Tamilus

The best Tamil Aggregator | Tamilus

7/21/2011

கறுப்புப் பணத்தில் குடும்பத்துக்கு ஒரு கோடி !ந்தியத் திருநாட்டில், நவீன இந்தியாவில் ஆண்டுதோறும் கறுப்புப் பணம் பறிமுதல்தான் எத்தனை கோடிகள்...

- லஞ்சப் பணமாக சிக்குவது கோடிகளில்...

- திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக கோடிகள், தங்க ஆபரணங்கள் கணக்கில் கொள்ளா இருப்பு...

- மருத்துவ பல்கலைக்கழக தணிக்கை அதிகாரி வீட்டில் கணக்கில் வராத லஞ்சப் பணமும் கோடிகளில்...

- கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களை ஏலத்தில் வாங்கவும் கோடிகள்...

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புரளுவதும் கோடிகள்...

இப்படி நாள்தோறும் பெருகிவரும் கோடிகள்தான் எத்தனை எத்தனை.

- இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 103 கோடி.

- வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்க்கை வாழ்பவர்கள் 25 கோடி.

- ஒருவேளை கஞ்சிக்கும் இல்லாதார் 30 கோடி.

என்ன முரண்பாடு...?

மக்களுக்கு என்ன அடிப்படைத் தேவை ?. இருக்க இடம், உண்ண உணவு, உடுத்த உடை கற்க கல்வி, சுகாதரமான வாழ்விடம் ஆகியவை.

சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகளை கடக்கிறோம். தனக்கென வாழ்விடம் இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை கோடி?. ஒருவேளை உணவுக்கும் நாயாய், பேயாய் அலைந்து, உழைத்து உண்ணும் மக்கள் எத்தனை கோடி?.

அடிப்படை வசதியில்லாத - சுகாதாரச் சீர்கேட்டுடன் வாழும் மக்கள்தான் எத்தனை கோடி...? இது தனி மனித கோளாறு என்று புறந்தள்ளிவிடல் கூடாது ; முடியாது.ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளாய் கறுப்புப் பணம் புழங்குவதும்... ஒரு பக்கம் ஆயிரமாயிரம் கோடிகளில் லஞ்சம் தாண்டவமாடுவதும்... ஒரு பக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் இவ்வளவு என்று புள்ளி விபரம் கூறுவதும்... என்ன ஐந்தாண்டு திட்டம்... என்ன அதன் வளர்ச்சி?.

இத்தனைக் கோடி கறுப்புப் பணம், லஞ்சப் பணத்திலிருந்தே வறுமையில் வாடும் வேலையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், கல்வியறிவு அற்றோர்க்கு என நலவாழ்வுக்கு குறைந்த பட்சம் ஒரு குடிமகனுக்கு (இல்லாதோருக்கு) ஒரு கோடி திட்டத்தில் அவனது வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட முடியாதா? என்பதே நம்முன் எழும் கேள்வி.

உதாரணமாக :

ஒரு குடும்பத்துக்கு ஒரு கோடி திட்டம் என்ற வகையில் அவர்கள் வாழ ஒரு இடம், இல்லம் அமைத்து தந்து அதனை விற்கவோ ,அடமானத்துக்கு வைக்கவோ, வாடகைக்கு விடவோ அனுமதிக்காமல் அவை அவர்களில் வாரிசுதாரருக்கு, வாரிசு அல்லாத பட்சத்தில் உறவுகளுக்கு மட்டுமே என்று வரையறை தந்தும்... கட்டாய வேலைவாய்ப்பு அவரவர் தகுதிக்கேற்ப உருவக்கி தொழில் அல்லது பணி தந்தும்... கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்தி வறுமையில் வாடும் குடும்பத்தினர்க்கு வழிகாட்டி வாழ்வாதாரத்துக்கு அடிப்படை திட்டம் தீட்டினால்தான் என்ன...? இது சாத்தியம் தானே...?

திருப்பதியில் கொட்டிக்கிடக்கும் வருவாயிலிருந்து இந்தியாவின் அனைத்து மக்களுக்கும் இலவச கல்வி தரலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

கறுப்பு பணம் - லஞ்சப் பணம் - தனிமனித சொத்துக் குவிப்பு இவைகளை கொண்டே மக்கள் நலதிட்டங்களுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உருவாக்கிவிடலாமே... இதில் என்ன தயக்கம் இங்கு ஆளும் அரசியலர்க்கு. மேலும், ஒரு அரசு என்று ஏன் இருக்கிறது ? எதற்கு இருக்கிறது ?.

