இதெல்லாம் ஒரு பொழைப்பா? இப்படிக்கு மனசாட்சி .,! - சக்தி கல்வி மையம்

கற்போம்... கற்பிப்போம்.... An Educational Website

Hot Posts

9/19/2011

இதெல்லாம் ஒரு பொழைப்பா? இப்படிக்கு மனசாட்சி .,!ங்கோ
போனவாரம்
தொலைந்துவிட்ட
என் “ மணிபர்சின் மீது”
ஞாபகமாய் இருக்கிறது
மனசு...!

ன்னால்யோசிக்க
முடியவில்லை
யாரிடம் கிடைத்திருக்கும்?

தை பிரித்த
அவன்
என்னவெல்லாம் திட்டியிருப்பான்...!

ல். ஐ. சி  இரண்டு தவணை
கட்டவில்லை என்ற
நினைவூட்டல்
கடிதத்தை பார்த்தும்...!

கொடுத்த கடனைக்கேட்டு
அடகுகடையிலிருந்து
வந்திருக்கும் மிரட்டல்
கடிதத்தை பார்த்தும்...!

வருக்கு
வண்டிவேணுமாம்
இல்லாட்டி
உன் அண்ணனோடையே இரு!!!
என கண்ணீர் வடிக்கும்
என் தங்கையின்
கடிதத்தை பார்த்தும்...!

வனை கூட  அழைக்கும்
என் எதிர் வீட்டு லதாவின்
சிறிய திருமண அழைப்பிதழைப் பார்த்தும்
என்ன செய்யப்போகிறான்...!

ற்றபடி,

தில் கசங்கி கிடக்கும் 
விசிடிங்  கார்டுகளை
என்ன செய்திருப்பானோ?

 ப்படியாவது போகட்டும்
“ பர்ஸ்” கிடைத்தது பற்றி
அவனுக்கொரு கவலையும்,

காணாமல் போனது  பற்றி
எனக்கொரு துய‌ரமும்,
என்றைக்கும் எஞ்சியிருக்கும்...!

னி,
கீழே கிடைக்கும்
“ மணி பர்ஸ்சை”
பார்க்கும் போதெல்லாம்
அவன்
பயந்தே தீரவேண்டும்,
ஒருவேளை
அது  என் “ பர்ஸாக”
இருந்து விடுமோ என்று?

ஹா.ஹா.. இது மீள்பதிவு...


30 comments:

 1. புது டெம்ப்ளட் மிகவும் அருமை

  ReplyDelete
 2. கவிதை வரிகள் மிகவும் அருமை

  ReplyDelete
 3. மாப்ள ஆரம்பிக்கும்போதே நெனச்சேன் இது மீள் பதிவுன்னு...இருந்தாலும் super!

  ReplyDelete
 4. அருமையான கவிதை

  ReplyDelete
 5. /// எப்படியாவது போகட்டும்
  “ பர்ஸ்” கிடைத்தது பற்றி
  அவனுக்கொரு கவலையும்,

  காணாமல் போனது பற்றி
  எனக்கொரு துய‌ரமும்,
  என்றைக்கும் எஞ்சியிருக்கும்...!////

  இந்த வரிகள் அழகாக இருக்கின்றன...

  ReplyDelete
 6. மறுபடியும் தொலைச்சிட்டீங்களா?, நாங்க மறுபடியும் படிச்சிட்டோம், அழகிய வசன கவிதையை.

  ReplyDelete
 7. Super கவிதை கலக்களுங்கோ

  ReplyDelete
 8. சூப்பர் ...

  சூப்பர்....

  ReplyDelete
 9. பர்ஸ் தொலைந்ததைக்கூட கவிதை வடிவில் அழகா சொல்லி இருக்கிங்களே

  ReplyDelete
 10. ஒருவேளை
  அது என் “ பர்ஸாக”
  இருந்து விடுமோ என்று?


  ஹா ஹா ஹா அவனுக்கு எங்கே தெரியும் உங்கள் பணம் பேங்கில் இருக்கு
  அதற்காண ஏடிஎம் கார்டு வீட்டில் இருக்கு என்று .

  ஹா ஹா அருமை

  ReplyDelete
 11. Template-ம் சூப்பர்
  கவிதையும் சூப்பர்

  ReplyDelete
 12. ஒரு காலி பர்ஸ்-ஐ வைத்து வாழ்க்கை நிகழ்வுகள் நல்லாதானிருக்கு

  ReplyDelete
 13. அழகான கவிதை சார்! சிந்தனைக்குரியதும் கூட!

  ReplyDelete
 14. வாத்திக்கு அருமையா கவிதை வந்து கொட்டுதே...!!!

  ReplyDelete
 15. ஹீ ஹீ பாவம்டா உன் பர்ச அடிச்சவன்

  ReplyDelete
 16. என் பர்ஸும் இதே நிலைதான்

  அன்பு நண்பர்களே உதவி தேவை
  http://speedsays.blogspot.com/2011/08/blog-post.html

  ReplyDelete
 17. இந்த கவிதை யாருடையது என்ற தகவலை தெரிவிக்க முடியுமா

  ReplyDelete
 18. அருமை அருமை
  இழந்ததற்காக வருந்தாது எடுத்தவன் ஏமாந்ததற்காக
  வருந்துதல் கூட
  இல்லாதவர்களிடம் இருக்கும் நல்ல குணமே
  இதை அழகாக பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  த.ம 13

  ReplyDelete
 19. இழப்பு - பெறுதல்

  இழப்பின் வலி - பெறுதலின் வலி

  மிக அழகான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பதிவு..

  அருமை நண்பா.

  ReplyDelete
 20. உங்கள் பர்ஸ்சில் இவ்வளவு சொத்துக்களை வைத்துவிட்டு ,பாவம் எடுத்தவனைப்ப்ற்றி ஏனையா கவலைப்பட வேண்டும்? உங்கள் பர்ஸ் மூலம் உங்களைப்பற்றி ஓரளவு நாங்கள் நாங்கள் அறிந்துகொள்ளமுடிந்தது.நன்றி.

  ReplyDelete
 21. கவிதை நல்லாருக்கு....ஆனா எனக்கு ஒரு சந்தேகம்
  பர்ஸ்க்கு தமிழ்ல என்ன?

  ReplyDelete
 22. நம்ம சைட்டுக்கு வாங்க!
  தளத்துல இணைச்சுகிடுங்க!
  உங்க கருத்த சொல்லுங்க!
  நல்லா பழகுவோம்!...

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"

Post Top Ad

Your Ad Spot