Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/02/2011

கோடீஸ்வர வாக்காளர்களே உஷார்.. தெர்தல் வந்துவிட்டது..


ன்று, கக்கன், காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் உயிருடன் இருந்திருந்தால், தேர்தலில் போட்டியிட நிச்சயம் சீட் கிடைத்திருக்காது. ஏனெனில், அவர்களிடம் கட்சி நேர்முகத் தேர்வு நடத்தும் போது, "தேர்தலில் நிற்க சீட் கொடுத்தால், நீங்க எத்தனை, "சி' செலவு செய்வீர்' என்ற முதல் கேள்வியிலேயே நிச்சயம் அவர்கள் வெளியேற்றப்படுவர்! 

இன்று பல கோடிகள் வைத்திருந்தால் போதும், "லாபி' செய்து, சீட்டைப் பெற்றுவிடலாம்."ஜாதியற்ற சமத்துவம் காண்போம்' என்று கூறும் திராவிடக் கட்சிகள், இன்று, தாங்கள் எந்த ஜாதியைச் சார்ந்தவர்கள், தொகுதிகளில், ஜாதி ஓட்டு எவ்வளவு உள்ளது என்ற கேள்வியை, வேட்பாளரிடம் இரண்டாவதாக வைக்கின்றன.

அப்படிப் பார்த்தால் இன்று, காமராஜர் விருதுநகரிலும், அண்ணாதுரை காஞ்சிபுரத்திலும், கக்கன், ஏதோ ஒரு ரிசர்வ் தொகுதியில் மட்டுமே நிற்கும் சூழல் உண்டாகியிருக்கும்.இதில் வேடிக்கை என்னவெனில், பல, "சி'களை செலவு செய்யவிருக்கும் நம் வேட்பாளர்கள் காட்டும் சொத்துக் கணக்கு என்னவோ, சில லட்சங்கள் அல்லது சில கோடிகள் தான்.

நம் துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர். இப்படிப்பட்ட கோடீஸ்வர ஏழைகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தான், விலை மதிப்பில்லாத கோடீஸ்வர வாக்காளர்களை நோக்கி கை நீட்டி, ஓட்டுப் பிச்சை கேட்டு வருகின்றனர்.

இந்த பொன்னான வாய்ப்பபை, நாம் வீணடித்துவிட்டால், பின் ஐந்து ஆண்டுகளும், பிச்சைக்காரர்கள் போல, இலவசங்களைப் பெற மீண்டும் ரேஷன் கடைகளில் வரிசையில் நிற்க வேண்டிய நிலை வரும். 

விலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு, எந்தக் காலத்திலும் ஓட்டுப் போடுவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இல்லையெனில், ஏப்., 13ல் மீண்டும் நாம் தோற்று, ஊழல் அரசியல்வாதிகள் வெற்றி பெற்று விடுவர்.

கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான், 
தூய்மையான ஜனநாயகம் மலரும்.

Thanks Arun, bhuvanagiri.

24 comments:

 1. ///
  கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான், தூய்மையான ஜனநாயகம் மலரும்.////

  உண்மை

  ReplyDelete
 2. ஓஹோ.. இன்னைக்கு சனிக்கிழமையா? ஹி ஹி

  ReplyDelete
 3. //துணை முதல்வரே, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், கடந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்.//

  இந்தக் காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போய்டுச்சு...

  ReplyDelete
 4. பாரு மாப்ள நீரும் யாருக்கு ஓட்டு போடலாம்னு சொல்ல மாட்டேங்குற.......
  சொல்லுய்யா இல்லைனா என்னைபோல அரவேக்கட்டுக்கு எப்படி புரியும் ஹிஹி!

  ReplyDelete
 5. //காங்கிரஸ் தலைவர் சோனியா, தனக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் கூறியுள்ளனர்//

  ச்சே...நாட்ல வறுமை எப்படி எல்லாம் தலைவிரிச்சி ஆடுது...

  ReplyDelete
 6. நாம நினைப்பதே நடக்கும். தமிழக வாக்காளர்கள் நிறையவே விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்.

