Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/19/2011

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! வைகோ நேரில் அஞ்சலி!இன்றைய  மாலை செய்தி :

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார்.


கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன. 


தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. கடந்த 20 தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய தாய் தந்தை உள்பட யாரிடமும் தனது உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்திருக்கிறார். 


இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது. அதில்,

இலங்கை
ராமன் - ராவணன்,
ராமன் - ராஜபக்சே, 

அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சிநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார். 
அப்போது பேசிய வைகோ, தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த  கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர்தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சபையால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்
அதற்கு இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன் என்றார்.

மேலும் பேசிய வைகோ, இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியை நம்பி இருந்த ஏழை குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

உதவி நக்கீரன் , மாலைமலர் .

37 comments:

 1. ரொம்ப கொடுமையா இருக்கு அண்ணா. என்னனு சொல்லுறதுனே தெரியல :-((

  ReplyDelete
 2. இது முட்டாள் தனம்!

  ReplyDelete
 3. //இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//
  இதுதான் ஏற்றுக்கொள்ள தக்கது.

  ReplyDelete
 4. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குய்யா....

  ReplyDelete
 5. //FOOD சொன்னது…
  //இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//
  இதுதான் ஏற்றுக்கொள்ள தக்கது//

  சரிதான்....

  ReplyDelete
 6. இழந்த தமிழ் உயிர்கள் போதாது, செய்த தியாகங்கள் காணாது என்றா இனியும் இதுபோன்ற செயல்கள்!
  இழப்புக்கள் போதும் போதும் என்ற அளவுக்கு தமிழர்களுக்கு கிடைத்துவிட்டது. இனி ஒரு தமிழன் உயிர்ப்பலி தேவையில்லை. ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது.
  ஆம்...
  /இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//

  ReplyDelete
 7. மீண்டுமொரு மரணம். மீளமுடியாத துயரம். தமிழர்களின் வாழ்க்கை இப்படி தானா.

  ReplyDelete
 8. இழந்த தமிழ் உயிர்கள் போதாது, செய்த தியாகங்கள் காணாது என்றா இனியும் இதுபோன்ற செயல்கள்!
  இழப்புக்கள் போதும் போதும் என்ற அளவுக்கு தமிழர்களுக்கு கிடைத்துவிட்டது. இனி ஒரு தமிழன் உயிர்ப்பலி தேவையில்லை. ஒவ்வொரு உயிரும் பெறுமதியானது.
  ஆம்...
  /இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//

  ReplyDelete
 9. இவருடைய இரு தம்பிகளின் படிப்பு செலவை இனி யார் ஏற்பார்? எதிர்ப்பைக் காட்ட இதுதான் வழியா? படித்தவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தத்தை அளிக்கிறது. என்று தீரும் தமிழர்களின் சோகம்?

  ReplyDelete
 10. another poor indian? so sad..... so sad....! dear politicians go and jump into indian ocean.....

  ReplyDelete
 11. உங்க பதிவுகளின் ஸ்பீட்டுக்கு என்னாலை ஓடி வர முடியவில்லை.கொஞ்சம் லேட்டாகத் தான் வந்துள்ளேன்...

  ReplyDelete
 12. இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன//

  இந்த உறவின் உயிர்த் தியாகத்தை மதிக்கும் அதே வேளை...இப்படியொரு செயல், தீக்குளிப்பு இந்தக் காலத்தில் தேவை இல்லை என்பதையும் மிகவும் ஆழ்ந்த கவலைகளுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  ReplyDelete
 13. வைகோ போன்ற அரை வேக்காடு அரசியல் வாதிகள் தான் இந்தச் சகோதரனின் தீக் குளிப்பிற்கு பொறுப்பேற்க வேண்டும். யுத்தம் ஓய்ந்து விட்டது, ஏற்கனவே பலி கொடுத்த, பறி கொடுத்த பல ஆயிரம் உயிர்கள் போதாதா?

  பொது நபர்களைத் தீக்குளிக்க தூண்டும் வகையில் உணர்ச்சி வசப்பட்டு அனல் பறக்கப் பேசும் வைகோ இந்த முயற்சிகளைச் செய்யலாமே?

  ReplyDelete
 14. ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…
  Vai.ko , Porukki rascal........ why dont you set fire yourself?//

  I agree this comments.

  why this bloody idiots politician's want to kill these innocent people life?
  stop making bad propaganda to the Tamil's. Save our Tamilnadu Brothers and sisters life. vaiko....we don't want hear any more shocking news from our mother land(Tamil Nadu)

  ReplyDelete
 15. அன்பு உறவுகளே, இனியும், இனியும் நாம் பலியாவதில் என்ன நன்மை இருக்கிறது, வலை உலக நண்பர்களே தமிழக்த்தை இந்த அரை வேக்காடு வைகோவின் இழிவான அனல் பறக்கும் பிரச்சாரத்திலிருந்து மீட்டெடுக்க வழி செய்யுங்கள். அப்போது தான் இறந்த இந்த நண்பனின், தோழனின், எங்கள் உறவின் ஆத்மா சாந்தியடையும்!

  ReplyDelete
 16. hey....idiots......( vaiko, nedumaran, seeman,kopal )

  stop your false words. awake from dreaming....

