Tamilus

The best Tamil Aggregator | Tamilus

8/13/2011

இது இலவச மருத்துவமனை - இங்கு ட்ரீட்மென்ட் Free


முகப்பு த்தகத்தில் கலக்கியவை.
மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
மனைவி: ???????????????????

**********************************************************************************

உங்க மனைவி நல்லா சமைப்பாங்களா?
என்ன இப்படி கேட்டுட்டீங்க?,
நான் சமைக்கலைன்னா அவ என்னை வறுத்தெடுப்பா,
காரம் அதிகமா இருந்தா பொங்கிடுவா.
உப்பு அதிகமாகிடிச்சின்னா என்னை தாளிச்சிடுவா..**********************************************************************************

நர்ஸ்: நம்மகிட்டே ஒரு யூனிட் ரத்தம் தான் இருக்கு. ஆனா ரெண்டு யூனிட் தேவைப் படுது...டாக்டர்!
டாக்டர்: பரவாயில்லே.. கொஞ்சம் தண்ணி கலந்து ரெண்டு யூனிட்டா மாத்திடுங்க.

**********************************************************************************

நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"

**********************************************************************************
புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

***********************************************************************************
சார் நான் யாருக்கு என்ன பாவம் பன்னினன் சார் எனக்கு மட்டும் ஏன்..ஏன் இப்பிடி நடக்குது .
நேத்து காலையில வெளியால போனப்ப என்ன நடந்துதுன்னு பாருங்க எல்லாரம் ரொம்ப தடிப்பா பேசுறாங்க
என்னோட சைக்கில் பஞ்சர் ஆனப்ப தம்பி இங்க பஞ்சர் எங்க போடுவாங்கன்னு தெரியுமான்னு கேட்டன்
அதுக்கு ங்...கா.. என்ன சொன்னான் தெரியுமா சின்னப்பயல்
பொத்தல் எங்க விலுந்து இருக்கோ அங்கதான் போடுவாங்க இதுகூட தெரியாம
சைக்கில்ல கிலம்பிட்டு எரும மாடுன்னு திட்டிட்டு போகுது சார்

**********************************************************************************

என்ன தான் வீடு, வாசல்,தோட்டம், பங்களா,ன்னு
வசதியா இருந்தாலும் !
Train ஏறனும்னா Platformக்கு வந்துதான் ஆகனும்.!

**********************************************************************************
தவிப்பு :

ஜன்னல் ஓரத்தில் பயணம்
பக்கத்தில் ஒரு சுப்பர் பிகர்
இருந்தும் என்னால் ரசிக்க முடியவில்ல
காரணம்
என்னோட பாக்கி சில்லரை கண்டக்டர் கிட்ட இருக்கு
பய புள்ள தருவானோ மாட்டானோ?

***********************************************************************************

முருகா.. ...
நான் இன்னைக்கு வேலைக்கு போகப்போறேன்
அங்க மட்டும் எனக்கு ஒரு நல்ல ஸ்பிகர் அமைஞ்சுட்டா
கந்தா ,கதிர்வேலா ,கடம்பா உனக்கு
நான் காவடி எடுத்து தீ மிதிச்சு
வாய்யில வேல் குத்தி மொட்டை அடிச்சு
...10,000 ரூபா கானிக்கையா தருகிறேன்.

இதை எல்லாம் யார் யார் வாசிக்கிறாங்கலோ அவுங்க மேல சத்தியமா சொல்லுறேன் .

நான் மட்டும் வார்த்தை தவறினா இதை படிச்சவங்க உசிரை காணிக்கையா நீயே எடுத்துக்கப்பா ....
பழனிமலை ஆன்டவனுக்கு அரோகரா....
 30 comments:

 1. தவிப்பு :

  ஜன்னல் ஓரத்தில் பயணம்
  பக்கத்தில் ஒரு சுப்பர் பிகர்
  இருந்தும் என்னால் ரசிக்க முடியவில்ல
  காரணம்
  என்னோட பாக்கி சில்லரை கண்டக்டர் கிட்ட இருக்கு
  பய புள்ள தருவானோ மாட்டானோ?


