Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/19/2011

உங்கள் வீட்டு வரவேற்பறையில் ஓர் விபரீதம்


ரு காலத்தில் திரைப்படங்கள் மீது மக்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதை விட அதிகமான ஈர்ப்பு இப்போது தொலைக்காட்சி தொடர்கள் மீது உள்ளது என்றே நினைக்கிறேன்..

னியார் தொலைக்காட்சிகளில் காலையில் தொடங்கி இரவு 11 மணி வரைக்கும் இடைவிடாது தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பு பெண்களும் இந்தத் தொடர்களில் மெய் மறந்து மூழ்கிவிடுகின்றனர்.ஏன் அதற்குள்ளே ஐக்கியமாகி விடுகின்றனர்.

பெரும்பாலான தொடர்களில் ஒரு பெண், மற்றொரு பெண்ணால் (மாமியார், மருமகள், நாத்தனார் உறவுக்குள்) கொடுமைப்படுத்தப்படுவது, தவறான உறவுமுறை ஆகிய கலாசார சீரழிவு மிக்க காட்சிகள் அதிகரித்து வருகின்றன.


பெண் ரசிகர்களை அதிகம் கொண்டுள்ள சின்னத்திரையில் இது போன்ற காட்சிகளைத் தவிர்க்கலாம். பல குடும்பங்களில் இத் தொடர்களை மையமாக வைத்து சண்டைகள்  நடப்பதாக செய்திதாள்களில் பார்க்கிறோம்.

சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா?ன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்னவாக இருக்கும்?  இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
கருத்து கூறுங்கள்..

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..

49 comments:

 1. இந்தத்தொடர்கள பாத்து பல பெண்கள் தானாவே கற்பன உலகத்துல வாழறாங்க...........

  ஆண்களை கெடுக்க அரசு மதுக்கடை..........
  பெண்களை கெடுக்க அரசு இலவசமா கொடுத்துக்கொல்லும் தொடர்கள்..........

  இது ரொம்ப நாளு நீடிகாதுன்னு முன்ன நெனச்சேன்.........ஆனா ஒரு தொடர் 5 ஓடுத்துனா இந்த பெண்களோட பொறுமய பாருங்க.....அவர்களா திருந்துனா தான் உண்டு...இல்லன்ன கஷ்டம் மொத்த குடும்பத்துக்கும்தானுங்க!

  ReplyDelete
 2. //சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா? //


  //அவசியம்தானா? //

  இவ்ளோ மொக்கை போடுறான்னு தெரிஞ்சும் விடாம அதையே பார்த்தா, அதுவும் குடும்பத்தோட பார்த்தா அவனுக்கு அவசியம் தான்!

  ReplyDelete
 3. உங்கள் வீட்டு ரிமோட் வேலை செய்யாதா இல்ல அந்த சேனலுக்கு மேல வேற எந்த சேனலும் வராதா!?

  ReplyDelete
 4. எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக்கூடாது என்கிற சுயகட்டுப்பாட்டை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். அதை உருவாக்குவது கடினம் தான். ஆனால் உருவாக்கி கொள்ள தான் வேண்டும். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 5. நல்ல அலசல்தான்! :-)

  ReplyDelete
 6. மன்னிக்கணும் நண்பா.. இன்றைக்கு டிவி தொடர்களால எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைச்சிகிட்டுத்தான் இருக்கு. அதையும் மறக்க கூடாது.. கடையில சிகரெட், மது விக்குறது தெரிஞ்சும் அதை வாங்கி குடிக்கிறது நம்மோட தப்புத்தானே.. தொலைக்காட்சி சீரியல்கள் பிடிக்கவில்லை என்றால் அதை ஒரு பட்டனில் சாகடித்துவிட்டு, வேறு நிகழ்ச்சிகள் பார்க்கலாமே...

  சச்கா சாம்னா என்ற நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு பதிவு செய்த போது உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்.

  ReplyDelete
 7. இன்று நான்தான் பெஸ்ட்

  ReplyDelete
 8. நான்தான் 1st என்று சொன்னது சிலவேளைகளில் தறவாக இருக்கலாம். என்னையும் சிலர் முந்தியிருக்கலாம் காமன்ட் போட்டதில்.
  உண்மைதான். பெண்களின் சீரியில் போமியா.. எப்போது முற்றுப்புள்ளிக்கு வரும் என்று எனக்கு புரியவில்லை. அதேவேளை சில சானல்களில் உபயோகமான சில நிகழ்ச்சிகள், தொடங்கியுள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால் எத்தனை நாட்களுக்கு அவை கொண்டு செல்லப்படப்போகின்றது என்பதே பெரிய கேள்வி!