  ReplyDelete
 17. Dear our brothers and sisters.... please write against these bloody fools politicians.please save innocent poors' life.

  please...... please......please!!!

  ReplyDelete
 18. Dear our brothers and sisters.... please write against these bloody fools politicians.please save innocent poors' life.

  please...... please......please!!!

  ReplyDelete
 19. இன்னுயிரை போக்கிக் கொள்வதை நியாயப்படுத்தக்கூடாது.சகோதரனுக்கு அஞ்சலி

  ReplyDelete
 20. ACT NOW! ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடுங்கள் பான் கி மூன் அவர்களே

  http://arulgreen.blogspot.com/2011/04/act-now.html

  ReplyDelete
 21. ஒரு தமிழன் :சகோதரனுக்கு அஞ்சலி ,
  இலங்கை அரசை பொறுத்தவரை ஒரு துப்பாக்கி ரவை செலவு இல்லாமல் ஒரு தமிழன் இறந்து என சந்தோஷ படும் ஆகவே இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//
  இதுதான் ஏற்றுக்கொள்ள தக்கது//

  ReplyDelete
 22. நடு நிசி பேய்April 19, 2011 at 7:37 PM

  அருள் சொன்னது…
  ACT NOW! ஐ.நா அறிக்கையை உடனே வெளியிடுங்கள் பான் கி மூன் அவர்களே

  http://arulgreen.blogspot.com/2011/04/act-now.html//

  நீ அடங்கமாட்டியாடா. மத்தவங்க பதிவை படிச்சமா கமெண்ட் போட்டமா என்றதை வுட்டிட்டு, ஓசியிலை உன் தளத்தை விளம்பரப்படுத்துறியா.

  ReplyDelete
 23. வேறெதையும் பற்றிச் சிந்திக்காத,உணர்ச்சி பூர்வமான,தேவையற்ற செயல்!இதனால் யாருக்கு என்ன பயன்?

  ReplyDelete
 24. நேரம்,காலம் சரியில்லாத நேரத்தில் எடுத்த முடிவு என்றாலும் அவர் பற்றுக்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete
 25. ராஜபக்சே அரசின் மீதான குற்ற அறிக்கையை இந்த வாரம் போரில் அப்பாவி மக்களின் மீதான தாக்குதல் புகாராக ஐ.நாவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது...

  ReplyDelete
 26. இவிங்க தங்களோட குடும்பத்த பத்தி யோசிக்க மாட்டாங்களா

  ReplyDelete
 27. சகோதரனுக்கு அஞ்சலி
  சகோதரனுக்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete
 28. இப்படிப்பட்டவர்கழும் தமிழககத்தில் பெருமைப்படுகிறேன்

  ReplyDelete
 29. உயிர்தியாகம் செய்யாமல் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பல விஷயங்களை இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் சாதிச்சிருக்கலாம் அந்த சகோதரர் என்பது என் கருத்து. இறந்தவரை பற்றி விமர்சிப்பது அழகாகாது, எனவே அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது விருப்பம் நிறைவேறவும் எல்லாம் வல்ல இறவனை வேண்டுவதை தவிர வேறென்ன செய்ய முடியும் நம்மால்?

  ReplyDelete
 30. இது வேண்டாத வேலை..முத்துக்குமார் மரணத்திற்கே எந்த ரியாக்சனும் நம் மக்கள் கொடுக்கவில்லை..அதைப் பார்த்தாவது திருந்தியிருக்க வேண்டாமா..

  ReplyDelete
 31. மிக மன வேதனையை தருகிறது;
  இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம்.//
  இதுதான் ஏற்றுக்கொள்ள தக்கது//

  ReplyDelete
 32. NIRUPANUKKU EN KANDANAM.
  INTHA NAATIL MAKKALUKKAGA EVAN PORAADUKIRANO AVAN THIVIRAVAATHI.
  MAKKALAI SURANDI VAALKIRANO AVAN MAKKAL THALAIVAN.
  NE SONNA THIVIRAVAATHIKAL: VAIKO,SEEMAAN,PAZHA NEDUMAARAN.
  THALAIVARKAL : X X X X ...UGGALUKKE THERIUM.

  ReplyDelete
 33. இது ஒரு முட்டாள் தனமான் கையாலாகாத வேலை.......இவரது தீக்குளிப்பா எங்களுக்கு தேவை........அப்படி உயிரை விடுவது என்றால்....கருணாநிதி போன்ற யாரையும் கொன்றுவிட்டு தானும் செத்திருக்கலாமே

  ReplyDelete
 34. உண்மையிலேயே முட்டாள்தனமான செயல். லட்சக்கணக்கானவர்களைக் கொன்ற ராஜபக்சேவுக்கும் இவருக்கும் என்ன வித்தியாசம்.. தம் குடும்பத்தினரை யார் காப்பாற்றுவார் என்ற சிந்தனை கூட இல்லாதவரிடம் மரியாதையைவிட அவரின் முட்டாள்தனமான செயலை நினைத்து எரிச்சல்படத்தான் முடிகிறது.

  இது பற்றிய பரபரப்புக்காகவும் இதனால் ஏதாவது உதவி தம் குடும்பத்துக்கு கிடைக்கும் என்பதாலுமாகக் கூட இருக்கலாம். யார் கண்டது???

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"