Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/07/2011

மனசாட்சி இருப்பவர்கள் அனைவரும் இப்படியே செய்வார்கள் - பள்ளியில் நடந்த சில உண்மைகள் 1.
போன வாரம் :


சிரியப் பணியில் 
முதன் முறையாய் 
அந்த ஆறாம் வகுப்பில்...


பாடம் நடத்துகையில்
ஒரு சிறுவனின் அழுகை 
காரணம் கேட்டேன் 
"அப்பாவின் ஞாபகம் " என்றான்..
"ஊருக்கு போயிருக்காரா?"
இல்ல, போன வருஷம் 
செத்துப் போயிட்டார்!?


ஞாபகம் ஏன் தீடீர் என்று?
"உங்க சட்டை மாதிரியே
அவரும் போட்டிருப்பார்"ட்டையின் கோடுகளுக்குள்
ஒரு ஞாபகத்தின் சிறையிருப்பு..


ழற்றி போடும்வரை 
கனமாகவே இருந்தது
உடம்பில்...


இன்று:


வியாழக்கிழமை 
பாட அட்டவணையின்படி 
எனக்கு 
ஆறாம் வகுப்பு...


ட்டவணையைப் பார்த்ததும் 
சட்டை கனத்தது...


ஞாபகச் சிறையாய்
கோடு போட்ட சட்டை 
என் உடம்பில் 


விடுப்பு போட்டு 
வீட்டுக்கு வந்தேன்...


னி சட்டை போடுவதற்கும் 
அட்டவணை போடவேண்டும் 
நான்...!

45 comments:

 1. அட்டவணை பார்த்து இந்த பதிவு போட்டிங்களா?

  ReplyDelete
 2. ஆசிரியர் பணி மகத்தான பணி....

  ReplyDelete
 3. ஓஹ.... என்ன சொல்வது என்றே தெரியவில்லை :(

  ReplyDelete
 4. arumai....nekichiyana sambavam ...

  ReplyDelete
 5. ini antha sattaiyai podave podatheenga nanbaa ...naanga ottu poduram

  ReplyDelete
 6. உரைநடையுடன் கூடிய கவிதை நல்லா இருக்கு!..அந்த குழந்தைக்கு என்ன சொல்றது தெரியல!

  ReplyDelete
 7. கவிதை..!சென்டிமெண்ட் டச்..!

  ReplyDelete
 8. பாடங்களை மட்டுமல்ல, மனங்களையும் படித்த ஆசிரியர். கொடுத்து வைத்த பிள்ளைகள்.

  ReplyDelete
 9. ஜூலை மாத இன்ப அதிர்ச்சி என்ன? http://thagavalmalar.blogspot.com/2011/07/blog-post_05.html

  ReplyDelete
 10. வாத்தியார் வேலைலயும் என்னென்ன சோதனைல்லாம் வருது .....

  ReplyDelete
 11. arumai nanbare arumai

  ReplyDelete
 12. மாப்ள கவிதை சூப்பர்டா எனக்கே புரியுதுன்னா பாரேன்

  ReplyDelete
 13. மாப்ள பேசாம அந்த சட்டையை கொளுத்தி போட்டுரு

  ReplyDelete
 14. ஆகா எங்கயோ அனுபவித்து எழுதியதுபோல் உள்ளதே!..
  உண்மையைச் சொல்லுங்க நீங்க ஆசிரியர்தானே?......
  கவிதை றொம்ப நல்லா இருக்குங்க............

  ReplyDelete
 15. மனதைக் கனக்க வைக்கிறது உங்கள் கவிதை...

  பாவம் அந்தச் சிறுவன்.

  ReplyDelete
 16. கவிதை அல்ல இது-சிறு
  காவியம்-என்
  கண்களில் தெரி வது-நல்ல
  ஒவியம்
  அருமை நண்பரே அருமை

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. நெகிழ்ச்சியான சம்பவம்
  மனங்கவர்ந்த நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 18. ஆஹா இப்படி ஒரு கவிதையை நான் வலை உலகில் வாசித்ததே இல்லை சாதாரண வார்த்தைகள் தான் அது தரும் உணர்வுகள் மனதை தொடுகிறது கவிதை வாசிக்கும் போது நிகழ்வுகள் படமாக ஓடுகின்றது
  உண்மையில் இது ஒரு குறும்படத்துக்கான நல்ல கதை

  ReplyDelete
 19. மனதை தொட்ட கவிதை  வலைசரத்தில் இன்று ...
  கண்ணை நம்பாதே

  ReplyDelete
 20. மாணவர் மனம் அறிந்து நடக்கும் ஆசிரியர் போல ... வாழ்க வளமுடன் ....

  ReplyDelete
 21. ரொம்ப டச்சிங்கா இருந்துச்சு கருன்.

  ReplyDelete
 22. மனம் நெகிழ்ந்து போனேன்.

  ReplyDelete
 23. தலைப்போடு பொருந்தவில்லை..

  என்றாலும்..

  மனம் கனத்தது.

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 24. அன்பின் கருண்

  அருமை அருமை - கவிதை - ஆசிரியருக்கு வந்த சோதனை - ம்ம்ம்ம்

  கழற்றிப் போடும் வரை
  விடுப்புப் போட்டு

  நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 25. இனி சட்டை போடுவதற்கும்
  அட்டவணை போடவேண்டும்
  நான்...!
  //

  ஆசிரியப் பணியே அறப் பணியே என அதற்கே அர்பணித்த சிற்பிக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. அழுத்தமான கவிதை...

  அடுத்தவரின் மனநிலையை புரிந்தால் தான் நாமும் அர்த்தப்படுவோம்..

  ReplyDelete
 27. Sir, Really touching. The blog is super. Best wishes. Venkat.

  Visit www.hellovenki.blogspot.com and comment please

  ReplyDelete
 28. நிஜமாவே மனதை என்னவோ பண்ணுது கவிதை....! வாழ்த்துக்கள், ஆனா இந்த மாதிரி அடிக்கடி எழுத வேணாம்.... !

  ReplyDelete
 29. கவிதை முற்றிலுமாக சிறப்பு என்றிட முடியாது... ஆனால் உட்கருத்து போல சிறப்பு வேறெதுவும் இல்லை..

  ReplyDelete
 30. நல்ல பதிவு . படித்த பின் மனம் வலித்தது. மனதை தொட்ட பதிவு. வாத்தியார் ஐய்யாவுக்கு இந்த பதிவுக்கு 100 க்கு 99.9 மார்க்குதான் தருவேன். தலைப்பை மட்டும் கொஞ்சம் சொதப்பிவிட்டீர்கள். திருத்தி வாருங்கள் உங்களுக்கு 100 கு 100 தருகிறேன்,

  நான் சொல்லிய கருத்து உங்கள் மனத்தை புண்படுத்தியாதாக கருதினால் மன்னிக்கவும். வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. சட்டையை மாற்றுவது இல்லாமல் ஒரு ஆசிரியராக தந்தையின்
  அன்பையும் தரலாம்

  ReplyDelete
 32. கருன்

  அருமையான பதிவு ஞாபகம் எதிலும் வருமல்லவா


  நன்றி
  ஜேகே

  ReplyDelete
 33. நெஞ்சை நெகிழ வைத்துவிட்டீர்! அருமை!!

  ReplyDelete
 34. உணர்வுகள்
  ஒத்தடமிடலாம்
  உபவத்திரமாகவும் இருக்கலாம்

  ReplyDelete
 35. அற்புதமான கவிதை. நெஞ்சை கரைக்கிறது...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"