Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/03/2011

அம்மா ஆட்சியில் முதலாவது பெரிய சறுக்கல்!


பிரபல பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான Peugeot Citroen (உச்சரிப்பு – பேர்ஜோ சித்ரோ), இந்தியாவில் தமது தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகத் தேர்ந்தெடுத்ததே தமிழகத்தைத் தான்.

தமிழகத்தில் தொழிற்சாலை அமைக்க ஸ்ரீபெரும்புதூர் வரை அவர்களது ஆய்வுக் குழு வந்து பார்வையிட்டுச் சென்றது. அதையடுத்து ஜூன் 29ம் தேதி, முதல்வர் ஜெயலலிதாவை, கார் தயாரிப்பு நிறுவனத்தின் குழுவினர் சந்தித்துப் பேசியிருந்தனர்.


இந்தத் திட்டத்துக்கு தமிழக அரசு, முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று முதல்வரால் கூறப்பட்டிருந்தது. தொழிற்சாலை அமைப்பதற்கு, 450 முதல் 600 ஏக்கர் நிலத்தை வழங்க தமிழக அரசு சம்மதித்திருந்தது. இவ்வளவும் நடந்த நிலையில், இந்தத் திட்டம் தமிழகத்துக்கு வரப்போகின்றது என்ற நிலைமை இருந்தது.

தமிழகத்தில் இந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கினால், கார் உதிரிப் பாகங்களுக்கான dye தயாரிப்பு பிளான்ட், டிசைனுக்கான R&D லேப், body-building shop ஆகிய மூன்றிலும் முதல் கட்டமாக 5500 பேருக்கு வேலைகள் கிடைக்கும். அதைத் தவிர இப்பகுதியில் எக்ஸ்டேர்னல் மான்பவர் மற்றும், அவுட்சோர்ஸ் சப்ளைஸ் மூலமாக மேலும் 14,000 பேருக்கு வேலைகள் கிடைக்கும் என்பது, தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களாக இருந்தன.

இப்படியிருந்த நிலையில், தமிழக அரசு வேகமாகச் செயற்படவில்லை. பிரென்ச் நிறுவனம் தமிழகத்துக்கு, “நன்றி. வணக்கம்” கூறிவிட்டு குஜராத் சென்றுவிட்டது.ரென்ச் நிறுவனம், குஜராத் அரசுடன் இதற்கான ஒப்பந்தத்தில் வியாழக்கிழமை (1ம் தேதி) கையொப்பமிட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலையில், தலைமைச் செயலர் மகேஷ்வர் சாகுவும், பேர்ஜோ சித்ரோ நிறுவன துணைத் தலைவர் பிரடிக் ஃபப்ரேயும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

ஒப்பந்தப்படி, பிரென்ச் நிறுவனம் குஜராத்தில் 4,000 கோடி ருபா முதலீட்டைச் செய்கிறது. தொழிற்சாலை அமைப்பதற்காக குஜராத் அரசு 584 ஏக்கர் நிலத்தை லீஸ் அடிப்படையில் வழங்குகிறது. அகமதாபாத் நகரிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சனான்த் என்ற இடத்தில் தொழிற்சாலை அமையவுள்ளது. ஆரம்ப கட்ட உற்பத்தியாக வருடத்துக்கு ஒரு லட்சத்து அறுபத்தையாயிரம் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன.

பேர்ஜோ சித்ரோ நிறுவன தலைவர் Philippe Varin, “தொழில் முயற்சிகளுக்குத் தேவையான உதவிகளை மிகத் துரிதமாகச் செய்து கொடுப்பதில் குஜராத் அரசு, முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள நிர்வாக உட்கட்டமைப்பு ஏற்பாடுகள், அணுகுவதற்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

புதிய அரசில் தமிழக முதல்வரின் முதலாவது சறுக்கலாகக் கூறப்படுவது சமச்சீர் கல்வி விவகாரம்தான். ஆனால், அதை அவரால் சரிப்படுத்தி விடமுடியும். (ஓரளவுக்கு சரிப்படுத்தியும் விட்டார்) ஆனால், இந்தத் தொழிற்சாலை விஷயம் அப்படியல்ல. சறுக்கல், சறுக்கல்தான்! இதை மீண்டும் கொண்டுவர முடியாது! (குஜராத் அரசு சொதப்பினால்தான் சான்ஸ் உண்டு)

தமிழக அரசு நாலைந்து அமைச்சர்களையாவது லபக்கென்று பிடித்து, குஜராத் பக்கம் ட்ரெயினிங்குக்கு அனுப்பி வைக்கலாமே!!!


படங்கள், செய்தி உதவி விறுவிறுப்பு.27 comments:

 1. மாப்ள தகவலுக்கு நன்றிங்கோ!

  ReplyDelete
 2. ஒண்ணும் இல்ல சொல்லுறதுக்கு..
  போனா போகட்டும் நாம வேற கம்பெனி பாப்போம்

  ReplyDelete
 3. இவங்களால நேரடியா வேலைவாய்ப்பு உருவாக்கி தரமுடியா விட்டாலும் இந்த மாதிரி வரும் வாய்ப்புகளையாவது இழக்காமல் இருந்தால் நல்லா இருக்கும். ஆட்சியாளர்கள் செய்யும் தவறு தான் இன்று அடிமட்டம் வரை பாதிக்கிறது என்பதை எப்பொழுது தான் உணர்வார்களோ. பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 4. நம்ம ஜெயா லோக்கல் அரசியல்ல தீவிரம் ....அதான் கோட்டை விட்டிருச்சு...

