Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/19/2011

தயாநிதி மாறனை சிபிஐ விசாரிக்க பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்?


2-ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிக்கியுள்ள மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை செய்ய பிரதமர் அனுமதி அளித்துள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. 

இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவியிலிருந்து அடுத்த வாரம் அவர் ராஜிநாமா செய்வார் என தில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. 2-ஜி விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொண்டதாக தயாநிதி மாறன் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. 


மேலும் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அவர் தவறாகப் பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட பழைய சர்ச்சை இப்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.ஏர்செல் விவகாரம் தொடர்பாக அதன் முன்னாள் தலைவர் சிவசங்கரன் கொடுத்துள்ள சாட்சியத்தின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய சி.பி.ஐ. தயாராகி விட்டது. 

இது தொடர்பாக பிரதமருக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தயாநிதி மாறனை விசாரிக்க, பிரதமரின் அனுமதி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சி.பி.ஐ. ஏற்கெனவே மேற்கொண்டிருந்தது. இந்த நிலையில், தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்வது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்கு பிரதமர் அலுவலகம் சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது. தயாநிதி மாறனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க காங்கிரஸ் தலைமையும் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. 

இந்நிலையில் தயாநிதி மாறன் தானாகவே பதவியிலிருந்து விலக வேண்டும், அவ்வாறு விலக முன்வராவிட்டால், பிரதமர் அவரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர். 

பிரதமர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரை முடக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் மிரட்டி வருகின்ற நிலையில், தயாநிதி மாறன் மீது சி.பி.ஐ. நடவடிக்கை எடுப்பது உறுதி என்று தலைநகரில் அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.

22 comments:

 1. Sonia aunty sarinu sollitangalA? Adutha thiruvila maran veetila? Nikazhchi kalai kattum

  ReplyDelete
 2. எலேய் மக்கா தமிழ்மணத்துல இணச்சி விடுய்யா....

  ReplyDelete
 3. யோவ் ராவா அடிச்சவன் ஊறுகாயை நக்கியே ஆவோனும், தம்பி நான் சொன்னது ஞயாபகம் இருக்கா...?

  ReplyDelete
 4. அரசியல் பதிவு...

  மாறன் கதைக்கு எப்ப முடிவு வரும்..

  ReplyDelete
 5. என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என பார்ப்போம்.

  ReplyDelete
 6. good ...but late action asusal ...
  well let's wait and c da proceedings

  ReplyDelete
 7. ஊழல்கள் அதிகார துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கு பதில் என்ன என முடிவை அறிய ஆவல்.

  ReplyDelete
 8. ராசாவிற்குப் பேச்சுத் துணைக்கு அடுத்த ஆள் ரெடியாகிறார் போல இருக்கே.
  ஹி...ஹி...

  ReplyDelete
 9. ஊரைச்சுற்றி பசுமை மரங்கள் ஒரு காலத்தில்
  மரங்களைச் சுற்றி பறவை இனங்களின்
  ஓயாத இசை!
  இப்போதோ ஊரின் நடுவிலும் இரும்பு டவர்கள்
  அதன் வழியே வரும் செல்பேசீயின் குரல்கள்!
  "செல்போன் டவர்" யென பாலகனுக்கு அதனை காண்பித்தால்
  இதுதான் "ஸ்பெக்டிறம்" என்கிறான்!

  ReplyDelete
 10. அப்போ ஆப்புத்தான் தயாவுக்கு, ஹா ஹா

  ReplyDelete
 11. தயா மாட்டினால்தான் சன் டிவியின் கள்ளத்தனங்கள் மாட்டும்

  ReplyDelete
 12. பிரதமர் முடிவெடுத்தாரா நம்பவே முடியலையே... சோனியா முடிவெடுதார்னு சொல்லு மாப்ள

  ReplyDelete
 13. நாடாளுமன்றத்தை முடக்கி நம்ம பணத்தை வேஸ்ட் செய்வதற்கு பதில் ஒரு பூங்காவில் அவர்கள் அனைவரும் அடித்துக்கொண்டால் செலவு மிச்சம்!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"