  ReplyDelete
 9. வெறும் கள்ள உறவு பத்தி வீட்டுக்குள்ள வந்து பாடம் நடத்துரமாதிரி சொல்லிதராங்க .......

  ReplyDelete
 10. டி.வி.,யை உடச்சிடலாம் பாஸ்.. இப்ப டிவி பாக்குறதையே விட்டுட்டன்.. நாள் பூரா எங்க அப்பாவும், அம்மாவும் அந்த தொடர்களை பார்த்து.. ஐயோ.!! கொடுமை கொடுமை..

  ReplyDelete
 11. உங்கள் கருத்துக் வால்பையன் கொடுத்த மிகச் சிறந்த விமர்சனம். ரிமோட் நம் கையில் தானே இருக்கிறது. நாமே போய் விழ வேண்டியது. அப்புறம் குத்துதே குடையுதே என்ற குற்றச்சாட்டு. அவர்கள் சம்பாரிக்க சேவை செய்பவர்கள். நாம் நம் வேலையை தொலைத்து, கண்ட கருமாந்திரங்களை மனதில் ஏற்றிக் கொண்டு புள்ளகுட்டி பொண்டாட்டிகளோட சண்டை பிடித்துக் கொண்டு கேவலப்படுபவர்கள்.

  ReplyDelete
 12. உங்களுக்கே தெரியல எங்களுக்கு எப்படிங்க தெரியும்..

  ReplyDelete
 13. வால்பையன் சொன்னது…

  உங்கள் வீட்டு ரிமோட் வேலை செய்யாதா இல்ல அந்த சேனலுக்கு மேல வேற எந்த சேனலும் வராதா!?
  ///தொடர்களை பார்கிறார்களே அவர்களைப் பற்றிதான் பேசுகிறோம்..

  ReplyDelete
 14. கவிதை காதலன் சொன்னது…

  மன்னிக்கணும் நண்பா.. இன்றைக்கு டிவி தொடர்களால எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைச்சிகிட்டுத்தான் இருக்கு. அதையும் மறக்க கூடாது.. கடையில சிகரெட், மது விக்குறது தெரிஞ்சும் அதை வாங்கி குடிக்கிறது நம்மோட தப்புத்தானே.. தொலைக்காட்சி சீரியல்கள் பிடிக்கவில்லை என்றால் அதை ஒரு பட்டனில் சாகடித்துவிட்டு, வேறு நிகழ்ச்சிகள் பார்க்கலாமே...

  சச்கா சாம்னா என்ற நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு பதிவு செய்த போது உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான். /// இதை யார் சார் கவனிக்கிறார்கள் இன்றும் பல வீடுகளில் தொடர்களை பார்த்து அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்..

  ReplyDelete
 15. ஜோதிஜி சொன்னது…

  உங்கள் கருத்துக் வால்பையன் கொடுத்த மிகச் சிறந்த விமர்சனம். ரிமோட் நம் கையில் தானே இருக்கிறது. நாமே போய் விழ வேண்டியது. அப்புறம் குத்துதே குடையுதே என்ற குற்றச்சாட்டு. அவர்கள் சம்பாரிக்க சேவை செய்பவர்கள். நாம் நம் வேலையை தொலைத்து, கண்ட கருமாந்திரங்களை மனதில் ஏற்றிக் கொண்டு புள்ளகுட்டி பொண்டாட்டிகளோட சண்டை பிடித்துக் கொண்டு கேவலப்படுபவர்கள்.

  ////// ரிமோட்டை வைத்துக்கொண்டு நல்ல நிகழ்ச்சிகளை பார்பவர்களைப் பற்றி நாம் பேசவில்லை...தொடர்களை பார்கிறார்களே அவர்களைப் பற்றிதான் பேசுகிறோம்..

  ReplyDelete
 16. தீபிகா சொன்னது…

  உங்களுக்கே தெரியல எங்களுக்கு எப்படிங்க தெரியும்..
  /// கருத்துகள் மனிதருக்குள் மாறுபடும் அதைத்தான் நான் கேட்டேன்..

  ReplyDelete
 17. விக்கி உலகம் சொன்னது…

  இந்தத்தொடர்கள பாத்து பல பெண்கள் தானாவே கற்பன உலகத்துல வாழறாங்க...........
  /// கலக்கல் தல....