  ReplyDelete
 5. நம்மாளுக எப்பவுமே ஸ்லோ தான்....

  ReplyDelete
 6. அம்மா ரொம்ப பிஸியா இருக்காங்க, அப்புறம் வர சொல்லுங்க.

  ReplyDelete
 7. நீங்கள் முடிவாகச் சொன்னது ரொம்பச் சரி
  அடுத்து இதுமாதிரி நேராம இருக்கனும்னா
  அப்படித்தான் செய்யனும்

  ReplyDelete
 8. //
  தமிழக அரசு நாலைந்து அமைச்சர்களையாவது லபக்கென்று பிடித்து, குஜராத் பக்கம் ட்ரெயினிங்குக்கு அனுப்பி வைக்கலாமே!!!
  //
  அவர்களை நம்ம ஆளுங்க கெடுத்துடுவாங்க

  ReplyDelete
 9. யானைக்கும் அடி சருக்குமே அப்பிடியா....??

  ReplyDelete
 10. எலேய் பத்தாவது தமிழ்மணம் நாந்தேன் ஹி ஹி,,,,

  ReplyDelete
 11. நீங்கள் சொன்னது போல நிறைய பேருக்கு வேலைகிடைத்து இருக்கும் அந்த வாய்பு நழுவிப்போனது கவலைக்குறியதே..

  இன்று என் கடையில்-(பகுதி-8)நினைவுகள் மாறாத உண்மைக்கதை மறக்கமுடியாத பாடசாலை நாட்கள்.
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/8.html

  ReplyDelete
 12. நல்ல பதிவு..

  ReplyDelete
 13. அம்மா ஆட்சில என்ன வேணாலும் நடக்கும்

  ReplyDelete
 14. ஓட்டு போட்டாச்சு

  ReplyDelete
 15. இப்போது தவறினாலும் இன்னும் நிறைய வாய்ப்புக்கள் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

  ReplyDelete
 16. கருன்!தமிழகத்துக்கு Peugeot Citroen வரலைன்னு சந்தோசப்படுங்க.பிரெஞ்சு டஞ்சன் கார் இது. அமெரிக்கன் கார்களை தமிழகத்துக்கு கருணாநிதி கொண்டு வந்தார்ன்னு சந்தோசமா ஒரு ஓ போடுங்க.கொடுக்கல் வாங்கல் ஏதாவது இருந்ததான்னு கேட்கபடாது:)

  ReplyDelete
 17. நம்ம ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஜப்பான்,அமெரிக்கன் மாடல் கார்களே நீடித்து உழைக்கும்.

  மேலும் இப்பொழுது உலக சந்தையில் டயர்கள் கிடைப்பதில்லை.உலக தரமான டயர்கள் MRF மற்றும் CEAT என்பதில் பெருமை கொள்வோம்.ஆனால் ஜப்பான்,அமெரிக்காவை ஈடு செய்யும் நிலையில் இல்லை.உள்ளூர் சந்தைக்கு மட்டுமே.

  ReplyDelete
 18. நல்ல பதிவு இப்படி அசமந்தம் என்றாள் பிரென்சுக்காரர்கள் ஓடிவிடுவார்கள்!

  ReplyDelete
 19. கருன்!ஏன் எல்லோருமே குஜராத்,குஜராத் என்று எல்லாவற்றுக்கும் பொய் பிம்பம் ஏற்படுத்துகிறீர்கள்.தொழில் துறையைப் பொறுத்த வரை குஜராத பாலைவன மாநிலம்.தமிழகம் உலக கடல்வழி கொண்ட மாநிலம்.காசை ஸ்விஸ்லோ,தலையணைக்கு அடியிலோ வைத்து அழகு பார்க்கமாட்டோம் என்ற ஊழலை,லஞ்சத்தை புறம் தள்ளிவிட்டால் தமிழகத்தை மிஞ்சுவதற்கு இந்தியாவில் மாநிலம் இல்லை.குஜராத்திற்கு உள்ள ஒரே பலம் அன்னியச்செலவாணியும்,வியாபார ரீதியிலான மனிதர்கள் மட்டுமே.அதனை மோடி திறமையாக பயன்ப்டுத்திக் கொள்கிறார்.

  விவசாய சலுகை மின்சாரம் என்பதெல்லாம் நீக்கப்படவேண்டிய ஒன்று.
  எவ்வளவு மின்சாரம் வேண்டுமென்றாலும் உபயோகித்துக்கொள்.ஆனால் காசு கொடு என்ற கொள்கையே மின் தட்டுப்பாட்டை நீக்கவும்,பொருளாதார நிர்வாகத்தையும் சீர்படுத்தும் தடையில்லா மின்சாரம் வரும் நேரத்தில்.

  ReplyDelete
 20. எதனால் இப்படி ஆயிற்று என்று
  தமிழக அரசு அறிக்கை வெளியிட
  வேண்டும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 21. அலோ..ஒரு நிமிடம் RAJA NATARAJAN!
  NAATTIL EVVALAVU MANITHARHAL ILAVASANGALAI ANUBAVIKKIRARHAL.
  UNGALUKKU VIVASAYI ANUBAVIKKUM ILAVASA MINSARAM THAN KANNIL PADUHIRATHO?
  ANAITHU ILAVSANGALAIYUM NIRUTHIVITTU VIVASAYIHALIDAM VAARNGAL MR.RAJA NATARAJAN.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"