Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/28/2011

'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங் !? இல்லையென நிருபிப்பாரா?


த்திய அமைச்சர்கள், தங்கள் பெயரில் இருக்கும், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், பணம், நகை இவற்றின் விவரத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்' என, ஆணை பிறப்பித்திருக்கிறார், 'வெத்துவேட்டு' பிரதமர் மன்மோகன் சிங். 

அமைச்சர்களின் உறவினர்கள், பிரதமரின் அனுமதியின்றி, வெளிநாடுகளில் வேலை பார்க்கக் கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார். முன்பு மாநில முதல்வராகவோ, அமைச்சராகவோ பதவி வகித்திருந்தால், அப்போது திரட்டிய சொத்துக்களையும், கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என, அதே பிரதமர் சொல்லியிருக்கிறார். 


மத்திய அமைச்சர்கள், ஊழல் வழக்கில் சிக்குவது, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், இதனால், இந்தியாவின் மானம், உலக அரங்கில் கேலிக்கு ஆளாவதும், பிரதமரின் இந்த திடீர் நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம். எந்த மத்திய அமைச்சரும், தம் சொத்துக்களின் உண்மையான விவரத்தை, நிச்சயம் தெரிவிக்க போவதில்லை! 

அவர்கள் கொடுக்கும் சொத்து விவரத்தை வைத்து, சி.பி.ஐ., திடீர் ரெய்டு நடத்தினால், பல கோடிகள் நிச்சயம் கணக்கில் மறைக்கப்பட்டிருக்கும் விவரம் தெரியவரும். மத்திய அரசு ஊழியர்கள், ஒவ்வொரு ஜனவரி மாதமும், தம் சொத்துக்களின் விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. ஆனால், பெரும்பான்மையான மத்திய அரசு ஊழியரும், உண்மையான சொத்து விவரத்தைத் தெரிவிக்கவே மாட்டார்கள். 

உண்மையை எப்போதும் பேசினால், கடைசியில், காந்தி போல, அரை நிர்வாணப் பக்கிரி மாதிரி வாழ வேண்டிய பரிதாப நிலை ஏற்படும் என்பது, நம் அமைச்சர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் நன்றாகவே தெரியும்

'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார் புத்தர். ஆனால், ஆசைப்படாமல் வாழ யாராலும் முடியாது. ஜனநாயகத்தில் மோசடி செய்பவர்கள் தான், தலைவர்களாக உருவாக முடியும் என்பதை, காங்கிரஸ் கற்றுக் கொடுத்துவிட்டது!

19 comments:

 1. இவர் கேட்டா, அவங்க உண்மையான சொத்து மதிப்பைச் சொல்லிடுவாங்களாக்கும்..

  ReplyDelete
 2. //'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார் புத்தர். ஆனால், ஆசைப்படாமல் வாழ யாராலும் முடியாது. ஜனநாயகத்தில் மோசடி செய்பவர்கள் தான், தலைவர்களாக உருவாக முடியும் என்பதை, காங்கிரஸ் கற்றுக் கொடுத்துவிட்டது!//

  முற்றிலும் உண்மையான வரிகள்...

  ReplyDelete
 3. அரசியல்வாதியாக மாறிக்கொண்டு இருக்கும் மாப்ளைக்கு வாழ்த்துக்கள் ஹிஹி!

  ReplyDelete
 4. நல்ல தலைப்பூ
  வெத்துவேட்டு பிரதமர்

  இப்பதிவின் முழுப் பொருளும்
  தலைப்பிலேயே அடங்கி விட்டது
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 5. \\\மத்திய அமைச்சர்கள், தங்கள் பெயரில் இருக்கும், அசையா மற்றும் அசையும் சொத்துக்கள், மனைவி, உறவினர்களின் பெயர்களில் இருக்கும் சொத்துக்கள், பணம், நகை இவற்றின் விவரத்தை, ஆகஸ்ட் மாதத்திற்குள் எனக்குத் தெரிவிக்க வேண்டும்' என, ஆணை பிறப்பித்திருக்கிறார்\\\ சரியான காமெடி .அவர் சொல்றத இப்பல்லாம் அவரோட வீட்டம்மாவே கேக்கிரதில்லயாம்...

  ReplyDelete
 6. வெத்து வேட்டு [[ஒரு வேட்டும் இல்லாத]] பிரதமர்னு நமக்கு அப்பவே தெரிஞ்சதுதானே கருண்!!!!!

  ReplyDelete
 7. உண்மையை எப்போதும் பேசினால், கடைசியில், காந்தி போல, அரை நிர்வாணப் பக்கிரி மாதிரி வாழ வேண்டிய பரிதாப நிலை ஏற்படும் என்பது, நம் அமைச்சர்களுக்கும், மத்திய அரசு ஊழியர்களுக்கும் நன்றாகவே தெரியும்.//

  விடுய்யா அப்பிடியே நாசமா போகட்டும்....

  ReplyDelete
 8. பாவம் அவர் பாட்டுக்கு வெளிநாடு போனமா,ஊர சுத்தி பார்த்தோமா இந்தியா வந்து நீட்ற பைல் எல்லாத்திலையும் கண்ண மூடிக்கிட்டு கையெழுத்து போட்டோமா,அடுத்து சோனியாம்மா எழுதி வச்சத ஒரு எழுத்து மாத்தாம மீடியாக்களுக்கு படிச்சி காட்டிட்டு இருக்கரவர எதுக்குய்யா தொந்தரவு பண்ற

  ReplyDelete
 9. சமுதாய வளர்ச்சிக்கு இது தேவையான ஒன்று ..

  பார்ப்போம் என்ன நடக்கிறது ...

  ReplyDelete
 10. அன்பின் கருண் - உண்மை - சொத்து விபரக் கணக்கு வாங்கி ஒன்றும் ஆகப் போவதில்லை - தேர்தலில் போட்டி இடும் போது அவர்கள் சொத்து விபரங்களைத் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு ஆண்டு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்கின்றனர். இப்பொழுது கேட்பது இன்னுமொரு நகல் - அவ்வளவு தான் . நல்வாழ்த்துகள் கருண் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. அந்தாள் வெத்து வெட்டு இல்ல கைப்புள்ள ...)))

  ReplyDelete
 12. 'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்றார் புத்தர். ஆனால், ஆசைப்படாமல் வாழ யாராலும் முடியாது. ஜனநாயகத்தில் மோசடி செய்பவர்கள் தான், தலைவர்களாக உருவாக முடியும் என்பதை// தற்காலத்தில் உண்மை தான் ...

  ReplyDelete
 13. காங்கிரஸ் (நேரு குடும்பம்) இந்தியாவை ஆங்கிலேயர்களை விட அதிகம் சுரண்டி விட்டது!

  நம் நாடு திவாலாகும் நாள் தொலைவில் இல்லை!

  ReplyDelete
 14. தலைப்பு கொஞ்சம் காரம்/கோபம்

  ReplyDelete
 15. மன்மோகன்சிங்கை சாடுவதை விட, அவரை இயக்குபவர்களை குற்றம் சாட்ட வேண்டும்.

  ReplyDelete
 16. மாப்ள ஏன் கோபமா இருக்காரொ?

  ReplyDelete
 17. ஆமா தலைவரு ரொம்ப கோபமா இருக்காரு, சிபி டக்குன்னு உங்க பிட்டுல ரெண்ட போட்டு மாப்ளைய கூல் பண்ணுங்க.......!

  ReplyDelete
 18. வளமான இந்தியாவின் வளர்ச்சிக்கு, பிரதமரின் இப் புதிய முயற்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"