Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/30/2011

காங்கிரஸ் அரசின் கள்ள மவுனம் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.


மிழக மீனவர்களை இலங்கை கடற்படை கொன்று வீசும் விவகாரமாகட்டும் அல்லது இலங்கை தமிழர்களை சிங்கள இராணுவம் சிதைக்கும் விவகாரமாகட்டும், இப்போது இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமான பின்னராகட்டும், தமிழர்கள் விடயத்தில் எதுவானாலும் கள்ள மவுனம் சாதிப்பதே மத்தியில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு வாடிக்கையாகி விட்டது.

2008
மற்றும் 2009 மே மாதம் வரை விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவம் நடத்திய இறுதிக் கட்டபோரின்போது அப்பாவி பொதுமக்கள் மீதும்,பச்சிளம் குழநதைகள் மீதும் எரிகுண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுவதை பார்த்து, போரை நிறுத்தச் சொல்லுமாறு தமிழகம் பதறி துடித்தபோது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தமிழகத்திற்கும், கொழும்புக்குமாக அனுப்பி வைத்து போக்கு காட்டியபடியே கடைசி வரை அசைந்து கொடுக்கவில்லை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு.

2006
ல் நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் 40 க்கும் 40 இடங்களை திமுக-காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியபோது, அவர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் நினைத்திருக்க மாட்டார்கள் சோனியா காந்தி மனதுக்குள் இப்படி ஒரு பழி தீர்க்கும் உணர்வு பதுங்கி கிடந்திருக்கும் என்று!

கூடவே காங்கிரஸ் கட்சிக்காக வக்காலத்து வாங்கி வாக்கு சேகரித்து கொடுத்த கருணாநிதி இப்படி நெஞ்சத்தை கல்லாக்கிக்கொண்டு 3 மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி இலங்கை தமிழர்களை கொல்ல துணை போவார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்!


ஆனால் 2006 தேர்தலில் வெற்றிபெற்றதுமே சோனியா தெளிவாகவே தனது மனதுக்குள் பூட்டிவைத்திருந்த பழி தீர்க்கும் படலத்தை அரங்கேற்ற திட்டமிட தொடங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவரது விருப்பத்தை நிறைவேற்ற சோனியா வீட்டு பூஜாரிகள் செய்த முதல் காரியம், எங்கோ ஒரு வெளிநாட்டில் செட்டிலாகி இருந்த மலையாளி எம்.கே. நாராயணனை தேடி பிடித்து அழைத்து வந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ஆக்கியதுதான்.
 

இந்த நாராயணன், ஆரம்ப காலம் தொட்டே விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஒரு நபர்.1987- 1990 காலப்பகுதியில் இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டதற்கு,முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.எம்.கே.நாராயணன் இந்திய உளவுத்துறையான 'ரா'வுக்கு பொறுப்பதிகாரியாக இருந்த இவரது தவறான ஆலோசனையின் பேரில்தான், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, புலிகள் மீது வலுக்கட்டாயமாக இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை திணிக்க காரணமாக இருந்தவர்.
 

அவ்வளவு ஏன்... இவர் ஒரு விடுதலைப் புலி எதிர்ப்பாளர் என்பதை விக்கிலீக்ஸே அம்பலப்படுத்தியுள்ளது.அவருக்கு விடுதலைப் புலிகளைப் பிடிக்காது எனவும்,சோனியா குடும்பத்தின் தீவிர விசுவாசி என்றும், இலங்கை போரில் ஒரு பக்கச் சார்பாக அவர் நடந்ததோடு,போரில் அவர் நடு நிலை வகிக்கவில்லை என தெற்காசியா விவகாரங்களுக்கான அமெரிக்க அயலுறவுத் துறை துணை அமைச்சரான ராபர்ட் ஓ பிளேக், தங்கள் நாட்டு அரசு தலைமைக்கு அனுப்பிய தகவலில் குறிப்பிட்டிருந்ததை கைப்பற்றி விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது. 

