Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/17/2011

கிறிஸ்துவர்களைக் கொன்று குவித்த மாமிச மலை!?

வனுக்கு  எந்த வேலையும் தெரியாது. மகா சோம்பேறி. எவர் சிபாரிசிலோ அவன் ராணுவத்தில் சேர்ந்தான்.  அதுவும் ராணுவச் சமையல்காரருக்கு உதவியாளனாக!!

இந்தப் பணியில்   சேர்ந்த அவன் சிறிது காலத்தில் தலைமை சமையற்காரனாக உயர்ந்தான். அதுவும் அவனுடைய திறமையால் கிடைத்ததன்று. சூழ்ச்சியால்தான் எதையும் சாதிக்க முடியும்  என்ற கொள்கை கொண்ட அவன், வாழ்வின் தொடக்கத்திலேயே சதியின் துணைகொண்டு சாதிக்கத் தொடங்கினான்.

ஒரு சமயம்  அந்த நாட்டு ஜனாதிபதியை சந்திக்கும் வாய்ப்பைபெற்ற அவன், ஒரு சிலமணி நேரத்திலேயே அந்த ஜனாதிபதியின் உள்ளத்தில் இடம்பெற்றான்.  அந்த ஏமாளி ஜனாதிபதி அவனுக்கு தளபதி பதவி கொடுத்தார். ஒரு நாள் ராணுவப் புரட்சி நடத்தி  அந்த ஜனாதிபதியை விரட்டியடித்தவிட்டு  அவன் ஜனாதிபதி பொறுப்பேற்றான்.

அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான். “காமன் வெல்த் நாடுகளின் தலைவன்”, “இங்கிலாந்தை வென்ற வீரன்”, “ஸ்காட்லாந்தின் கடைசி மன்னன்” போன்ற பட்டங்களை தானே சூடிக்கொண்டான்.

தன் நாட்டில் கிறுஸ்தவர்கள் எவரும் வாழக்கூடாது என்று அவர்களைக் கொன்றுகுவித்தான். ஐந்து பெண்களை திருமணம் செய்துகொண்ட அவன் பல பெண்களிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டிருந்தான்.

இப்படி அரசியல், காமம்  போன்றவற்றில் வெறியனாக இருந்த அவன் கடைசியில் தான்சேனியா நாட்டை தன் வயப்படுத்த நினைத்தான். அந்நாட்டு அதிபரிடம் ஒண்டிக்கு ஒண்டி  சண்டைக்கு வருகிறாயா என சவால் விட்டான். 

இந்நேரத்தில் தான்சேனியா அதிபர் , அவனால் விரட்டியடிக்கப் பட்டவர்களையும், சாகடிக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் ஒன்றிணைத்து தன்நாட்டுப் படைகளையும் துணைக்கனுப்பி அவன் நாட்டைத் தாக்கினார். எதிர்க்க முடியாத அவன் நாட்டைவிட்டே ஓடி உயிர் பிழைத்தான்.


அந்த  கொடூர ஜனாதிபதி யார்?  அடுத்த வரலாற்றுப் பதிவில் காண்போம்.
தெரிந்தவர்கள் பின்னூட்டம் இடவும்.

முந்தைய வரலாற்றுப்  பதிவிற்கான விடை :   அப்ரகாம் லிங்கன்.முந்தைய பதிவுகள்:  1.  'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'
                                               2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு
                                               3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்!!!  
                                               4 .  இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.
                                                  
தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....     

45 comments:

 1. நேத்து விட்டதை இன்னைக்கு பிடிச்சுட்டேன்

  ReplyDelete
 2. இது வரலாற்றுப்பதிவா? கில்மா பதிவா? ஹி ஹி # தமிழனுக்கு கண்டதுலயும் டவுட்

  ReplyDelete
 3. அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான்.


  super

  ReplyDelete
 4. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  நேத்து விட்டதை இன்னைக்கு பிடிச்சுட்டேன்
  //வாங்க..வாங்க..

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  இது வரலாற்றுப்பதிவா? கில்மா பதிவா? ஹி ஹி # தமிழனுக்கு கண்டதுலயும் டவுட்
  -- இதுலையும் டவுட்டா?

  ReplyDelete
 6. karurkirukkan சொன்னது…

  அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான்.
  -- பதில் சொல்லுப்பா?

  ReplyDelete
 7. இம்மாதிரியான கொடுங்கோலர்கள் பெரும்பாலோரின் இறுதி முடிவு, ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனால் எந்த கொடுங்கோலர்களும் பாடம் கற்று கொண்டதாய் தெரியவில்லை.

  ReplyDelete
 8. தமிழ் உதயம் சொன்னது…

  இம்மாதிரியான கொடுங்கோலர்கள் பெரும்பாலோரின் இறுதி முடிவு, ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனால் எந்த கொடுங்கோலர்களும் பாடம் கற்று கொண்டதாய் தெரியவில்லை.
  /// Thanks 4 ur comments..

  ReplyDelete
 9. //எதிர்க்க முடியாத அவன் நாட்டைவிட்டே ஓடி உயிர் பிழைத்தான்.//

  ரொம்ப ஆடினால் இது தான் முடிவு...

