Tamilus

The best Tamil Aggregator | Tamilus

2/20/2011

உலகக் கோப்பை அணிகள் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பலம்வாய்ந்த அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை 
அணிகள் கணிக்கப்பட்டுள்ளன. 
அணியின் பலம், பலவீனம், சிறப்பு குறித்து ஓர் அலசல்.

 இந்தியா


பலம்: தொடக்க, நடுவரிசை ஆட்டக்காரர் (1 முதல் 7 வரை) சிறந்த பேட்ஸ்மென்களாக உள்ளது இந்திய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளது.  பௌலிங் எக்கானமியில் இரண்டாவது இடத்தில் உள்ளது அனுபவம் வாய்ந்த வீரர்கள், பெரிய ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடி வரும் அணி. நெருக்கடியான சூழ்நிலையிலும் அணியை சிறப்பாக வழிநடத்தும் கேப்டன் தோனி ஆகியவை அணியின் பலம். சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக்,  கௌதம் கம்பீர் மூவரும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பலம். விராட் கோலி நான்காவது ஆட்டக்காரராகவும், யுவராஜ் சிங் ஐந்தாவதாகவும், கேப்டன் தோனி ஆறாவதாகவும், யூசுப் பதான் ஏழாவதாகவும் ஒரு பலமான ரன்களை எடுக்கும் பேட்டிங் பட்டாளம் இந்திய அணியின் தனிச் சிறப்பாக கருதப்படுகிறது.

பந்துவீச்சு என்று எடுத்துக்கொண்டாலும், வேகப்பந்துவீச்சில் ஜாகீர் கானின் திறமைக்கு முன் ஆரம்ப ஆட்டக்காரர்கள் பலரும் திணறாமல் இருக்க முடியாது. ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, அஸ்வின் ஆகிய மூவரும் சுழல்பந்து வீச்சில் சமர்த்தர்கள். கடந்த இரண்டாண்டுகளாக சாவ்லா களத்தில் இல்லை என்பது பலவீனம். இருந்தாலும் புதிய வரவாக இருந்தாலும் களத்தில் தனது சுழல்பந்துவீச்சால் அசத்துகிறார் என்பது கண்கூடான உண்மை.

பலவீனம்: மற்ற அணிகளை ஒப்பிடும் போது விரைவாக விக்கெட்டை வீழ்த்தும் பந்து வீச்சாளர்கள் இல்லாதது பெரும் குறை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்ததாதும் பலவீனம். ஹர்பஜன் சிங்கையும், அஸ்வினையும் நம்பித்தான் இந்திய அணியின்  பௌலிங் உள்ளது என்பது பலவீனம்.

சிறப்பு: முந்தைய உலகக் கோப்பை அணியைக் காட்டிலும் பலமானதாக உள்ளது. பலமான பேட்டிங் வரிசை உள்ளதால் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. தோனியின் அமைதியான, அரவணைப்பான கேப்டன்ஷிப் அணிக்கு பெரிய பிளஸ். அனைத்தும் சரியாக நடந்தால் விமர்சகர்கள் கணித்தபடி இறுதிச் சுற்றுக்கு இந்தியா முன்னேறும்.

ஆஸ்திரேலியா

பலம்: பேட்டிங்தான் ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலம். ஸ்டிரைக் ரேட்டில், அதாவது அதிகமாக ரன்களை எடுத்துக் குவிக்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது இந்த அணி. இளம் வீரர்கள் அதிகம் உள்ளது கூடுதல் பலம். எந்த சூழ்நிலையிலும் சமாளித்து விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் உண்டு.

 எதிரணிகளின் வியூகங்களை உடைத்து பேட்டிங்கில் சாதனை புரியும் ஷேன் வாட்சன் இந்த அணியின் மிகப்பெரிய பலம்.  நான்காவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும். கேப்டன் ரிக்கி பாண்டிங்கும், டேவிட் ஹஸ்லியும், கேமரோன் வொய்ட்டும் ரன்களைக் குவிப்பதில் சமர்த்தர்கள்.

