Tamilus

The best Tamil Aggregator | Tamilus

6/11/2011

தமிழகத்தில் படுதோல்வி அடைய தி.மு.க., காரணம் என காங்., பரபரப்பு புகார்


"தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் தங்கள் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு தி.மு.க.,வே காரணம்' என, காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால் தென் மாநிலங்களில் ஓட்டு வங்கியை இழந்து விட முடியாது என்பதால், இந்த மாநிலங்கள் தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்' என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பத்திரிகையான "சந்தேஷில்' நேற்று எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலால், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் இந்த மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளன.

கூட்டணிக் கட்சிகளின் தவறுகளால், தென் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தன் ஓட்டு வங்கியை இழப்பது சரியல்ல. அதனால், இந்த மாநிலங்களில் கூட்டணி தொடர்பான கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்து, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்.

தி.மு.க.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர், அரசு கருவூலத்திற்கு ஏற்படுத்திய மிகப்பெரிய இழப்பால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். அந்த அதிருப்தியால், தி.மு.க., தலைமையிலான அரசு செய்த நல்ல பணிகளையும் மறந்து, மாற்று கட்சிகளுக்கு ஓட்டளித்துள்ளனர். ஊழல் விவகாரத்தில், தி.மு.க.,வுடன் தொடர்புடைய பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்ய மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இழந்த புகழை காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அத்துடன் கீழ்மட்ட அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.முக்கிய நபர்கள் தொடர்புடைய பல ஊழல் வழக்குகளை விசாரணை நிறுவனங்கள் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்த விவகாரங்கள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளன. விசாரணை நிறுவனங்கள், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சமின்றி செயல்படும். எந்தவிதமான இடையூறும் இருக்காது என்பதற்கு, இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் ஒரு உதாரணமாகும்.இவ்வாறு தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 comments:

 1. சி.பி.செந்தில்குமார் கூறியது...

  mudhal mazai முதல் மழை// வாயா மாப்ள..

  ReplyDelete
 2. "என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...

  Kuudaa nadpu?//கரெக்ட்டு..

  ReplyDelete
 3. கலக்குறீங்களே கருன்.

  ReplyDelete
 4. என்னை பொறுத்தவரை பாமாகா-வும் , காங்கிரசும் ஒண்ணுதான். தனிச்சு ஒரு முறை நின்றால் டவுசர் கிழிந்துவிடும்., பாமாவு-காவது துணி மிஞ்சும்,இவங்களுக்கு......ஹயூ ஹய்யோ

  ReplyDelete
 5. FOOD கூறியது...

  கலக்குறீங்களே கருன்.// நன்றி..

  ReplyDelete
 6. ஷர்புதீன் கூறியது...

  என்னை பொறுத்தவரை பாமாகா-வும் , காங்கிரசும் ஒண்ணுதான். தனிச்சு ஒரு முறை நின்றால் டவுசர் கிழிந்துவிடும்., பாமாவு-காவது துணி மிஞ்சும்,இவங்களுக்கு......ஹயூ ஹய்யோ// கரெக்டா சொன்நீங்க..

  ReplyDelete
 7. காங்கிரஸ் காரனுங்களுக்கு பட்டும் புத்தி வரமாட்டேங்குதே !சரி..... எல்லாம் நல்லதுக்குதான் .

  ReplyDelete
 8. உன்னைச்சொல்லி குத்தமில்லை......

  ReplyDelete
 9. oodal bala கூறியது...

  காங்கிரஸ் காரனுங்களுக்கு பட்டும் புத்தி வரமாட்டேங்குதே !சரி..... எல்லாம் நல்லதுக்குதான் .// நன்றி..

  ReplyDelete
 10. சி.கருணாகரசு கூறியது...

  உன்னைச்சொல்லி குத்தமில்லை.....// ரொம்ப நாள் கழிச்சு நம்ம கடைக்கு வந்ததற்கு நன்றிகள்..

  ReplyDelete
 11. காங்கிரஸும் கூட்டுக் களவாணி தானே..

  ReplyDelete
 12. பாஸ்...தேர்தல் முடிஞ்சு தோல்வியடைந்த பின்னர், திமுக ஊழலை அம்பலமாக்கிய பின்னாடி,
  இதுவும் சொல்லுவாங்க,
  இன்னமும் சொல்லுவாங்க காங்கிரஸ் கட்சி.
  ஹி...ஹி...

  ReplyDelete
 13. வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் பழியை யார் தலையிலாவது போட்டு, தப்பிக்க ஏதாவது சொல்லி, சமாளிப்பதே வழக்கமாகி விட்டது. இவர்கள் தனித்து நின்றால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.

  ReplyDelete
 14. இப்ப சொல்லி என்ன பண்றது... ஆட்சியே போச்சு.

  ReplyDelete
 15. அடபோங்கப்பா
  என்னைபொருத்தவரை காங்கிரஸ் திமுகா பாமகா சிறுத்தைகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.

  ReplyDelete
 16. செங்கோவி கூறியது...

  காங்கிரஸும் கூட்டுக் களவாணி தானே..//கரக்டா சொன்னீங்க..

  ReplyDelete
 17. நிரூபன் கூறியது...

  பாஸ்...தேர்தல் முடிஞ்சு தோல்வியடைந்த பின்னர், திமுக ஊழலை அம்பலமாக்கிய பின்னாடி,
  இதுவும் சொல்லுவாங்க,
  இன்னமும் சொல்லுவாங்க காங்கிரஸ் கட்சி.
  ஹி...ஹி...///// ஆமாமா..

  ReplyDelete
 18. வை.கோபாலகிருஷ்ணன் கூறியது...

  வெற்றி வாய்ப்பை இழப்பவர்கள் பழியை யார் தலையிலாவது போட்டு, தப்பிக்க ஏதாவது சொல்லி, சமாளிப்பதே வழக்கமாகி விட்டது. இவர்கள் தனித்து நின்றால் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி விடும்.// சரியா சொன்னீங்க..

  ReplyDelete
 19. தமிழ்வாசி - Prakash கூறியது...

  இப்ப சொல்லி என்ன பண்றது... ஆட்சியே போச்சு.// ஹா.ஹா.ஹா...

  ReplyDelete
 20. துஷ்யந்தன் கூறியது...

  அடபோங்கப்பா
  என்னைபொருத்தவரை காங்கிரஸ் திமுகா பாமகா சிறுத்தைகள் எல்லாமே ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.//// ஓஹோ சரிதான்.

  ReplyDelete
 21. மழை நின்ற பின்னும் தூறல் போல உனை கடந்த பின்னும் சாரல்...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio

  ReplyDelete
 22. கொஞ்சம் லேட்டோ???அவ்வ்வ்வவ்வ்வ்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"