிரமோஷனுக்காக வெளியிடப்பட்டது. இந்த படம் உச்சநடிகர் ரஜினிகாந்தின் மகள்ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அவரது கணவர் தனுஷ் நடிக்கும் படம் என்பது அனைவரும் அறிந்ததே.

நிருபனும், ஓட்டவடை நாராயணனும் - போட்டிவந்தால்?

நிரூபனும், ஓட்டவடை நாராயணனும் ஒரு நாள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக்கொண்டார்கள்.

12/07/2011

ஒரு பெண்ணிற்காக இப்படியா?

ன்னைக் கட்டுப்படுத்த 
முயன்றும் 
என் கால்கள் நகரவில்லை 
என்னை மீறி 
என்னுள்ளிருந்து
ஒரு குரல் ...

இனி எதுவும் தேவையில்லை நமக்கு...!


நீ ஆசைப் பட்ட
ஒரே காரணத்திற்காக...
இந்த கவிதையை
அழகாக எழுத
விரும்புகிறேன்...

12/06/2011

பேஸ்புக் இந்தியாவில் தடைசெய்யப் படுமா?


இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில் அரசியல் தலைவர்களையும் மதத்தலைவர்களையும் அதிகமாக விமர்சிக்கப் படுகிறது எனப் புகார் எழுந்துள்ளது.

தோழி.. நீ செய்தது மட்டும் நியாயமா?

னதில் உள்ள
மொத்தத்தையும்
சொல்ல முடிவதில்லை
பிரிவுகள் நிறைந்த
எந்த பயணத்திலும்..

12/05/2011

பிரபல பதிவர் நிருபனும், அவரது மகனும்... இப்படிக் கூட செய்வார்களா?


தன் மகனின் எதிர்காலத்தை பற்றி மிகவும் கவலை கொண்டார் நிருபன் செல்வராஜா அவர்கள். அவனை எப்படி உருவாக்கவேண்டும் என்று யோசித்ததில் அவனது ஆர்வத்தினையும் செயல்பாட்டினையும் சோதித்து ஒரு முடிவுக்கு வருவது என திட்டமிட்டார்.

இதற்கும் அந்த பெண் தான் காரணமா?


ஏதாவது ஒரு நிறுத்தம் வரும்,
நீ .. 
இறங்கி விடுவாய்...

12/03/2011

இப்படியே இருந்தால் என்ன ஆகும்?

ங்கே
குழந்தைகளுக்கும்
சோம்பேறிகளுக்கும் 
மட்டுமே
நிம்மதி...!