Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/04/2011

நடிகர் சிரஞ்சீவியை காணவில்லை!? போலீசில் பரபரப்பு புகார்?
 
நடிகர் சிரஞ்சீவி 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் அவர் திருப்பதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

6 மாதங்களுக்கு முன்பு அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக அறிவித்தார். இதன் பிறகு சிரஞ்சீவி கடந்த 3 மாதங்களாக திருப்பதி தொகுதிக்கு வரவில்லை. இந்நிலையில் திருப்பதி கால்நடை மருத்துவ கல்லுரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்கள் தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான சிரஞ்சீவியை சந்தித்து தங்கள் கோரிக்கை பற்றி மனு கொடுக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர் கடந்த 3 மாதங்களாக தொகுதி பக்கமே வராததால் ஆவேசம் அடைந்தனர்

இதையடுத்து அவர்கள் திருப்பதி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான நடிகர் சிரஞ்சீவியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை. அவரை கண்டு பிடித்து தாரங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதைப் பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மாணவர்களிடம், உங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவர்கள் திருப்பதி நகரம் முழுவதிலும், திருப்பதி எம்.எல்.ஏ. சிரஞ்சீவியை காணவில்லை. அவரை கண்டு பிடித்து கொடுத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களை ஒட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச்  செய்தியை படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது ஏன் எனில் இதே நம்ம ஊர் என்றால் இதுவரை எத்தனை புகார்கள் சேர்ந்திருக்கும் என நினைக்கும் போது  வேறு என்ன வரும் சொல்லுங்கள் நண்பர்களே?30 comments:

 1. மக்கள் இப்படித்தான் இருக்கணும்

  ReplyDelete
 2. சிரஞ்சீவி, சமய சஞ்சீவியா வந்திருக்கணும்ல!

  ReplyDelete
 3. இந்தச் செய்தியை படித்தபோது எனக்கு சிரிப்புத்தான் வந்தது

  ReplyDelete
 4. இது நல்ல டெக்னிக்கா இருக்கே?

  ReplyDelete
 5. நம்மூர்லேயும் ஸ்டார்ட் பண்ணா நல்லாருக்கும்!

  ReplyDelete
 6. அப்படிப்பார்த்தா நம்ம தமிழ்நாட்டில் எல்லோரும் காணவில்லை என்று அத்தனை MLA க்கள் மீதும் புகார் கொடுக்கலாமட்...

  ReplyDelete
 7. ரொம்பவே விவரமான மக்கள்....

  ReplyDelete
 8. அடங்கொன்னியா ஹா ஹா ஹா ஹா...

  ReplyDelete
 9. ஊருக்கு கொஞ்ச பேர் விழிப்பாய்த்தான் இருக்காங்க....

  ReplyDelete
 10. டெல்லி சர்காரில் ரசாயன மந்திரியாக வேலைபார்த்துவந்த மாண்யஸ்ரீ அழகிரி அவர்களை கடந்த மே மாதம் 13 தேதியிலிருந்து காணவில்லை.

  ReplyDelete
 11. மக்கள் இவ்வாறு விழிப்புணவோடு வித்யாசமாகச் செயல்பட்டால் தான் விடிவு பிறக்கும்

  ReplyDelete
 12. மாப்ளை நெல்லைக்கு ரிசர்வ் பண்ணியாச்சா?

  ReplyDelete
 13. நல்ல மக்கள் ....நல்ல காமெடி ....

  ReplyDelete
 14. மக்களின் கோரிக்கையக் கவனிக்காத அரசியல்வாதிக்கு மக்கள் தகுந்த பாடம் கொடுத்திருக்கிறார்கள்.

  ஹா,...ஹா...

  ReplyDelete
 15. ரொம்ப நல்ல புத்திசாலியான மக்கள். என்ன செய்ய இப்படித்தான் ஓட்டுப்போட்ட மக்களையே ஞாபகப்படுத்தவேண்டிருக்கு இந்த அரசியல்வாதிகளுக்கு

  ReplyDelete
 16. ரொம்ப நல்ல புத்திசாலியான மக்கள். என்ன செய்ய இப்படித்தான் ஓட்டுப்போட்ட மக்களையே ஞாபகப்படுத்தவேண்டிருக்கு இந்த அரசியல்வாதிகளுக்கு

  ReplyDelete
 17. மாப்ள அப்போ நீ ஒரு வாரமா காணாம போயிட்டியே.......
  அதுக்கு என்ன பண்றது டவுட்டு!

  ReplyDelete
 18. @ஆர்.கே.சதீஷ்குமார்
  தமிழ் நாட்டிலும் இனிமேல் MLA, MINISTER தொகுதிக்கு வராவிட்டால்
  இதே மாதிரி கோர்ட்டில் கேஸ் போடவேண்டும்.

  ReplyDelete
 19. தமிழ் நாட்டிலும் இனிமேல் தொகுதிக்கு MLA, MINISTER வராவிட்டால்
  இதே மாதிரி கோர்ட்டில் கேஸ் போடவேண்டும்.

  ReplyDelete
 20. சூப்பர் நியூஸ் பாஸ்! :-)

  ReplyDelete
 21. Our Vellore MP Abdul Rahman (i think it is his name. As he had not visited for a long time, I could not recollect his name ) also is missing for a long time. That was the problem with Prof Khader Moideen, previous MP of Vellore

  ReplyDelete
 22. மக்கள் இப்படித்தான் இருக்கணும்

  ReplyDelete
 23. கருண் எப்புடி சுகம் ? ஆகா...நல்ல விசயம்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"