பலவீனம்: பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது பெரிய பலவீனம். பொலிங்கர் தவிர மற்ற வீரர்கள் ரன்களை வாரி வழங்குபவர்களாக உள்ளனர். ஆரம்பப் பந்து வீச்சில் சமர்த்தரான ஸ்விங்கர் ஷான் டெய்ட் தன்னுடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினரைப் பயமுறுத்தக் கூடும் என்றாலும் ஸ்பின்னர்கள் இல்லாத குறை ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பலவீனம். குறிப்பிட்டுக் கூறும்படியான சுழற்பந்து வீச்சாளர் அணியில் இல்லை. மூத்த வீரர்களான பாண்டிங், கிளார்க், பிரெட் லீ, வாட்சன் ஆகியோரின் ஆட்டத்தையே அணி பெருமளவில் சார்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் களமிறக்கப்பட்ட மோசமான "உலகக் கோப்பை ஆஸ்திரேலிய அணி' இதுதான் என்பது விமர்சகர்களின் கணிப்பு.

சிறப்பு: தொடர்ந்து 3 உலகக் கோப்பையை வென்றுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு பொறுப்பு கூடியுள்ளது. முன்பு இருந்ததுபோல சிறப்பான அணியாக இல்லாவிட்டாலும் ஆட்டத்தைத் திசைதிருப்பும் வெற்றி வீரர்கள் இருக்கின்றனர். இறுதிச் சுற்று வரை இந்த அணி முன்னேறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

 இங்கிலாந்து

பலம்: தனிப்பட்ட சில வீரர்கள் சிறப்பாக ஆடுவது அணியின் மிகப்பெரிய பலம். முக்கியமாக நடுவரிசையில் டிராட், பீட்டர்சன், பிராட், ஸ்வான் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் குவிக்கின்றனர். பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. ஒருநாள் ஆட்டத்தை எப்படி ஆட வேண்டும் என்பதை தெரிந்து வைத்துள்ள அணி.

பலவீனம்: ஸ்டிரைக் ரேட் குறிப்பிடும் வகையில் இல்லை. அணியின் கூட்டு முயற்சியாக இல்லாமல், ஒரு சில வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் மட்டுமே வெற்றி பெறுகிறது.

சிறப்பு: டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடும் இந்த அணி, ஒரு நாள் போட்டிகளில் சோபிக்கத் தவறி வருகிறது. சில தனிப்பட்ட வீரர்களின் ஆட்டத்தைத் தவிர மற்றவர்களின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரு சில அணிகளுக்கு அதிர்ச்சித் தோல்விகளைத் தரக்கூடிய அணியாக இருக்கிறது இங்கிலாந்து. அதிர்ஷ்டம் இருந்தால் அரை இறுதி வரை முன்னேறும், அவ்வளவே.

 மேற்கிந்தியத் தீவுகள்

பலம்: கெய்ல், பிராவோ, சந்தார்பால் ஆகியோர் அணியின் பலம். திடீர் அதிரடியால் வெற்றி பெறும் அணி.

பலவீனம்: தரவரிசையில் 9-வது இடத்தில் பின்தங்கியுள்ளது. பேட்டிங், பந்து வீச்சும் இரண்டுமே தகராறு. எப்போது, எப்படி விளையாடிவார்கள் என்று யாருக்குமே தெரியாது.

சிறப்பு: கோப்பையை வெல்ல 70 சதவீத வாய்ப்பு இந்த அணிக்கு இருப்பதாக முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் தெரிவித்துள்ளார். ஆனாலும் கால் இறுதி வரை முன்னேறுவதே சிரமம் என்பதுதான் விமர்சகர்களின் கருத்து.

 தென் ஆப்பிரிக்கா

பலம்: தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவருவதும், வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருப்பதும் இந்த அணியின் முக்கிய பலம். தொடக்க பேட்ஸ்மேன்களும், நடுவில் களம் இறங்குபவர்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். எந்தச் சூழ்நிலையிலும் களம் இறங்கிச் சிறப்பாக விளையாடும் செல்லும் ஜேக்கஸ் காலிஸ், ஹஷிம் ஆம்லா வெற்றிகரமான கேப்டன் கிரேம் ஸ்மித் ஆகியோர் அணியை வெற்றிப் படிக்கட்டுகளில் ஏற்றுவார்கள்.

