Tamilus

The best Tamil Aggregator | Tamilus

3/24/2011

இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் ஆதரிப்போம் : சீமான்


நாம் தமிழர் கட்சியின் மாநிலத்தலைவர்  சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,   ‘’சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.   ஆனால் தமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கு எதிராக செயல்பட்டு இலங்கை தமிழ் இனத்தை கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் தோற்கடிக்கும் பணியில் ஈடுபடுவோம்.

இதற்காக 17 நாள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து 63 தொகுதிகளிலும் எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்.

நாளை எனது பிரச்சாரத்தை நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தொடங்குகிறேன். ஏப்ரல் 11-ந்தேதி வரை பிரச்சாரம் செய்வேன்.    

தமிழரால் உருவெடுத்து உள்ளோம். காங்கிரசை கறுவறுப்போம். அரசியல் சமுதாய மாற்றம் ஏற்படுத்தும் வகையில் எங்கள் பிரச்சாரம் அமையும்.
 
இலவச திட்டங்கள் வழங்குவது பிச்சை எடுப்பதற்கு சமம். காங்கிரசை பழிவாங்க அரசியல் களத்தில் குதித்து உள்ளோம். வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றியது வருத்தம் அளிக்கிறது. அவர் அனுபவம் மிக்க தலைவர் அவர் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.

எங்கிருந்தாலும் அவரது வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும்.   காங்கிரசை தோற்கடிக்கக் கூடிய வலுவான சின்னம் இரட்டை இலையாக இருந்தாலும், மொட்டை இலையாக இருந்தாலும் அதை ஆதரிப்போம்.

காங்கிரசை அழிப்பது தான் எங்களது நோக்கம்’’ என்று கூறினார்.

நன்றி - படங்கள்  நக்கீரன்.

முந்தைய பதிவுகள்: 
2. மிஸ்...ஜெ. ஜெயலலிதா இது கண்டிப்பா உங்களுக்கில்லை....!
   தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்
நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்,
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்
ஓட்டு போட மறக்காதீர்கள்....    
 

29 comments:

 1. வை.கோ விக்க்டெ விழுந்துடுச்சு!இவராவது நின்னு ஆடுவாரா?

  ReplyDelete
 2. மானம் கெட்ட சீமான்.. வேறென்ன சொல்ல - புடுங்கி சீமானே..

  போர் என்றால் சாகத்தான் செய்வார்கள்.. ,
  பிரபாகரனை கைது செய்து இழுத்து வர வேண்டும் ..

  யார் சொன்னதுன்னு யோசிச்சு பாருடா லூசு

  ReplyDelete
 3. காங்கரஸை அழிக்க எல்லா திசையிலும் ஆட்கள் ரெடி...

  பாவங்க காங்கிரஸ்...

  ReplyDelete
 4. பதிவுலகமே காத்து வாங்கிட்டு இருந்தாலும் உங்க கடமைல என்றும் தவறுவதில்லை..

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  பதிவுலகமே காத்து வாங்கிட்டு இருந்தாலும் உங்க கடமைல என்றும் தவறுவதில்லை.. -- காலையில போட்ட பதிவு ஊத்திகிச்சு நண்பா..

  ReplyDelete
 6. பாட்டு ரசிகனே.. 2009 ல , அதுவும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய பாராளுமன்ற தேர்தல்ல என்னனேனமோ ட்ரை பண்ணாங்க.. பப்பு வேகலையே.. என்ன பண்றது.. இப்படி இணையத்துல கூவுற யாரும் வோட்டு போட போறதில்லையே..

  ReplyDelete
 7. நடக்கட்டும் நடக்கட்டும்

  ReplyDelete
 8. காங்கிரஸைச் சுத்தி எல்லோரும் வியூகம் அமைக்கிறாங்க!

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. வணக்கம், சகோ, ஆய் சூப்பர் சீன் உங்க புளொக்கிலை ஓடுது...
  காங்கிரஸை தோற்கடிப்பதற்காக அம்மாவை வெல்லப் பண்ணும் சீமான்...
  செம காமெடி.
  அப்ப அடுத்த தேர்தலிலை அதிமுக கூட காங்கிரஸ் கூட்டுச் சேர்ந்தால் சீமான் திமுக விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரோ?

  ReplyDelete
 11. தலைவரே ரொம்ப சூடா இருக்கும் போல .///

  ReplyDelete
 12. சீமானே .. உஷார்.. எப்படி சோவின் வழிகாட்டுதலில் வைகோவை அம்மா விரட்டியதோ.. அதே வழியில் உங்களுக்கும் நடகாது என்று உறுதி அளித்துவிட்டு ரெட்டை மற்றும் மொட்டை இலைக்கு வாக்கு கேளுங்கள்

  ReplyDelete
 13. வாக்கிட்டேன்,வருகிறேன்.

  ReplyDelete
 14. வைகோவும் களத்தில் இறங்கினால் நல்லா இருக்குமோ....

  ReplyDelete
 15. அனைவருக்கும் தி.மு.க மீது கோபம். தெரிகிறது.

  ReplyDelete
 16. சீமான் சொன்னது ஒருக்கட்டும்..உங்க கருத்து என்ன வாத்யாரே? (-தேரை இழுத்து தெருவில் விடுவோர் சங்கம்)

  ReplyDelete
 17. //ஒருக்கட்டும்.// ஹி..ஹி..அது ‘இருக்கட்டும்’

  ReplyDelete
 18. சீமானின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 19. அம்மா மட்டும் ஜெயிச்சிடுச்சி தக்காளி நிக்க வச்சே மொட்ட அடிக்கும் ஹிஹி!

  ReplyDelete
 20. சீமானுக்கு பக்கபலமாக இருப்போம்..

