Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/06/2011

ஊழலும் ,கவுண்டமணியும் - ஒரு பரபரப்புத் தகவல் வீடியோ இணைப்பு


"சுப்பிரமணிய சுவாமி, சுப்ரீம்கோர்ட்டில் தொடுத்த வழக்கு உண்மை அல்ல' என்றும், "ராஜா எந்த தவறும் செய்யவில்லை' என்றும், நம் பிரதமர் சொன்னார். ஆனால், சுப்ரீம்கோர்ட் நேரடி கண்காணிப்பில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கு .விசாரிக்கப்பட்டபோது, ராஜாவுக்கு அதில் தொடர்பு இருப்பதாகக் கூறி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு, பின் கைது செய்யப்பட்டு, இன்று வரை அவர் சிறைவாசம் அனுபவிக்கிறார். 


ஆனால், 'நம் பிரதமர், அனைத்து விவரங்களையும் நன்கு அறிவார்' என, கோர்ட்டில் வாதாடி, ராஜா சவால் விட்டார். இந்நிலையில் கனிமொழி, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பின், ஜாமின் கேட்கும் போது, 'இந்த முறைகேடுகளுக்கு ராஜா தான் பொறுப்பு' என, அவரை மாட்டிவிட்டது, கருணாநிதி தரப்பு!

 "கலைஞர் "டிவி' நிர்வாகத்தை பொறுத்தவரையில், 'அனைத்துக்கும் பொறுப்பு சரத்குமார் ரெட்டி தான்' என, தயாளு அவரை மாட்டிவிட்டார். இப்படி ஒருவரையொருவர் குற்றம் சாட்டும், மிகப்பெரிய ஊழலை செய்தவர்கள், தற்போது, 'பிரதமரே சாட்சி' என்றும், 'அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரின் சாட்சியமே போதுமானது' என்றும், மாற்றிக் கூறியுள்ளனர்.

இது, கவுண்டமணியின் வாழைப்பழக் கதையை நினைவு படுத்துகிறது. சிறையில் மாட்டிக் கொண்டவர்கள் மூலமே, உண்மை வெளி வருகிறது.


இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...40 comments:

 1. பலாப்பழத்தையே சோற்றில் மறைப்பவர்களுக்கு வாழைப்பழம் எம்மாத்திரம்? காலிங்கராயர்.

  ReplyDelete
 2. வீடியோ விக்கி கூட கருண் கடலை போடும்போதே நினைச்சேன், அண்ணனும் அதே ரூட்ல போவாருன்னு,..

  ReplyDelete
 3. மாப்ள வரும் ஆனா வராது!

  ReplyDelete
 4. மாப்ள வரும் ஆனா வராது!

  ReplyDelete
 5. கலக்குது வாழைப்பழம்

  ReplyDelete
 6. பணத்தைப் பங்குபோட்டவங்க தண்டனையைமட்டும் பங்குபோடமாட்டானுகள்

  ReplyDelete
 7. தலைப்பு பார்த்துட்டு கவுண்டருக்கு என்ன சம்பந்தம்னு வந்தா.......

  ஹா ஹா ஹா

  காமடி கலக்கல்

  ReplyDelete
 8. தமிழ் மணம் ஆறு

  ReplyDelete
 9. அரசியல் வியாதிகளின் பேச்சை இந்த
  காமெடியன்கள் பேச்சுடன் இணைத்தது மெத்தவும் சரி
  தொடர வாழ்த்துக்கள்.த.ம 8

  ReplyDelete
 10. எம்புட்டு பெரிய மேட்டரை நச்சுனு எல்லோறுக்கும் புரியும் படி அந்த புகழ்பெற்ற வாழைப்பழ காமடியை வச்சு விளக்கி இருக்கீங்க பாஸ்.
  அதான்ணே இது.இதான்ணே அது.

  இன்று என் கடையில்-
  (கில்மா)கற்பு என்பது உடல் சார்ந்ததா இல்லை மனம் சார்ந்ததா
  http://cricketnanparkal.blogspot.com/2011/09/blog-post.html

  ReplyDelete
 11. நகைச்சுவை தர்பார் நடத்தியிருக்கிறீர்கள்.
  உண்மைதானே..
  இப்படித்தானே நடக்கிறது.