இதன் மூலம் நாராயணன் எந்த மாதிரியானவர் என்பதை புரிந்துகொள்ளலாம்.
இப்படி நாராயணன்கள், சிவசங்கர மேனன்களின் துணையோடு,இலங்கை தமிழர்களுக்கு எதிரான போரை நடத்திய இந்திய காங்கிரஸ் அரசு,இந்திய தமிழர்களுக்காவது உண்மையானதாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.அவ்வப்போது இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கொன்று வீசும்போதெல்லாம்,கள்ள மவுனம் கடைபிடிப்பதே வாடிக்கையாகிவிட்டது.
 

அண்மையில் தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இனிமேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்தார்.
 
ஆனால் அடுத்த சில தினங்களிலேயே உலக கோப்பை போட்டியில் இந்தியாவிடம் தோற்றுபோனதை பொறுத்துக் கொள்ள முடியாமல், கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நான்கு பேரை மிகக் கொடூரமாக கொன்று வீசினர் இலங்கை கடற்படையினர்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வந்தபோது அவ்வளவு வீராவேசமாக முழங்கிய சோனியாவிடமும், தற்போது அதே கள்ள மவுனம் - தேர்தல்தான் முடிந்துவிட்டதே!

இதையும் மீறி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று அழுத்தம் அதிகமானால் "இனி இதுபோல் நடக்காது: விசாரணை நடத்துகிறோம், வருத்தமளிக்கிறது, கவலை அளிக்கிறது..." என்றெல்லாம்தான் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகமும், அதன் அமைச்சரும் கூறுவார்களே தவிர, தவறியும் அவர்கள் வாயிலிருந்து கண்டனம் என்ற வார்த்தையோ அல்லது எச்சரிக்கை என்ற வார்த்தையோ வந்துவிடாது.


அதுவே ஆஸ்ட்ரேலியாவில் ஒரு வட நாட்டு இந்தியர் தாக்கப்பட்டாலோ, அல்லது அமெரிக்காவில் ஒரு சீக்கியர் அவமதிக்கப்பட்டாலோ சிலிர்த்துக்கொண்டு எழும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம், ஒரு சுண்டைக்காய் நாட்டு கடற்படையினரால் கொல்லப்படுவது தமிழன் என்றால் எளக்காரமாகவும், ஏளனமாகவும் நடந்துகொள்ளும்.

இப்படியான ஒரு நிலையில்தான், இலங்கையின் போர்க் குற்றம் அம்பலமாகி அதனை ஐ.நா. நிபுணர் குழுவும் ஒப்புக்கொண்டுள்ள சூழ்நிலையில், அது குறித்து இன்னமுமஅதே கள்ள மவுனத்தை கடைபிடித்துக் கொண்டே, சர்வதேசத்திடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதற்கான கமுக்கமான வேலைகளை தொடங்கியுள்ளது காங்கிரஸ் அரசு.
 

இலங்கை மீதான போர்க் குற்றத்திற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கவேண்டுமானால், முதலில் அதுபற்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்க வேண்டும்.ஆனால் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிப்பதற்கு, ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே உறுதிபடுத்தியுள்ளார்.


ஆனால் இப்போதும் அதே கள்ள மவுனம்தான் இந்திய காங்கிரஸ் அரசிடம். என்ன செய்யப்போகிறது தமிழகம்? 
செய்தி உதவி வெப்துனியா.

26 comments:

 1. அண்ணே பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. சனிப்பொணம் தனியா போகாதும்பாங்க

  ReplyDelete
 3. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  modha vettu மொத வெட்டு --- வாய்யா வா..

  ReplyDelete
 4. விக்கி உலகம் கூறியது...

  அண்ணே பகிர்வுக்கு நன்றி ----
  சரி தம்பி

  ReplyDelete
 5. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  சனிப்பொணம் தனியா போகாதும்பாங்க /// ஆமாமா ..

  ReplyDelete
 6. என்ன கருன்! அரசியல்ல டீப்பா இறங்கிட்டிங்க போல இருக்குது

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. தமிழர்கள் என்றால், சில நேரம் வேற்று மனிதர்கள் என்று இவர்கள் நினைக்கவும் கூடும், ஆதலால் தான் தமிழர்கள் இறக்கையில் மௌனமாக இருக்கிறார்கள்.

  ஏனைய இனத்தவர்களுக்கு ஏதும் ஆகி விட்டால் துடி துடித்தும் இந்த காங்கிரஸ் ஆட்கள் எழுகிறார்கள். இவர்களுக்கு மனிதாபிமானம், சமத்துவம் என்றால் என்ன என்று யாராவது புரிய வைக்க வேண்டும்.

