Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/23/2011

மடியில் கனம், வழியில் பயம் உண்மைதானே முத்தமிழ் அறிஞரே?கடந்த, ஐந்து ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், தி.மு.க.,வினரால் தங்கள் சொத்து, நிலங்களை பறிகொடுத்து தவிப்பவர்கள் குறித்த செய்திகளை, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, அ.தி.மு.க., பொதுச் செயலரான ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.தன் கட்சி, மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால், தி.மு.க.,வினரால் மோசடி செய்து, அபகரிக்கப்பட்ட நிலங்களையும், சொத்துக்களையும் மீட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க, தன் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று அறிவித்தார். அவ்விதமே முதல்வரானதும், தான் சொன்னபடி, நில அபகரிப்பு சம்பந்தமான புகார்களை விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ள ஆணை பிறப்பித்தார்.


இதன் விளைவாக, தமிழகத்தின் அனைத்து மாவட்ட காவல் துறை 
அலுவலகங்களிலும், நில மோசடி புகார்கள் குவிந்தவண்ணம் உள்ளன. இதில், தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு; திருச்சி துணை மேயர் அன்பழகன், மாவட்ட செயலர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் என, பலர் மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டு, காவல் துறையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதை, நாளிதழ்கள் வாயிலாக அறிய முடிகிறது.


இத்தகைய சூழலில், முன்னாள் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும், அ.தி.மு.க., ஆட்சி, தி.மு.க.,வினர் மீது அராஜகத்தையும், அடக்குமுறையையும் ஏவி வருவதாகவும், பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி, கட்சியை அழிக்க ஜெயலலிதா முயற்சித்து வருவதாகவும், குற்றம் சாட்டியுள்ளனர்.


இன்றைய முதல்வர் ஜெயலலிதா மீது, தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும், அவர், கோர்ட்டில் சந்திக்கவில்லையா? இன்றும் அவர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு ஒன்று, பெங்களூரு கோர்ட்டில் நடந்துக் கொண்டிருப்பது தி.மு.க.,வினருக்கு மறந்து போய் விட்டதா?


தற்போதைய அரசு, தி.மு.க.,வினர் மீது, போடும் வழக்குகள் அனைத்தும், பொய்யானது என்று கூறும் முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும், அதை, தம் கட்சியினரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க செய்யலாம்.அரசின் அராஜகம், அடக்குமுறை, பொய் வழக்குகள் என்று புலம்பித் தவிப்பதை பார்க்கும்போது, அச்சப்படுவது போலத் தெரிகிறது.

18 comments:

 1. இன்னமும் அவரை உசுப்பேத்துறின்களே...

  நியாயமா?
  அடுக்குமா?

  ReplyDelete
 2. உள்ளாட்சி தேர்தலுக்குள் இன்னும் சில கரை வேட்டிகள் களி தின்னுமாம்

  ReplyDelete
 3. அரசியல்வாதிகளைப் போல நகைச்சுவை நடிகர்களை......

  இனிவரும் காலங்களிலும் திரைப்படங்களில் காணமுடியா!!!!!!!தூ!!!!!!!!!

  ReplyDelete
 4. சூரியன் சுட்டத பாத்தியா....சூரியன யாரும் சுடமுடியாது...அதுவே சுட்டுக்கும்!

  ReplyDelete
 5. அன்பு நண்பர்களே உதவி தேவை


  http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

  ReplyDelete
 6. சூரியன் சுட்டத பாத்தியா....சூரியன யாரும் சுடமுடியாது...அதுவே சுட்டுக்கும்!

  ஆகா ஆகா பொன்னேட்டில் பொறிக்கப்படவேண்டிய வாசகம் .ஹி....ஹி....ஹி ......

  அண்ணாச்சி வட்டிக்கடையில இருந்து பையன் வந்தான் நீக்க போன இடத்தில

  ஓட்டப் போடாமல் வந்து விட்டீங்களாம் .உண்மையா?....

  ReplyDelete
 7. //தற்போதைய அரசு, தி.மு.க.,வினர் மீது, போடும் வழக்குகள் அனைத்தும், பொய்யானது என்று கூறும் முன்னாள் முதல்வரும், துணை முதல்வரும், அதை, தம் கட்சியினரை துணிச்சலுடன் எதிர்கொண்டு, தாங்கள் நிரபராதிகள் என்று நிரூபிக்க செய்யலாம்.அரசின் அராஜகம், அடக்குமுறை, பொய் வழக்குகள் என்று புலம்பித் தவிப்பதை பார்க்கும்போது, அச்சப்படுவது போலத் தெரிகிறது.//

  சரியாகச்சொன்னீங்க...
  அண்ணே கொஞ்சம் நேரம் இருந்தால் என் கடைப்பக்கமும் வந்து போங்க-இன்று என்கடையில்-தோனிக்கு சனி பிடித்துவிட்டதா?(சிறப்புப்பார்வை)http://cricketnanparkal.blogspot.com/2011/08/blog-post_23.html/மற்றும் நேற்று-மறக்க முடியாதா பாடசாலை நாட்கள்-http://cricketnanparkal.blogspot.com/2011/08/2.html

  ReplyDelete
 8. நன்றாக சொல்லியுள்ளீர்கள்

  ReplyDelete
 9. பயந்துபோய் தான் இருக்கிறார்கள் நண்பரே.....
  தவறு செய்யாதவர்கள் எனில் தைரியமாக
  சந்திக்கட்டும் வழக்குகளை.....

  ReplyDelete
 10. ரொம்ப சரி..

  மடியில கனம் இருக்கிறவங்க தானே பயப்படணும்!!??

  ReplyDelete
 11. கலைஞர் அத்தியாயம் அஸ்தமனம் ஆகிவிட்டது!புலம்பி என்ன பயன்?

  ReplyDelete
 12. இதை கூட அவங்க சொல்லலனா அவங்க தமிழ் நாட்டை விட்டு தலைமறவாகிட்டதா தினமலர் தலைப்பு செய்தி போட்டுடும். அதனால தான் தங்க தலைவர் தளபதி அப்பொ அப்போ குரல் கொடுக்கிறார்.

  ReplyDelete
 13. //அரசின் அராஜகம், அடக்குமுறை, பொய் வழக்குகள் என்று புலம்பித் தவிப்பதை பார்க்கும்போது, அச்சப்படுவது போலத் தெரிகிறது.//
  சந்தேகம் வேறா?

  ReplyDelete
 14. சரியான பதில் தோல்வியில விழுந்த நாய் இப்பவும் குரைக்குது பாருங்கையா

  ReplyDelete
 15. கலைஞருக்கே சவால் விட்டாச்சா...

  அவ்.........

  தல..உங்க பதிவுகள் என் டாஷ்போட்டில் தெரியமாட்டேங்குது,

  நான் செங்கோவி ப்ளாக்கில் பார்த்துத் தான் வந்தேன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"