Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/22/2011

ஜெயலலிதா, விஜயகாந்த் எம்.எல்.ஏ., பதவி பறித்தால் என்ன ?

க்கள் பிரச்னைகளை, தொகுதி பிரச்னைகளை எடுத்து வைக்கும் இடமான சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா கடந்த ஓராண்டாக வரவில்லை. அதேபோல, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் சட்டசபைக்கு வராமல் புறக்கணித்து வருகிறார். 
 
னநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாக இருக்கக்கூடிய சட்டசபை, மக்கள் மன்றமாக விளங்கி வருகிறது. தன்னை தேர்ந்தெடுத்த தொகுதி பிரச்னைகளில் துவங்கி, அரசின் ஒவ்வொரு முடிவுகளையும் கண்காணித்து, அவற்றிற்கு ஒப்புதல் கொடுக்கும் பொறுப்பு எம்.எல்.ஏ.,க்களுக்கு உள்ளது. 

ட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வாதங்களை எழுப்பி, அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர்கள் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பது தமிழக அரசியலில் வழக்கமாகி வருகிறது.

திர்க்கட்சி வரிசையில் கருணாநிதி இருந்த போது, சட்டசபைக்கு வருவதை தவிர்த்து வந்தார். விவாதங்களில் கலந்து கொள்ளவில்லை. மாறாக, அவ்வப்போது சபைக்கு வந்து கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுச் சென்றார். காரணம், ஆறு மாதங்கள் தொடர்ந்து சபைக்கு வராமல் இருந்தால், எம்.எல்.ஏ., பதவி பறிபோகிவிடும் என்பது தான். 

.தி.மு.க.,வின் நிலை இப்படி என்றால், தே.மு.தி.க., சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.,வான விஜயகாந்தும் சட்டசபைக்கு வருவதில்லை; எந்த விவாதத்திலும் பங்கேற்பதில்லை. ஆரம்பத்தில் இரண்டு முறை சட்டசபையில், எழுதி வைத்திருந்ததை வாசித்ததோடு சரி. "சட்டசபையில் பேசினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது' என்று இதற்கு ஒரு காரணத்தையும் விஜயகாந்த் கற்பித்து வருகிறார். 

து எப்படி இருந்தாலும், "ஆளுங்கட்சியானால் தான் சட்டசபைக்கு வருவேன்' என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கருதுவது ”, தமிழகத்தில் மட்டும் நடக்கும் வினோதம் என்பது உண்மை.

இதைப்பற்றி நீங்கள் என்ன  நினைக்கீரீா்கள்.. 
இந்த பதிவு பலரையும் சென்றடைய  ஓட்டு போடவும்....

43 comments:

 1. என்ன நினைக்கறது பாஸ், இவங்க எல்லாம் உருப்பட மாட்டாங்கன்னுதான் நினைக்கனும் வேற என்ன பண்றது?

  ReplyDelete
 2. எம் எல் ஏ பதவியை பறிச்சுட்டா பின்னே ஒழுங்கா வேலை செய்வாங்க...

  ReplyDelete
 3. so people you do not follow cinema actors and selecting cine actors and send legislative. so people you have to allert and follow cinema actors.

  ReplyDelete
 4. பூனைக்கு யாருசார் மணி கட்டுறது.. எல்லா அரசியல்வாதிகளும் இந்த விஷயத்துல மட்டும் ஒற்றுமையா இருக்காங்க...

  ReplyDelete
 5. இரவு வானம் சொன்னது…

  என்ன நினைக்கறது பாஸ், இவங்க எல்லாம் உருப்பட மாட்டாங்கன்னுதான் நினைக்கனும் வேற என்ன பண்றது?
  /// thanks for comments.

  ReplyDelete
 6. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  எம் எல் ஏ பதவியை பறிச்சுட்டா பின்னே ஒழுங்கா வேலை செய்வாங்க...
  //// correct.

  ReplyDelete
 7. Speed Master சொன்னது…
  என்ன சொல்ல.
  ///அததான் சொல்லனும்.

  ReplyDelete
 8. deva கூறியது...

  so people you do not follow cinema actors and selecting cine actors and send legislative. so people you have to allert and follow cinema actors/////
  I can't understand.

  ReplyDelete
 9. Ding Dong கூறியது...

  பூனைக்கு யாருசார் மணி கட்டுறது.. எல்லா அரசியல்வாதிகளும் இந்த விஷயத்துல மட்டும் ஒற்றுமையா இருக்காங்க.../////
  என் தளத்திற்கு முதன்முதலாய் வருகை தந்தமைக்க நன்றி..

  ReplyDelete
 10. தங்கள் வோட்டுக்கு நன்றி
  இவங்க உருப்பட மாட்டாங்க

  ReplyDelete
 11. 1.இந்த கலாச்சாரத்தை முதலில் ஆரம்பித்து வைத்தது கருணாநிதி.. ஆனால் கருணாநிதி பெயர் இந்த பதிவில் இல்லை!!!

