Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/13/2011

தமிழன் சினிமாவிற்கு அடிமையா?

மிழ்நாட்டின் பின்னடைவுக்கு தமிழர்களின் சினிமா மோகம்தான் காரணம் என ஒருசில அரசியல்வாதிகள் மேடைதோறும் முழங்கி வருகிறார்கள். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருகிறவர்கள் தங்களது வாக்கு வங்கியை பங்கு போடுவதால் ஏற்பட்ட எ‌ரிச்சலில் அவர்கள் செய்யும் பிரச்சாரம் இது. விவாதிக்க வேண்டிய, போராட வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கையில் சினிமா மோகம் என்ற ஒற்றை கருத்துடன் அவர்கள் கூவுவது அவர்களின் உள்ளக்கிடக்கையை வெளிக்காட்டிவிடுகிறது.

ஆனாலும் அவர்கள் கூறும் கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. கலைத்துறையானாலும், அரசியலானாலும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தனி மனித வழிபாடும், சினிமா நட்சத்திரங்களை அரசியல்வாதிகளாக உருமாற்றும் முனைப்பும் தமிழ்நாட்டில்தான் அதிகம். இந்த இரண்டும் அதிகமுள்ள மாநிலமாக முன்பு ஆந்திரா விளங்கியது. கட்சியை நடத்த முடியாமல் பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தை சிரஞ்சீவி காங்கிரஸுடன் இணைத்த நிகழ்வு, ஆந்திர மக்களின் விழிப்புணர்வை காட்டுவதாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். பிர‌ஜா ரா‌ஜ்‌ஜியத்தின் அழிவை முன்னிறுத்தி நமது சினிமா மோகத்தை ஆராய வேண்டிய கட்டாயத்தில் தமிழர்களாகிய நாம் இருக்கிறோம்.

ஆந்திராவில் அளப்ப‌ரிய ரசிகர்களுடன் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் சிரஞ்சீவி. அவரளவுக்கு மக்கள் ஆதரவு கொண்ட சினிமா நட்சத்திரம் அங்கில்லை. விஜயசாந்தியும்கூட ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டே அரசியல் அரங்கில் தொடர முடிகிறது. பெரும் மக்கள் ஆதரவு உள்ள சிரஞ்சீவியால்கூட கட்சியை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்பது சினிமா மோகத்தை அம்மாநில மக்கள் விலக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்ற ஆரோக்கியமான அம்சத்தின் முதல் வெளிப்பாடு. ஆனால் தமிழகம்...?

ஐம்பது வயது வரை நடிகைகளின் தொப்புளில் பம்பரம்விட்டுக் கொண்டிருந்தவர்கள் திடீரென கட்சி ஆரம்பித்து ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லும் போது எந்தக் கேள்வியும் கேட்காமல் நாம் பின்னால் செல்கிறோம். 25 வருடங்களாக திரையுலகில் நீடித்தும் ஒரு சிறந்த படத்தை தர இயலாதவர்கள் எப்படி நல்லாட்சி தருவார்கள் என்றும் நாம் யோசிப்பதில்லை. சிரஞ்சீவியால் ஆந்திராவில் கட்சியை நடத்தவே முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் விஜயகாந்த் அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார்.(நன்றி வெப்துனியா)

இந்த வித்தியாசம் எப்படி வந்தது? இத்தனைக்கும் சிரஞ்சீவி அளவுக்கு ரத்ததானம் போன்ற விழிப்புணர்வு செயல்பாட்டில் தன்னையோ தனது ரசிகர்களையோ ஈடுபடுத்திக் கொண்டவரல்ல விஜயகாந்த். ச‌ரி, ஏதேனும் உருப்படியான போராட்டம்? பொருளாதார அறிவு? ஏதேனும் சாதனைகள்? ம்ஹும்... எதுவுமில்லை. 
சிந்தனை  செய்வோம் உறவுகளே....

