Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/21/2011

உனக்குள்ளேயே நீ விலகி நில் - அன்னைங்களில் மிகப் பெரும்பாலோர் உங்களுடைய ஜீவனின் மேற்பரப்பிலேயே வாழ்கிறீர்கள். அதனால் புறச் செல்வாக்குகள் உங்களைத் தீண்டுவதற்கு இடமளிக்கிறீர்கள். நீங்கள் உங்கள் உடலுக்கு வெளியே வாழ்வதுபோல் அவ்வளவு வெளிப்புறத்தில் வாழ்கிறீர்கள். அவ்வாறு புறத்தில் வாழும் விரும்பத்தகாத இன்னொரு ஜீவனைச் சந்திக்கும்போது கலவரமடைகிறீர்கள். 

 
நீ எப்பொழுதும் உனக்குள்ளேயே விலகி நிற்க வேண்டும். உன்னுள்ளேயே ஆழ்ந்து செல்லக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி விலகி நின்றாயானால், நீ பத்திரமாயிருப்பாய். வெளி உலகில் இயங்கிக் கொணடிருக்கும் மேலெழுந்தவாரியான சக்திகள் உன்னைப் பயன்படுத்த இடம் கொடாதே. அவசரத்தில் ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதிருக்கும் போது கூட சிறிது நேரம் விலகி நின்றால் எவ்வளவு குறைந்த நேரத்திலும் அதிக வெற்றிகரமாகவும் உங்களுடைய வேலையைச் செய்ய முடியும் என்பதைக்கண்டு ஆச்சரியப்படுவாய். 


யாராவது உன் மீது கோபப்பட்டால் அவனுடைய கோப அதிர்வுகளில் அகப்பட்டுக் கொள்ளாமல் விலகி நில். எந்த ஆதரவோ பதிலோ கிடைக்காததால் அவனுடைய கோபம் மறைந்து போகும், எப்பொழுதும் அமைதியுடன் இரு. அமைதி இழக்கும்படியான சோதனைகளையெல்லாம் எதிர்த்து நில். விலகி நிற்காமல் எதையும் முடிவு செய்யாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் ஒரு வார்த்தையும் பேசாதே, விலகி நிற்காமல் ஒருபோதும் செயலில் குதிக்காதே. 

 
சாதாரண உலகைச் சேர்ந்த எல்லாமே நிலையற்றவை, சொற்ப காலத்திற்கே இருப்பவை, ஆகவே கலவரப்படும்படியாக அதில் ஒன்றுமே இல்லை. எது நிலைத்து நிற்பதோ, எது நித்தியமானதோ, எது அமரத்தன்மை கொண்டதோ, எது அனந்தமானதோ அதுவே வென்று பெறுவதற்கு, உடைமையாக்கிக் கொள்வதற்கு, தகுதியுடையதாகும்.


இதை நீ உணர்ந்துவிட்டால் எது நிகழ்ந்தபோதிலும் நீ விலகி நின்று அதை நோக்க முடியும், நீ அமைதியுடனிருந்து  தெய்வ சக்தியை அழைத்து, அதன் பதிலுக்குக் காத்திருக்க முடியும். அப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்று உனக்குத் திட்டவட்டமாகத் தெரியும். ஆகவே, இதை நீ நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் அமைதியாக இருந்தாலன்றி இறைவனின் பதிலைப் பெறமுடியாது. இந்த உள் அமைதியைப் பழகு, சிறிய அளவிலாவது தொடங்கி, தொடர்ந்து பழகி வா, பிறகு அதுவே உனக்கு வழக்கமாகிவிடும்.

வாழ்க  வளமுடன்...

22 comments:

 1. நண்பா சூப்பர் அடி தூள் கிளப்புறீங்க

  ReplyDelete
 2. இந்த வழி முறைகளை கையாள கொஞ்சம் கஷ்டம் போல மாப்ள!

  ReplyDelete
 3. அருமையாக சொல்லி இருக்கிறிர்கள்.

  ReplyDelete
 4. ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துக்கள்>

  ReplyDelete
 5. பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 6. சமாதனப்புறாவை நன்றாக பறக்க விட்டுள்ளீர்கள்..

  ReplyDelete
 7. என்னய்யா இன்னைக்கு ஒரே அட்வைஸ் தத்துவ மழையா பொழியுரீங்க....

  ReplyDelete
 8. நல்ல கருத்துக்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. தங்கள் பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்த பதிவு இது.
  http://www.biz-manju.blogspot.com/

  ReplyDelete
 10. மிகவும் நன்றாக இருக்கு.

  ReplyDelete
 11. கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கின்றேன்
  கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கின்றேன்

  http://tamilpaatu.blogspot.com/2011/04/blog-post_21.html

  ReplyDelete
 12. அருமையாக சொல்லி இருக்கிறிர்கள். ..

  ReplyDelete
 13. தத்துவ முத்துக்களை உதிர்க்க்கிறீர்களே! சிபியைப் பிடித்திருக்கும் கர வருஷ தோசம் உங்களுக்கும் பிடித்து விட்டதா;-))
  ஹி...

  ReplyDelete
 14. என்னாச்சு பாஸ்? :-)
  நல்லாயிருக்கு!

  ReplyDelete
 15. ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. கருத்துக்கள் அத்தனையும் அருமை. சும்மா கலக்கீட்டீங்க கருன்.

  ReplyDelete
 17. எனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய உங்களுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 18. சிறப்பான பதிவு.நன்றி கருன்

  ReplyDelete
 19. என்னையும் நிருபனையும் தவிர்த்து மற்றவர்கள் டெம்ப்ளேட் பிரியர்கள்:)

  ReplyDelete
 20. அநேகர் சொல்வது போல் கர வருஷத்தில் ஆன்மீகம் கொஞ்சம் அதிகம்தான்!
  நல்ல கருத்துச் செறிவுள்ள பதிவு!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"