  ReplyDelete
 10. வித்யாசமான தகவல்களை வாரி வழங்குகிறீர்கள். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 11. சங்கவி சொன்னது…

  //எதிர்க்க முடியாத அவன் நாட்டைவிட்டே ஓடி உயிர் பிழைத்தான்.//

  ரொம்ப ஆடினால் இது தான் முடிவு... --- Thanks..

  ReplyDelete
 12. FOOD சொன்னது…

  வித்யாசமான தகவல்களை வாரி வழங்குகிறீர்கள். பகிர்விற்கு நன்றி.
  /// Thanks...

  ReplyDelete
 13. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  உள்ளேன் ஐயா..
  ///வரலாற்று ஆசிரியரே விடை எங்கே?

  ReplyDelete
 14. Nagasubramanian சொன்னது…

  இடி அமீன்?????
  --- அப்படியா?

  ReplyDelete
 15. உகாண்டா வின் இடி அமீன். ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிட்டால் ஆண்மை கூடும் என்று யாரோ சொன்னதற்காக நாள்தோறும் நாற்பது ஆரஞ்சுப் பழங்களைத் தின்று தீர்த்தவன் அவன்.

  ReplyDelete
 16. எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் சொன்னது…

  உகாண்டா வின் இடி அமீன். ஆரஞ்சுப் பழங்கள் சாப்பிட்டால் ஆண்மை கூடும் என்று யாரோ சொன்னதற்காக நாள்தோறும் நாற்பது ஆரஞ்சுப் பழங்களைத் தின்று தீர்த்தவன் அவன்.
  ///அவர்தானா இவரு?

  ReplyDelete
 17. மனித கறியை சமைத்து ருசிப்பார்தவன் ........இடி அமீன் .......

  ReplyDelete
 18. அஞ்சா சிங்கம் சொன்னது…

  மனித கறியை சமைத்து ருசிப்பார்தவன் ........இடி அமீன் ......
  --- பதில் சரியா?

  ReplyDelete
 19. மாப்ள உங்க வரலாற்று விடயங்கள் சூப்பருங்கோ

  ReplyDelete
 20. அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான்.//

  இதுல எதுவும் உட்குத்து இருக்கா?

  ReplyDelete
 21. விக்கி உலகம் சொன்னது…

  மாப்ள உங்க வரலாற்று விடயங்கள் சூப்பருங்கோ
  // Thanks...

  ReplyDelete
 22. வைகை சொன்னது…

  அவனுக்கு எழுதப் படிக்க தெரியாது. அதனால் படிப்பறிவு இல்லாதவர்களையே அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் நியமித்தான்.//

  இதுல எதுவும் உட்குத்து இருக்கா?
  ///இது உண்மையிலே நடந்த வரலாறு இதுல உட்குத்து பற்றி எனக்கு தெரியாது.

  ReplyDelete
 23. வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html

  ReplyDelete
 24. எஸ்.கே சொன்னது…

  வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன். மிக்க நன்றி!
  http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_5823.html /// Thanks...

  ReplyDelete
 25. ஆனா கோடூரமான ஆளா இருக்கான்

  ReplyDelete
 26. இடி அமீனைப்பற்றித்தான் இப்படில்லாம் படித்திருப்பதாக நினைவு.

  ReplyDelete
 27. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  யாருன்னு தெரியலை
  /// பரவாயில்லை நண்பா.

  ReplyDelete
 28. ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

  ஆனா கோடூரமான ஆளா இருக்கான் --ஆமாஆமா..

  ReplyDelete
 29. Lakshmi சொன்னது…

  இடி அமீனைப்பற்றித்தான் இப்படில்லாம் படித்திருப்பதாக நினைவு. --- அப்படியா?

  ReplyDelete
 30. சாகம்பரி சொன்னது…

  இடி அமீனேதான் --- இருக்கலாம்..

  ReplyDelete
 31. யார்யா அது ஆர்வம தாங்கலை.......

  ReplyDelete
 32. MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  யார்யா அது ஆர்வம தாங்கலை.......--- அடுத்த வரலாற்றுப் பதிவு வரை வெயிட் செய்யவும்..

  ReplyDelete
 33. பதவி வந்துவிட்டாலே அதிகாரத் திமிரும் கூடவே வளருமோ.அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறோம் !

  ReplyDelete
 34. ஹேமா சொன்னது…

  பதவி வந்துவிட்டாலே அதிகாரத் திமிரும் கூடவே வளருமோ.அடுத்த பதிவுக்காய் காத்திருக்கிறோம் !
  /// Answer?

  ReplyDelete
 35. இது இடி அமீன்....

  நல்ல தகவல்.....

  ReplyDelete
 36. சிறப்பான பதிவு நன்றி

  ReplyDelete
 37. உளவாளி சொன்னது…

  இது இடி அமீன்....

  நல்ல தகவல்.....
  /// appadiya?

  ReplyDelete
 38. tamilbirdszz சொன்னது…

  சிறப்பான பதிவு நன்றி
  // Thanks 4 coming.

  ReplyDelete
 39. தற்போதைய காங்கோ இதன் முன்னால் பெயர் ஜயர் அந்த நபர் பெயர் மொபுட்டு

  சரியா?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"