  ReplyDelete
 9. எலேய் கொய்யால வடையை முறைவச்சு பரிச்சாலேய் திங்குறீங்க களவாணிகளா....

  ReplyDelete
 10. //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  modha vettu மொத வெட்டு///


  இப்பிடி வெட்டு குத்து'ன்னு எழுதுனா கொண்டேபுடுவேன்னு கொலைவெறியோட ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு மாமே.....[[மக்கா'ன்னு சொள்ளபுடாதாம் ம்ஹும்]]

  ReplyDelete
 11. இரு ஓட்டையை போட்டுட்டு ஸாரி ஓட்டு போட்டுட்டு வாரேன்....

  ReplyDelete
 12. யோவ் என்னய்யா தமிழ்மணம் மேல டிவிட்டர் வந்து குந்திகினு இருக்கு, ஓட்டு போட முடியலை....

  ReplyDelete
 13. யோவ் என்னய்யா தமிழ்மணம் மேல டிவிட்டர் வந்து குந்திகினு இருக்கு, ஓட்டு போட முடியலை....

  ReplyDelete
 14. ஓகே ஓகே இப்போ தமிழ்மணம் வேலை செய்யுது.....

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 16. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  யோவ் என்னய்யா தமிழ்மணம் மேல டிவிட்டர் வந்து குந்திகினு இருக்கு, ஓட்டு போட முடியலை....//
  குத்த வச்ச பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணுதான்னுட்டு தள்ளிட்டு போங்க!

  ReplyDelete
 17. //MANO நாஞ்சில் மனோ சொன்னது…
  யோவ் என்னய்யா தமிழ்மணம் மேல டிவிட்டர் வந்து குந்திகினு இருக்கு, ஓட்டு போட முடியலை....//
  குத்த வச்ச பொண்ணு எல்லாம் அத்தை பொண்ணுதான்னுட்டு தள்ளிட்டு போங்க!

  ReplyDelete
 18. //MANO நாஞ்சில் மனோ கூறியது...
  //சி.பி.செந்தில்குமார் கூறியது...
  modha vettu மொத வெட்டு///
  இப்பிடி வெட்டு குத்து'ன்னு எழுதுனா கொண்டேபுடுவேன்னு கொலைவெறியோட ஒரு கும்பலே சுத்திட்டு இருக்கு மாமே.....[[மக்கா'ன்னு சொள்ளபுடாதாம் ம்ஹும்]]//
  ஆருலே அது! எங்க மனோ மனசை புண்படுத்தியது? ’மக்கா” எவ்வளவு அழகான தமிழ் சொல். புரியத் தெரியலயே!

  ReplyDelete
 19. பகிர்விற்கு நன்றி, கருன்.

  ReplyDelete
 20. அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது..]'

  ReplyDelete
 21. பகிர்விற்கு நன்றி...........

  ReplyDelete
 22. சீரியசான பதிவிலும் கும்மியா? இதிலாவது உங்கள் குழுவினரின் கும்மியை நிறுத்தலமே? காங்கிரஸ் என்ன செய்ததோ அதைத்தான் நீங்கள் பதிவிலும் செய்கின்றீர்கள்.

  ReplyDelete
 23. @நிரூபன்
  வேடந்தாங்கல் கருன் தனது நாட்டு தலைவர்களை பற்றி கூறுகிறார்.
  சந்துவில் சிந்து பாடாமல் இலங்கை தமிழர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் போர் குற்றம் செய்த போது கள்ள மவுனம் சாதித்த புலம் பெயர்ந்து வாழும் ஈழ தமிழர்களுக்கு மனிதாபிமானம் சமத்துவம் என்றால் என்ன என்பதை முதலில் புரிய வைக்கவும்.

  ReplyDelete
 24. நல்ல உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி அண்ணா இந்த இரண்டு மலையாளிகள்லுக்கும் தமிழ்நாட்டு தமிழனேம் சரி இலங்ககை தமிழனேம் சரி எப்புடியாவது கொல்லனும் என்ற து தான் நோக்கம்

  ReplyDelete
 25. உண்மை, இன்னும் பலரையும் சென்றடையட்டும்.......!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"