  ReplyDelete
 18. இதற்கு தீர்வு ஒதுக்குவதும் ஒதுக்கவைப்பதும்

  ReplyDelete
 19. ஒரு காலத்தில் வாசல்படியில் அமர்ந்து எல்லோருடைய வீட்டுவிசயங்களும் அலசப்படும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதை சமாளிக்க ஆண்கள் தங்களுடைய வீரப்பிரதாபங்களை மைக் வைக்காத குறையாக ஒலிபரப்புவார்கள். இதெல்லாம் இப்போது குறைந்ததர்க்கு காரணம் அழுது வடியும் தொலைகாட்சி சீரியல்கள்தான். இதனால் அறியப்படுவது என்னவென்றால், பெண்களுக்கு பிரச்சினைகளை சேகரிப்பதிலும் அதற்கு solution தேடுவதிலும் ஆர்வம் அதிகம்.

  ReplyDelete
 20. ஒரு காலத்தில் வாசல்படியில் அமர்ந்து எல்லோருடைய வீட்டுவிசயங்களும் அலசப்படும். இதனால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். அதை சமாளிக்க ஆண்கள் தங்களுடைய வீரப்பிரதாபங்களை மைக் வைக்காத குறையாக ஒலிபரப்புவார்கள். இதெல்லாம் இப்போது குறைந்ததர்க்கு காரணம் அழுது வடியும் தொலைகாட்சி சீரியல்கள்தான். இதனால் அறியப்படுவது என்னவென்றால், பெண்களுக்கு பிரச்சினைகளை சேகரிப்பதிலும் அதற்கு solution தேடுவதிலும் ஆர்வம் அதிகம்.

  ReplyDelete
 21. ஒன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்னவாக இருக்கும்? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?


  ....எல்லா பெண்களும் பார்ப்பதில்லையே.... அதே சமயம், ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும், சில ஆண்கள் கூட இந்த நிகழ்ச்சிகளுக்கு அடிமை ஆகி விடுகிறார்களாம்.
  யாரும், சிறு குழந்தைகள் அல்ல... matured people - அவர்களை இப்படி எளிதாக இத்தகைய காட்சிகளுக்கு loyal ஆக்க முடிகிறது என்றால், இவர்களது ஏதோ ஒரு fantasy க்கு - எதிர்பார்ப்புக்கு - புரணிக்கு - தீனி போடப்படுகிறது என்றுதானே அர்த்தம்... இல்லை என்றால் தான், எப்பொழுதோ அந்த மாயையில் இருந்து விடுபட்டு வந்து இருப்பார்களே... :-(

  ReplyDelete
 22. அவசியமான அலசல். எதுவுமே ஒரு அளவோடிருந்தால் நலமே!

  ReplyDelete
 23. ஒன்றுக்கும் பயனளிக்காத, நேரத்தையும், மின்சாரத்தையும் விரயமாக்கும் இத்தகைய தொடர்களில் பெண்கள் மூழ்கிப் போவதன் காரணம் என்னவாக இருக்கும்? இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
  //

  வருத்தம் வேண்டாம் பாஸ்...
  அதற்கான முயற்சியில், எங்கள் அரசு படுதீவிரமாக உள்ளது..
  தற்காலிக உதவியாக, மின்தடை 1 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  நிரந்தர தீர்வுக்கு எங்களால் ஆன முயற்சிகளை , இலவச டீவி முலம் முயற்சிக்கிறோம்

  ”மக்களுக்கு தொண்டு செயவதே எங்கள் நோக்கம். ”..

  ஹி..ஹி

  ReplyDelete
 24. உன்மையிலேயே நல்ல அலசல்தான். தொலைக்காட்சி பெட்டி மிது இவ்வளவு
  அக்கரை உள்ளவங்களுக்கு நல்ல நிகழ்ச்சிகளைக்கொடுக்கும் பொறுப்பு நிலையங்களுக்கு நிரையவே இருக்கு.ஆனா அதையெல்லாம் அவங்க உணர்ந்த மாதிரியே தெரியலை.அரைச்ச மாவையே அரைச்சுகிட்டு இருக்காங்க. ரெண்டு பெண்டாட்டி இல்லாம கதையே எடுக்கமாட்டேங்கராங்க. நிஜத்தில் அப்படியா இருக்கு? இப்ப்லாம்ம் மாமியார் மறுமக சண்டை யெல்லாம் சீரியலில் மட்டுமே
  பாக்க முடியும். நிஜத்தில் நிறைய மாற்றங்கள் பார்க்க முடிகிரது என்பது தான் உணமை.

  ReplyDelete
 25. hi boss
  orey kalakku kalakureenga
  all the best

  innum useful post podunga

  ReplyDelete
 26. டிவி'யை அப்பிடிக்கா திருப்பி வச்சிரனும் ஹி ஹி எப்பூடி........

