Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/02/2011

கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..ருட்டில்
வந்துவிழும்
நிலவொளிகளை  உள்வாங்கிய
உறக்கத்தில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!ழுந்தும்,  எழாமலும்
புரண்டு படுக்கையிலே
அதிகாலை வருமுன்னே
நித்திரையில் வந்து விழுந்ததன்று
இந்தக் கனவு...!


சிந்தனையை சீா்படுத்தி
மௌனித்த காலங்களில்
இதயப்  பள்ளத்தில்
வந்து விழுகிறது,
கண்களை  திறந்துகொண்டு இருக்கையிலே
ஒரு கனவு...!
 
ங்கையும், காவிரியும்
கைக் கோர்த்துக் கொண்டது...!
ஊற்றெடுப்பது என்னவோ
இமயமானாலும்
கடலோடு கலந்துகொள்வது
தென்குமரியில் தான்...!

னி,
பாரதத்தின் வரைபடத்தில்
ஒரே நதிதான்...!

வேதங்கள் ஒலிக்கும்
ஆலயங்களுக்கு விடுமுறை...!

தேவன் கோயில்
மணிகூண்டு இனி
மணிகாட்ட  மட்டுமே...!

குரான்களை ஓதும் மசூதிகளோ
புறாக்கள் வாழும் கூடுகளாகிவிட்டன...!

கலவரக் காலங்கள்
கலைந்து போய்விட்டது
இனி இங்கே
ஒரே மதம் தான்...!

நிலவுக்குள்
இந்தியக் குடியிருப்பு,
செவ்வாயில்
நம்தேசத்து செடி கொடிகள்,
ஒன்பது கோள்களுக்குள்ளும்
அழியாத அன்பை விதைப்பதே
இனி நமது
ஒரே சிந்தனை...!

காஷ்மீரத்து எல்லையோரம்
மொட்டுகள் மட்டுமே வெடிக்கும்
ரோஜா தோட்டங்கள்...!

லங்கைக்கு பாலம் அமைத்து
தென்னை ஓலைகளால்
கடல் நெடுகிலும் தோரணங்கள்...!

சீனத்து பெருஞ்சுவரில்
நம் இந்திய குயில்கள்...!

வாகா எல்லையில்
நம் இந்திய மயில்கள்...!

லகம் முழுவதும்
வெள்ளைக் கொடி பறக்கவைப்பதே
இனி நமது
ஒரே இலக்கு...!

பொதி சுமக்கும் குழந்தைகளுக்கு
உள்ளங்கையில்
அடங்கிபோகும் பாடங்கள்...!

வேலைக்கு ஆள் கிடைக்காமல்
ஓடி,ஓடி 
அலைய வேண்டும் நிறுவனங்கள்...!

குற்றங்கள் இல்லாததால்
காவல் நிலையங்களுக்கு
நிரந்தர விடுமுறை...!

னவுகளுக்கு ஏது முற்றுபுள்ளி
இன்னும் சொல்வேன்...!

காஷ்மீரத்தில் நிகழும்
ஊடுருவல்கள் போல
என் விழிகளின் வழியே
இந்தக்  கனவுகள்
ஊடுருவித் தொலைக்கிறது...!


ர்நாடகத்து அணைகள் போல
மூடியே கிடக்க
உடன்பட்டதில்லை,
அதனால் தான்
அதையும் எழுதித் தொலைக்கிறது
என் எழுதுகோல்...!

 

ந்தக் கனவுகள்
வந்தது என்னவோ
கண்கள்
திறந்து கிடந்தபோதுதான்...!
வைகள் நிறைவேற
காத்துக் கிடப்பதுதான் விதியோ?

ருட்டுக்குள்
ஒளி தேடுவதை விட்டுவிட்டு
உழைப்பென்னும்
ஒளியெடுப்போம்...!

சிலந்திகளுக்கு
சாரங்களாய் இல்லாமல்
சரிந்துபோன வெற்றிக்கு
கைக் கோர்ப்போமானால்
இந்தக் கனவுகள் கூட
நாளைய
நிஜங்கள்தான்...!


தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், கவிதை பிடித்திருந்தால்  அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.47 comments:

 1. இந்தக் கனவுகள்
  வந்தது என்னவோ
  கண்கள்
  திறந்து கிடந்தபோதுதான்...!
  இவைகள் நிறைவேற
  காத்துக் கிடப்பதுதான் விதியோ?

  தரங்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை கனவு கனவாகவேதான் இருக்கும் அது விதி

  ReplyDelete
 2. அதீதக் கனவுகளாய் இருக்கே பாஸ்

  ReplyDelete
 3. >>>ஊடுறுவித் தொலைக்கிறது...!

  ஊடுருவி

  ReplyDelete
 4. >>>>கடல் நெடிகிலும் தோரணங்கள்...!

  நெடுகிலும்

  ReplyDelete
 5. >>>பொதி சுமக்கும் குழந்தைகளுக்கு
  உள்ளங்கையில்
  அடங்கிபோகும் பாடங்கள்...!

  டாப் கனவு

  ReplyDelete
 6. தரங்கெட்ட அரசியல்வாதிகள் இருக்கும்வரை கனவு கனவாகவேதான் இருக்கும் அது விதி //////

  ரிபீட்டு

  ReplyDelete
 7. தரமான கற்பனை நிஜமானால்
  மனிதம் வாழும் . வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 8. ..கலவரக் காலங்கள்
  கலைந்து போய்விட்டது
  இனி இங்கே
  ஒரே மதம் தான்...!..

  இப்படி இருந்தல் ரொம்ப நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 9. உங்கள் கனவுகள் பலிக்கட்டும்...
  அதே கனவோடு நானும்...

  ReplyDelete
 10. உன் காதலிக்கு ஒரு கிரீட்டிங் கார்டு
  வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும்
  போலியான புன்னகையை விட ....

  உன் நண்பனுக்கு ஒரு கட்டிங்
  வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும்
  சந்தோஷமே உண்மையான நட்பின் அடையாளம்...!
  மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்....!!!


  என்ன பாஸ் இப்பிடி எழுதிரிங்க
  supper


  இதையும் பாருங்க http://tamilaaran.blogspot.com/2011/02/tpop-rpejk-fzzpuk-kzzbaplloj-ehlfsk.html

  ReplyDelete
 11. நடக்கப்போவதில்லை என்றாலும் உங்கள் கற்பனைத்திறனுக்கு வாழ்த்துக்கள், சிறந்த எண்ணங்கள்.

  ReplyDelete
 12. கனவுகள் அற்புதம்
  பலிக்க ப்ரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 13. நல்லாருக்கு பாஸ்....

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 14. அற்புதம் இளக்கிய விழுதுன்னா சும்மாவா?

  அருமை கருன் தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 15. கனவு காணுங்கள் என்று அப்துல் கலாம் சொன்னார் தான்.
  கனவு மட்டுமே கண்டுகொண்டிருக்கச் சொன்னாரா என்ன?

  ReplyDelete
 16. ரொம்ப கனவு காணு றிங்க போல நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 17. //உலகம் முழுவதும்
  வெள்ளைக் கொடி பறக்கவைப்பதே
  இனி நமது
  ஒரே இலக்கு...!
  //

  நல்ல இலக்கு.. நாங்களும் துணையாய் இருக்கிறோம்.. வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 18. கவிதை அருமை... வாழ்த்துக்கள்...
  இதையும் கொஞ்சம் படிங்க
  http://tamilpaatu.blogspot.com/2011/02/blog-post.html

  ReplyDelete
 19. நல்லா இருக்குங்க உங்க கனவு

  ReplyDelete
 20. தரங்கெட்ட அரசியல்வாதிகள் தாமாகவே வருவதில்லை, நாமேதான் உருவாக்குகிறோம். இனியாவது தரம் பார்த்து அனுப்பி வைப்போம்.