  ReplyDelete
 7. நீங்க சொல்றதெல்லாம் சரிதாம்.. ஆனா விழிச்சிக்கோ.. ஏமாந்திடாதேன்னு மட்டும் சொல்றீங்களே அப்பரம் என்னதான் பண்றதுன்னு சொல்லுங்க.. யாருக்கு ஓட்டு போடுறது.? நான் 49oவிதிப்படி தான்.. ஆனா ஏமாந்திடாதேன்னு சொல்லும் நீங்க அதுக்கு வழி என்ன அப்படிங்கிறதையும் சொல்லணும்..

  ReplyDelete
 8. //பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு,//

  நான் ஏன் கேக்கிறேனா.? இந்த மாதிரி நீங்க சொல்றதுபோல இல்லாத அரசியல்வாதி எங்க இருக்கார்னு காட்டுங்களேன்.. ப்ளீஸ்,,

  ReplyDelete
 9. //கோடீஸ்வர வாக்காளர்களுக்கும், கோடீஸ்வர வேட்பாளர்களுக்கும் நடக்கும் தேர்தலில், வாக்காளர்கள் வெற்றி பெற்றால் தான்,
  தூய்மையான ஜனநாயகம் மலரும்.//
  மலரட்டும் உண்மையான ஜனநாயகம்!

  ReplyDelete
 10. தூய்மையான ஜன நாயகம்னா என்னங்க?

  ReplyDelete
 11. குரோஷி தான் கலக்குறாரு

  ReplyDelete
 12. திமுக கலங்கிதான் போயிருக்கிறது

  ReplyDelete
 13. ஒரு சந்தேகம்
  http://speedsays.blogspot.com/2011/04/blog-post.html

  ReplyDelete
 14. நாம் வெற்றி பெற 49ஓ போட வேண்டும் என்கிறீர்களா..!!?? நண்பரே..!! சரி அப்படியே செய்திடுவோம். கலக்கலான அலசல் பதிவு.

  ReplyDelete
 15. ஒரு ரூவா சம்பளம் வாங்குனவங்கள பத்தியும் கொஞ்சம் எழுதி இருக்கலாமே?

  ReplyDelete
 16. அருமையான கருத்து நண்பரே...

  ReplyDelete
 17. இலவசங்களால் பழகிப்போன மக்களை மாற்றமுடியும் என்று நினைகிறீங்களா? ஆனாலும் நல்லா விழிப்புணர்வு பதிவா போட்டு தாக்கிறீங்க. மக்கள் புரிஞ்சுட்டு மாறினால் சரிதான்

  ReplyDelete
 18. பார்ப்போம் பார்ப்போம் மக்கள் என்ன பன்னுராங்கன்னு...

  ReplyDelete
 19. நியாயமான ஆதங்கம் உங்களுடையது. ஏமாறுபவர்கள் இருக்கும் மட்டும் ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள். மக்கள் இதற்காக தங்கள் வாக்குகளை அளிக்காமல் இருக்கக்கூடாது. கிடைத்தவரை வாங்கிகொண்டு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கு வாக்கு அளிக்க வேண்டியதுதான்

  ReplyDelete
 20. விலைமதிப்பில்லாத ஓட்டுக்களை, பணத்தாலும், ஜாதி பலத்தாலும் விலை பேசும் வியாபாரிகளுக்கு, எந்தக் காலத்திலும் ஓட்டுப் போடுவதில்லை என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்...........
  //////////////////////
  சரி ரைட்டு கண்ணுக்கு எட்டின தூரம் வரைக்கும் வேற யாரும் இல்லையே எல்லா கழிசடைகளும் ஒரே மாதிரி தான் இருக்கு ..............செல்லாத ஒட்டு தான் போடணும் ...........

  ReplyDelete
 21. சரி யாருக்கு ஒட்டு போடுவது..? தி மு க, அ தி மு க தவிர்த்து வேறு எந்த கட்சிக்கு ஒட்டு போட்டாலும் அது செல்லாதா ஓட்டிற்கு சமம் தான். இதற்கு தீர்வு மாற்றி மாற்றி இவர்களை தேர்ந்தெடுப்பது அல்ல. மூன்றாவது மாற்று அணி உருவாக உற்படியாக ஏதாவது செய்தாக வேண்டும்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"