Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/29/2010

ஒரு வேதனை நம் ஜனநாயகம் சமாதியாகுமா?

ஒரு வேதனையான கேள்வி  நம் ஜனநாயகம் சமாதியாகுமா?
"ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ஊழல் டேப் புகழ் நிரா ராடியாவை, அவரது பண்ணை வீட்டிற்கே சென்று, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை செய்தனர்' என்ற செய்தியை படித்தேன். சாதாரணமாக விசாரிக்க வேண்டியவர்களை, அலுவலகத்திற்கு வரச் சொல்லி விசாரிப்பது தான் சி.பி.ஐ.,யின் வழக்கம். நிரா ராடியா என்ன சாதாரணமான ஆளா? தொழிலதிபர் டாடாவிற்கு மிகவும் வேண்டியவராயிற்றே! அவரைக் கூப்பிட்டால், டாடா கோபித்துக்கொள்ள மாட்டாரா? 
 ஐநூறு ரூபாய் திருடினால், ஜட்டியோடு நிற்க வைத்து லாடம் கட்டுவர். கோடி, கோடியாக கொள்ளை அடித்தால், அவர்களுக்கு மரியாதையே தனிதான். 
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரும், மக்களின் மனம் கவர்ந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும், லட்சுமி காந்தன் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். காரணம், லட்சுமி காந்தனைக் கொலை செய்தனர் என்பதனாலல்ல; லட்சுமி காந்தனைக் கொலை செய்வதற்காக, சென்னை ஒற்றைவர் டை தியேட்டரில், கோவை ஸ்ரீராமுலு நாயுடு, இன்னும் சிலருடன் கூடி சதித் திட்டம் தீட்டினர் என்பதற்குத் தான்.
சரி... நிரா ராடியா டேப்பின் மூலம் நமக்குத் தெரிவது என்ன? மத்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியை எப்படியாவது பெற்று, அதன் மூலம், அரசின் கோடானு கோடி பணத்தை கொள்ளையடிக்க வேண்டுமென்று, முன் கூட்டியே திட்டமிட்டனர் என கருத்து தோன்றுகிறது.
 நாட்டின் செல்வத்தை, இவர்கள் இப்படி கொள்ளையடிப்பதற்காகவா வ.உ.சி., செக்கிழுத்தார்? இந்தப் பாதகர்களுக்காகவா பகத்சிங் தூக்கில் தொங்கினார்? இந்திய ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால், எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓர் நிறை என்ற பாரதியின் வாக்கு காக்கப்படவேண்டுமானால், ஒண்ணே முக்கால் லட்சம் கோடியை விழுங்கத் திட்டமிட்டு, சதி செய்தவர்களையும், நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்த தேசத் துரோகிகளையும், சிறையில் தள்ள வேண்டும். 
நேர்மையில்லாத வழியில் சம்பாதித்த அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். தவறினால், ஜனநாயகம் சமாதியாகும் என்பதில் ஐயமில்லை.(நன்றி தினமலர்)   
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...                                  

5 comments:

 1. ஓட்டு போட்டுட்டேங்க - ஜெயிலில போடச்சொல்லி.

  ReplyDelete
 2. ஏங்க நீங்க டுடோரியல் காலேஜ் வச்சிருக்கீங்களா?

  ReplyDelete
 3. பாஸ் நாம என்ன பண்றது. முடிச்சா மாட்டிக்காம கொஞ்சம் கொள்ளையடி. அது தெரியலன்னா மாட்டினாலும் பரவாயில்லைனு கோடி கோடியா கொள்ளையடி. இது தான் இப்போதைய ஜன"நாய்"க கொள்ளை.

  பிரிட்டிஷ் காரன் 200 வருஷம் போராடி வெறும் 900 கோடிதான் ஆட்டைய போட்டான். ஆனா நம்மாளு அதுல கால்வாசி வருஷம் கூட எடுக்கல, ஆனா 176000 கோடி(760000000000).இத நெனச்சு பெரும படணும்னு SMS...

  அட தேவ*யா கூ*களா , யார் நாட்டு பணம் டா.

  ReplyDelete
 4. இன்டிலி லோகோ கண்ணுக்கு தெரில..அந்த map மறைக்குது...:)) என் சகோ ராஜேஷ் வலைப்பூவில் உங்களை பார்த்து வந்தேன்...என்ன இத்தனை திரட்டி சகோ??? :)))

  ReplyDelete
 5. //ஐநூறு ரூபாய் திருடினால், ஜட்டியோடு நிற்க வைத்து லாடம் கட்டுவர். கோடி, கோடியாக கொள்ளை அடித்தால், அவர்களுக்கு மரியாதையே தனிதான்.//
  இது தான் நம்ம நாட்டு ஸ்டைல்..தாலுக்கா ஆபீஸ் அலுவலர் 100 ரூபா லஞ்சம் வாங்கினால் கேவலபடுத்தும் நீதி த்துறை...பல கோடி விழுங்கிகளுக்கு பால் அபிஷேகம் பண்றாங்க....ஒண்ணும பண்ண முடியாது சகோ...கடுப்பாகி இப்படி ப்ளாக் கில் புலம்பிட்டு போக வேண்டியது தான்....:)))))

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"