Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/15/2011

குற்ற உணர்ச்சி..! - பள்ளியில் நடந்த சில உண்மைகள் -3


1.


வீட்டுப் பாடம் 
எழுதாதற்காய்
முட்டிப் போடச் சொன்னேன் 
சிறுவனை...
மனசுக்குள் உறுத்தியது 
அன்று 
கையெழுத்து வாங்க வேண்டிய 
நோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
தலைமை ஆசிரியரிடம் 
காட்டாதது.....


2.


குற்ற உணர்ச்சியில்
குறுகிப் போகிறது மனசு..


மாணவர்களின்
பிரிவு உபச்சார விழாவில்..


யாரோ சமைத்ததைதான்
பரிமாறினோம்...


சமைக்க சொல்லித் தரவேயில்லையே 
நான் 
இறுதிவரை...!

40 comments:

 1. >>யாரோ சமைத்ததைதான்
  பரிமாறினோம்...

  maapLaa.. மாப்ளே.. வாரம் 3 காப்பி பேஸ்ட் போஸ்ட் போடரது உண்மை தான். இப்டி என்னை பப்ளீக்கா தாக்கனுமா? ஹி ஹி

  ReplyDelete
 2. பாசக்கார வாத்திடா நீ மாப்ள!

  ReplyDelete
 3. உங்களுக்கு ஒரு நியாயம்... பசங்களுக்கு ஒரு நியாயமா? நடு கிரவுண்டில் போய் முட்டிக்கால் போடும்மையா வாத்தியாரே...

  ReplyDelete
 4. சமைக்க சொல்லித் தரவேயில்லையே
  நான்
  இறுதிவரை...!//

  குற்ற உணர்வுதான். ஆசிரியருக்கு சமைக்கத்தெரியுமா என்ன!
  படித்ததை ஒப்பிக்கத்தானே தெரியும்!!

  ReplyDelete
 5. \\\வீட்டுப் பாடம் எழுதாதற்காய்முட்டிப் போடச் சொன்னேன் சிறுவனை...மனசுக்குள் உறுத்தியது அன்று கையெழுத்து வாங்க வேண்டிநோட்ஸ்ஆப்லெசன்(பாடக்குறிப்பு)தலைமைஆசிரியரிடம் காட்டாதது.....\\\\ ஆனா இதுக்கெல்லாம் அந்த பையன் காம்ப்ரமைஸ் ஆகமாட்டான் வாத்தி ....

  ReplyDelete
 6. மனதை உறுத்துக்கும், வ(லி)ரிகளைக் கவிதையாக்கிருக்கிறீங்க.

  ReplyDelete
 7. எல்லோர் மனதிலும் இருக்கிறது குற்றஉணர்வு...

  ReplyDelete
 8. நல்லா இருக்கு கரூன்

  ReplyDelete
 9. சிறந்த பதிவு

  ReplyDelete
 10. கையெழுத்து வாங்க வேண்டிய
  நோட்ஸ் ஆப் லெசன் (பாடக் குறிப்பு)
  தலைமை ஆசிரியரிடம்
  காட்டாதது.....


  அதானே , மாமியார் உடைச்சா மன்சட்டி ,மருமகள் உடைச்சா பொன்சட்டி

  ReplyDelete
 11. நிஜமான பதிவு
  மனம் உறுத்தத்தான் செய்கிறது.

  ReplyDelete
 12. //சமைக்க சொல்லித் தரவேயில்லையே
  நான்
  இறுதிவரை...!

  தைக்கும் வார்த்தைகள். ஆசிரியனாய் இருப்பதால் வலி புரிகிறது. நானும் இன்னும் சமைக்க சொல்லித்தர தொடங்கவில்லை.

  ReplyDelete
 13. ////யாரோ சமைத்ததைதான்
  பரிமாறினோம்...
  //////

  வேறு வழி?

  ReplyDelete
 14. /////சி.பி.செந்தில்குமார் கூறியது...
  >>யாரோ சமைத்ததைதான்
  பரிமாறினோம்...

  maapLaa.. மாப்ளே.. வாரம் 3 காப்பி பேஸ்ட் போஸ்ட் போடரது உண்மை தான். இப்டி என்னை பப்ளீக்கா தாக்கனுமா? ஹி ஹி
  ///////

  இது ஒருவாரத்துக்கா ஒரு நாளைக்கா அண்ணே?

  ReplyDelete
 15. உணர்வுகள் நியாயம். குற்ற உணர்வுகளாய் அவை இருக்கத்தேவையில்லை.