பலவீனம்: நெருக்கடியான சூழ்நிலையில் காலிஸ் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவது இல்லை. சராசரி என்ற நிலையில் உள்ள ஸ்டிரைக் ரேட், நடுவரிசை, பின்வரிசை வீரர்கள் நிலைத்து நின்று ஆடாதது, சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது, காலிûஸயே பெருமளவில் சார்ந்திருப்பது ஆகியவை அணியின் பலவீனம்.

சிறப்பு: வெல்வதற்கு சிறந்த, கடினமான அணி என்ற பெயரை பெற்றுள்ளது. இருந்தபோதும் எதிரணி வலிமையானதாக இருந்தால் அதை எதிர்கொள்ளும் நிதானம்  தென் ஆப்பிரிக்க அணிக்கு இல்லை என்பது பார்வையாளர்களின் கணிப்பு. நெருக்குதல் காரணமாக சில சமயங்களில் தோல்வி ஏற்படுகிறது. ஜாக்ஸ் காலிஸ் அணியின் நம்பிக்கை நாயகன். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

 நியூசிலாந்து

பலம்: ஸ்டிரைக் ரேட், எகானமியில் 3-வது இடம். நெருக்கடியை சமாளித்து ஆடும் திறன். வலுவான பேட்டிங், தனிப்பட்ட முறையில் வீரர்கள் சிறப்பாக ஆடி வருவது இவையே இந்த அணியின் முக்கிய பலம்.

பலவீனம்: பெரிய போட்டிகளிலோ, தொடர்களிலோ வெற்றி பெற்றதில்லை. இந்திய அணியைப் போன்றே இங்கும் விரைவில் விக்கெட்டை வீழ்ந்தும் பந்து வீச்சாளர்கள் இல்லை.

சிறப்பு: சிறப்பாக விளையாடினால் மட்டுமே அரை இறுதி வரை முன்னேறலாம் என்று கணிக்கப்பட்டுள்ள அணி நியூஸிலாந்து. ஆனாலும் அணி சிறப்பாக இல்லாதது நியூஸிலாந்துக்கு பின்னடைவாக உள்ளது. சமீபத்திய தொடர்களில் ஏற்பட்ட படுதோல்விகள் அந்த அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது.

 இலங்கை

பலம்: பந்து வீச்சில் உலகின் நம்பர் 1 அணி. அதே போல எக்கானமி ரேட்டிலும் முதலிடம். அனுபவ வீரர்கள், வெற்றியை நோக்கி தொடக்கத்தில் இருந்தே முன்னேறுவது, உள்ளூர் சூழலில் விளையாடுவது ஆகியவை அணிக்கு பலம் சேர்க்கிறது.

லசித் மலிங்காவும், முத்தையா முரளீதரனும் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பவர்கள். இந்திய அணி எந்த அளவுக்கு பேட்டிங்கில் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு  பௌலிங்கில் பலமான அணி இலங்கை அணி. நுவன் குலசேகரா, ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் இந்தியத் துணைக்கண்டத்தின் ஆடுகளத்துக்கு ஏற்ப பந்துவீசும் ஆட்டக்காரர்கள். அதிகமாக பாராட்டப்படாவிட்டாலும் ரங்கனா ரெஹாத்தின் இடதுகைப் பந்துவீச்சு வெளியூர் அணிக்கு சவாலாக இருக்கக்கூடும்.

பலவீனம்: தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகளில், பேட்டிங்கில் கடைசி இடத்தில் உள்ள அணி இலங்கை தான். நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடத் திணறும் வீரர்கள். மோசமான ஸ்டிரைக் ரேட்.

சிறப்பு: 1996-ம் ஆண்டுக்குப் பின்னர் 2007-ல் சிறப்பாக விளையாடியது இலங்கை. ஆனாலும் இப்போது மோசமாக விளையாடி வருவது அணிக்கு கடும் நெருக்குதலை அளித்துள்ளது. அரை இறுதி வரை முன்னேற வாய்ப்பு இருக்கிறது. முதல் சுற்றிலேயே வெளியேறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

 பாகிஸ்தான்

பலம்:
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள போதிலும், பந்து வீச்சு பலத்தில் 3-வது இடத்தில் உள்ளது. நெருக்கடியான சூழலில் சிறப்பாக விளையாடக் கூடிய அணிகளில் இதுவும் ஒன்று. சூதாட்ட சர்ச்சைக்குப்பின் கிடைத்துள்ள வெற்றிகளால் பெற்ற உத்வேகம் அணியின் முக்கிய பலம்.