  தமிழ்மணம் 9

  ReplyDelete
 12. பாவம் அவரே சும்மா கேடக்குறார் அவர ஏண்டா மாட்டி விடுற....

  ReplyDelete
 13. நான் கூட தலைப்பை பார்த்து பயந்து போய்ட்டேன். நல்லவேளை. கவுண்டமணிக்கு எங்கே சார் இவ்வளவு கோடி அடிக்கிற அளவுக்கு விவரம் இருக்கு.

  ReplyDelete
 14. அதான் சொல்லிட்டீங்களே, இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.

  ReplyDelete
 15. எப்படியோ, நல்ல காமெடி பண்ணிட்டீங்க கருண்..!!

  ReplyDelete
 16. வேலிக்கு ஓணான் சாட்சி சொன்னகதை.

  ReplyDelete
 17. காமெடியா? நல்லாதான் சொல்லி இருக்கீங்க.

  ReplyDelete
 18. மச்சி, அவங்க பண்ற காமெடியை விட உம்ம காமெடி சூப்பரு...

  ReplyDelete
 19. நான் வீடியோவை சொன்னேன்

  ReplyDelete
 20. சம்பந்தா சம்பந்தமில்லாததை சம்பந்தப்படுத்தி... பிரமாதம்...

  ReplyDelete
 21. அதுசரி... பதிவர் சந்திப்பு பற்றி கேபிளாரை தவிர யாரும் இடுகையிடவில்லையே...

  ReplyDelete
 22. உங்களோட ஸ்டைல்ல சொல்லியிருக்கீங்க.. பதிவு பரபரப்பா இருந்தது.. வாழ்த்துக்கள் கருண்..!!

  ReplyDelete
 23. அந்த இன்னொரு பழம் கிடைக்க வாய்ப்பே இல்ல!

  ReplyDelete
 24. நாடகம் அரங்கேறும் உச்ச காட்சி நடக்குதய்யா....

  ReplyDelete
 25. நல்லா விளையாடுரானுகப்பா விளையாட்டு...!!!

  ReplyDelete
 26. ஸ்பெக்ட்ரம் பற்றி நாடே மறந்து போச்சு, உமக்கென்னய்யா வேண்டி கிடக்கு...??

  ReplyDelete
 27. நாங்க மக்களுக்காகதானே உழைச்சோம் அதனால மக்கள் பணத்தை சாப்புடுறதுல தப்பே இல்லை - மூனா கானா, கனிமொழி, துஷ்டன் ராசா மறுமொழி......

  ReplyDelete
 28. //
  நம் பிரதமர், அனைத்து விவரங்களையும் நன்கு அறிவார்'
  //
  அவருக்கு ஒண்ணுமே தெரியாது

  ReplyDelete
 29. உலகம் ஒருண்டைனு இதைவைத்துதான் சொன்னாங்களா

  ReplyDelete
 30. கவுண்டமணிய பத்தி தான் ஏதோ பரபரப்பா சொல்றீங்கனு நெனச்சேன்.
  ஹிஹிஹி

  ReplyDelete
 31. நம்ம அரசியல் அப்பிடி ஆயிடுச்சிங்க...

  ReplyDelete
 32. அண்ணே இந்த மேட்டரை வைத்தே அடிகடி எழுதுறீங்க, பார்த்து வீட்ட ஆட்டோ வர போவுது.. lol

  ReplyDelete
 33. கரெக்டா புடிச்சிட்டீங்களே!

  ReplyDelete
 34. நாடகமே உலகம்-அல்ல
  நாடகமே அரசியல்
  நாளை நடப்பதை யாரறிவார்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 35. ஒருத்தர் இன்னொருத்தரை மாட்டி விடுவதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தானே பாஸ்

  ReplyDelete
 36. சிட்டுவேசன் காமெடி சூப்பர் பாஸ்

  ReplyDelete
 37. என்னமோ ஏதோன்னு வந்தேன்...கலக்கிட்டீங்க பாஸ்..

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"