Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/29/2011

முகம் பார்க்காமல் வளர்ந்த காதல்: சந்திப்புக்கு பின் காதலன் தற்கொலை

 
னிமையான குரலுக்குச் சொந்தமான காதலி, வசீகரமான தோற்றுத்துடன் இல்லாததால் மனமுடைந்து காதலன் தற்கொலை கொண்டார். நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் சினிமா மோகத்தால் சீரழியும் இளைஞர்கள் பலர் இருக்கின்றனர். இப்படித்தான் சினிமா பாணியில் கோவையில் முகம் பார்க்காமல், மொபைல் போன் மூலம் காதலை வளர்த்த காதலன், சந்திப்புக்கு பின், திடீரென தற்கொலை செய்து கொண்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவை ராமநாதபுரம்-நஞ்சுண்டாபுரம் ரோடு, நேதாஜி நகரில் வசித்தவர் நடராஜன் (24); இப்பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு, போத்தனூரை சேர்ந்த பெண் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். போனில் பேசிய அவர் வேறு ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அவருடன் பேச வேண்டும் என கூறியுள்ளார். எதிர்முனையில் பேசிய நடராஜ் சாரி நீங்கள் தொடர்பு கொண்டது ராங் நம்பர் என்றார். ஆனால் சில நாட்களில் ராங் நம்பர் நபர் நண்பரானார்.
 
இருவரும் தொடர்ந்து போனில் நட்பை வளர்த்தனர். காலப்போக்கில் நட்பு காதலானது. ஒருவரை ஒருவர் பார்க்காமலே காதலை வளர்த்துக் கொண்டனர். காதலில் விழுந்த இருவரும் நேரில் பார்க்க வேண்டும் என திட்டம் தீட்டினர். நான்கு நாட்களுக்கு முன், நேரில் சந்திக்கக்கூடிய இடத்தை தேர்வு செய்து சந்தித்தனர். அழகிய குரலில் அசத்திய காதலி அழகில் மயக்குவாள் என்ற எதிர்பார்ப்புடன் குறித்த நேரத்தில் அங்கு வந்தார் நடராஜ். ஆனால் காதலி தான் எதிர்பார்த்தது போல இல்லை என்று நொந்து போன நடராஜ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வந்தார்.
 
அந்தப் பெண்ணின் மீது  நடராஜூக்கு காதல் கசந்தது. போன் அழைப்பை ஏற்க மறுத்தார். தனது சகாக்களிடம் குரலை கேட்டு ஏமாந்து விட்டதாக பலமுறை புலம்பியும் உள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு, பாலக்காடு பாசஞ்சர் ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். நடராஜின் தந்தை சந்திரபோஸ், அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பித்து, சடலத்தை பெற்றுச் சென்றார்.
 
சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரித்ததில், “முகம் பார்க்காமல் காதலித்தோம்; இப்படி ஒரு முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை’ என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம், இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க...?
 
உதவி கிங்தமில்.

27 comments:

 1. உண்மையான காதலாய் இருந்திருந்தால் முகம் பார்த்த பின் ஏமாற்றம் என்பது நேர்ந்து இருக்காது..
  ம்ம்.. ஒண்ணும் சொல்லமுடியல.. உயிரை கொடுத்தாவது காதல காப்பாத்தி இருக்காரு போல..
  பெத்தவங்க பாடு தான் வேதனை :(

  http://karadipommai.blogspot.com/

  ReplyDelete
 2. அடங்கொய்யால!.......

  ReplyDelete
 3. என்ன பயபுள்ள காதல் பதிவுகளாகவே போட்டுக்கிட்டு இருக்கு ஏதாவது பள்ளத்துல விழுந்திருக்குமோ #டவுட்டு

  ReplyDelete
 4. நானும் வந்துட்டேன். நச் பதிவு

  ReplyDelete
 5. ஒரு வாரம் வெளியூர் சென்ற பாக்கியெல்லாம் இப்ப் தீர்க்கிறீங்களோ!

  ReplyDelete
 6. இதுக்குதான் கடலய போட்டோமோ
  கட் பன்னினோமான்னு இருக்கனும்

  ஹஹஹ்ஹ

  ReplyDelete
 7. காதல் என்பதன் அர்த்தம்
  மாறிக்கொண்டுவருவது
  பயமாய் இருக்கிறது
  சிந்திக்கச் செய்து போகும் பதிவு
  .

  ReplyDelete
 8. காதல் கோட்டை வந்தப்போ, இதை ஒரு ஜோக்காக பேசிக் கொண்டோம்..இப்போ உண்மையிலேயே நடந்திடுச்சு!

  ReplyDelete
 9. நானும் படிச்சேன்..சோகமான காதல் கதைதான்

  ReplyDelete
 10. நானும் படிச்சேன், இது வெறித்தனமான காதலும், கோழைத்தனமான முடிவும்...