பலவீனம்:
சிறப்பாக ஆடாத பேட்ஸ்மேன்கள். சராசரிக்கும் குறைவான ஸ்டிரைக் ரேட், கூட்டு முயற்சி...இப்படியாக, தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியாமல் தவிக்கும் அணி. முக்கிய பந்துவீச்சாளர்கள் இல்லாமல் களம் இறங்குவதால் நெருக்கடி.

சிறப்பு: களத்தில் ஆக்ரோஷம் காட்டுவதில் பாகிஸ்தான் அணிக்கு நிகர் அதுவே. சொல்லும்படியான வீரர்கள் இல்லை. ஆனாலும் அணியின் பலவீனத்தால் கால் இறுதிக்கு மேல் முன்னேறாது என விமர்சகர்கள் கணித்துள்ளனர். (  நன்றி நாளிதழ்கள்).

தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே 
மனதிற்கு புத்துணர்வு அளிக்கும்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்.... 


பழைய பதிவுகள்:  1. மரத்தில் பணம் காய்க்குமா ?
                                         2. என் தேசம் எரிந்துபோகுமா?                      
                                         3. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..


49 comments:

 1. என்னங்க ஞாயிறு லீவு விடலையா..

  ReplyDelete
 2. இன்று லீவுதான் சார்.. இந்த படிவு ரொம்ப நாளா டிராப்ட்டில் இருக்கிறது அதை அப்படியே போஸ்ட் செய்துவிட்டேன் அவ்வளவுதான்...

  ReplyDelete
 3. நல்ல அலசல். ரொம்ப டைம் எடுத்திருக்கும் போல?

  ReplyDelete
 4. கிரிக்கெட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். நண்பரின் பதிவு என்பதால் படித்து பார்த்தேன். நல்ல அலசல்.

  ReplyDelete
 5. பாரத்... பாரதி... சொன்னது…

  நல்ல அலசல். ரொம்ப டைம் எடுத்திருக்கும் போல?
  /// adellam onnum illai edo oru paperil irundhu suttadhu...

  ReplyDelete
 6. வோர்ள்ட் கப் பீவர் உங்களுக்கும் வந்திடிச்சா??? நான் தென் ஆபிரிக்காவுக்குத்தான் சப்போர்ட்.

  ReplyDelete
 7. Jana சொன்னது…

  வோர்ள்ட் கப் பீவர் உங்களுக்கும் வந்திடிச்சா??? நான் தென் ஆபிரிக்காவுக்குத்தான் சப்போர்ட்.
  /// sorry nanba., Indiana indiyavukku support pannuvom sir...

  ReplyDelete
 8. FOOD சொன்னது…

  கிரிக்கெட்டுக்கும் நமக்கும் ரொம்ப தூரம். நண்பரின் பதிவு என்பதால் படித்து பார்த்தேன். நல்ல அலசல்.
  /// Thanks...

  ReplyDelete
 9. இந்தியா வெற்றிவெற வாழ்த்துக்கள்:-)

  ReplyDelete
 10. சிறப்பான அலசல்

  ReplyDelete
 11. r.v.saravanan சொன்னது…

  நல்ல அலசல்
  /// Thanks for ur comments..

  ReplyDelete
 12. வசந்தா நடேசன் சொன்னது…

  இந்தியா வெற்றிவெற வாழ்த்துக்கள்:-)
  // Thanks 4 coming...

  ReplyDelete
 13. shanmugavel சொன்னது…

  சிறப்பான அலசல்
  /// Thanks..