  ReplyDelete
 21. அருமையான கனவுகள்தான் (கவிதைகள்) ஆனால் பலிக்கனுமே

  ReplyDelete
 22. கலவரக் காலங்கள்
  கலைந்து போய்விட்டது
  இனி இங்கே
  ஒரே மதம் தான்...!..சூப்பர் நண்பா,,,,,

  ReplyDelete
 23. சூப்பர் கனவுகள்
  கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்


  கனவு காணுங்கள்
  காதல் பட சந்தியாவை பற்றியல்ல
  எதிர்கால இந்தியாவை பற்றி

  ReplyDelete
 24. சூப்பர் கனவுகள்
  கனவுகள் மெய்பட வாழ்த்துக்கள்


  கனவு காணுங்கள்
  காதல் பட சந்தியாவை பற்றியல்ல
  எதிர்கால இந்தியாவை பற்றி

  ReplyDelete
 25. இப்பிடி இருந்தா நல்லாத்தான் இருக்கும்!

  ReplyDelete
 26. சூப்பர் கவிதை பாஸ்! ரசிக்கத்தக்க நிறைய வரிகளை எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!! அந்த தொலைந்து போன மணிபர்ஸ் கவிதை போல இதுவும் எனக்கு ரொம்ப பிடித்து விட்டது!!

  ReplyDelete
 27. கனவு காணும் வாழ்க்கையாவும்....

  ReplyDelete
 28. இவ்வளவுதூரம் கனவுக்கவிதை எழுத எவ்வளவு நேரம் தூங்கனும்?

  ReplyDelete
 29. நல்ல கனவு! ஆனால் நிஜம்?

  ReplyDelete
 30. எல்லா வரிகளும் உணர்வுகளை மீட்டி எடுக்கின்றன...

  ReplyDelete
 31. Fantastic to read.
  My Heartiest Appreciations.
  Thank You.

  ReplyDelete
 32. இந்தக் கனவுகள்
  வந்தது என்னவோ
  கண்கள்
  திறந்து கிடந்தபோதுதான்...!
  இவைகள் நிறைவேற
  காத்துக் கிடப்பதுதான் விதியோ?//

  கனவுகள் பலிக்க வேண்டுவோம்..

  ReplyDelete
 33. கவிதைகளை அநதந்த உணர்சிகள் மேலோங்க எழுதியுள்ளீர்கள் ...பாராட்டுக்கள் ...

  ReplyDelete
 34. நீங்க புது பதிவு போட்டா எனக்கு அப்டேட் ஆகமாட்டேங்குது பாஸ்..

  இப்ப உங்க பதிவு..

  நல்லாயிருக்கு பாஸ்..

  கனவுகள் கண்டு அதை வெளியில் சொன்னால் மட்டும் போதாது..
  அக்கனவுகளை மெய்பிக்க எழுச்சி பெற வேண்டும்..

  உங்கள் எழுதும் நடையில் அதீத முன்னேற்றம்..

  தங்களின் முதல் கவிதையை படித்துவிட்டு இதை படித்தால் ரெண்டும் முரண்பாடாகவே தெரியும்..

  அது சரி எல்லாருக்கும் அப்படிதானே.!!!

  ReplyDelete
 35. அற்புதமான சிந்தனை... வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 36. வணக்கங்களும்,வாக்குகளும்...

  ReplyDelete
 37. அருமையா எழுதியுள்ளீரகள்....

  ReplyDelete
 38. என்ன பாஸ் 2நாளா காணேல்ல

  ReplyDelete
 39. வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்.

  ReplyDelete
 40. இலங்கைக்கு பாலம் அமைத்து
  தென்னை ஓலைகளால்
  கடல் நெடுகிலும் தோரணங்கள்...!

  நல்லாயிருக்கு!!!

  ReplyDelete
 41. >>> அசத்தல்...அசத்தல்..!! நான் படித்த சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று நண்பரே! வாழ்த்துகள் கருண்!

  ReplyDelete
 42. கனவு நல்லாயிருக்கு.அருமையா எழுதியுள்ளீரகள்.வாழ்த்துகள்.

  ReplyDelete
 43. பின்னுட்டம்இட்டு உங்கள் கருத்தை பகிர்ந்த அத்தனை பேருக்கும் என் நன்றிகள்...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"