  2.//சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வாதங்களை எழுப்பி, அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர்கள் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பது தமிழக அரசியலில் வழக்கமாகி வருகிறது//

  உங்கள் தளத்திற்கு யாரும் ஒரு மாதம் வராமல் இருந்தால் , அப்படியே வந்தாலும் உங்களுக்கு சரியான பதிலளிக்காமல் உங்களை குறை கூறிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்? என்னடா இது பதிவே எழுத வேண்டாமென முடிவெடுப்பீர்கள் அல்லவா? அதே போல தான் .. இந்த நிகழ்வு அனைத்து ஆட்சிகளிலும் தொடரும் அவலம்...

  ReplyDelete
 12. இதே போன்று பாராளுமன்றத்திலும் சிலர் இருக்கிறார்கள். இங்கே பலர் இருக்கிறார்கள். ஆனால் சட்டமன்றத்தில் புகழுரைகளுக்கு நடுவே உட்கார்ந்திருப்பதும் சிரமம் தான். வாழ்க ஜனநாயகம்..

  ReplyDelete
 13. மன்னிக்க கருணாநிதி பெயர் இருக்கிறது... கவனிக்கவில்லை :) இந்த வழக்கதை ஆரம்பித்தது கருணாவே !!!! இப்போதும் கூட எதிர்கட்சி என்ன கேட்டாளும் அதற்கு சம்பந்தமே இல்லாமல் ஏதேதோ உளறி கேள்வி கேட்பதையே வெறுக்க வைத்ததே காரணம்...

  ReplyDelete
 14. இன்னொரு உண்மை இதற்கு சற்றும் சலைத்தவர் அல்ல ஜெயா.... கருணாவிற்கு ஒரு படி மேல் பதிலளிப்பதில் !!!!

  ReplyDelete
 15. பாவம்... அடிக்கடி அங்கே போனா காருக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும்னு போகாம இருக்காங்க போல ;)

  ReplyDelete
 16. அரசியலே பொய்யடா கால் சதம் பெற மொய்யடா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  காதல் கற்பித்த தமிழ் பாடம்

  ReplyDelete
 17. அவிங்க தான் சட்ட பாக்கட்ல வச்சிருக்காங்களே சார் ..........

  ReplyDelete
 18. நியாயமான கேள்வி. தம் கடமையை சரியாக செய்யாதவர்களுக்கு பதவி மட்டும் எதற்கு.

  ReplyDelete
 19. . அட....விடுங்க கருண்.
  இனிமேல் பறிச்சு என்னத்துக்கு ஆகப்போகுது. இன்னும் நாலு மாசத்துல மக்களே பறிச்சுடுவாங்க

  ReplyDelete
 20. அதிலும் அந்த கடைசி வரி வைர வரி!!!

  ReplyDelete
 21. அரசியல்வாதிங்க யாராயிருந்தாலும் , அட்டென்டன்ஸ் சரியா இல்லனா ,
  EXAM (தேர்தல் ) எழுதவே விடக்கூடாது ..

  இவண், இணையத் தமிழன் .
  http:\\inaya-tamilan.blogspot.com

  ReplyDelete
 22. வாரத்துக்கு ஒருக்கா வந்து கையெழுத்து போடப்னும்னு சட்டம் கொண்டுவரணும்

  ReplyDelete
 23. இவங்கள என்ன பண்ணலாம்

  ReplyDelete
 24. நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

  பொறுப்பு மிக்க சபையில் மாடுமேய்க்க கூட தகுதியில்லாத ஜென்மங்கள் இருக்கும் பொது அங்கே போவது கூட வேஸ்ட். விஜயகாந்தை திட்டுவதற்கு பதில் திமுக வுக்கு வோட்டு போட்டவன் காலை, மாலை இருவேளை கண்ணாடிய பாத்து காரிதுப்பி கொண்டால். அடுத்த தேர்தலில் நல்ல அறிவுள்ள நபர்கள் சபையில் இருப்பார்கள். எவன் சபைக்கு வந்தாலும் வராட்டியும் மக்களுக்கு நல்லது நடக்கும்.

  ReplyDelete
 25. நிதர்சனன் கூறியது...
  தங்கள் வோட்டுக்கு நன்றி
  இவங்க உருப்பட மாட்டாங்க///

  Thanks for comments.

  ReplyDelete
 26. தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 4-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. //அஹோரி சொன்னது…
  காலை, மாலை இருவேளை கண்ணாடிய பாத்து காரிதுப்பி கொண்டால்.//

  க க போ...

  ReplyDelete
 28. உண்மை தான். பேசாமல் தினமும் வந்தால்தான் சம்பளம்னு சட்டம் போடணும். ஆனா இவிங்க எங்க அதெல்லாம் பண்ணப் போறானுங்க.

