Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/27/2011

இராத்திரி நேர கனவுகளின் இம்சைகள்


னவுகள்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள் இருக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு, பொழுதுபோக்குத் தொடர்பான கனவுகள் வரும். இளைஞர்களுக்கு தங்களுக்கு பிடித்தமானவர்களைப் பற்றிய கனவுகள் வரும், கன்னிப் பெண்களுக்கு திருமணத்தைப் பற்றிய கனவுகள், தம்பதிகளுக்கு தங்களது பிள்ளைகளைப் பற்றிய கனவுகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இதையெல்லாம் மீறி, உறக்கத்தில் வரும் கனவுகளைப் பற்றி பல்வேறு விளக்கங்கள் தர‌ப்படு‌கி‌ன்றன.

அதாவது மனிதனின் மூளையில் பதிவாகியிருக்கும் விஷயங்கள்தான் அவ்வப்போது அவனது உறக்கத்தில் வரும் கனவாகிறது என்கிறது அறிவியல்.

ஒ‌வ்வொரு கனவு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு பல‌ன் இரு‌க்‌கிறது. அதுவு‌ம் எந்தெந்த நேரத்தில் எந்த மாதிரியான கனவு கண்டாலும் அதற்கான ஒரு பலன் இருக்கிறது என்கிறது சாஸ்திரம்.

நள்ளிரவில் காணும் கனவு ஓராண்டுக்குள் பலிக்கும், விடியல் நேரத்தில் காணும் கனவு உடனே பலிக்கும், பகல் கனவு பலிக்காது என்றெல்லாம் வீட்டில் பெரியவர்கள் கூறிக் கேட்டிருக்கிறோம்.

கனவில் விலங்குகளைப் பார்த்தால், தெய்வங்களைப் பார்த்தால், திருமணம் நடந்தால் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கும் என்பதையும் பு‌த்தக‌ங்க‌ளி‌ல் படித்துள்ளோம்.

பொதுவாக கனவுகள் கருப்பு - வெள்ளைகளாகத்தான் இருக்கும்.

கண் பார்வை குறைபாடு இருப்பவர்களின் கனவுகளில் உருவங்கள் இருக்காது. அவர்களது கனவில் பேச்சுக் குரல் மட்டுமே இருக்கும்.

‌ஆழ்ந்த உறக்கத்தில் கனவுகள் வருவதில்லை.

கடைசியாக தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் எண்ணும் எண்ணங்கள் தான் பல சமயங்களில் கனவுகளாக வருகின்றன.

நம் ஆழ் மனதில் இருக்கும் விஷயங்களை மனக் கண்ணில் பார்ப்பதே கனவு எனப்படுகிறது.

நாம் காணும் அனைத்து கனவுகளும் நமது நினைவில் நிற்பதில்லை.

புதிதாக நாம் செல்லும் ஓரிடத்தை ஏற்கனவே பார்த்ததுபோன்ற ஒரு எண்ணம் தோன்றும். அது கனவி‌ல் க‌ண்ட இடமாகவு‌ம் இருக்கலாம்.

ஒருவர் இறந்துப்போவது போன்று கனவு கண்டால் அவருக்கு ஆயுள் கெட்டி என்று எண்ணிக் கொள்ளலாம்.

உறங்கச் செல்வதற்கு முன்பு இனிமையான நிகழ்வுகளை அசைபோட்டபடி கடவுளை வணங்கிவிட்டு உறங்கச் செல்வதன் மூலம் இனிமையான கனவுகளை காணலாம்.

மன‌தி‌ற்கு‌ப் ‌பிடி‌த்தமான மெ‌ன்மையான பாட‌ல்களை‌க் கே‌ட்டபடியு‌ம் உற‌ங்க‌ச் செ‌ல்லலா‌ம். ந‌ல்ல உ‌ற‌க்கமு‌ம் வரு‌ம். அ‌தி‌ல் அருமையான கனவுகளு‌ம் வரு‌ம்.

இதுபோன்று கனவைப் பற்றி சொல்லிக் கொண்டேப் போகலாம். ஆனால் நீங்கள் படித்துமுடித்து உறங்கிவிட்டால் யார் பொறுப்பு. அதற்காக இத்துடன் முடித்து விடுகிறேன்.

கனவுகள் பற்றி நீங்கள் அறிந்த தகவல்களை அளிக்கலாம்.

20 comments:

 1. என் கனவினை கேள் நண்பா உனக்கு புரியும்
  என் உணர்வினை நீ அறிந்தால் உதிரம் கொதிக்கும்
  ஒரு புறம் வறுமையும் மறு புறம் கொடுமையும்
  ஏழையை விரட்டுது தெரியுமா?
  இந்த மன்குடில் ஆசைகள் மாளிகை அறிந்திடுமா?

  என்ற "தேசிய கீதம்" திரைப்பட பாடலை ஒருமுறை பாருங்கள்...

  ReplyDelete
 2. kanavu kaanungal. nija vaazhvil naam anupavikkaathathai, kanavilaavathu anupavippom.

  ReplyDelete
 3. மாப்ள எனக்கு சில கனவுகள நெனச்சா சிப்பு சிப்பா வருது ஹிஹி!

  ReplyDelete
 4. கனவு மெய்ப்பட வேண்டாம் http://muthusiva.blogspot.com/2010/12/blog-post_30.html

  ReplyDelete
 5. பகல் கனவும் இதுல சேர்த்தியா..

  ReplyDelete
 6. ராத்திரி தூங்குனாத்தானே கனவு வரும் ? ஹி ஹி கருண் தான் தூங்கறதே இல்லையே?

  ReplyDelete
 7. கனவு காணும் வாழ்க்கை யாவும்
  கலைந்துப் போகும் மேகங்கள்,
  துடுப்பு கூட பாரம் என்று
  கரையைத் தேடும் ஓடங்கள்

  ReplyDelete
 8. கனவு பத்தி பதிவா....

  தலைப்பு அமர்க்களம்..

  ReplyDelete
 9. ///
  சி.பி.செந்தில்குமார் கூறியது...

  ராத்திரி தூங்குனாத்தானே கனவு வரும் ? ஹி ஹி கருண் தான் தூங்கறதே இல்லையே?////

  பப்ளிக்.. பப்ளிக்..

  ReplyDelete
 10. பதிவு அருமை கரூன்

  ReplyDelete
 11. கனவு தேசம்..நம்முடையது...அருமையான பகிர்வு

  ReplyDelete
 12. கனாக்காணும் காலங்கள் என தமிழந்தான் பெரும்பாலும் கனவுலகிலேயே சதா சஞ்சரிக்கிறான்

  ReplyDelete
 13. பலர் பகல் கனவு கண்டே காலம் கழிக்கிறார்கள்,கருன்!

  ReplyDelete
 14. கவணில மட்டும் தானே செய்ய முடியாததை எல்லாம் செய்துவிட முடியும் ))))

  ReplyDelete
 15. கனவுகள் இரண்டு மூன்று நொடிகள்தான் நீடிக்குமாம்.

  நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 16. நல்லா தூங்கின பிறகுதான், அந்த ஆழ்மனதிலிருந்துதான்,
  கனவுகள் ஏற்படுகின்றன.
  தெயவக்கனவுகள் பெரும்பாலும் அடி மனதில், ஆழமாக வரும்.
  இது என்னுடைய அனுபவம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"