  ReplyDelete
 16. குற்ற உணர்வை எடுத்துக் காட்டும்
  முறை நன்று

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 17. பிறர் குற்றம் காணும் நம் குணத்துக்கு சாட்டையை அடிக்கும் நல்ல கவிதை பாஸ்

  ReplyDelete
 18. நாம தப்பு செய்திட்டு,அத வெளிக்காட்டாம அடுத்தவர் செய்த தப்பை சுட்டிக்காட்டும்போது மனதிற்குள் கொஞ்சம் நெருடலாகதான் இருக்கும்.
  ஆனாலும் தவறை உணர்ந்துவிட்டால்,அதற்குபிறகு அந்த தவற்றை தவிர்த்துக்கொள்ளலாமல்லவா.
  சிலர் தவறை உணர்வதுமில்லை,உணர்ந்தாலும் போட்டு மூடிவிட்டு தாம் நல்லவர்கள் போல வெளியுலகுக்கு காட்டிக்கொள்வார்கள்.அதே நேரம் அடுத்தவர்களின் குறைகளையே எந்தநேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
  நீங்கள் தவறு செய்ததை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.ஆகவே உங்களை அந்தப் பட்டியலில் சேர்க்கமுடியாது.
  இனிமேல் அவ்வாறு நடந்துகொள்ளமாட்டீர்கள்.

  ReplyDelete
 19. குறுகிய பதிவு வாசிக்க மிக இலகு,,,
  !!! அத்தனைக்குள்ளும் அழகான கருத்து நிறைந்த பதிவு,,
  வாழ்த்துக்கள்,,,,,

  ReplyDelete
 20. பாசக்கார வாத்தி வாழ்க.....!!

  ReplyDelete
 21. மனசாட்சியின் கூண்டிலேறி நிற்கும் கவிதைகள் Good

  ReplyDelete
 22. //சமைக்க சொல்லித் தரவேயில்லையே
  நான்
  இறுதிவரை...// very good.

  ReplyDelete
 23. நீங்களாச்சும் பாடம் சொல்லிகொடுத்து படிக்கலேன்னு முட்டி 255536போடச்சொல்றீங்க.சில வாத்திமாருக,டீயுசனுக்கு(பணம் கட்டி)
  வரலேன்னு அடிக்கிறாங்க சார்.

  ReplyDelete
 24. கவிதைகள் கலக்கல்.

  ReplyDelete
 25. ம்ம்ம் சூப்பர்!!!(டெம்ளேட் கமென்ட் இல்லை)ஹிஹி

  ReplyDelete
 26. உறுத்துய மனச்சாட்சி வரிகளில் வெளிப்படையாகத் தெரியுது !

  ReplyDelete
 27. சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஆசிரியர்? அருமையான கவிதை.இப்போ உள்ள தலைமுறைகளுக்கு அருமையான விருந்தை பறிமாறினாலே போதும். சாப்பிட்டுப்பார்த்தே மிகமிக ருசியான சமையலை தயாரித்துவிடுவார்கள். குற்ற உணர்ச்சி வேண்டாம். அதிபுத்திசாலிகள் இந்த இளைய தலைமுறையினர்.

  ReplyDelete
 28. சுய பரிசோதனை செய்துகொள்ளும் ஆசிரியர்? அருமையான கவிதை.இப்போ உள்ள தலைமுறைகளுக்கு அருமையான விருந்தை பறிமாறினாலே போதும். சாப்பிட்டுப்பார்த்தே மிகமிக ருசியான சமையலை தயாரித்துவிடுவார்கள். குற்ற உணர்ச்சி வேண்டாம். அதிபுத்திசாலிகள் இந்த இளைய தலைமுறையினர்.

  ReplyDelete
 29. கடமைக்கு வந்து பாடம் போல் நடத்திவிட்டு ..எல்லாரும் பாத்துக்குங்க நானும் ஆசிரியர் தான் நானும் அசிரியர் தான்... ஆசிரியர் பொருப்பு என்பது எவ்வளவு உன்னதம் என்பதை உணர்ந்தால் ......

  ReplyDelete
 30. ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்லடி கண்ணே......

  ReplyDelete
 31. குற்ற உணர்வை வெளிய சொல்றதுக்கும்
  ஒரு மனசு வேணும்ங்க...வாழ்த்துக்கள்

  நேரம் கிடைச்சா நம்ம பக்கமும் கொஞ்சம் வாங்க
  http://gokulmanathil.blogspot.com/

  ReplyDelete
 32. அருமையான சிந்தனை ! என் வாழ்த்துக்கள் ....

  ReplyDelete
 33. உங்களுக்கு சமைக்க தெரியுமா தலைவா?

  ReplyDelete
 34. உங்களுக்கு ஒரு விருது வழங்கி உள்ளன் தயவு செய்து ஏற்று கொள்ளவும் ..

  மிக சிறந்த பல்சுவை வலைத்தளம் விருது

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"