Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/13/2011

ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் இணையும் பிரம்மாண்ட விழா !!!
ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் சட்டப்படி குற்றம். இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்குகிறார்.
வர் ஏற்கனவே சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, நீதிக்கு தண்டனை போன்ற பல அரசியல் பேசும் படங்களை இயக்கியவர். இதில் விக்ராந்த், ஹரீஸ் கல்யாண், வசந்த் ஆகிய மூவர் நாயகர்களாகவும் பானு, ஐஸ்வர்யா, ஜெயஸ்ரீ, கோமல் சர்மா ஆகியோர் நாயகிகளாகவும் நடிக்கின்றனர்.
த்யராஜ், சுரேஷ், ராதா ரவி, லிவிங்ஸ்டன், இயக்குனர்கள் சீமான், ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர் சமீபத்தில் இயக்கிய படங்களும் ச‌ரி, தயா‌ரித்த படமும் ச‌ரி பெரும் தோல்விகளையே சந்திதது. இந்நிலையில்தான் நடப்பு அரசியலை வைத்து சட்டப்படி குற்றத்தை எடுத்து வருகிறார். இளைஞர்கள் சமூக அவலங்களால் எப்படி கெட்டுப் போகிறார்கள் என்பதும், அவர்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதுமே படத்தின் கதையாம். 

முக்கால்வாசி படத்தை அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கியிருப்பதாக சொல்கிறார் எஸ்ஏசி. தேர்தலுக்கு முன் படத்தை வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால் அவசர அவசரமாக படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ளது. படத்தை இம்மாத இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

ப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை விரைவில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்டு பாடல் கேசட்டை வெளியிடுமாறு ஜெயலலிதாவை கேட்டுக்கொண்டுள்ளார். இப்படம் அரசியல் விஷயங்களை சொல்வதாலும், தேர்தல் நேரம் என்பதாலும் ஜெயலலிதா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். 
 
இப்படதின் பாடல்களை ஜெயலலிதா வெளியிட நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப் படுகிறது. 

ன் அப்பா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் இல்லாமலா? ஆக, ஒரே மேடையில் ஜெயலலிதா, விஜயகாந்த், விஜய் என மூவரும் இருப்பார்கள் என தெரிகிறது. இந்த விழாவிற்கு தமிழகம் முழவதிலும் உள்ள விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது புதுச்சேரி, கேரளா உள்பட பிற மாநிலங்களிலும் உள்ள விஜய் ரசிகர்களை திரட்டி மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ளார் எஸ்.ஏ.சந்திரசேகர்.   

ப்படத்தை பொருத்தவரை தற்கால அரசியலை குறிவைத்து எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்தான் பரபரப்பாக பேசப்படும் என்கிறார்கள்.
Thanks Nakeeran.

                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3 . முடிவெடுக்கக் கற்கலாமா?
                                               4. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               5 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.

                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

31 comments:

 1. அதிரடியான படமாகத்தான் இருக்கும் போல! பார்க்கலாம்!

  ReplyDelete
 2. இந்த ஆளு எடுத்து சமீபமா எந்தப்படம்மும் ஒடுனதா தெரியல நண்பா!

  ReplyDelete
 3. ஒரு முடிவு பண்ணியாச்சு...

  ReplyDelete
 4. ம்ம்ம்ம்..பாவம் விஜய் & விஜயகாந்த். ஜே கிட்ட ரெண்டு பெரும் தங்கள அடகு வச்சிக்கிட்டான்களே.

  எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை ரெண்டு!

  ReplyDelete
 5. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

  அதிரடியான படமாகத்தான் இருக்கும் போல! பார்க்கலாம்!//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…//
  எந்த படத்த சொல்றீங்க?

  ReplyDelete
 6. விடுமுறைக்கேற்ற விமரிசனம்

  ReplyDelete
 7. ஆமா....இன்னிக்கு சண்டே..இல்ல? சரிதான்.

