Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/24/2011

நேர்மையில்லாத அரசியல்வாதிகளை குப்பையில் போட


யிலாசனம், கோஹினூர் வைரம் போன்றவை, நம்முடைய தேசிய சொத்துக்கள். அவை, வெள்ளையரால் கொள்ளையடிக்கப்பட்டு, இங்கிலாந்து மகாராணியின் கிரீடத்தை அலங்கரிக்கின்றன. 

தற்போது, ஜனநாயக நாட்டில், அரசியல் தொழில் செய்வோர், பொன்னாக, பொருளாக வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரத மாதாவை அலங்கோலப் படுத்துகின்றனர். 


கஞ்சன் ஒருவன் இருந்தான். அவன் தன் பணத்தை, தங்கக் கட்டிகளாக மாற்றி, மரத்தடியில் புதைத்து வைத்தான். தினமும் அதை தோண்டிப் பார்த்து, பெருமிதமடைவது அவன் வழக்கம். 

இதை, ஒரு திருடன் பார்க்க நேரிட்டது; கஞ்சன் போனவுடன், தங்கக் கட்டிகளை எடுத்துச் சென்று விட்டான். மறுநாள் வந்த கஞ்சன், தங்கக் கட்டிகள் காணாமல் போனதைக் கண்டு வேதனையுற்று, அழ ஆரம்பித்தான். அப்போது, அந்த வழியே வந்த துறவி ஒருவர், "ஏன்னப்பா அழுகிறாய்' என, விஷயத்தைக் கேட்டார். அவன், கூறினான். 

அங்கிருந்த சில கற்களை எடுத்து அவனிடம் கொடுத்து, "இதை புதைத்து வைத்து, தினமும் பார்த்து ஆறுதல் அடை. அந்த தங்கக் கட்டிகளைக் கொண்டு, எந்த ஆக்கப்பூர்வ காரியமும் நீ செய்யப்போவதில்லை. கடைசி வரை அதை, பார்த்துப் பார்த்தே சாகப் போகிறாய். எனவே, இந்த கல்லும், தங்கக் கட்டியும், உன் அளவில் ஒன்றே' எனக் கூறி விட்டுக் கிளம்பினார். 

வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தால், அதை பதுக்கி வைத்தவர்களுக்கு என்ன லாபம்? மக்களின் சாபம் தான் மிஞ்சும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர். நேர்மையில்லாத அரசியல்வாதிகளையும் குப்பையில் போட, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

31 comments:

 1. வணக்கம் கருன்!

  நல்லதொரு விழிப்புணர்பு பதிவு! நமக்கெல்லாம் தேசிய உணர்வு பத்தாது!அது வளர்த்தெடுக்கப்படவேண்டும்!

  ReplyDelete
 2. இந்த அரசியல் வாதிகள், கருப்பு பண முதலைகள் மட்டும் நேர்மையாக இருந்திருந்தால் உலக அரங்கில் இந்தியாவை எதிர்க்க ஒரு பயனுக்கும் தைரியம் இருந்திருக்காது.

  இந்த குப்பை அரசியல் வாதிகளாலே நாம ஊதினா தாங்காத பொடிப்பசங்க பாகிஸ்தான், இலங்கை நமக்கு வேடிக்கை காட்டுகிறது.

  ReplyDelete
 3. /////
  மக்களின் சாபம் தான் மிஞ்சும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர். நேர்மையில்லாத அரசியல்வாதிகளையும் குப்பையில் போட, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.///////

  உண்மை

  இது நடந்தே ஆகவேண்டும் அப்போதுதான் நாடு நலன் பயக்கும்...

  ReplyDelete
 4. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
 5. சொல்லி சொல்லி வாய் வலிக்குது நண்பா யாரும் கேக்குற மாதிரி தெரியலை

  ReplyDelete
 6. சொல்லி சொல்லி வாய் வலிக்குது நண்பா யாரும் கேக்குற மாதிரி தெரியலை

  ReplyDelete
 7. அருமையாக சொல்லிவிட்டீர்கள் கருன்.

  ReplyDelete
 8. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பர். நேர்மையில்லாத அரசியல்வாதிகளையும் குப்பையில் போட, அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.//

  நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு!

  ReplyDelete
 9. நல்ல கதையுடன் நச்னு சொல்லி உள்ளீர்கள்!

  ReplyDelete
 10. நல்ல கதையுடன் நச்னு சொல்லி உள்ளீர்கள்!

  ReplyDelete
 11. ///மக்களின் சாபம் தான் மிஞ்சும்.///
  ஹ..ஹ..ஹ.. நம்மாளுங்க இதக்கெல்லாம் அசரமாட்டாங்கள்..


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

  ReplyDelete
 12. விழிப்புணர்பு பதிவு

  ReplyDelete
 13. தெளிவான கதையுடன் அற்புதமான பதிவு ...

  ReplyDelete
 14. அரசியல்வாதிகள் தீருந்தவேமாட்டார்கள்.

  ReplyDelete
 15. பதுக்கி வைத்த பணத்தால் யாருக்கு என்ன பயன்?நன்று கருன்!

  ReplyDelete
 16. அப்படி போடு அண்ணாச்சி

  ReplyDelete
 17. நண்பி நல்ல பதிவு..
  வாழ்த்துக்கள்...
  !!எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..

  ReplyDelete
 18. உப்பில்லா பண்டம் குப்பையிலே
  இது பழமொழி ஆனால்---
  துப்புள்ளார் பணம் தொப்பையிலே
  இது அரசியில் புது மொழி

  பாபம் அவர் என்ன செய்வார்
  எல்லாம்ம் பணம் படுத்தும் பாடு

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 19. உண்மை தான் பாஸ்

  ReplyDelete
 20. உண்மை தான் பாஸ்

  ReplyDelete
 21. மக்கள் பணத்தை வாரிச் சுருட்டி, வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அரசியல் வியாதிகளுக்குச் சாட்டையடி கொடுப்பது போன்றும்,
  மக்களுக்கு விழுப்புணர்வைத் தருவது போன்ற ஒரு பதிவினைத் த்ந்திருக்கிறீங்க.

  பகிர்விற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 22. அருமையான நல்ல பதிவு பாஸ்

  ReplyDelete
 23. உனக்கு என்னய்யா ஆச்சி மாப்ள! பொங்க ஆரமபிச்சி இருக்கியே தப்பு மச்சி தப்பு ஹிஹி!(பட் ஆனா why ஏன்!)

  ReplyDelete
 24. விழிப்புணர்பு பதிவு
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. இவனுகள புதைக்கும் பொது கூடவே எடுத்துகிட்டு போவாங்களா மேல்லோகத்துல அகவுன்ட் ஓபன் பண்ண ...

  ReplyDelete
 26. there is no interest for the money we put in swiss banks. but the country using our money to develop their country. Due to bulk amount of black money there is no tax for those country ppl. atleast if our politicians put their money in indian banks, our country's growth rate will double.

  ReplyDelete
 27. அடடா நீண்ட நாளைக்கு பிறகு நல்ல சிந்தனையுடன் சிறப்பான பதிவு
  பாரட்டுக்கள்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"