  ReplyDelete
 21. திமுகவை விட்டுவிட்டு காங்கிரசை மட்டும் எதிர்ப்பது என்ன கொள்கையோ ?திமுகவும் தானே துணை போனது ?

  ReplyDelete
 22. சீமானின் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் ..............

  ReplyDelete
 23. எப்பா சீமான் தம்பி உன் மனசுல என்ன நினைச்சு பேசிக்கிட்டு இருக்கிறே, அன்னிக்கு தனி அரசியல்- ண. இப்போ காங்கிரஸ் க்கு எதிரா இருக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு அப்படிங்கிரே. பேசாமே 49-ஓ போட சொல்லிட்டு போக வேண்டியது தானே. முதல் ல நீ தெளிவா இரு. இரு கட்சிகளும் வேண்டாம் புது கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம்- நு நினைச்சிருந்த எனக்கு உன் பதில் ஏமாற்றத்தை தருகிறது.நண்பர்களுக்கும் இருக்கலாம்.

  ReplyDelete
 24. எப்பா சீமான் தம்பி உன் மனசுல என்ன நினைச்சு பேசிக்கிட்டு இருக்கிறே, அன்னிக்கு தனி அரசியல்- ண. இப்போ காங்கிரஸ் க்கு எதிரா இருக்கும் எந்த கட்சிக்கும் ஆதரவு அப்படிங்கிரே. பேசாமே 49-ஓ போட சொல்லிட்டு போக வேண்டியது தானே. முதல் ல நீ தெளிவா இரு. இரு கட்சிகளும் வேண்டாம் புது கட்சிக்கு ஆதரவு கொடுக்கலாம்- நு நினைச்சிருந்த எனக்கு உன் பதில் ஏமாற்றத்தை தருகிறது.நண்பர்களுக்கும் இருக்கலாம்.

  ReplyDelete
 25. சீமான்! உங்கள் மீது அதிக மதிப்பு வைத்திருந்தேன். ஆனால் கடந்த சில நாட்களில் நீங்கள் செய்யும் காரியங்கள், என்னை மிக வேதனை படுத்தி விட்டது. நீங்கள் சில விசயங்களை யோசித்து பாருங்கள் :
  1. தமிழகத்தில் LTTE கு எவ்வளவு ஆதரவு இருந்தது, அதை ஒழித்து கட்டியவள், இன்று நீங்கள் யாருகக வோட்டு கேட்கிரின்களோ அந்த ஜெயா.
  2.she joined with Subramaniam swami and dissolved KARUNANIDHI's govt for LTTE support. what did the tamilnadu people do in the next election? did they bring karunanidhi back?
  3. Even see, how worst she made the politics? before her when MGR was a CM, any common issues like tamil/cauvery/mullai issue mostly karunanidhi supported MGR. but once this lady come to power, she made a point never join with karunanidhi in any issue. that split the whole tamilnadu. and from 1989 we cannot fight anything unitely. i remember MGR called a bandh for ltte support against jayawardane, the whole tamilnadu stood together irrespective of party. but this lady spoiled everything. now you want to support her.
  3. just few months back, in spectrum issue she openly announced that she can give support to congress govt.
  few days back she made communist to wait, bcoz she tried her best to make alliance with congress. what is your answer for this?
  4.Vijayakanthuku EVKS லட்டு ஊடுன போது, முத்துக்குமார் பத்தி நினைத்து இருப்பான, அவனும் கடைசிவரை காங்கிரஸ் வுடன் கூட்டு வைக்க தானே துடித்தான். கூட்டணி முடிவகரவரை காங்கிரஸ் ஐ எதிர்த்து எதாவது பேசினன, ஈழத்திற்கு ஏதாவது குரல் குடுத்தன? அவனுக்கு நீங்க சப்போர்ட் பண்ணி தான் ஆகனுமா?
  5. நல்லவர்கள் அரசியலுக்கு வரணும்னு விஜய்க்கு ஜால்ரா அடிச்சிங்களே, இந்த விஜய்
  விஜய் ஏன் ராகுலை சந்தித்தார்? சந்திப்புக்கு பிறகு அப்பாவும் மகனும் சேர்ந்து ராகுலை புகழ்ந்து விட்ட அறிக்கைகளுக்கு பதில் என்ன? எல்லோரும் வெறுத்து ஒதுக்கிய அசினை மீண்டும் தன்னுடன் நடிக்க வைத்து வாழ்வு கொடுத்தது ஏன்?
  எல்லாவற்றுக்கும் போராட்டம் மற்றும் அறிக்கை தரும் நீங்கள் இவற்றை எதிர்த்து ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உண்மையில் எனக்கு கடைசியாக உங்கள் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. ஆனால் இன்றைக்கு விஜய் /sacஐ எல்லாம் சப்போர்ட் பண்ணிகுட்டு. இருப்பதாய் பார்த்தல் யாரையும் நம்ப முடியவில்லை.
  6. JAYA தான் மீண்டும் வரணும், நீங்கள் எல்லாம் மீண்டும் பட்டாள் தான் தெரியும். LTTE ஒழிபதற்கு, ltte கு தமிழ்நாட்டில் இருந்த அதரவை அளித்ததற்கு முதல் கரணம் ஜெயா தான். வைகோவை துரத்திய பிறகாவது neengal நல்ல முடிவு எடுபிர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் விஜய் அளவுக்கு இறங்கி போகி விட்டிர்கள்.
  இனி வுங்களை நம்பி ஒரு பயனும் இல்லை.
  7. உண்மையில் தாமரை உங்களுக்கு கடிதம் எழுதிய போது அவர் மீது கோவ பட்டேன், ஆனால் இப்போது உணர் கிறேன் அவர் சொன்னது தான் சரி என்று.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"