Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/17/2011

வடிவேலுவுக்கு முதல் அடி!


டந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உற்சாகமாக சுற்றுப்பயணம் செய்த ‌காமெடி நடிகர் வடிவேலுவுக்கு முதல் அடி விழுந்திருப்பதாக கோடம்பாக்கமே சூடாக பேசிக் கொண்டிருக்கிறது. 

ஆம்! இப்போதைக்கு எந்த பட வாய்‌ப்பும் இல்லாமல் இருக்கும் வடிவேலு, தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார். இதற்காக விஷால் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு, அப்படத்தின் டைரக்டரான நடிகர் பிரபுதேவாவுக்கு போன் அடித்திருக்கிறார் வைகைப் புயல். எதிர் முனையில் இருந்து எந்த ரெஸ்பான்சும் இல்லையாம்.

தேர்தல் நேரத்தில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று சக நடிகரை, அதுவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த நடிகரையே மகா கேவலமாக பேசிய வடிவேலுவுக்கு இப்போது விழுந்திருப்பது முதல் அடிதான். மே 13ம் தேதிக்குப் பிறகு இன்னும் நிறைய அடி வாங்குவார் என்று ஆரூடம் கணிக்கிறார்கள் கேப்டனுக்கு வேண்டப்பட்ட கோடம்பாக்கத்துக்காரர்கள். 

வடிவேலு பிரசாரம் செய்யப்போன இடங்களில் எல்லாம் எக்கச்சக்க கூட்டம் கூடி வரவேற்றதையும், வடிவேலுவின் எதார்த்த பேச்சை கேட்க கூடியிருந்த கூட்டத்தை பார்த்தும் பெருமைப்பட்ட வைகைப்புயலின் ஆதரவாளர்கள் இப்போதைக்கு கப்-சிப்பாக இருக்கிறார்கள்.

பணத்துக்கு பஞ்சமில்லை என்றாலும் தொழிலுக்கு போகவில்லையென்றால் தூங்கு மூஞ்சி ஆவதைத் தவிர வேறு வழியில்லையே.  வடிவேலு இனி சினிமாவில் வாழ்வதும் பிழைப்பதும் மே 13ம்தேதி அவரது ஜாதக கட்டம் என்ன சொல்கிறது என்பதில்தானே இருக்கிறது.

22 comments:

 1. சிபி சார் கூட சகவாசம் வச்சுக்கிட்டதால நீங்களும் இப்படி மாறிட்டீங்களா?(ஒரே நாளில் பல பதிவுகள்)

  ReplyDelete
 2. வடிவேலு இனி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தானா?

  ReplyDelete
 3. >>ராஜி சொன்னது…

  சிபி சார் கூட சகவாசம் வச்சுக்கிட்டதால நீங்களும் இப்படி மாறிட்டீங்களா?(ஒரே நாளில் பல பதிவுகள்)


  ஹி ஹி கருண் யாருன்னே எனக்குத்தெரியாது.. ஹி ஹி

  ReplyDelete
 4. இதெல்லாம் அரசியல சகஜமப்பா..

  ReplyDelete
 5. யாருங்க வடிவேலுவை அடிச்சா....

  ReplyDelete
 6. இது தான் சொல்வது, இருக்கிறதை விடுத்து, பறக்கிறதுக்கு ஆசைப்படக் கூடாது என்று... பாவம் நம்ம வெடி வேலு..

  ReplyDelete
 7. வடிவேலுவுக்கு ஆப்பு ஆரம்பமாயிடிச்சு

  ReplyDelete
 8. அவுரு அடி வாங்காத இடமே இல்லீங்க பாஸ்...

  ReplyDelete
 9. வடிவேலு ஏற்கனவே இரண்டு ரவுண்ட்டு சினிமாவில் வந்துவிட்டார் . இது வரை தாக்கு பிடித்ததே அதிகம், இனி சந்தானத்தின் காலம்..

  ReplyDelete
 10. வடிவேலுவின் தேர்தல் பிரச்சாரம்
  தேவையில்லாத வேலைதான்
  அவருக்கு அது 13க்கு பின்புதான் புரியும்

  ReplyDelete
 11. இததானேய்யா நான் அப்போ இருந்தே சொல்லிட்டு இருக்கேன்....

  ReplyDelete
 12. கூடங்கள் மாடங்கள் ஏறவேண்டாம்! கீதங்கள், நாதங்கள் பாடவேண்டாம் என்று பெரியவங்க சும்மாவா சொல்லி வச்சுருக்காங்க?

  ReplyDelete
 13. //தேர்தல் முடிவு வருவதற்குள் ஒரு படத்தில் நடித்து முடித்துவிடும் திட்டத்தில் இருக்கிறார்//

  தேர்தல் நேரத்திலும் அவ்வப்போது நன்றாகத்தானே நடித்தார்..

  ReplyDelete
 14. ஒன்றை மறக்காதீர்கள்,கூத்தாடிகள் இப்படி அரசியலில் நுழைவது எனக்கு வெறுப்பை தரும் ஒன்றே.வடிவேலுவை பொறுத்தவரை தன்னுடைய எதிரி விசய காந்து மட்டுமே. எந்த இடத்திலும் வடிவேல் மம்மியை பற்றியோ, அ. இ. அ . தி. மு. க. பற்றியோ விமர்சனம் செய்வதை தவிர்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தன்னை கறுப்பு எம். ஜி. ஆர். என கூறிக்கொண்டு வளம் வந்த விசய காந்தே அவரின் இலக்கு. இதனை அவர் பல முறை விளக்கி விட்டார். உண்மையில் வடிவேல் கருணாநிதி அல்லது தி. மு. க. மேல் பற்று கொண்டவரே அல்ல. அவர் தீவிர எம். ஜி. ஆர். ரசிகர். இது நம்ம மம்மிக்கும் தெரியும். சும்மா ஏன் போட்டு உருட்டுகிறீர்கள்?

  ReplyDelete
 15. இதெல்லாம் நமக்கு புதுசா... போங்க தம்பி போங்க.......!

  ReplyDelete
 16. அரசியலில் இது சாதாரணமப்பா

  ReplyDelete
 17. தமிழ் மணத்தில் ஏழாவது ஓட்டு.

  ReplyDelete
 18. வடிவேல் காமெடி அலுத்து போச்சு. இனி இறங்கு முகம் தான்.

  ReplyDelete
 19. இதைதான் எதிர் பார்த்தேன் ...

  ReplyDelete
 20. வடிவேல் காமெடி அலுத்து போச்சு
  தி. மு. க. மேல் பற்று கொண்டவரே அல்ல

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"