Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/20/2011

வேற எப்படித்தான் நான் இருக்குறது சொல்லுங்க?திர் கருத்தை
வெளிப்படுத்தினால்
மண்டைக்கனம்...


ரியானவற்றை
ஆமோதித்தால்
ஜால்ரா...


சும்மா இருப்பதே
சுகமென்றிருப்பின்
கழுவிய மீன்களில்
நழுவிய மீன்...


னித்துவமாய்
பேசினால்
தம்பட்டம்...


திராளியின்
முகம் பார்த்து
அகம் ஆய்ந்து
பேசக் கற்பதற்குள்
முடிந்து போகிறது
முக்கால்வாசி
ஆயுள்..

41 comments:

 1. நியாயமான கேள்வி தான், நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது

  ReplyDelete
 2. அற்புதம் கருண்,

  வாழ்ந்தாலும் ஏசும்
  தாழ்ந்தாலும் ஏசும் வையகம்
  இதுதானடா ?

  என்று இதனால் தான் சொன்னார்களோ ?

  வாழ்த்துக்கள்.

  http://sivaayasivaa.blogspot.com

  சிவயசிவ

  ReplyDelete
 3. கருன், முற்றிலும் உண்மையான கருத்து ! அருமை !!
  ( நான் ஜால்ரா அடிக்கிறதா நெனச்சுக்காதீங்க மக்களே ஹி ஹி .... )

  ReplyDelete
 4. அவரவர் சுயநிலையில் இருந்தால் நன்று.
  போற்றுவார் போற்றலும் -புழுதி வாரித் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே!!

  ReplyDelete
 5. இதுக்குத்தான் எவன் பேச்சையும் கேட்கக் கூடாது.......!

  ReplyDelete
 6. எந்த பதிவருக்கு பதில் இது மாப்ள....எனக்கு புரிஞ்சி போச்சி ஹிஹி!

  ReplyDelete
 7. முன்ன போனா கடிக்கும் ,பின்ன போனா உதைக்கும் .

  யதார்த்தமான உண்மையை சொல்லியிருக்கிறீர்கள் .

  மறுக்க முடியாத உண்மை இது .

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 8. அட்டகாசம் பாஸ்!

  ReplyDelete
 9. அருமையான கருத்து ..ஆமா உங்களுக்கு அவ்ளோ வயசாயிடுச்சா?
  :-)

  ReplyDelete
 10. எதிராளியின்
  முகம் பார்த்து
  அகம் ஆய்ந்து
  பேசக் கற்பதற்குள்
  முடிந்து போகிறது
  முக்கால்வாசி
  ஆயுள்..

  உங்களது ஆதங்கம் உண்மையானது தான் என்ன செய்ய நாம் மனிதர்கள்...
  கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

  ReplyDelete
 11. எதுக்கு பீலிங்????

  நீங்க சொன்னதுல ஒரு மாதிரி இல்லாமல் எல்லாம் மாதிரி இருங்க. ஐ மீன் ஐ ஆம் மாதிரி ;)

  முன்னேறுனாலும் திட்டுவாங்க, வெட்டியா இருந்தாலும் திட்டுவாங்க. எதுக்கு அவங்களுக்காக பயப்படணும். உங்கள மாதிரி இருங்க. அடுத்தவங்களுக்காக நம்மை மாத்த முயற்சி பண்ணா வாழ்க்கை புல்லா அடுத்தவங்களுக்காகவே வாழணும்(பழமைவாதிகள் முன்னேறாம இருக்குறதுக்கு இது தான் காரணம்).

  ReplyDelete
 12. இப்படி தான் உள்ளது சகலமும். இதில் நீந்தி தான் கரையேற வேண்டும்.

  ReplyDelete
 13. கமெண்ட்ல எப்பவும் போடுவீங்க நைஸ், கலக்கல்-னு அதே மாதிரியே லைஃப்லயும் இருங்க..ஒரு பிரச்சினையும் வராது.