  ReplyDelete
 11. எடுத்தேன் கவிழ்த்தேன்னு காதலிக்க வேண்டியது அப்புறமா சாக வேண்டியது, என்னய்யா நடக்குது இங்கே.....

  ReplyDelete
 12. காதலனின் முடிவு பரிதாபமாகத்தான் இருக்குது என்ன செய்ய...

  ReplyDelete
 13. //Ramani சொன்னது…
  காதல் என்பதன் அர்த்தம்
  மாறிக்கொண்டுவருவது
  பயமாய் இருக்கிறது
  சிந்திக்கச் செய்து போகும் பதிவு///


  குரு சொன்னமாதிரி பயமாத்தான் இருக்கு....

  ReplyDelete
 14. //FOOD சொன்னது…
  ஒரு வாரம் வெளியூர் சென்ற பாக்கியெல்லாம் இப்ப் தீர்க்கிறீங்களோ!//


  அதை ஏன் கேக்குறீங்க ஆபீசர், முடியல......

  ReplyDelete
 15. Vethanai pada vendiya vishayam thaan nanba..

  ReplyDelete
 16. , இது வெறித்தனமான காதலும், கோழைத்தனமான முடிவும்...//

  oru vaasagam endralum thiruvasagamaaga sonna annan mano vazhga!

  ReplyDelete
 17. நான் பேப்பர்ல படிச்சிட்டேனே !

  ReplyDelete
 18. காதல் கோட்டையில்லாம் வாழ்க்கையில் நடக்காது!

  ReplyDelete
 19. எப்படியெல்லாம் இருக்காங்க பாருங்க...?

  ReplyDelete
 20. இவ்வளவு மன தைரியமும், எதிரிப்பார்ப்பும் இல்லாத கேணைக்கு என்ன மண்ணுக்கு பார்க்காமலயே லவ்வு ............ !!!

  ReplyDelete
 21. என்ன வாத்தியாரே நலமா?...பதிவப் படித்தேன்...எனக்கு இது காதலா தெரியல, இதுக்காக ஒரு தற்கொலை என்பது வேதனை...மனித உயிர் அத்தனை இலகுவாய் போய்விட்டது, இன்ற இளமைக்கு....அந்த பையன் என்னமோ செத்துப் போயிட்டான்...ஆனா காலம் முழுமையும், நம்ம காதலிச்சவன் நம்ம அழகா இல்லைங்கிற காரணத்தால, செத்துப் போயிட்டானேங்கிற வேதனை அந்த பொண்ண ஒவ்வொரு நாளும் கொல்லும்....காதல் அழுகுதான்...காதலிக்க படுவோர், அன்போடு இருந்தால் அழகு என்பது தேவையில்லை...அந்த பையன மாதிரி யோசிக்க தெரியாதா ஒருத்தர், தேவையும் இல்லை...இவ்வளவு நாள் பெற்று வளர்த்த, தன் முதுமை தந்தைக்கு அவர் தந்த பரிசு மரணம்.....பதிவு நல்லா இருக்கு கருண்...ஆனாலும் நாம் கொஞ்சம் வெட்கப் படுவோம்....தான் எதிர்ப்பார்த்த அழகோடு அந்த பெண் இல்லேன்னா ஒன்னு, அவங்கள விடுத்து வேற ஒருத்தர தேடிருக்கலாம்...இல்ல, அழகென்பத இரண்டாம் பட்சமாய் எடுத்து, உண்மை காதலோடு அவங்களோடு சேர்ந்து வாழ்ந்திருக்கலாம்...தற்கொலை எதற்கும் தீர்வில்லை....ஏனோ இன்ற இளமைக்கு அது புரிவதும் இல்லை....ஏதோ என் உள்ளக் கருத்தை சொல்லனும்னு தோனுச்சு சொல்லிட்டேன் கருண்...இந்த மறுமொழி சிறிதேனும் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்....அதோடு ஆழ்ந்த அனுதாபங்கள்... அந்த இறந்து போன சகோதரனின் குடும்பத்திற்கு....

  ReplyDelete
 22. சாருக்கு...பசங்க காப்பி அடிச்சா பிடிக்குமா? பதில் சொல்லுங்க...

  ReplyDelete
 23. @விமர்சனம் ...
  எனக்கு பிடிச்ச அல்லது பாதித்த விஷயங்களை நான் என் நண்பர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.
  நன்றி.

  ReplyDelete
 24. இது காதல் இல்லீங்க!

  ReplyDelete
 25. காதல்!அது ஒரு பீலிங்தான் இல்ல!

  ReplyDelete
 26. தற்கொலை முடிவுக்கு குடும்பம்,வளரும் சூழல்,அந்தக் கணத்து உணர்வு,மன அழுத்தம்ன்னு பல காரணங்கள் இருக்குது.

  முதல் காதலாய் இருந்தால் பரிதாபத்துக்குரியவர்தான்:(

  ReplyDelete
 27. இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_14.html

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"