  ReplyDelete
 14. சிறந்த அலசல் பலம் பலவீனம் மற்றும் சிறப்புக்களை பிரித்து மேய்ந்துள்ளீர்கள்
  சிறிய திருதத்தினையும் மேற்கொள்க
  //மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும்.//

  தொடர்ந்து மூன்றவது முறை அல்ல தொடர்ந்து நான்கவது முறை கோப்பையை வெல்ல போராடும் (199/2003/2007 தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்)

  ReplyDelete
 15. FARHAN சொன்னது…

  சிறந்த அலசல் பலம் பலவீனம் மற்றும் சிறப்புக்களை பிரித்து மேய்ந்துள்ளீர்கள்
  சிறிய திருதத்தினையும் மேற்கொள்க
  //மூன்றாவது முறையும் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றாக வேண்டும் என்கிற வெறியுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும்.//

  தொடர்ந்து மூன்றவது முறை அல்ல தொடர்ந்து நான்கவது முறை கோப்பையை வெல்ல போராடும் (199/2003/2007 தொடர்ந்து மூன்று முறை சாம்பியன்)///நன்றி திருத்திவிடுகிறேன்...

  ReplyDelete
 16. ரொம்ப கஷ்டபட்டிருப்பது தெரியுது பாஸ்.!!

  அலசல் அலசலாக இருக்கிறது.!!

  ReplyDelete
 17. நல்ல பதிவு நண்பரே!

  ஶ்ரீ சாந்த் பற்றி ஏதும் சொல்லலையே!

  ReplyDelete
 18. தம்பி கூர்மதியன் சொன்னது…

  ரொம்ப கஷ்டபட்டிருப்பது தெரியுது பாஸ்.!!

  அலசல் அலசலாக இருக்கிறது.!!
  /// thalaivare romba kastapadala oru paperla irundhu suttadhu anyway thanks..

  ReplyDelete
 19. தமிழ் 007 சொன்னது…

  நல்ல பதிவு நண்பரே!

  ஶ்ரீ சாந்த் பற்றி ஏதும் சொல்லலையே!
  //// ellaraipatriyum potta padivu perisaydum thalaivare...

  ReplyDelete
 20. நல்லாத்தான் அலசி இருக்கீங்க பாப்போம் யாரு கோப்பையை எடுக்குறான்னு!

  ReplyDelete
 21. நல்லாத்தான் அலசி இருக்கீங்க பாப்போம் யாரு கோப்பையை எடுக்குறான்னு!

  ReplyDelete
 22. விக்கி உலகம் சொன்னது…

  நல்லாத்தான் அலசி இருக்கீங்க பாப்போம் யாரு கோப்பையை எடுக்குறான்னு!
  /// Thanks...

  ReplyDelete
 23. விக்கி உலகம் சொன்னது…

  நல்லாத்தான் அலசி இருக்கீங்க பாப்போம் யாரு கோப்பையை எடுக்குறான்னு!
  // Thanks for comments...

  ReplyDelete
 24. சச்சின் கனவு நிறைவேற வேண்டும் என்று ஆசை ....
  பார்ப்போம் !

  ReplyDelete
 25. நமக்கு கிரிக்கெட் அவ்வளவு ஆவாதுங்க! இருந்தாலும் உங்க பதிவ படிச்ச பின்னாடி, கிரிக்கெட் மேல ஒரு ' இது ' வந்திட்டுது!

  ReplyDelete
 26. யார் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். வழக்கம்போல இந்திய அணி வெற்றிபெரும் என்று ஒரு இரு சராசரி இந்தியனைப்போல் நானும் காத்திருக்கிறேன். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 27. நல்லா இருக்கு கருன்


  இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு எனக்கு என்னவோ இந்த முறை எல்லாருக்கும் ஒருவாய்ப்பு இருக்குன்னு தோணூது

  பெரிய அணிகள் நிறைய தோல்விய தழுவறத பார்க்கலாம்

  நன்றி கருன்

  ஜேகே

  ReplyDelete
 28. யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கறீங்க கருன்?

  ReplyDelete
 29. ரொம்ப விரிவா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க.. ஆனா நமக்குத்தான் கிரிக்கெட் மேல அவ்வளவா ஆர்வம் கிடையாது.. திட்டாதீங்க..

  ReplyDelete
 30. கிரிக்கெட் பற்றி விரிவா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க. நமக்குத்தான் அதில அவ்ளோ ஆர்வமே கிடையாது.. (திட்டாதீங்க)

  ReplyDelete
 31. இந்தியா அல்லது இலங்கை கிண்ணத்தை கைப்பற்றும் என நம்புகிறேன்

  ReplyDelete
 32. நானும் வந்துட்டேன்

  ReplyDelete
 33. அண்ணே இப்பதான் உங்க கடைக்கு வந்தேன்... சூப்பர் அலசல். இந்தியா மேல நம்பிக்கை வச்சு....

