Tamilus

The best Tamil Aggregator | Tamilus

11/24/2010

இவரை தெரிந்து கொள்வோம்


புதுமைப்பித்தன்

வாழ்க்கைக் குறிப்பு

புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர்ஏப்ரல் 25, 1906 - மே 5, 1948), தமிழ் இலக்கியத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது

புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராக பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார். 

இவரது முதல் படைப்பான குலோப்ஜான் காதல் காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகளும் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த முதல் சிறுகதை ஆத்தங்கரைப் பிள்ளையார். இந்த காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் புதுமைப்பித்தனின் கதைகள் என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார்.

இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் அவ்வை மற்றும் காமவல்லி படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி வசந்தவல்லி என்ற படத்தைத் தயாரிக்கும் விபரீத முயற்சியிலும் இறங்கினார்; முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. எம். கே. தியாகராஜ பாகவதரின் ராஜமுக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காக புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார். 
படைப்புகளும் சிந்தனைகளும் 
புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன.

 அரசியல் புத்தகங்கள்

புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை ஃபாசிஸ்ட் ஜடாமுனி, (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) கப்சிப் தர்பார், (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) ஸ்டாலினுக்குத் தெரியும் மற்றும் அதிகாரம் யாருக்கு (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன.

படைப்புகளின் பட்டியல்

கவிதைகள்

 • திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்
 • மூனாவருணாசலமே மூடா
 • இணையற்ற இந்தியா
 • செல்லும் வழி இருட்டு

அரசியல் நூல்கள்

 • ஃபாசிஸ்ட் ஜடாமுனி
 • கப்சிப் தர்பார்
 • ஸ்டாலினுக்குத் தெரியும்
 • அதிகாரம் யாருக்கு

சிறுகதைகள்

 • அகல்யை
 • செல்லம்மாள்
 • கோபாலய்யங்கா மனைவி
 • இது மிஷின் யுகம்
 • கடவுளின் பிரதிநிதி
 • கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்
 • படபடப்பு
 • ஒரு நாள் கழிந்தது
 • தெரு விளக்கு
 • காலனும் கிழவியும்
 • பொன்னகரம்
 • இரண்டு உலகங்கள்
 • மனித யந்திரம்
 • ஆண்மை
 • ஆற்றங்கரைப் பிள்ளையார்
 • அபிநவ ஸ்நாப்
 • அன்று இரவு
 • அந்த முட்டாள் வேணு
 • அவதாரம்
 • பிரம்ம ராக்ஷஸ்
 • பயம்
 • டாக்டர் சம்பத்
 • எப்போதும் முடிவிலே இன்பம்
 • ஞானக் குகை
 • கோபாலபுரம்
 • இலக்கிய மம்ம நாயனார் புராணம்
 • 'இந்தப் பாவி'
 • காளி கோவில்
 • கபாடபுரம்
 • கடிதம்
 • கலியாணி
 • கனவுப் பெண்
 • காஞ்சனை
 • கண்ணன் குழல்
 • கருச்சிதைவு
 • கட்டிலை விட்டிறங்காக் கதை
 • கட்டில் பேசுகிறது
 • கவந்தனும் காமனும்
 • கயிற்றரவு
 • கேள்விக்குறி
 • கொடுக்காப்புளி மரம்
 • கொலைகாரன் கை
 • கொன்ற சிரிப்பு
 • குப்பனின் கனவு
 • குற்றவாளி யார்?
 • மாயவலை
 • மகாமசானம்
 • மனக்குகை ஓவியங்கள்
 • மன நிழல்
 • மோட்சம்
 • 'நானே கொன்றேன்!'
 • நல்ல வேலைக்காரன்
 • நம்பிக்கை
 • நன்மை பயக்குமெனின்
 • நாசகாரக் கும்பல்
 • நிகும்பலை
 • நினைவுப் பாதை
 • நிர்விகற்ப சமாதி
 • நிசமும் நினைப்பும்
 • நியாயம்
 • நியாயந்தான்
 • நொண்டி
 • ஒப்பந்தம்
 • ஒரு கொலை அனுபவம்
 • பால்வண்ணம் பிள்ளை
 • பறிமுதல்
 • பாட்டியின் தீபாவளி
 • பித்துக்குளி
 • பொய்க் குதிரை
 • 'பூசனிக்காய்' அம்பி
 • புரட்சி மனப்பான்மை
 • புதிய கூண்டு
 • புதிய கந்த புராணம்
 • புதிய நந்தன்
 • புதிய ஒளி
 • ராமனாதனின் கடிதம்
 • சாப விமோசனம்
 • சாளரம்
 • சாமாவின் தவறு
 • சாயங்கால மயக்கம்
 • சமாதி
 • சாமியாரும் குழந்தையும் சீடையும்
 • சணப்பன் கோழி
 • சங்குத் தேவனின் தர்மம்
 • செல்வம்
 • செவ்வாய் தோஷம்
 • சிற்பியின் நரகம்
 • சித்தம் போக்கு
 • சித்தி
 • சிவசிதம்பர சேவுகம்
 • சொன்ன சொல்
 • சுப்பையா பிள்ளையின் காதல்கள்
 • தனி ஒருவனுக்கு
 • தேக்கங் கன்றுகள்
 • திறந்த ஜன்னல்
 • திருக்குறள் குமரேச பிள்ளை
 • திருக்குறள் செய்த திருக்கூத்து
 • தியாகமூர்த்தி
 • துன்பக் கேணி
 • உணர்ச்சியின் அடிமைகள்
 • உபதேசம்
 • வாடாமல்லிகை
 • வாழ்க்கை
 • வழி
 • வெளிப்பூச்சு
 • வேதாளம் சொன்ன கதை
 • விபரீத ஆசை
 • விநாயக சதுர்த்தி

 மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

 • ஆஷாட பூதி
 • ஆட்டுக் குட்டிதான்
 • அம்மா
 • அந்தப் பையன்
 • அஷ்டமாசித்தி
 • ஆசிரியர் ஆராய்ச்சி
 • அதிகாலை
 • பலி
 • சித்திரவதை
 • டைமன் கண்ட உண்மை
 • இனி
 • இந்தப் பல் விவகாரம்
 • இஷ்ட சித்தி
 • காதல் கதை
 • கலப்பு மணம்
 • கனவு
 • காரையில் கண்ட முகம்
 • கிழவி
 • லதீபா
 • மகளுக்கு மணம் செய்து வைத்தார்கள்
 • மணிமந்திரத் தீவு
 • மணியோசை
 • மார்க்ஹீம்
 • மிளிஸ்
 • முதலும் முடிவும்
 • நாடகக்காரி
 • நட்சத்திர இளவரசி
 • ஓம் சாந்தி! சாந்தி!
 • ஒரு கட்டுக்கதை
 • ஒருவனும் ஒருத்தியும்
 • பைத்தியக்காரி
 • பளிங்குச் சிலை
 • பால்தஸார்
 • பொய்
 • பூச்சாண்டியின் மகள்
 • ராஜ்ய உபாதை
 • ரோஜர் மால்வினின் ஈமச்சடங்கு
 • சாராயப் பீப்பாய்
 • சகோதரர்கள்
 • சமத்துவம்
 • ஷெஹர்ஜாதி - கதை சொல்லி
 • சிரித்த முகக்காரன்
 • சூனியக்காரி
 • சுவரில் வழி
 • தாயில்லாக் குழந்தைகள்
 • தையல் மிஷின்
 • தந்தை மகற்காற்றும் உதவி
 • தெய்வம் கொடுத்த வரம்
 • தேசிய கீதம்
 • துன்பத்திற்கு மாற்று
 • துறவி
 • உயிர் ஆசை
 • வீடு திரும்பல்
 • ஏ படகுக்காரா!
 • யாத்திரை
 • எமனை ஏமாற்ற
 • யுத்த தேவதையின் திருமுக மண்டலம் 

0 comments:

Post a Comment

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"