36 comments:

 1. தமிழ் சினிமா உலகின் பின்னே ஒளிந்துள்ள சாக்கடை விடயங்களை அருமையாக அலசியுள்ளீர்கள்.

  ஏனைய மாநில சினிமா நடிகர்களைப் பார்த்தாவது தமிழ் சினிமா நடிகர்கள் தமது மக்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக உங்கள் பதிவு இருக்கிறது.

  ReplyDelete
 2. மாப்ளைக்கு லொள்ளு ஜாஸ்தி தான்.. அது சரி பய புள்ள இநேரத்துலயே பதிவு போடுதே,, ஃபிகர் கூட புரோக்ராமா? ம் ம்

  ReplyDelete
 3. எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

  ReplyDelete
 4. ஏன் அப்பிடி சொல்றீஎங்க??

  ReplyDelete
 5. ஆதங்கம் நியாயமானது தான் பாஸ்

  ReplyDelete
 6. சினிமாவில் வித விதமா பிலிம் காட்டுறவுங்க அரசியலுக்கு வந்ததும் மந்திரிச்சி விட்ட கோழி மாதிரி ஆயிடுறாங்க .....

  ReplyDelete
 7. காப்பி +வடை .....

  ReplyDelete
 8. வந்துட்டேன் வாத்தியாரே!

  ReplyDelete
 9. தங்கள் வலைப்பூவின் வலது பக்கத்தில் 'நண்பேன்டா' என்று எழுதி உங்கள் நண்பரின் வலைப்பூவிற்கு இணைப்பு தந்துள்ளீர்கள். 'நண்பேன்டா' எனும் வார்த்தையை உபயோகிக்க மட்டும் உங்களுக்கு சினிமா தேவைப்படுகிறதா? 'தோழன்'டா என்ற தமிழ் சொல்லை உபயோகித்தால் என்ன?

  ReplyDelete
 10. என்னோவோ போ வாத்தியாரே...
  ஒன்னும் பிரில ஹிஹி!

  ReplyDelete
 11. நம்மாளுகளுக்கு சினிமான்னா உயிராச்சே..

  ReplyDelete
 12. அடடா ....வடை ரொம்ப நேரத்துக்கு முன்னாடியே மிஸ்ஸிங் .வடை ரிட்டன்ஸ்.......

  ReplyDelete
 13. அசத்தலான கருத்து அருமையான அலசல்

  ReplyDelete
 14. சவுக்கடி பதிவு ....ஒட்டு எண்

  ReplyDelete
 15. ஆழமான கருத்துக்கள் கரூன் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

  ReplyDelete
 16. குருதி புனல் திரைப்பட வசனம் ஒன்று :
  ////என்னை சுத்தி சினிமா பார்த்து வளர்த்த பலகினமான கூட்டம் தான் இருக்கு ///
  மேலும் பல M.R.ராதா வசனங்கள் .....
  சினிமாவிலே கூட நம்மை விழிக்க வைக்க இந்த மாதிரி செய்திகள் சொல்லியும் நாம் விழிக்கவில்லை

  ReplyDelete
 17. சந்தேகமின்றி அடிமைதான்;நிழலை நிஜமென்று மயங்குபவர்!

  ReplyDelete
 18. கட் அவுட்டுக்கு பாலும் பீரும் ஊற்றும் காலாச்சாரம் என்று ஒழியுமோ தெரியல. என்னைக்கு அது ஒழியுமோ அன்னைக்குத்தான் விடிவுக்காலம் பாஸ்

  ReplyDelete
 19. அருமையாக அலசியுள்ளீர்கள்.

  ReplyDelete
 20. விழிப்புணர்வு செயல்பாட்டில் தன்னையோ தனது ரசிகர்களையோ ஈடுபடுத்திக் கொண்டவரல்ல விஜயகாந்த். ச‌ரி, ஏதேனும் உருப்படியான போராட்டம்? பொருளாதார அறிவு? ஏதேனும் சாதனைகள்? ம்ஹும்... எதுவுமில்லை. >>>>

  ஹி....ஹி... யாரையோ உள்குத்து குத்தரிங்களே....