  ReplyDelete
 29. தமிழ்மணம் முன்னணி வலைப்பதிவுகள் பட்டியலில் 4-வது இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 30. ஸ்கூல்ல அட்டெண்டென்ஸ் இல்லைன்னா பரிட்சை எழுத விடமாட்டாங்க இல்ல அது போல அட்டெண்டென்ஸ் இல்லேன்னா அடுத்த தேர்தலுக்கு நிக்க முடியாதுனு ஒரு ரூல் கொண்டு வந்தா நல்லாருக்கும் கேபிள் சங்கர்

  ReplyDelete
 31. எது எப்படி இருந்தாலும், "ஆளுங்கட்சியானால் தான் சட்டசபைக்கு வருவேன்' என்று எதிர்க்கட்சித்தலைவர்கள் கருதுவது ”, தமிழகத்தில் மட்டும் நடக்கும் வினோதம் என்பது உண்மை.

  correct

  ReplyDelete
 32. தங்களது மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே..

  ReplyDelete
 33. வந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 34. குறை ஒன்றும் இல்லை !!! சொன்னது…

  1.இந்த கலாச்சாரத்தை முதலில் ஆரம்பித்து வைத்தது கருணாநிதி.. ஆனால் கருணாநிதி பெயர் இந்த பதிவில் இல்லை!!!

  2.//சட்டசபை கூட்டத்தொடரில் அனல் பறக்கும் வாதங்களை எழுப்பி, அரசை நிலைகுலையச் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எதிர்கட்சிகளுக்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, எதிர்கட்சித் தலைவர்கள் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பது தமிழக அரசியலில் வழக்கமாகி வருகிறது//

  உங்கள் தளத்திற்கு யாரும் ஒரு மாதம் வராமல் இருந்தால் , அப்படியே வந்தாலும் உங்களுக்கு சரியான பதிலளிக்காமல் உங்களை குறை கூறிக்கொண்டே இருந்தால் என்ன செய்வீர்? என்னடா இது பதிவே எழுத வேண்டாமென முடிவெடுப்பீர்கள் அல்லவா? அதே போல தான் .. இந்த நிகழ்வு அனைத்து ஆட்சிகளிலும் தொடரும் அவலம்...
  /////கருனாநிதி பற்றி கூறியுள்ளேன்...

  ReplyDelete
 35. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 36. Philosophy Prabhakaran சொன்னது…

  பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்://////தோ.. வந்திட்டே இருக்கேன்..

  ReplyDelete
 37. ஆமினா சொன்னது…

  பாவம்... அடிக்கடி அங்கே போனா காருக்கு பெட்ரோல் செலவு அதிகமாகும்னு போகாம இருக்காங்க போல ;)
  /////இருக்களாம்

  ReplyDelete
 38. வந்து, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete
 39. அஹோரி சொன்னது…

  நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை.

  பொறுப்பு மிக்க சபையில் மாடுமேய்க்க கூட தகுதியில்லாத ஜென்மங்கள் இருக்கும் பொது அங்கே போவது கூட வேஸ்ட். விஜயகாந்தை திட்டுவதற்கு பதில் திமுக வுக்கு வோட்டு போட்டவன் காலை, மாலை இருவேளை கண்ணாடிய பாத்து காரிதுப்பி கொண்டால். அடுத்த தேர்தலில் நல்ல அறிவுள்ள நபர்கள் சபையில் இருப்பார்கள். எவன் சபைக்கு வந்தாலும் வராட்டியும் மக்களுக்கு நல்லது நடக்கும்.
  ////உண்மை.

  ReplyDelete
 40. // "சட்டசபையில் பேசினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறது' என்று இதற்கு ஒரு காரணத்தையும் விஜயகாந்த் கற்பித்து வருகிறார். /

  என்ன கொடுமையோ போங்க .. பள்ளிக்கூடம் போகமலே பாஸ் பண்ணனும்னு நினைக்கிறது மாதிரி இருக்கு . இவுங்க எப்பத்தான் மாரப்போறான்களோ ?

  ReplyDelete
 41. நீங்கள் சொல்லும் விஷயம் மிகுந்த விவாதத்திற்கு உரிய விஷயம், இதற்கு பல வழிகள் இருக்கின்றன, சட்டசபை நிகழ்ச்சிகளை லைவ் ஆக தொலைக்காட்சியில் காண்பிக்க வேண்டும், அப்போது பலர் தமது பேச்சு எல்லோரையும் அடையும் என்கிற நினைப்பில் பேச முனைவார்கள். சட்டசபை நிகழ்ச்சிகளுக்கு தவறான பேச்சுக்களுக்கு பத்திரிக்கைகள் முக்கியத்துவம் கொடுத்து மக்களிடம் கொண்டு செல்லும்போது பொறுப்பற்ற பேச்சுக்கள் குறையும். கடந்த கூட்டத்தொடரில் விலைவாசி சம்பந்தமாக சிபிஐ பெண் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு நமது நிதி அமைச்சர் சொன்ன பதில்கள் மிக பொறுப்பற்றதாகவே எனக்கு தோன்றியது. இதுபோன்ற பதில்கள் யாருக்கும் தொடர்ந்து செல்வதை தவிர்க்கவே தோன்றும்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"