  இதையும் பாருங்க: இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலம்!

  ReplyDelete
 34. சிவகுமார் ! கூறியது...

  Thanks for the information, Karun // Thanks...

  ReplyDelete
 35. Vijay @ இணையத் தமிழன் கூறியது...

  சச்சின் கனவு நிறைவேற வேண்டும் என்று ஆசை ....
  பார்ப்போம் !/// Thanks for coming...

  ReplyDelete
 36. ஓட்ட வட நாராயணன் கூறியது...

  நமக்கு கிரிக்கெட் அவ்வளவு ஆவாதுங்க! இருந்தாலும் உங்க பதிவ படிச்ச பின்னாடி, கிரிக்கெட் மேல ஒரு ' இது ' வந்திட்டுது!/// thanks maathiyosi...

  ReplyDelete
 37. தமிழ் உதயம் கூறியது...

  அருமையான அலசல்.// thanks..

  ReplyDelete
 38. கே. ஆர்.விஜயன் கூறியது...

  யார் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும். வழக்கம்போல இந்திய அணி வெற்றிபெரும் என்று ஒரு இரு சராசரி இந்தியனைப்போல் நானும் காத்திருக்கிறேன். நல்ல பதிவு வாழ்த்துக்கள்.// Thanks 4 ur comments..

  ReplyDelete
 39. இன்றைய கவிதை கூறியது...

  நல்லா இருக்கு கருன்
  /// Thanks...

  ReplyDelete
 40. இரவு வானம் கூறியது...

  யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கறீங்க கருன்?// india..

  ReplyDelete
 41. கவிதை காதலன் கூறியது...

  ரொம்ப விரிவா அலசி ஆராய்ஞ்சிருக்கீங்க.. ஆனா நமக்குத்தான் கிரிக்கெட் மேல அவ்வளவா ஆர்வம் கிடையாது.. திட்டாதீங்க..// nanbenda...

  ReplyDelete
 42. Pavi கூறியது...

  இந்தியா அல்லது இலங்கை கிண்ணத்தை கைப்பற்றும் என நம்புகிறேன்/// indiathan..

  ReplyDelete
 43. ரஹீம் கஸாலி கூறியது...

  நானும் வந்துட்டேன்// vanga..vanga..

  ReplyDelete
 44. தமிழ்வாசி - Prakash சொன்னது…

  அண்ணே இப்பதான் உங்க கடைக்கு வந்தேன்... சூப்பர் அலசல். இந்தியா மேல நம்பிக்கை வச்சு....// Thanks..

  பின்னூட்டம் கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி..

  ReplyDelete
 45. இந்த முறை ஆசிய கண்டங்களில் நடப்பதால் ஆசியாவை சார்ந்த ஒரு அணிக்கே உலக கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பாக உள்ளது .இந்தியா தென்னாபிரிக்க அணிகள் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளன.இலங்கையை பொறுத்தவரையில் சிறந்த அணிதான் எனினும் முக்கியமான போட்டிகளில் தங்கள் திறமையை கோட்டை விட்டு விடுவார்கள். கிரிக்கெட் போட்டிகளில் முதல் இரண்டு சுற்றுகளின் முடிவுகள் சொல்வது கடினம்.மற்றைய போட்டிகளின் முடிவுகள் ஓரளவு கணித்து சொல்லக்கூடியதாக இருக்கும்.உங்கள் பதிவு ஒரு பயனுள்ளது ஆனாலும் எனது கருத்து அணியின் பலம் பற்றி தாங்கள் எழுதியதை காட்டிலும் அணியின் பலவீனம் பற்றி எழுதியது குறைவு.எனினும் ஒரு சிறப்பான பதிவு இது . உங்கள் பதிவுலக அனுபவத்தில் நாங்கள் உங்கள் பிள்ளைகள்,சிறு துரும்புகள் .உங்களுக்கே கருத்து சொல்லுறம் என்று நினைக்க கூடாது.நன்றி தோழமையுடன் நாழிகை பதிவர்கள்

  ReplyDelete
 46. கிண்ணம் எங்கள் இலங்கை அணிக்கு என்பதுதான் உறுதி

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"