Tamilus

The best Tamil Aggregator | Tamilus

4/16/2011

மக்கள் நாங்க மாறிட்டோம்?! அரசியல்வாதிகளே நீங்க????


தற்போது  நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே.ஒன்று   ஊடகம், மற்றொன்று  தேர்தல் ஆணையம். 

இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். 

இந்த இளைஞர் கூட்டத்தில் வழக்கமாக வாக்களிக்க வருவோர் மட்டுமன்றி, பெருவாரியாக வாக்களிக்க வந்த காரணத்தால்தான் வழக்கமான 65 விழுக்காடு வாக்குப்பதிவு இந்த முறை 77.8 விழுக்காடு என உயர்ந்தது. அதற்காக இவர்கள் எதிர்க்கட்சியைத் தேர்வு செய்தார்கள் என்பதை உறுதியாகச் சொல்லிவிட முடியாது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2011-ன் கதாநாயகனாகவும் இருப்பது தேர்தல் ஆணையம் மட்டுமே.இந்தமுறை தேர்தல் காலத்தில், ஊடகம் பார்த்தோரும், பத்திரிகை படித்தோரும் பேசிக்கொண்டவை அனைத்தும்- அது வீட்டுச் சமையல்கூடமாக இருந்தாலும் டீக்கடையாக இருந்தாலும்- தேர்தல் கமிஷனின் நியாயமான, நேர்மையான நடவடிக்கைகள் பற்றித்தான்.

மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சரியாகவே ஆற்றியிருக்கிறார்கள். இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும் என்பது நிச்சயம்.

29 comments:

 1. yes, hero of this election is none other than "Election Commission"

  ReplyDelete
 2. அடடா வடை மிஸ் ஆகிருச்சே....

  ReplyDelete
 3. //இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் இருந்தால் பொறுப்புணர்வுடன் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும் என்பது நிச்சயம்.//

  இவனுகளை திருத்த முடியாதே மக்கா....நல்லா கொள்ளை அடிச்சி சேர்த்து வச்சிட்டு முன்ஜாமீன் கேட்டுட்டு இருக்கானுக....

  ReplyDelete
 4. படிச்சவன் கூட கூட ஒரு விழிப்புணர்வு வந்திருப்பது உண்மையே...

  ReplyDelete
 5. மாப்ள உங்க கருத்துள நான் மாறு படுகிறேன்.........இந்த முறை மக்களுக்கு யாரு வரவேண்டும் என்பதை விட யார் வந்து விடக்கூடாதுன்னு தான் இந்த அளவுக்கு ஓட்டு பதிவாயிருக்கு என்பது என் தாழ்மையான கருத்து!

  ReplyDelete
 6. நீங்க சொல்லிட்டிங்கல உடனே மாறிடுவாங்க..

  ReplyDelete
 7. தேர்தல் கமிசன் சூப்பர்
  நெக்ஸ்ட் டைம் லோக்கல் போலிஸுடன் உடன்பட்டு வேலைசெய்தால் இன்னும் சிறப்பாக நடத்தலாம்

  எனெனில் கடைசி நேரங்களில் பணபட்டுவாட தாரளமாக நடந்தது

  ReplyDelete
 8. இந்தத் தேர்தலில்தேர்தல் அறிக்கை வேண்டுமானால்
  இலவச கவர்ச்சி காட்டும் கதா நாயகியாக இருக்கலாம்
  கதா நாயகன் உறுதியாக தேர்தல் ஆணையம்தான்
  நல்ல பதிவுதொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. தேர்தலில் மட்டும் இல்லை
  உங்கள் பதிவுக்கும் ஓட்டு போட்டுவிட்டேன்

  ReplyDelete
 10. சந்தேகமே இல்லை. தேர்தலே கமிஷனே - அநியாயத்தை தட்டி கேட்ட நிஜ கதாநாயகன்.