  ReplyDelete
 14. நியாயம்தான்... நிறைய யோசிக்க வேண்டி இருக்கிறது

  ReplyDelete
 15. மாப்ளே. நீ எப்பவும் போல மப்புலயே இரு,, அப்போதான் உன் சம்சாரம் உன்னைப்பார்த்து பயப்படும் ஹி ஹி

  ReplyDelete
 16. எதிராளியின்
  முகம் பார்த்து
  அகம் ஆய்ந்து
  பேசக் கற்பதற்குள்
  முடிந்து போகிறது
  முக்கால்வாசி
  ஆயுள்..

  உண்மை...அழகான, ஆழமான கருத்துக்கள்

  ReplyDelete
 17. சிறுகக்கட்டிப்
  பெறுக வாழ்
  என்பதற்கு நீர் ஒரு எடுத்துக்
  காட்டு.
  அருமை கருண்
  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 18. அப்ப எப்படி தான்யா பேசுறது மாப்ள நீ கேட்டது கரக்ட் தாண்டா

  ReplyDelete
 19. நல்ல பதிவு.
  நமக்கு எது சரி என்படுகிறதோ அதை செய்ய வேண்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நச்ன்னு சொல்லி இருக்கீங்க நண்பா!!

  ReplyDelete
 21. வாழ்க்கையின் முகங்கள் - நச்சுனு பதிவு

  ReplyDelete
 22. அது சரி.....

  வீட்டுக்கு ஆட்டோ வந்துச்சோ??? இல்ல மிரட்டல் மெயில் வந்துச்சா?

  எதுக்கு இந்த திடீர் பீலிங்க்???!!!

  ReplyDelete
 23. இப்பவே கண்ண கட்டுதே .........

  ReplyDelete
 24. இதைத்தான் சமுதாயம் என்று சொல்கிறோம்...

  ReplyDelete
 25. நியாயமான கேள்விதான். ஆனால் அடுத்தவர் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலேயே நாம் பாதி நிம்மதியை இழந்து விடுகிறோம். ஆகவே இவற்றை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது. நன்றி நண்பரே...

  ReplyDelete
 26. //எதிராளியின்
  முகம் பார்த்து
  அகம் ஆய்ந்து
  பேசக் கற்பதற்குள்
  முடிந்து போகிறது
  முக்கால்வாசி
  ஆயுள்..//

  Nice...

  ReplyDelete
 27. நறுக்குத் தெரித்த நாலு வரிகள்.

  ReplyDelete
 28. நச்சென்று கூறிய உங்களுக்கு வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 29. ரைட்டு மாப்ளே... நீங்க சொல்றது சரி தான்.

  ReplyDelete
 30. அடடா இதத்தான் சொன்னீகளா...! நா வேற பயந்துட்ட
  என்னுடைய ஆக்கத்துக்கு கீழ இந்தத் தலைப்ப
  போட்டதும் எனக்கு தலைகால் புரியல.என்னமோ
  என்னட்டக் கேள்வி கேட்டமாதிரி இருந்திச்சு ஹி...ஹி...ஹி....
  அருமையான பதிவு அருமையான பதிவு என் கணக்கின்படி
  இது இன்றைய இரண்டாவது ஆதங்கம் அப்படித்தானே சகோ?...
  தொடருங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. தத்துவமாச்சே ! சூப்பர்ப்

  ReplyDelete
 32. அருமை அருமை
  சரி அடுத்தவரிடம் பேசினால்தான் பிரச்சனை
  நமக்குள்ளே நாமே பேசிக்கொள்வோம் என்றாலும்
  பைத்தியம் எனச் சொல்லிவிடுகிறார்கள்
  வித்தியாசமான சிந்தனை
  அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 33. முன்னால போனா முட்டுது.. பின்னால போனா உதைக்குது .... அப்பறம் என்னதான் பண்றது இந்த லோகத்துல வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 34. நீங்க நீங்களாகவே இருங்க .

  ReplyDelete
 35. மிகச் சரியாகச் சொன்னீர்கள்..

  ReplyDelete
 36. சரியாத்தான் யோசிக்கிறீங்க...

  ReplyDelete
 37. இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நீ நீயாக இரு!!

  நல்ல கவி நண்பரே! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 38. அற்புதம் கருன்!!!!

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"