  ReplyDelete
 8. சினிமா செய்தியிலும் வாத்தியார் கலக்குறாரே............

  ReplyDelete
 9. என்ன கொடுமை சார் இது?

  இந்த நிகழ்ச்சி நடக்கும் நாள் தெரிந்தால் தயவு செய்து அபாய எச்சரிக்கை செய்யவும்.

  ReplyDelete
 10. விஜய் விஜயகாந்த செந்தூரப் பாண்டியனுக்கு அப்புறம் இப்போ தான் இணையறாங்கப் போலே !! தேவையில்லாமல் விஜய் அரசியலில் வழுக்கி விழப் போறார் ! போறார் ! போறார் !

  ReplyDelete
 11. பிரிக்க முடியாதது:- தமிழக அரசியலும் சினிமாகாரர்களும்.

  ReplyDelete
 12. ஜெயமும்,விஜயங்களும் சேர்ந்தால்--”ஜெய விஜயீ பவ!”

  ReplyDelete
 13. அது சரி பட்டைய கிளப்புங்க

  ReplyDelete
 14. இனியும் என்னெல்லாம் கூத்து அரங்கேற போகுதோ....
  நாராயணா [மாத்தி யோசி இல்லை] இந்த கொசு தொல்லை தாங்க முடியல...

  ReplyDelete
 15. //தன் அப்பா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் இல்லாமலா?//

  நான் இந்த விளையாட்டுக்கு வரலை....

  ReplyDelete
 16. இவரெல்லாம் என்ன முக்கினாலும் படம் ஓடாதுங்க..

  ReplyDelete
 17. 3 ஜெயமும் (ஜெய, விஜய், விஜயகாந்த் ) சேர்ந்து ஒரே மேடையிலையா? எங்கே திரும்பினாலும் அம்மாக்கு v for victory தான் போல.

  ReplyDelete
 18. அட புதுக் கூட்டணியின் புதிய பட வெளியீட்டு விழா! என்னமோ நடக்குதுங்க. ஆனால் ஒன்று மட்டும் புரிய மாட்டேங்குது. தமிழகம் அபிவிருத்தியடையுமா இல்லை அரசியல்வாதிகள் வாழ்க்கை விருத்தியடையுமா?

  ReplyDelete
 19. இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியலப்பா ......
  http://tamilbirdszz-naalikai.blogspot.com/2011/03/blog-post_13.html
  கெளதம் பீட்டர் மேனனின் வண்டவாளங்களையும் படித்து பாருங்கள்;

  ReplyDelete
 20. ஜெயா டி.வி.லயும் கேப்டன் டி.வி.லயும் லைவ் ப்ரோக்ராம் போடுவாங்க. விஜய் டி.வி.ல எப்டின்னு தெரியல.

  ReplyDelete
 21. நடக்கட்டும்...நடக்கட்டும்..
  எதையும் தாங்கும் இதயம் தமிழனுடையது...

  ReplyDelete
 22. என்னய்யா சொல்றீக..மெய்யாலுமா?

  ReplyDelete
 23. Padam nalla irundhaa kandipaa parkalaam !! aanaal veen villambaram thevay illai!!

  ReplyDelete
 24. பாரத்... பாரதி... சொன்னது…

  நடக்கட்டும்...நடக்கட்டும்..
  எதையும் தாங்கும் இதயம் தமிழனுடையது...
  உண்மை தான் பாரதி

  ReplyDelete
 25. என்னாத்த சொல்லி என்னாத்த பண்றதுபா? எல்லாமெ ஒரே தமாசா கீதுபா.. வாணலி சூடு பொறுக்கலன்னு குச்சா, நெருப்பில வூய்ந்திடுவோமோன்னு பயம்மா கீது.. எப்பிடியிருந்தாலும் வெந்து சுண்ணாம்புன்னு நம்ம தலீல கீறப்ப, என்னா செய்யறதுன்னு பிரிலபா...!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"