  ReplyDelete
 21. விஜயகாந்த் பல ஏழைகளுக்கு பல உதவிகள் செய்துள்ளார் .
  மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் கூட்டத்தைவிட தன் பணத்தை தரும் அவர் நல்லவர்தான்

  ReplyDelete
 22. போராட்டம் என்னும் பெயரில் மக்களை துன்டாடும் கூட்டம் தான் இங்கு அதிகம் . போராட்டத்தில் எந்த தலைவனின் காரும் எறிந்ததில்லை , அவன் உறவினர்களும் பாதிக்கபட்டதிலை. பாவம் நாம்தான் .

  ReplyDelete
 23. டாக்டர் வரலாம் , கதாசிரியர் வரலாம், கவிதை எழுதுபவர் வரலாம் ஒன்னுமே தெரியாத புண்ணாக்கு கூட வரலாம் ஆனா நடிகன் வரகுடாதா ? என்ன நியாயம் இது ?

  ReplyDelete
 24. ரொம்ப அதிகமா பேசிடே னா ?

  ReplyDelete
 25. பாஸ் இன்று அரசியல் ஆட்சி அதிகாரங்களில் இருக்கும் முக்கால்வாசி பேரும் சினிமா துறையில் இருந்து வந்தவர்கள் தானே .. ஆதங்கம் நியாயமானது ...

  ReplyDelete
 26. அசத்துங்க தல ஆழமான கருத்துக்கள்.

  ReplyDelete
 27. அசத்துங்க தல ஆழமான கருத்துக்கள்.

  ReplyDelete
 28. இது சிபி.செந்தில்குமார் பத்தின பதிவா..?ஹிஹி

  ReplyDelete
 29. அலசல் அருமை /./

  ReplyDelete
 30. மெதுவா சிந்திக்கலாம் சகோ. அடுத்த தேர்தல் வர இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கே அதற்குள் என்ன அவசரம் சகோ?

  ReplyDelete
 31. அவசியமான அசத்தலான அசத்தல்

  ReplyDelete
 32. நல்ல பதிவு

  ReplyDelete
 33. சினிமாவில் நல்லவனாகவும், வயதான தாய்மார்களுக்காக கண்ணீர் சிந்துபவராகவும், ஏழைப் பங்காளனாகவும், அநீதியை எதிர்த்து போராடுபவராகவுன்.. இன்னும் பல "ரொம்ப நல்லவன்டா" இமேஜை உருவாக்கி அதன் மூலம் அரசியலில் நுழைந்து, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றது எம்.ஜி.ஆர். ஒருத்தர்மட்டுமே. அதுக்கப்புறம் ஜெ. வந்தாலும், அவர் நிலைத்து நின்றது தனது தனிப்பட்ட சாமர்த்தியத்தால் மட்டுமே, சரோஜா தேவியோ, லதாவோ நாங்களும் எம்.ஜி.ஆரோடு ஜோடியாக நடித்தோம் என்று வந்து இங்கே ஓட்டும் பெற்றிருக்க முடியாது, அரசியல் திறனும் அவர்களுக்கில்லை. தற்போது, விஜயகாந்த் வசம் எட்டு சதவிகித ஓட்டுகள் மட்டுமே உள்ளன, இதை வைத்து ஓரிரு தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாது, ஜெ.வுடன் கூட்டணி போட்டதால் இத்தனை சீட்டுகளைப் பெற முடிந்தது. ஆக, சினிமா மோகம் எம்.ஜிஆரோடு போச்சு, இப்போது அது இல்லை.

  ReplyDelete
 34. என் ராஜபாட்டை"- ராஜா ukku arasiyal arivu pathathu

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"