Tamilus

The best Tamil Aggregator | Tamilus

12/30/2010

அடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி

அடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.; திருட்டு பட்டம் சுமத்தி ஜெயிலில் தள்ளினார்
 
உத்தரபிரதேச மாநிலம் ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. புருஷோத்தம் நரேஷ். இவர் பந்தா மாவட்டம் நாராயணி தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டார்.
 
இவர் மீது மைனர் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் நீலாவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கடந்த அக்டோபர் மாதம் நீலாவதி யின் தாய் இறந்து விட்டார். இதனால் தந்தை அச்சிலால் மகளை வளர்க்க முடியாமல் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
 
அப்போது நீலாவதியை பக்கத்து வீட்டுப் பெண் நைசாக பேசி பழக்கம் பிடித் தார். பின்னர் நீலாவதியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி உள்ளூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலாவதியை தேடிவந்தனர்.
 
இதற்கிடையே மகள் கடத்தப்பட்டதை அறிந்து தந்தை அச்சிலால் உள்ளூர் எம்.எல்.ஏ.வான புருஷோத் தம் நரேஷ் உதவியை நாடி னார்.
 
அவர் தனது ஆட்கள் மூலம் நீலாவதி இருப்பிடத்தை கண்டுபிடித்து விட்டார். பின்னர் அவளை தனது வீட்டிலேயே சில நாட்கள் தங்கி இருக்கட்டும் என்று சொன்னார். அதற்கு அவளது தந்தையும் சம்மதித்தார்.
 
சிறுமிக்கு அடைக்கலம் கொடுப்பதாக கூறி நீலா வதியை எம்.எல்.ஏ.வே கற்பழித்தார். அவரது கொடுமை தாங்க முடியாமல் நீலாவதி அங்கு இருந்து தப்பி ஓடி போலீசில் புகார் செய்தாள்.
 
இதற்கிடையே எம்.எல்.ஏ. புருஷோத்தம் போலீஸ் நிலையத்தில், நீலாவதி மீது திருட்டு பட்டம் சுமத்தி புகார் செய்தார். தனது வீட்டில் இருந்த துப்பாக்கியையும், ரூ.2 லட்சத்தையும் திருடி சென்று விட்டதாக புகாரில் எம்.எல்.ஏ. கூறியிருந்தார்.
 
இதற்கிடையே நீலாவதி தனது தந்தையிடம் சென்று எம்.எல்.ஏ. கற்பழித்த விவரத்தை கூறினார். ஆவேசம் அடைந்த அவர் உள்ளூர் மக்களுடன் சேர்ந்து நியாயம் கேட்க புறப்பட்டார்.
 
ஆனால் எம்.எல்.ஏ. அவர் களை மிரட்டி கற்பழிப்பு விஷயம் குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று அடக்கி விட்டார்.
 
போலீசார் எம்.எல்.ஏ. கொடுத்த புகாரின் பேரில் நீலாவதியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இது இன்று மாலை ஒரு செய்திதாளில் வந்த செய்தி.

இதுதான் இன்றைய இந்தியா.... 
 
இதற்கான தீர்வுகளை பின்னூட்டம் இடவும்....
 
படிச்சாச்சா.........?
அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?
தமிழ்மணம், தமிழ்10 ,லோகோ இருக்கா ....?
புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...
 
புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...  
 
 
 
   

10 comments:

 1. இப்படி ஒரு இந்தியா வேண்டாம் நமக்கு

  ReplyDelete
 2. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 3. ச்சே.. என்ன மனுஷங்க இவங்க எல்லாம்....

  ReplyDelete
 4. அரசியல்வாதிகள்தான் நம் நாட்டின் முதல் வில்லன்கள்....

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.....

  ReplyDelete
 5. பகிர்வுக்கு நன்றிகள். வாக்களிச்சாச்சு...
  முதல் முறை உங்கள் வலைப்பூவுக்கு வருகிறோம். வலையுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. நந்தா படத்துல சூரியா போல ....

  அதுமட்டுமே சரியான தண்டனை.

  ReplyDelete
 7. பதவியில் இருக்கும் பலர் இப்படித்தான். இராகுல் காந்தி மீது கூட சுகன்யா தேவி என்ற பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு உள்ளதென்று கேள்வி. இன்னும் உறுதியாகவில்லை.
  நிற்க. உங்கள் hyperlinkஉடன் சேர்ந்த தலைப்பு மாயாவதி ஏதோ அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கினார் என்பதைப் போல பொருள் தருகிறதே? ஏன்?

  (என் வலைப்பூவையும் பாருங்கள்: http://hmsjr.wordpress.com/ & http://paarvatheyan.blogspot.com/)

  ReplyDelete
 8. எங்கோ ஒரு மூலையில் நடப்பதை உடனுக்குடன் அறியக் கூடியதாகவுள்ளது வாழ்த்துக்கள்http://sarujan-sarujan.blogspot.com

  ReplyDelete
 9. எங்கோ ஒரு மூலையில் நடப்பதை உடனுக்குடன் அறியக் கூடியதாகவுள்ளது வாழ்த்துக்கள்http://sarujan-sarujan.blogspot.com

  ReplyDelete
 10. அதெல்லாம் யாரு கேட்டா நூறு ரூவா இல்ல வேணும் நமக்கு.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"