  யோவ் போயும் போயும் இப்பிடியா கருத்து சொல்ல சொல்வீறு பூரி கட்டை அடி என்னால வாங்க முடியாது நான் இந்த விளையாட்டுக்கு வரலை....

  ReplyDelete
 27. டிவி சீரியல்களுக்கு என ஒரு சென்சார் அமைப்பை ஏற்படுத்தி அவர்களின் ஒப்புதலுக்கு பின்பு தான் டிவிகளில் ஒலிபரப்பலாம் என்ற புதிய விதிமுறையை உருவாக்கலாம்.
  இந்த சென்சார் அமைப்பின் மூலம் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் காட்சிகளை நீக்கலாம். குடும்பத்துடன் பார்க்க கூடிய காட்சிகளை மட்டுமே அனுமதிக்கலாம்.

  நீங்கள் விவாதித்த இந்த தலைப்பு தற்போது சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்று.
  அடுத்த பதிவில் இந்த பதிவிற்கு வந்துள்ள கருத்துக்களை வைத்து நீங்கள் ஒரு தீர்வை கூறினால் நன்றாக இருக்கும் நண்பரே!
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. அவசியமான அலசல். very usefull

  ReplyDelete
 29. //சில நேரங்களில் குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இது போன்ற காட்சிகளை அரைமணி நேரம் ஒளிபரப்புவதன் மூலம் எபிசோட்டின் எண்ணிக்கையைக் கூட்டுவது அவசியம்தானா? //
  நீங்கள் விவாதித்த இந்த தலைப்பு தற்போது சமூகத்திற்கு மிக அவசியமான ஒன்று.

  ReplyDelete
 30. எல்லாம் எங்க மனம்தானே.பிடிக்கலன்னா பாக்காம விடலாமே.நான் எதுவும் பாக்க்கிறதில்ல.இங்கல்லாம் கடையில தொடர் cd எடுத்துப்பாக்கிறாங்க !

  ReplyDelete
 31. கேட்டா பொழுது போக்கு என்பார்கள்!

  ReplyDelete
 32. நமக்கு பிடிக்கேல்ல என்றால்
  தவிர்ப்பது தானே
  நல்லபதிவு

  ReplyDelete
 33. வால்பையனின் கருத்துக்களை நானும் வழிமொழிகிறேன்...!

  ReplyDelete
 34. சேனல் மாற்றும் போது எதோ ஒரு சேனலில் ஒரு 5 வயது பெண் குழந்தை ஒரு பெண்ணை சாப்பாட்டில் விஷம் வச்சு கொன்னுடுவோம் என்று தன் அம்மாவோடு சேர்ந்து மிரட்டிக் கொண்டு இருந்ததை விளம்பரமாய் காண்பித்து கொண்டு இருந்தனர்.

  அம்மாக்கள் டிவி சீரியலில், குழந்தைகள் சுட்டி சேனலில்,ஆண்கள் கிரிக்கெட்டில் என்று எல்லோரும் பிசிதான்.

  ReplyDelete
 35. திரைப்படங்களாலும் டி வி சேனல்களாலும் அதைப் பார்க்கும் மாக்களுக்கு எந்த வித பிரயோஜனமும் இல்லை..டி வி முதலாளியும், சினிமாவில் கூத்தாடிக்கும் ஆபாச நடிகனும், நடிகைகளும்தான் பணத்தில் கொழுக்கின்றனர்.
  விபச்சாரத்தின் முழு முகவரி இந்த கலை என்ற பெயரில் நடக்கும் இந்த ஆபாசகூத்துக்கள்தான்.
  இதை ஆதரித்து சில மூளை மழுங்கிகள் எழுதலாம்..
  அதை நாம்தான் பார்க்காமல் தவிர்க்கவேண்டும் என்றும் சொல்வார்கள் அந்த மூளை மழுங்கிகள்..
  இதை ஒழிப்பதற்கு நாம் முழு முயற்ச்சியில் ஈடுபட வேண்டும் நண்பரே.

  நல்லதொரு கட்டுரை..
  தொடருங்கள்..

