Tamilus

The best Tamil Aggregator | Tamilus

5/21/2011

ஏழை‌ப் பெ‌‌ண்க‌ளு‌க்கு ஜெயல‌லிதா கொடு‌த்த முத‌ல் அ‌ல்வா!?''திருமண உதவி கேட்கும் ஏழை‌ப் பெ‌ண்க‌ளு‌ம், இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்கு‌ள் இரு‌க்க வே‌ண்டு‌‌ம், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அ‌ப்படி இரு‌ந்தா‌ல் ம‌ட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும்'' எ‌ன்று த‌மிழக அரசு பு‌திய ‌நிப‌ந்தனையை ‌வி‌தி‌த்து‌ள்‌ளது.

த‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌ல் வா‌க்குறு‌திபடி படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவ‌ர் அ‌றி‌‌வி‌த்த கையோடு த‌மிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூல‌ம் வெ‌ளி‌யி‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ள அரசாணை‌யி‌ல் இ‌ந்த பு‌திய ‌நிப‌ந்தனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாக வெப் துனியா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமண‌ உத‌வி‌த் தொகை பெற வே‌ண்டுமானா‌ல் பெ‌ண்‌ணி‌ன் பெ‌ற்றோ‌‌ரி‌ன் ஆ‌ண்டு வருமான‌ம் 24,000 ரூபா‌ய்க்கு குறைவாக இருக்க வேண்டும் எ‌ன்று. ‌கிராம‌ப்புற‌த்‌தி‌ல் நெ‌ற்ப‌யிரு‌க்கு களை எடு‌‌க்கு‌ம் ஒரு பெ‌ண்‌ணி‌ன் ஒரு நா‌ள் கூ‌லி 100 முத‌ல் 130 வரை கொடு‌க்‌க‌ப்படு‌கிறது. ம‌ண்வெ‌ட்டியை எடு‌த்து வேலை‌க்கு செ‌‌ன்றா‌ல் 150 ரூபாய்‌க்கு குறை‌ந்து கூ‌லியை வா‌ங்காம‌ல் வருவ‌தி‌‌ல்லை ‌கிராமபுற ம‌க்க‌ள். இ‌ப்படி கூ‌லிவேலைக்கு செ‌ன்று ச‌ம்பா‌தி‌க்கு‌ம் ஏழை‌ப்‌பெ‌ற்றோ‌ர்க‌ளி‌ன் ஆ‌ண்டு வரு‌ம் 35 ஆ‌யிர‌‌த்‌தி‌ற்கு மே‌ல் இரு‌க்கு‌ம் போது 24 ஆ‌யிர‌ம் ரூபா‌ய் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌திருமண உத‌வி‌ தர‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ள எ‌ந்த வகை‌யி‌ல் ‌நியாய‌ம்?

20 comments:

 1. விட்டால் மு.க வின் பேத்திக்கு 4 கிராம் தங்கம் கேட்பீர்கள் போல

  ReplyDelete
 2. கருண் இதுல கருத்துச்சொல்ல என்னால் முடியல! ஒரு வேளை இருபத்துநாலாயிரம் ரூபாய்க்குமேல் வருமானம் பெறுபவர்கள் திருமணத்துக்காக சிறிதளவேனும் சேமித்து வைத்திருப்பார்கள் என்று அரசு கருதியிருக்க கூடும் அல்லவா?

  ReplyDelete
 3. யோவ் என்னய்யா புதுசா கெளப்பிவிடுறீங்க....!!!!

  ReplyDelete
 4. நல்லது தான் நண்பரே..
  நிஜத்திலேயே இல்லாதோர்க்கு மட்டும் கொடுக்கட்டுமே..

  ReplyDelete
 5. /////பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும்./// முதலாவது நிபந்தனையை ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் இந்த இரண்டும் ......??? சம்மந்தமே யிலேயே !

  ReplyDelete
 6. இது நியாயம்தானே..ஏழைகளுக்குத்தானே இந்த உதவி போய் சேர வேண்டும்..?

  ReplyDelete
 7. படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.//


  ஆஹா..அடுத்த தேர்தலுக்கான ஆதரவைத் தக்க வைப்பதில் குறியாத் தான் இருக்கிறாங்க அம்மா.

  ReplyDelete
 8. இலவசம்னு அள்ளி விட்டாலும் தப்பு, உண்மையிலேயே ஏழைகளுக்குக் கொடுத்தாலும் தப்புன்னா எப்படி வாத்யாரே? படிப்பு கண்டிசன் எதுக்குன்னா, அப்பவாவது பெண்களைப் படிக்க வைக்கமாட்டாங்களான்னு பார்க்கத் தான்னு நினைக்கிறேன்..இதெல்லாம் சதீஷ் அண்ணன் சொல்லனும், நான் சொல்ல வேண்டி இருக்கு!

