Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/19/2011

பிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம்

ருவை வயிற்றில் சுமக்கும் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இவர்களுக்குக் கவலையோ, அச்ச உணர்வோ இருக்க கூடாது. இவைகளைப் போக்கி மகிழ்ச்சியான, எதையும் தாங்கும் சூழ்நிலையில் இருக்க வைக்க வேண்டும். 

மேலும் 7-வது மாத மருந்துகள் குழந்தையின் நாடித்துடிப்பு, உஷ்ணநிலை இருதய வளர்ச்சி, மூளை வளர்ச்சி, இருதய பலம் ஆகியவற்றைத் தடுகின்றது. 
 
இடையில் உண்டாகும் பிரச்சனைகள் 

 
இன்று சிசுவின் துடிப்பை, அசைவை அறிய ஸ்கேன் செய்து பார்க்க வேண்டி உள்ளது, அன்று எளிதாக பசு வெண்ணெயை வயிற்றில் தடவ அது உருகிவிடும். அப்போது பிள்ளை உயிருடன் நன்றாக உள்ளது, உருகாவிட்டால் சிசு இறந்தது என்று அறிந்து கொள்ளலாம்.
ஏதோ காரணத்தால் வயிற்றில் சிசு இறந்து விட்டால், கர்ப்பபையில் குழந்தை சுற்றி வராது. முக்கியமாக இன்று கர்ப்பப்பையில் உள்ள நீர் முதலில் வெளியேறி விடும். இது மிகவும் சிக்கலானது. முடிவில் அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டி வரும். 

 னால் அன்று இவ்வளவு வசதியும், வளர்ச்சியும் இல்லை. இதற்கு முன்னோர்கள் எளிமையாக மருந்து கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர். பிரண்டை வேரையும், குறிஞ்சா வேரையும் சேர்த்து அரைத்து வயிற்றின் மீது தடவ, உள்ளே இறந்த நிலையில் உள்ள சிசு உடனே வெளியே வந்து விடும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

ரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே வெளியே வந்து விடும். இரத்த போக்கும் அதிகமாக இருக்காது. உடனே கருவேப்பிலை, வேப்ப இலை, முருங்கை கீரை, கடுக்காய் ஒன்று, சேர்த்து 4 : 1 ஆக தண்ணீர் விட்டு காய்ச்சி கொடுக்க வயிற்றில் உள்ள நஞ்சுகொடி மற்ற கசடெல்லாம் வெளியே வந்து விடும். இதனால் வயிறு, கர்ப்பபை சுத்தமாக மாறும். இன்று டி & சி செய்ய வேண்டி உள்ளது. சாதாரண பச்சிலைகள், பக்க விளைவுகள் இல்லாதது, முக்கியமாக உடலில் எங்கும் கத்தி வைக்க வேண்டிய அவசியமில்லை. 
 
இதே போல் இறந்த குழந்தை அல்லது பிறந்து இறந்து விட்ட குழந்தையை பெற்ற தாயாரின் மார்பில் சுரக்கும் பால் கட்டிக் கொண்டு மிகுந்த வலியை தரும். இன்று அதற்கு ஊசி மருந்துகளை 1 வாரம் தொடர்ச்சியாக எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் அன்று 1 வேளையில் தீர்த்தனர். கோழி கறியை வதக்கி, மார்பில் வைத்து கட்ட பால் 1 இரவில் வரண்டு போகும். தொந்தரவு இருக்காது. அடுத்து பிறக்கும் குழந்தைக்கு பால் அதிகமாக சுரக்க செய்யும். 

 
இதுவரை குழந்தை உண்டாகி, பிறக்கும் வரை அன்றும், இன்றும் பார்த்தோம். இனி பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை வரும் நோய்களைப் பற்றி பார்ப்போம். இன்று எத்தனையோ மருத்துவ கருவிகள், எலக்ட்ரானிக் நவீன கருவிகள் உள்ளன. இவற்றின் துணையோடு குழந்தை பிறந்து குழந்தைக்கு (30 நாட்களுக்குள்) கழுத்து வீங்கி, முழங்கால், முழங்கை குளிர்ந்தால், அக்குழந்தை விடாமல் அழும். காரணம் வயிற்றில் வலி உண்டு என்று அர்த்தமாகும். குழந்தைக்கு தேவையான உடல் உஷ்ணம் இல்லை என்று அர்த்தமாகும். இதற்கு உடனே உஷ்ணம் ஏறவும் வயிற்றுவலி தீரும் மருந்து பயன்படுத்த வேண்டும். 
 
குணங்கள் : 

செங்கிரந்தி :
பிள்ளை பிறந்தவுடன் தொண்டை கட்டி பூனைகுரல் போல் அபம், மலம், ஜலம் போகாது , வயிறு ஊதும். கை, கால் சிவப்பாக மாறும்.
தருங்கிறந்தி :
குழந்தை அவ்வப்போது அலறியழும், முலைப்பாலுண்ணாது வயிறு ஊதும். கீழ் உதடு  கருப்பாக மாறும். 

 
கிரந்து : 
  
மல சிக்கல், வயிறு நொந்து, விடாமல் அழும். மலம் கடுமையான வலியுடன் வெளியே போகிற மாதிரி போக்கு காட்டி போகாது. இதனால் சிறுநீர் கட்டும், விக்கல் எடுக்கும், குடித்த பாலை உடனே வாந்தி பண்ணும். 18 வகையான வயிறு வலிகளும் வரும். 
 
அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தால் இந்த நோய்தான் என்று கண்டறிகின்றனர். வாய் பேசும் குழந்தைகள் தங்களுக்கு வலிகள் உள்ளதை மட்டும், எங்கு வலிக்கின்றது என்று சொல்கின்றது. ஆனால் வாய் பேசாத குழந்தைகள் எப்படி சொல்லும் இதற்கு அன்று முன்னோர்கள் முனிவர்கள் ரிஷிகள், சித்தர்கள் ஞானிகள் குறிகளை சொல்லியுள்ளனர். அவற்றிற்கு தனித்தனியாகவும் மொத்தமாகவும் மருந்துகளை கூறியுள்ளனர். இனி வரும் நோய்களை பார்ப்போம்.
நோய் வரும் காரணம்
கிரந்தி, செங்கிரந்தி, கருங்கிரந்தி, தோஷம், மாந்தம், கணம் பிரளி, கரப்பான், செவ்வாப்பு, தொண்டை கட்டு, அக்கரம், வைசூரி, சளி, ஜலதோஷம் இன்னம் பல நோய்கள் வருகின்றன.
மாந்தம், முலைப்பாலாலும், கணம், கர்ப்ப மூட்டினாலும், மற்ற பினிகள், தாய் தந்தை புணர்ச்சியினாலும் கிரிமிகளாலும் உண்டாகின்றது.
மாந்தம் (மந்தம்)
எருமைபால், நெய், தக்காளி பழம், தேங்காய், இளநீர், கடலை, வெல்லம், சர்க்கரை, புளித்த மோர், தயிர் மாங்கனிகள், மலைத்துவரை, உளுந்து மொச்சை, பச்சைபட்டானி, உருளை, வாளை மீண், கொண்டை, சாகல், கரை வாயு பண்டங்கள் இவைகளை அதிகமாக சாப்பிட்டால், வாத மாந்தம் பித்த மாந்தம், சிலேஷ்ம மாந்தம், போர் மாந்தம், வாலைமாந்தம், சுரமாந்தம், நீர் மாந்தம், சொரி மாந்தம், கட்டு மாந்தம், எரிமாந்தம், தலை மாந்தம், கண் மாந்தம், வலிப்பு மாந்தம், சுழி மாந்தம், மூக்கு மாந்தம், சன்னி மாந்தம், ஊது மாந்தம், வீக்கமாந்தம் என 20 வகையான மாந்தங்கள் (மந்தம்) குழந்தைகளுக்கு நேரிடும். 

 
மாந்த குணங்கள் : 

 
குழந்தை உடல் சூடேறி வியர்க்கும். முலைபாலுண்ணாது வாந்தி பண்ணி மயங்கும், சீதமும், மலமுமாய் கழியும், அல்லது கெட்டபால் போலும் தெளிந்த நீர் போலும் கழியும், வயிறு பொருமும் , கொட்டாவி விடும். மூக்கில் புண் உண்டாகும், வலிப்பு மூச்சை (மயக்கம்) ஏற்படும். 
உடல் மந்தமாகி வியர்த்து குளிரும், நெஞ்சில் கபங்கட்டும், உடல் திடீரென்று ஊதும், வயிறு இரைந்து கழியும், கடுப்பு கழிச்சல், தொண்டை வலி, சுரம் ஏற்படும், தலைவலி, முகம் மிணு மிணுக்கும், மலம் சிறுத்து நீர் கருத்து இறங்கும். மார்பு புடைக்கு, நெற்றி நரம்பு புடைக்கும். 

தாகம் ஏற்படும், வயிறு ஊதி புளித்த நாற்றமாய் கழியும், வாந்தி பண்ணி பரிதவிக்கும் மாவு, கரைத்தாற் போல் கழியும். ஏப்பம் , கொட்டாவி விடும், நாசியில் நீர் வடியும், உடலை முறுக்கி கொட்டாவி விடும், தூங்காது சில சமயம் முக்கி முக்கி சீதமும், மலமுமாய் கழியும் உடல் மெலிந்து கொண்டே வரும் கடைசியில் வலிப்பில் வந்து நிற்கும்.

13 comments:

 1. பயனுள்ள பதிவு

  ReplyDelete
 2. மிகவும் பயனுள்ள பதிவு....பல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்....நன்றி...

  ReplyDelete
 3. மிகவும் பயனுள்ள பதிவு....பல நல்ல தகவல்களை தெரிந்து கொண்டேன்....நன்றி...

  ReplyDelete
 4. Speed master பெயருக்க ஏற்வாறு speed இருக்கிரீங்க பாஸ்.

  ReplyDelete
 5. ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் சூப்பர் பதிவா இருக்கே.....
  நானும் வந்துட்டேன்...

  ReplyDelete
 6. அருமையான வசியமான பதிவு.பகிர்தலுக்கு நன்றி.

  ReplyDelete
 7. மிகவும் பயனுள்ள பதிவு. நல்ல பல விஷயங்களைத்தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

  ReplyDelete
 8. அருமையான பதிவு பாஸ்.....

  ReplyDelete
 9. இத்திய மருத்துவத்தை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ளீர் ..நல்ல பதிவு

  ReplyDelete
 10. நல்லாயிருக்கு நண்பரே
  இதையும் பாருங்க
  http://tamilaaran.blogspot.com/2011/01/blog-post_9863.html

  ReplyDelete
 11. பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 12. நண்பர்களே..
  தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"