மக்களாக பிறந்த எல்லோருக்கும் பசி, தாகம் இருக்கிறது. அவர்கள் வாழ ஓரிடம் வேண்டியிருக்கிறது. குளிர், வெய்யிலிருந்து காப்பாற்றிக் கொள்ளவும், மானத்தை காத்துக்கொள்ளவும் ஆடை அணிய வேண்டியிருக்கிறது. அத்தியாவசியமான சுய தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தின் கடமைகளை நிறைவேற்றவும் தனக்கென ஒரு வேலையினை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இது தவிர்த்து தன்னுடைய இனம், சமுதாயம், தேசம் இவற்றுக்கெல்லாம் ஆற்ற வேண்டிய கடமை ஓவ்வொருவருக்கும் உண்டு.பலர் கூடி வாழுகிற சமூகத்தை, அவர்களது பல நற்செயல்களில் இடையூறு இல்லாமல் சமூகம் முழுவதும் நலம் பெறும் வகையில் சீராக வைத்திருக்க வேண்டும் இப்படி செய்வது ஓர் அரசின் கடமை.

இதனை தவிர்த்து... தங்கள் சுய நலத்துக்காக சமூக வளர்ச்சி என்ற பெயரில் ஆலைகள் சமைப்பதும், அணைகள் கட்டுவதும், நாற்சக்கர சாலைகள் அமைப்பதும்... விண்ணில் உலா வர வழி செய்வதும் சரியான மக்கள் நல வளர்ச்சித் திட்டம் என்று சொல்லிவிட முடியுமா ?.

வளர்முக நாடுகளில், நவீன இந்தியாவில் அரசுக்கும் தனிமனிதர்களுக்கும் எத்தனை நன்மைகள் வளர்ச்சிகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வான - அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு சமூகம், வளர்ச்சியை நோக்கி நடை போடுகிறது என சொல்வது என்ன பம்மாத்துத்தனம்.

இந்தியாவின் பாதுகாப்புக்கென காவலர்களையும், நீதி மன்றங்களையும் வளர்த்து கோடிக்கணக்கில் செலவிடுவதும் தேவைதான். எனினும் ஆளும் அரசுகள் அடித்தட்டு மக்களுக்கான வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும். சொந்த நலன்களை கருதாமல், அரசின் பணிகள், திட்டங்கள் பணம் பண்ணும் தொழிலாக ஆக்காமல், அடிப்படை வசதியற்ற மக்களுக்கு சேரவேண்டிய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே வறுமையைப் போக்கும் வழியாகும்.

அரசுகள் தங்கள் சாதனைகளை வெளிச்சமிட்டுக்காட்ட செலவுகள்தான் எத்தனை கோடிகள்... மாநாடுகள், அரசு விழாக்கள், அரசுகளிடையே பேச்சுவார்த்தைகள், அவை புறக்கணிப்பு என்ற பெயரில் விரயமாகும் கோடிகள் எத்தனை... இந்தக் கோடிகளில் வறுமையால் வடும், அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு சில கோடிகளை ஒதுக்கினால் என்ன...?

அடிப்படை வசதிகள் அற்ற எந்த தேசத்துக்கும், அரசுக்கும் பேரிடியாய், பேரிடராய் உருவாகுவதே தீவிரவாதம் - நக்சல்கள் என்பதை அரசு எப்போது உணருகிறதோ - வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுகிறதோ அப்போதே ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடியும். 

அப்படி ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால்தான் பல்வேறு நிறத்தவராய், இனத்தவராய், மொழியினராய், கலாச்சார பண்பாடுடையவராய் வாழும் இத்திருத் தேசத்தை வளம்பெற செய்ய முடியும் என்பதை உணர்வோம்.

Thanks : Nandavanam.