  நான் எப்போதோ படித்த ஒரு கவிதை

  பேருந்து பயணம்
  ஜன்னல் வழியே கடக்கும்
  பள்ளத்தாக்கு
  பெரிய பெரிய மரங்கள்
  மலையில் ஆங்காங்கே வழியும் தண்ணீர்
  எதையும் ரசிக்க முடியவில்லை
  சில்லறை பாக்கி


  i like all jokes especially 4th 5th and 7th

  ReplyDelete
 2. \\\நான் மட்டும் வார்த்தை தவறினா இதை படிச்சவங்க உசிரை காணிக்கையா நீயே எடுத்துக்கப்பா ....\\\ எல்லோரும் பாத்துக்குங்கப்பா .....

  ReplyDelete
 3. சிகிச்சை சிறப்பா இருக்கே!

  ReplyDelete
 4. சிரிப்பு சிகிச்சை, சிறப்பு சிகிச்சை.

  ReplyDelete
 5. மாப்ளைக்கு நக்கல் அதிகமா பூடுச்சி!

  ReplyDelete
 6. என்ன தான் வீடு, வாசல்,தோட்டம், பங்களா,ன்னு
  வசதியா இருந்தாலும் !
  Train ஏறனும்னா Platformக்கு வந்துதான் ஆகனும்.!

  தத்துவம் தத்துவம்

  நல்லா சொல்றீங்க

  ReplyDelete
 7. தவிப்பு :

  ஜன்னல் ஓரத்தில் பயணம்
  பக்கத்தில் ஒரு சுப்பர் பிகர்
  இருந்தும் என்னால் ரசிக்க முடியவில்ல
  காரணம்
  என்னோட பாக்கி சில்லரை கண்டக்டர் கிட்ட இருக்கு
  பய புள்ள தருவானோ மாட்டானோ?

  ரசிப்பு ,ரசித்தேன் நன்றி நண்பரே

  ReplyDelete
 8. தமிழ் மணம் ஒன்பது

  ReplyDelete
 9. //மனைவி: என்னங்க நாளைக்கு நம்ம கல்யாணநாள் இதுவரைக்கும் நான் பார்க்காத இடத்துக்கு என்னை கூட்டிட்டு போங்க
  க‌ணவன்: வா செல்லம் நம்ம வீட்டு சமையல் அறைக்கு போகளாம்...
  மனைவி: ??????????????????///

  ஹி.ஹி.ஹி.ஹி.ஹி

  ReplyDelete
 10. உண்மையாக நல்ல ஒரு சிகிச்சைதான்.. சிரிப்பும் சிறப்பாக இருந்தது..

  ReplyDelete
 11. நல்ல இருக்கு பாஸ் ..

  ReplyDelete
 12. hee...... hee...... sirichen.hee...... hee...... sirichen.

  ReplyDelete
 13. நல்ல நகைச்சுவைதான் மாப்பிள.. ஆனா முதல் இரண்டு நகைச்சுவை என்ற பேரில காட்டானை கடிக்கிறாய் மாப்பிள..

  காட்டான் குழ போட்டான்...
  குழ போடுவது எப்படின்னு ஒரு மெயில் போட்டிருக்கேன்யா. பாருங்கோயா...

  ReplyDelete
 14. அற்புதமான கொமடி

  ReplyDelete
 15. காமெடி கலக்கல்.... ஹலோ உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா... யாருக்கு பிகரு அமைஞ்சா யாரு மொட்ட போடறது....நல்லா இருக்குதுங்க் கூத்து.. ஹா ஹா

  ReplyDelete
 16. த ம, உ ,ஐ எல்லாத்துலயும் ஊமக்குத்து

  ReplyDelete
 17. அசத்தல் காமெடி...என் சுதந்தர தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 18. நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"//
  செம காமெடி

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"