Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/22/2010

காதலிக்க கற்றுகொள்ளுங்கள்


பெண்மையை போற்றுவோம்

காலையில் எழுந்த கணம் முதல்... கணவனை எழுப்பி காஃபி கொடுப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகள் எழுப்பி, அவர்களைக் குளிப்பாட்டி பள்ளிகளுக்கு அனுப்பவும், இங்கும் அங்கும் ஓடியாடி  சமையலை முடித்து, தானும் குளித்துத் தயாராகி குடும்பத்தோடு அமர்ந்து வேக வேகமாக சாப்பிட்டு , மதிய உணவை கட்டிக்கொண்டு அலுவலகத்திற்குப் பறந்துச் சென்று, வேலையில் மூழ்கி புன்னகைத்த முகத்துடன் பணிகளை முடித்து, மாலையில் இல்லம் திரும்பியதும் வேலை.

தன் குடும்பத்தினரின் தேவைகளை முடித்து - தன்னைப் பற்றி சிந்திக்கவே நேரமில்லாமல் - படுக்கைக்குத் திரும்பும்போதும்... அந்த முகத்தில் காலையில் மலர்ந்த புன்னகை மட்டும் மாறுவதில்லை.

இதுதான் இன்றைய மங்கையின் அன்றாட நாட்குறிப்பு. ஒருபக்கம் அலுவலகமும் சமூகமும், மறுபக்கம் குடும்பம், குழந்தைகள், பண்டிகைகள். எல்லாவற்றையும் தனக்கே உரித்தான சாதுரியத்துடனும், தெளிவுடனும் செய்து முடிப்பவள். இன்றைய நவீன சமூகத்தில் அவளுக்குறிய இடம் இதுதான்.
 காலத்தின் போக்கிலும், நாகரீகத்தின் ஏற்றத்திலும் மிகவும் மாறியவர்கள். இந்திய நாட்டின் முன்னேற்றப் பாதையே படித்துத் தகுதி பெற்ற பெண்கள்தான் என்று கூறுமளவிற்கு தகுதிபெற்றவர்கள். ஆண்களுக்கு நிகரான தகுதியிடனும், திறனுடனும் அவர்கள் உழைக்கின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, கலை என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் உயர்நிலைகளில் அவர்களும் உள்ளனர்.

இந்த நாடு பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளது என்றால் அதில் பெண்களின் பங்கு சரிநிகர் சமமானதே.

பெண்கள் பலவீனமானவர்கள் என்று காலம் காலமாக கூறி வருகின்றனர். அதையே காரணமாக்கி எல்லாத் துறைகளிலிருந்தும் அவளை ஒதுக்கிவைத்தனர். இதனை கணினி யுகம் மாற்றிவிட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவள் நிலை உயர்ந்துள்ளது. ஒடுங்கிக்கிடந்த உள் உலகத்திலிருந்து அவள் வெளியுலகத்திற்கு வந்துள்ளாள்.

மற்றவர்களைப் போல என்னாலும் எதையும் செய்ய முடியும், சாதிக்க முடியும், அதற்கான மனோபலமும், ஆற்றலும் என்னிடம் உள்ளது என்று கூறும் அளவிற்கு அவள் நிலையும், மனமும் உயர்ந்துள்ளது. நவீன யுகத்தில் தன்னம்பிக்கையுடன் அவள் பணியாற்றி வருகிறாள்.

பெண்களே, ‘பலவீனமானவள் நான்’ என்று நீங்களே உங்களை நினைக்காதீர்கள். சமூகத்தில் நமக்கு உறுதியான இடம் கிடைத்துள்ளது. நம்மிடம் பலமும், திறனும் உள்ளது, எந்தத் துறையிலும் செயலாற்றும் திறன் நம்மிடம் உள்ளது. அதனை உறுதியாக உலகிற்கு எடுத்துரைப்போம்.

நம் இரத்ததோடு கலந்து, நம்மையும் , நம் சந்ததியையும் வளர்க்கும்  பெண்மையை போற்றுவோம்.
 அவர்களின் அன்பை வேண்டி காதலிப்போம்.

4 comments:

 1. புரட்சிகரமான பதிவு....சூப்பர்.....

  ReplyDelete
 2. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/7.html

  ReplyDelete
 3. தங்களின் வலைத்தளம் இன்று ஆசிரியர் வை.கோபாலகிருஷ்ணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
 4. நல்ல பதிவு பெண்களுக்கு தன்னம்பிக்கை மிக அவசியமான ஒன்றுதான். வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"