24 comments:

 1. விழிப்புண்ர்வா?நடத்துங்க

  ReplyDelete
 2. நல்லது சொன்னா எவன் கேட்குறான்

  ReplyDelete
 3. //இத்தனைக் கோடி கறுப்புப் பணம், லஞ்சப் பணத்திலிருந்தே வறுமையில் வாடும் வேலையற்றோர், இருப்பிடம் இல்லாதோர், கல்வியறிவு அற்றோர்க்கு என நலவாழ்வுக்கு குறைந்த பட்சம் ஒரு குடிமகனுக்கு (இல்லாதோருக்கு) ஒரு கோடி திட்டத்தில் அவனது வாழ்வாதாரத்துக்கு வழிகாட்ட முடியாதா? என்பதே நம்முன் எழும் கேள்வி.//

  //கறுப்பு பணம் - லஞ்சப் பணம் - தனிமனித சொத்துக் குவிப்பு இவைகளை கொண்டே மக்கள் நலதிட்டங்களுக்கும், அடிப்படை வசதிகளுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உருவாக்கிவிடலாமே... //

  //அடிப்படை வசதிகளற்ற மக்களுக்கு சில கோடிகளை ஒதுக்கினால் என்ன...?//

  மனதின் கொந்தளிப்புக்கு மருந்து கிடைக்குமா.... சந்தேகம்.
  வரவேற்க்கபட வேண்டிய ஆதங்கம்...

  ReplyDelete
 4. வேதனையான விஷயம் தான் நண்பரே .

  ReplyDelete
 5. சமூக அக்கறையுள்ள பதிவு.

  ReplyDelete
 6. நியாயமான கருத்துதான் ......

  ReplyDelete
 7. ஆகா எத்தனை கோடி!..... தேவையான கோடி நாட்டுக்குத்
  தேவையில்லாத கோடி இரண்டையும் அழகாக நுட்பமாகக்
  கையாண்ட விதம் அருமை!... சமூக விழிப்புணர்வுப் பதிவு
  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.............

  ReplyDelete
 8. விழிப்புணர்வுக் கட்டுரைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. ஒன்னு கவனிச்சீங்களா?
  கோடி கணக்குல கொள்ளை அடிச்சவன் மேல வருஷ கணக்கா கேஸ் நடக்கும். இந்தா 2000, 3000 ரூபாய் வாங்குறாங்க பாருங்க அந்த துணை தாசில்தார், பேங்க் மேனேஜர், ட்ராபிக் போலீஸ் இவங்களாம் மாட்டுனா ஒடனே சிறை தண்டனையும் அபராதமும்

  நீதியும் நிதி பக்கம் தான் சாய்கிறது.. :(

  நல்ல பதிவு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. வெளுத்து வாங்கிடீங்க..

  ReplyDelete
 11. கெடைக்க வேண்டியதை கெடுக்குறவங்க இருக்க தானே செய்யுறாங்க!!

  என்னாத சொல்லுறது

  கொஞ்சம் அளவு மீறி தான் போச்சு

  ReplyDelete
 12. நண்பரே எல்லோருக்கும் ஒரு கோடி வீதத்தில் வசதி செய்து கொடுத்தால் பொருளாதார ரீதியாக பல குழப்பங்கள் வந்து, பண மதிப்பு பாதாளத்துக்கு சென்று விடும். ஆனால் அந்த பணத்தை வைத்து தொழில் வளத்தை பெருக்கலாம்.

  ReplyDelete
 13. கருனுக்கு சாமி வந்துடுச்சா..என்ன ஒரு ஆவேசம்..சூப்பர் கருன்.

  ReplyDelete
 14. சமூக அக்கறையுள்ள பதிவு.

  ReplyDelete
 15. விழிப்புணர்வு பதிவு.....!!!

  ReplyDelete
 16. ஒரு கோடியா!ஹம்மா!
  நல்ல பகிர்வு.

  ReplyDelete
 17. அற்புதமாக சிந்திக்கிறீர்கள் நண்பரே,

  என்ன வளம் இல்லை இந்த நாட்டில்
  என்று அன்றே பாடினான் கவிஞன்.

  கறுப்பு பண்ம் மட்டும் கைக்கு வந்து
  அதை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளித்தால் ?

  ம்ம்ம்ம்

  ReplyDelete
 18. அப்டி கேளுங்க நாக்க புடுங்கிக்கிற மாதிரி

  ReplyDelete
 19. இந்த கோடி அல்லது இந்த கோடி கோடின்னாலே பிரச்சினைதான்..போல..

  ReplyDelete
 20. சமூக அக்கறையுள்ள பதிவு.. தொடருங்கள் கருன்

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"