  ReplyDelete
 36. முட்டாள் பெட்டியின் மூலம் ஒளிபரப்பப்படும் இந்த படு முட்டாள்தனமான தொடர்களுக்கு சித்ரா அவர்கள் கூறியது போல் பெண்கள் மட்டுமண்றி அநேக ஆண்களும் அடிமைகளாகத்தான் இருக்கிறார்கள்.மனங்கெடுவது மட்டுமின்றி,தன்னை மறந்து பார்க்கும்போது சுற்றுப் புறத்தையே மறந்து போவதால்,சென்னை போன்ற நகர்களில்,திருடர்களுக்கும் இவர்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள்!பார்க்காமலே இருப்பது என்பது இவர்களால் முடியாது!ஓரளவுக்குக் குறைத்துக் கொள்ளலாம்!அதற்கும் இவர்களைச் சிறிது மூளைச் சலவைதான் செய்ய வேண்டும்!

  ReplyDelete
 37. சகோ,நான் சீரியல் பார்க்க மாட்டேன்.

  என்னுடைய கருத்து. கணவன் வேலைக்கு போய் விடுவார்கள்
  பிள்ளைகள் ஸ்கூல் போய் விடுவார்கள்.சமையல் முடித்து விட்டு
  வீட்டில் தனியாக இருக்கும் பெண்களுக்கு சீரியல் பொழுது போக்கு.
  சீரியல் பார்ப்பதால் தான் பிரச்சனையா ? சீரியல் பார்க்காத வீட்டில்
  பிரச்சனை இல்லையா ?

  எத்தனையோ வயதானவர்களுக்கு சீரியல் தான் பொழுது போக்கு.

  நம்முடைய பொழுது போக்கு computer . அவர்களுடைய பொழுது போக்கு T.v.

  ReplyDelete
 38. கவிதை காதலன் சொன்னது…
  மன்னிக்கணும் நண்பா.. இன்றைக்கு டிவி தொடர்களால எத்தனையோ ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பிழைச்சிகிட்டுத்தான் இருக்கு. அதையும் மறக்க கூடாது.. கடையில சிகரெட், மது விக்குறது தெரிஞ்சும் அதை வாங்கி குடிக்கிறது நம்மோட தப்புத்தானே.. தொலைக்காட்சி சீரியல்கள் பிடிக்கவில்லை என்றால் அதை ஒரு பட்டனில் சாகடித்துவிட்டு, வேறு நிகழ்ச்சிகள் பார்க்கலாமே...

  சச்கா சாம்னா என்ற நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு பதிவு செய்த போது உச்சநீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு இதுதான்


  இதைவிட அருமையான பதிலை இதற்கு சொல்ல முடியாது

  ReplyDelete
 39. t.v.kku paire idiot box thaan

  ReplyDelete
 40. t.v.kku paire idiot box than

  ReplyDelete
 41. டிவி சீரியல்ல முழ்கிப் போறவங்க எண்ணிக்கை இப்போ ரொம்ப கொறஞ்சு போயிடுச்சு நண்பா... மாற்றத்தை எல்லாரும் எல்லாத்திலையும் எதிர் பார்க்க ஆரம்பிச்சுடாங்க... இருந்தாலும் இந்த வீபரிதம் யோசிக்க வேண்டியாதாத்தான் இருக்கு நண்பா...பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 42. விபரீதம், அபாயம்...உண்மை தான்! ஆனால் விடிவுக்கு ஏதாவது வழி இருக்கிறதா? நாமெல்லாம் சற்று யோசிப்போமா?

  ReplyDelete
 43. சமூக அக்கறையுள்ள பதிவு. அந்த நேரத்தில் படிக்க உட்காரும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றன.

  ReplyDelete
 44. தங்கம் நாடகத்தில் ,மிளகாய அரைத்துபூசுகிறாள் ஒரு பெண். உடனே ஒருவருக்கு உடல் எரிகிறது, விபத்துக்கு ஆளாகிறார், ஒருவரை மாடு துரத்துகிறது, ஒரு வில்லியை பாம்பு துரத்துகிறது...இது ஒரு ச்மூக நாடக்த்தில்..இதை ஒரு பகுத்தறிவு டி.வி. உண்மை போல ஒளிபரப்புகிறது..அட்டா...இது உண்மையாக இருக்குமானால்,கருணானிதி அவர்கள் ஜெயலலிதாமீது மிளகாய அரைப்பார், ஜெயலலிதா கருணானிதி மீது மாசானியம்மன் கொவிலுக்கு சென்று மிளகாய அரைத்து பூசுவார். நம்ம காதுலெ டன் டன்னாக பூ சுற்றுகிறார்கள்..

  ReplyDelete
 45. சீரியல் வேணாம்னு வேற சானல் போனா அங்க அவுத்து போட்டுட்டு ஆடுறாங்க..

  ReplyDelete
 46. வணக்கம் சார்.நாமெலோருமே ஒருவிதமாக வடிவைக்கப்பட்டு வருகிறோம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"