  ReplyDelete
 11. //அடடா வடை மிஸ் ஆகிருச்சே....//
  MANO நாஞ்சில் மனோ சொன்னது…


  இந்த கடுப்ப கெளப்புற வேலைய எவன் ஆரம்பிசு வெச்சான்? அவன கண்டுபுடிச்சி நல்ல மூஞ்சி மேலேயே ........................

  இப்போ இந்த வியாதி எல்லாருக்கும் வந்தாச்சி.

  ReplyDelete
 12. எந்த அரசியல் வாதியாவது இந்தப்பதிவை படிச்சிருப்பாங்களா?

  ReplyDelete
 13. நல்ல கருத்துக்கள்

  ReplyDelete
 14. உண்மையில் ஊடகம் முக்கியப் பங்காற்றியிருக்கிறது.
  எல்லா டிவி , ரேடியோ இப்படி எல்லாத்திலையும் ஓட்டுப் போடுங்க ஓட்டுப் போடுங்க னு சொன்னது முக்கிய காரணமா இருக்கலாம் .. ஆனா இது யாருக்கு சாதகமா இருக்கப் போகுதுன்னு தெரியல :-))

  ReplyDelete
 15. எந்தக்காலத்துலயும் அவங்க மாறமாட்டாங்க

  ReplyDelete
 16. நாய் வாலை நிமிர்த்த முடியாது..சொறி பிடிச்ச கை சும்மா இருக்காது

  ReplyDelete
 17. இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. //
  நிதர்சனமான உண்மை.

  ReplyDelete
 18. நல்ல பதிவு.
  தேர்தல் ஆணையமும் ஊடகமும் தேர்தலின் வெற்றிக்கு காரணங்கள். மக்களுக்கு ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வந்திருக்கிறது.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. தேர்தல் ஆணையம் கதாநாயகன் எனில் கதாநாயகி யாருங்க?

  ReplyDelete
 20. /இதே கடமை உணர்வு அரசியல்வாதிகளுக்கும் இருந்தால்//

  இருக்க வைப்பது நம் கையில்தான் உள்ளது. அதிக வாக்குகள் பதிவானது அவர்களுக்கான அலாரம்.

  ReplyDelete
 21. நல்ல பதிவு வாத்யாரே!

  ReplyDelete
 22. அடப்பாவிகளா..தினமணி தலையங்கமா இது..இன்னொருத்தரும் போட்டிருக்காரே, உங்க பதிவைச் சுட்டுட்டாரோன்னு நினைச்சிட்டேன்..நன்றி:தினமணி-ன்னு போடலாம்ல?

  ReplyDelete
 23. ஒன்று ஊடகம், மற்றொன்று தேர்தல் ஆணையம்.//

  இம் முறைத் தேர்தலில் தான் ஊடகத் துறையினர் தமது பணியினைச் சரிவரச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 24. தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் நலனையும், தேச நலனையும், வருங்காலச் சந்ததியினரின் நலனையும் கருத்தில்கொண்டு செயலாற்றினால், இங்கே ஒரு நல்லரசு அமையும் என்பது நிச்சயம்.//

  பதிவின் தத்துவார்த்த வரிகள் இவை தான்.. நிச்சயம் நல்லாட்சி அமையும் எனும் நம்பிக்கையுடன் அனைவரும் காத்திருப்போம்.

  ReplyDelete
 25. அரசியல்வாதிகள் மாறிட்டாலும்!லோக்பால் சட்டம் என்னன்னு பார்ப்போம்.மக்கள் கருத்தும் வரைவுக்கு ஏற்றுக்கொள்ளப்படுமாம்.உபயோகமாக ஏதாவது ஐடியா சொல்லுங்க.

  ReplyDelete
 26. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 27. கடைசி ஏழை இருக்கும் வரை இலவசம் இருக்கும் என்று சொன்னார் கருணாநிதி இந்த ஏழை என்ற சொற்பதமும் தீண்டாமை சொற்பதமும் என்னும் தமிழில் மறைந்து போக வேணும்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"