Tamilus

The best Tamil Aggregator | Tamilus

1/15/2011

அதிமுக - தேமுதிக கூட்டணி CHO

சென்னை மியூசிக் அகாதெமி அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்ளக் வார இதழின் 41-வது ஆண்டு விழாவில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்து துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி பேசியது:  "நாட்டில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. 

நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். அதற்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். 

அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். 

திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. பொறியியல் கல்லூரிக்கு இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து அவர் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதனையும் சாதிக்க முடியாது.  திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. 

பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு? பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதைவிட குழந்தைகளை பாதுகாப்பதில்தான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.  திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. 

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்று உச்சத்தில் உள்ள நடிகர்களே கூறுகின்றனர்.  அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான். 

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்? சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். 

குடும்பத்தில் அனைவரையும் அரசியலுக்குக் கொண்டு வந்ததால் பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார்.  பிரதமர் மன்மோகன் சிங் நேர்மையைக் கொலை செய்து புதைத்து விட்டார். 2ஜி அலைக்கற்றை ஊழலில் ஆ. ராசாவை அவரால் தட்டிக்கேட்க முடியவில்லை. பிரதமர் பதவிக்காக நேர்மை, நாணயம் எல்லாவற்றையும் துறந்துவிட்டார். இனி 2ஜி அலைக்கற்றை ஊழலை மன்மோகன் சிங்கும், சோனியாவும் பார்த்துக்கொள்வார்கள். 

ராமஜென்ம பூமி வழக்கில் நீதிமன்றத் தீர்ப்பு, குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கை, பிகார் தேர்தல் வெற்றி ஆகியவை பாஜகவுக்கு சாதகமான அம்சங்கள். 


ர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதுள்ள கரும்புள்ளி பாஜகவை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அத்வானியைப் போன்ற தலைசிறந்த தலைவர்கள் யாரும் இந்தியாவில் இல்லை. அவர் போன்றவர்களால் மட்டுமே சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும்.

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் பணத்தை மீட்க முடியும். காங்கிரஸ் கட்சிக்கு மாற்று பாஜக மட்டுமே. காங்கிரஸ் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. 

ஆந்திரம், மகாராஷ்டிரத்தில் அக்கட்சிக்கு சிக்கல். ஒரிசா, குஜராத்தில் காங்கிரஸூக்கு வேலையே இல்லை. ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. பிகாரில் ராகுல் காந்தி குடிசையில் உணவருந்தியும் பலனில்லை. இந்த வாய்ப்பை பாஜக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார் சோ ராமசாமி. எனவே வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவைத் தோற்கடிக்க அதிமுக - தேமுதிக கூட்டணி அமைய வேண்டும் என்று துக்ளக் வார இதழின் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்தார்.

6 comments:

 1. சில விஷயங்களில் முரண்பாடுகள் இருப்பினும் சோ சொன்ன விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. பதிவக்கியதற்கு நன்றிகள். தேர்தல் நெருங்கும் வேளையில் தங்கள் பணி தொடரும் என்று நம்புகிறோம்..

  ReplyDelete
 2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. பொங்கல் நாளிலும் விடாமல் பதிவு போடுறிங்களே....எப்படி சார்?

  ReplyDelete
 4. இன்றைக்கு லீவு தானே...
  வீட்டில் சும்மாதான் இருக்கிறேன்.அதனால்தான் இன்றைக்கும் பதிவு.

  ReplyDelete
 5. எந்த தலைவர் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நடக்கும் . என்னைப் பொருத்தவரை எவரும் யோக்கியரல்ல.அவன் கிடக்கின்றான் குடிகாரன் .. நீ ஒரு கிளாஸ் ஊத்தியடி மாப்ளே.. என்ன்கிற கதைதான்..

  ReplyDelete
 6. Arasial oru sakkadai andru
  Anal ippotho arasial oru maperum samuthira sakkadai

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"