Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/02/2010

இன்று டிசம்பர் 2

இன்று டிசம்பர் 2

நிகழ்வுகள்

 •  1755 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது எடிஸ்டோன் கலங்கரை   விளக்கம் தீ விபத்தில் அழிந்தது. 
 • 1804 - பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாக முடிசூடினான்.
 •   1805 - நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சுப் படைகள் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்ய-ஆஸ்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
 • 1843 - யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
 • 1848 - முதலாம் பிரான்ஸ் ஜோசப் என்பவன் ஆஸ்திரியாவின் பேரரசன் ஆனான்.
 •  1851 - புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு தலைவன் சார்ல்ஸ் லூயி பொனபார்ட் இரண்டாம் குடியரசைக் கலைத்தான்.
 • 1852 - மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசன் ஆனான்.
 •  1908 - பூ யி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
 • 1942 - மன்காட்டன் திட்டம்: என்றிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
 •  1946 - பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, மற்றும் லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
 • 1947 - பாலஸ்தீன நாட்டைப் பிரிக்க ஐநா சபை எடுத்த முடிவை அடுத்து ஜெருசலேமில் கலவரம் வெடித்தது.
 • 1954 - சீனாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பத்தம் வாஷிங்டன் டிசியில் கைச்சாத்திடப்பட்டது.
 •  1956 - பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
 •  1961 - பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
 • 1971 - அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய் மற்றும் உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக ஆக்கப்பட்டது.
 • 1971 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விடுதலை பெற்றது.
 • 1975 - பத்தே லாவோ என்பவர் லாவோசின் ஆட்சியைப் பிடித்து லாவோ மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைத்தார்.
 • 1976 - பிடெல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவரானார்.
 • 1980 - எல் சல்வடோரில் நான்கு ஐக்கிய அமெரிக்க கன்னியாஸ்திரிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

 • 1988 - பெனாசீர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரானார்.
 • 1990 - ஒன்றுபட்ட ஜேர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் அதன் வேந்தர் ஹெல்முட் கோல் தலைமையிலாண கூட்டணி வெற்றி பெற்றது.
 •  1993 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
 •  1995 - யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
 • 2002 - இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
 • 2005 - போதைப்பொருள் கடத்தல் குற்றத்துக்காக ஆஸ்திரேலியரான வான் துவோங் நியூவென் சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார்.
 •  2006 - பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
 • 2006 - பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்

    * 1910 - ரா. வெங்கட்ராமன், இந்தியாவின் 8வது குடியரசுத் தலைவர்
    * 1933 - கி. வீரமணி, திராவிடர் கழகத் தலைவர்.
    * 1979 - அப்துல் ரசாக், பாகிஸ்தான் முன்னாள் துடுப்பாட்ட வீரர்
    * 1982 - முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன் (இ. 2009)
    * 1981 - பிரிட்னி ஸ்பியர்ஸ், பாப் இசைப் பாடகர் (பாடகி)
    * 1973 - மோனிகா செலஸ், டென்னிஸ் வீராங்கனை.
    * 1973 - யான் உல்ரிச், செருமானிய மிதிவண்டி வீரர்.

இறப்புகள்

    * 1547 - எர்னான் கோட்டெஸ், நாடுபிடிப்பாளர் (பி. 1485)
    * 1552 - புனித பிரான்சிஸ் சேவியர், ரோமன் கத்தோலிக்க மிஷனறி (பி. 1506)
    * 1911 - பாண்டித்துரைத் தேவர், தமிழறிஞர் (பி. 1867)
    * 1933 - ஜி. கிட்டப்பா, நாடக நடிகர்
    * 2006 - வீ. துருவசங்கரி, இலங்கையின் அறிவியலாளர் (பி. 1950)
    * 2008 - மு. கு. ஜகந்நாதராஜா, பன்மொழிப் புலவர் (பி. 1933)
சிறப்பு நாள்
    * லாவோஸ் - தேசிய நாள்
    * ஐக்கிய அரபு அமீரகம் - தேசிய நாள் (1971)
    * ஐக்கிய நாடுகள் - அடிமைத்தனத்தை அழிக்கும் சர்வதேச நாள்

1 comments:

 1. மிக அருமையான , அரிதான தகவல்கள் , பகிவிற்கு மிக்க நன்றி அன்பரே

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"