Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/21/2011

இரண்டாவது மகாத்மா மண்டேலாவா… மகிந்தாவா?


மூக அவலங்களையும், இன உணர்வையும் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் பதிவு செய்வது ஒரு பிரச்சாரகரின் பாணி. அதையே வெகு நாசூக்காக பதிவு செய்வது படைப்பாளியின் ஸ்டைல்.

உலகமே போர்க்குற்றவாளி என்று கூறி ஒதுக்க முயலும் ஒரு ஆட்சியாளரை, இந்தியா மட்டும் எந்த அளவு தாங்கிப் பிடிக்கிறது என்பதைக் காட்ட பாலா என்ற படைப்பாளி ஒரு காட்சி வைத்திருக்கிறார் அவன் இவனில். டுடோரியல் கல்லூரி வகுப்பறையில் மாணவர்களுக்கு டிக்டேஷன் வைக்கும் ஆசிரியர் இப்படிக் கேட்பார்:


உலகில் இரண்டாம் மகாத்மா எனப்படுவர்… அ) நெல்சன் மண்டேலா ஆ) மகிந்தா ராஜபக்சே” என்று கூறிவிட்டு, எது சரியான விடை என்று கேட்பார்.

மாணவர்கள் சற்று நேரம் யோசித்துவிட்டு, அ) நெல்சன் மண்டேலா என்பார்கள்.

உடனே அந்த ஆசிரியர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு, “ஏசப்பா… கோடானுகோடி நன்றிகள் ஏசப்பா… கோடானு கோடி நன்றிகள்”, என்பார். கொஞ்சம் விட்டால், மகிந்தாவையும் மகாத்மாவுக்கும் முயற்சி நடப்பதை இத்தனை நாசூக்காக பாலாவால் மட்டும்தான் சொல்ல முடியும்.


அவன் இவன் படம் பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் மவுனித்து, ஆர்ப்பரித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. நன்றி 123தமிழ்சினிமா .

ஹேட்ஸ்ஆப் பாலா..

30 comments:

 1. ஆம் நண்பரே உண்மைதான்,

  ReplyDelete
 2. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. வெல்டன் பாலா ....

  ReplyDelete
 4. பல விமர்சனங்களில் கூட இதை மிஸ் பண்ணிட்டாங்க நம்ம சிபி உட்பட ...நீங்க பகிர்ததுக்கு நன்றி

  ReplyDelete
 5. அருமை,,,,

  ReplyDelete
 6. க்ருன்!உங்களை நான் காபி பேஸ்ட் செய்யவில்லை.கூர்மதியனுக்கு பின்னூட்டம் போடலாமுன்னு போனா என்னோட தலைப்பு.

  இரண்டு பேரும் ஜெம ஜோடி இல்ல:)

  ReplyDelete
 7. இந்தியாவில் நக்சலைட்டுகளை ஒடுக்குவது ஏன்?
  வைகோ வீட்டிலும், நெடுமாறன் வீட்டிலும், சீமான் வீட்டிலும நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினால் புரியும்..
  ராஜபக்சேயை விட கொடூரங்கள் புரிந்த நரேந்திர மோடி என்பவனை ஒன்றும் சொல்ல தைரியமில்லாமல் போனது ஏன்?
  அவன் குற்றவாளி இல்லையா?
  அல்லது அவனால் கொல்லப்பட்டவர்கள் மனிதர்கள் இல்லையா?

  ReplyDelete
 8. ஆமா உண்மைதான்.

  ReplyDelete
 9. கருன் எனக்கென்றால் இதை நீங்கள் சொல்லும் அர்தத்துடன் பார்க்கமுடியவில்லை. நெல்சன் மண்டேலாவுடனான ஒரு ஆப்ஷனாக ராஜபக்ஷவை எப்படி கொடுத்திருக்கமுடியும் என்று ஒரு தடவை சிந்தித்து பார்த்தீர்களா?
  என்னைப்பொறுத்தவரையில் அடுத்த திரைப்படம் தொடங்குவதன் முன் பாலா ஒருதடவை தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டியவராக இருக்கின்றார்.

  ReplyDelete
 10. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 11. எப்படியெல்லாம் லிங்க் பண்றாங்கப்பா...

  ReplyDelete
 12. ஒரு கூடை மலத்தில் ஒரே ஒரு மல்லி கிடந்தது.
  அந்த மல்லிக்காக மலத்தை மறைத்து விட்டீர்களே!

  ReplyDelete
 13. அவன் இவன் விமர்சனம் எழுதிய ஒருவரும் இதை குறிப்பிடவில்லை.அனைவராலும் புறக்கணிக்கப்பட்டதா அல்லது விடுபட்டதா என்று தெரியவில்லை. அருமையான பகிர்வு.

  ReplyDelete
 14. பகிர்வுக்கு நன்றி. அதானே இதை சிபி சார் எப்படி கவனிக்காம விட்டுட்டார்?!

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றிகள்

  ReplyDelete
 16. பாலாவிற்கு மகிந்த மீது ஒரு தனி மரியாதை இருக்கிறது என்று நினைக்கிறேன்,
  அதனால் தான் படத்திலும் இப்படியொரு தனியிடம் கொடுத்திருக்கிறார்.

  ReplyDelete
 17. படம் நான் இன்னும் பாக்கவில்லை பாஸ்
  எப்போதும் பாலா பட வசனங்கள் ரெம்ப வலிமையானவை தான்

  ReplyDelete
 18. ஒ!! கருணையா உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அய்யா கோடான கோடி ஸ்தோத்திரம்!!!

  ReplyDelete
 19. http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=23328:2011-06-19-03-52-58&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396

  ReplyDelete
 20. மனசாட்சி கூறியது...

  http://www.tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=23328:2011-06-19-03-52-58&catid=37:2009-12-04-18-14-29&Itemid=396--- நண்பா இந்த செய்தியின் லிங்க் நானே கொடுத்துள்ளேன் .. பதிவின் கடைசியில் பாக்கவும்..
  தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 21. ஷர்புதீன் கூறியது...

  athu yaarunga marmayogie...?// அவரும் ஒரு பதிவர் என்றே நினைக்கிறேன்.

  ReplyDelete
 22. Jana கூறியது...

  கருன் எனக்கென்றால் இதை நீங்கள் சொல்லும் அர்தத்துடன் பார்க்கமுடியவில்லை. நெல்சன் மண்டேலாவுடனான ஒரு ஆப்ஷனாக ராஜபக்ஷவை எப்படி கொடுத்திருக்கமுடியும் என்று ஒரு தடவை சிந்தித்து பார்த்தீர்களா?// இருக்கலாம் ஜனா..

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"