Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/12/2011

அழகிரி மதுரையை விட்டே ஓட்டமா ? மதுரையில் பரபரப்பு!


இந்தச் செய்தியின் தலைப்பில் இருக்கும் கேள்விதான், மதுரை தி.மு.க.வினரின் தலையைக் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி. காரணம் என்னவென்றால், அப்படியொரு வதந்த கடந்த இரு தினங்களாக மதுரையில் பரபரப்பாக அடிபடத் தொடங்கியுள்ளது.

“அண்ணன் தற்போதைக்கு மதுரை வரமாட்டார்” என்று அடித்துச் சொல்கிறார்கள் மதுரை தி.மு.க. புள்ளிகள் சிலர்.

மதுரை போலீஸ் அவர் மீது வழக்குத் தொடர்வதில் மிகத் தீவிரமாக இருக்கிறது என்றே தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள் வந்து கொட்டுகின்றன என்று சொல்ல முடியாது. இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கைது செய்யும் அளவுக்கு ஸ்ட்ராங்காக ஏதும் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே காவல்துறை உள்வட்டத் தகவல்.

மனைவி காந்தி அழகிரி கோயில் நிலத்தை வாங்கிய விவகாரம் தமக்கு துருப்புச் சீட்டாக இருக்கும் என்றுதான் நினைத்திருந்தது மதுரை போலீஸ். அந்த விவகாரத்திலும், கையில் உள்ள ஆதாரங்கள் காந்தி அழகிரியைக் கைது செய்யப் போதுமானதாக இல்லை. அந்த விவகாரத்திலும் மேலும் ஆதாரங்களைத் திரட்டிக் கொண்டு இருக்கிறது போலீஸ்.

போலீஸ் தன்னைக் கைது செய்வதில் தீவிரமாக இருப்பது அழகிரிக்கும் நன்றாகவே தெரியும். இதனால் அவர், நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கி விட்டதால், அதில் பங்கேற்கச் செல்லும் சாக்கில் டெல்லி போய்விட்டார். கூடவே காந்தி அழகிரியையும் அழைத்துப் போயிருக்கிறார்.

கடந்த ஒரு வாரமாக இவர்கள் இருவருமே மதுரைப் பக்கம் வரவில்லை. இதனால்தான் அழகிரி மதுரையை விட்டே ஓடிவிட்டதாக மதுரையில் வதந்தி பரவியுள்ளது. நன்றி விறுவிறுப்பு.


21 comments:

 1. அடுத்த ஆப்பு அழகிரிக்கா...

  ReplyDelete
 2. 'கிரி" யே[மலை] "அழ'ற,ஆரம்பிடிச்சி,குடும்ப உருப்பினர்கலெள்லாம் க்ரேட் எஸ்கேப்ன்னு ஜூ.வி.ல படிச்சேன்.

  ReplyDelete
 3. ஒரு காலத்தில் மதுரையை கலக்கிக்கொண்டிருந்தவர், இப்போது கலங்கிக்கொண்டிருக்கும் நிலை.

  ReplyDelete
 4. கடந்த ஒரு வாரமாக இவர்கள் இருவருமே மதுரைப் பக்கம் வரவில்லை. இதனால்தான் அழகிரி மதுரையை விட்டே ஓடிவிட்டதாக மதுரையில் வதந்தி பரவியுள்ளது. நன்றி விறுவிறுப்பு.

  !!இருக்கலாம்,,,,
  அரசியல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 5. விறு விறுப்பான செய்திதான் !

  ReplyDelete
 6. அப்போ இன்னும் 5 வருசத்துக்கு மதுரைக்கு வரமாட்டாரா? ஸ்டாலின் அண்ணே, இதான் டைம்... பாத்துக்குங்க....!

  ReplyDelete
 7. உப்பு தின்னவன்
  தண்ணி குடிக்கதானே வேணும்!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 8. அண்ணே இவங்க எல்லாம் இப்பிடி தான் ஒண்ணும் ஆகாது பாருங்க

  வேணுமின்னா கீழே ஒரு லிங்க் குடுத்து இருக்கேன் CHENNAI ஈட் இல அர்விந்த் கேஜ்ரிவால் பேசுனது லோக்பால் வரைவு பத்தி, அதுல அவர் சிபிஐ பத்தி எல்லாம் பேசுறாரு ஊட ராஜா பேர் எல்லாம் சொல்றாரு
  இதை கேட்டதுக்கு அப்புறமும்

  http://www.youtube.com/watch?v=2CHcKlIsvAQ

  http://www.youtube.com/watch?v=mPIW_NPaRt0

  http://www.youtube.com/watch?v=54zUeKJYhd4

  http://www.youtube.com/watch?v=_6_vdFD_HUM

  ReplyDelete
 9. அழகிரிக்கு ஆப்பு ரெடி

  ReplyDelete
 10. வதந்தியாகத்தான் இருக்கும்.

  ReplyDelete
 11. இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டர் பாருங்கள்!

  ReplyDelete
 12. அவரு பொடி நடையா வாக்கிங் போயிருப்பாருய்யா ஹிஹி

  ReplyDelete
 13. அஞ்சா நெஞ்சனையே ஓட வச்சிட்டாங்களே..

  ReplyDelete
 14. மெய்யாலுமா பாஸ்? அப்போ அடுத்த தல ஸ்டாலின்தானே?

  ReplyDelete
 15. நில அபகரிப்பு வழக்கில் ஒரு அதிமுக காரர் கூட கைது செய்யப்படவில்லை. அத்தனைபேரும் உத்தமர்கள் போலும்!கைது செய்யப்படும் திமுககாரர்களும் போதுமான ஆதாரங்கள் இல்லாததால்,விசாரணை இல்லாத குண்டர் சட்டத்தில் அடைக்கப்படுகிறார்கள்.இந்த நிலையைப் பார்த்து அதிமுககாரர்களே பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கும் இதே கதிதானே!

  ReplyDelete
 16. நல்லா பிலிம் காட்டராங்கியா

  ReplyDelete
 17. எப்பிடியோ அம்மா அழகிரிக்கு பெரிய ஆப்பாதான் அடிப்பா....

  ReplyDelete
 18. மதுரையை விட்டு ஓட்டமா? தங்கப்பதக்கம் யாருக்கு..

  ReplyDelete
 19. உங்களால் முடிந்தால் எங்க அண்ணன் மேலே கைய வச்சி பாருங்கடா #இப்படி சொன்னாலாவது சீக்கிரம் பிடிச்சு போடுவாங்களா

  ReplyDelete
 20. போடுங்கம்மா ஓட்டு கைது சின்னத்த பாத்து

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"