  ReplyDelete
 9. first halwa. that is difference between jayalalitha and karunanidhi.. !

  one more clause u missed.. this is applicable to only one daughter in a family.

  sathish is giving jalra to amma.. he will talk differently if karunanidhi had said this clause..


  this is ridiculos.. 24 thousand per year which is 2000 per month.. today every one earn more than 2000 per month... we cant find people with less than 2000 a month..

  todays need is mini of 6000 per month to run a family of 3 or 4 adults.. even if someone is earning 6000 , they will not be able to save anything ..

  situation is like this but jayalalitha is saying 2000 per month ... what a funny clause...

  this will lead to get duplicate and fraud certificate by teh ADMK partymen and they only will get benefit..

  anyway, good for karunanidhi .. people soon will get anger and that will help karuna next election

  ..இது நியாயம்தானே..ஏழைகளுக்குத்தானே இந்த உதவி போய் சேர வேண்டும்..?


  2000 per month vaanguravan adhi parama ezhai.. adhuvum kalyana vayasula ponnunga vechikittu. 2000 vaanguraven poor o poor utter poor..

  then this scheme is not for poor , it is for parama parama poor

  ReplyDelete
 10. அண்ணே உண்மையாகவா ....

  ஆனா இதிலும் சிலபேர் தில்லுமுல்லு வேலைகள் செய்வதுண்டு

  ReplyDelete
 11. பத்தாம் வகுப்பு, ரூ 24,000 ஆகிய நிபந்தனைகள் கடந்த ஆண்டுகளிலேயே இருப்பதுதான்.

  இதில் ஐந்தாம் வகுப்பு என்பது இப்போது கூடுதலாக கொடுக்கப் பட்ட சலுகை. ஏற்கனவே அனைத்து வகுப்பினரும் பத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  ReplyDelete
 12. என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்.

  ReplyDelete
 13. வந்தேன்...படித்தேன்..வாக்களித்தேன்...சென்றேன்...

  ReplyDelete
 14. இதுக்கு கருத்துச் சொல்ல முடியாது....
  ஆனால் அபிப்பிராயம் சொல்லுறதா இருந்தா
  இருக்கிறவர்களுக்குக் கிடைப்பதிலும்காட்டி
  இல்லாதவர்களுக்குக் கிடைத்தால் சந்தோசப்படுவார்கள்..
  பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. திருமதி ஹேமமாலினி அவர்களே 24000 ரூ.க்கு கீழ் இருப்பவர்களுக்குத்தான் கடந்த ஆட்சியில் திருமண உதவி கொடுத்தார்கள். 12,000க்கு கீழ் இருப்பவர்களுக்குத்தான் மகப்பேறு உதவி கொடுத்தார்கள். யார் ஜால்ரா?

  ReplyDelete
 16. நம்ம நண்பர்கள் மேலே சொல்லிய கருத்துக்களுக்கு என்னுடைய கரு்த்தைச் சொல்கிறேனே தவிர அரசாங்க அறிவிப்புக்குச் சொல்லல.(ஹி...ஹி...முதல்லயே தன்னிலை விளக்கம் கொடுத்துட்டேன்) இப்போ தமிழ்நாட்டில் ஆண்டுவருமானம் 24,000/-க்கு கீழ்தான் உள்ளது என்று யார் வருமானச் சான்று வைத்திருந்தாலும் அது பொய்யான சான்றுதான். எங்க தெருவில் ரெகுலராக குப்பைபொறுக்குகிற அம்மா கூட 3 பவுனில் தங்கசெயின் போட்டிருக்கு. தினமும் 200 ருபாய்க்கு குறையாமல் சம்பாதிக்கிறார். புறம்போக்கில் குடிசைபோட்டு இருக்கிறவங்க வீட்டில் கூட DVD, கலர்டீவி இருக்குங்க. ஆனால் நிஜமாகவே ஒரு கடையிலயோ அல்லது சின்ன கம்பெனியிலயோ வேலைபார்கிறவங்க வருமானம் 6,000/- இல்லைனா அதுக்கு கீழே கூட இருக்கு. ஆனா பாருங்க உண்மையிலேயே ஒரு பைசா கூட இவங்களால மிச்சம் வைக்கமுடியாதபடி விலைவாசி. கவர்மெண்ட்டோட எந்த சலுகையும் இவங்களால உபயோகிச்சுக்க முடியாது அரசாங்க விதிப்படி. உண்மையிலேயே அரைப்பவுன் தாலிகூட கல்யாணத்துக்கு வாங்க இவங்கதான் கஷ்டப்படுறாங்க. ஆனால் கட்சிக்காரங்களுக்கு வேண்டியவங்க சொந்தவீட்டில் இருப்பவர்கள் கூட ஒருநாள் மண்டப வாடகை 15,000/-, 20,000/- கொடுக்கமுடிகிறவங்க எல்லாம் கவர்மெண்ட்டோட சலுகை முழுதும் உபயோகிக்கிச்சுக்கறாங்க. அரசு அறிவிக்கிற ஒவ்வொரு சலுகையும் உண்மையிலேயே தேவை இருப்பவர்களுக்கு போய்ச்சேர்வதில்லை. அந்த அந்த துறை அலுவலர்கள் காசுபார்க்கவும், கட்சிக்காரங்க சம்பாதிக்கவும்தான் உதவுகிறது.

  ReplyDelete
 17. பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்..

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"