Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/21/2011

என்னது வைகோவும் ராமதாசும் கூட்டணியா?


ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவும், பா.ம.க., தலைவர் ராமதாசும், இன்று உலகத் தலைவர்களாக வலம் வருகின்றனர். பிரதமர் மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் தெரியாதவர்கள் கூட, வைகோவையும், ராமதாசையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர்.

"டிவி' செய்திகள் மூலம், உலகத்தின் மூலை முடுக்கெல்லாம், வைகோவின் செல்வாக்கும், ராமதாசின் மகத்தான சாதனையும் சென்றடைந்திருக்கின்றன. இன்று, முதல்வர் ஜெயலலிதாவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியும், இந்த இரண்டு தலைவர்களின் புகழையும், பெருமையையும் எண்ணி, மிரண்டு போய் பதுங்கி இருக்கின்றனர்.அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.!

தமிழகத்தில், சட்டசபைக்குத் தேர்தல் நடந்தால், ம.தி.மு.க., 170 இடங்களிலும், பா.ம.க., 64 இடங்களிலும் தனித்துப் போட்டியிட்டாலும், நிச்சயம் அமோக வெற்றி பெறும்! அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், டெபாசிட் இழந்தாலும் ஆச்சரியமில்லை. 

அப்படிப்பட்ட பெரும் செல்வாக்கு உள்ள வைகோவும், ராமதாசும், "திருச்சி மேற்கு தொகுதியில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலைப் புறக்கணிப்போம்' என, கூறியிருப்பது, மிகவும் வேதனை அளிக்கிறது. 

திருச்சி தொகுதி மக்கள், சொல்லொணாத் துயரில் ஆழ்ந்து போயுள்ளனர். இப்போது அங்கு, வைகோவும், ராமதாசும் பிரசாரம் செய்யாமலேயே, மாபெரும் வெற்றி பெற முடியும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது. 

எனவே வைகோவும், ராமதாசும், தங்களின் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என, ம.தி.மு.க., - பா.ம.க., தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். செய்வார்களா?

போங்கடா நீங்களும் உங்க அரசியலும் ...

34 comments:

 1. என்ன கருண் சார் இவ்வளவு காட்டம்.!!!!!

  ஆனாலும் இந்த ராமதாசு காமெடி வரவர தாங்க முடியலிங்க....நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குதாம்.

  ReplyDelete
 2. அசத்தலான பதிவு

  ReplyDelete
 3. ஹா ஹா ஹா

  வஞ்ச புகழ்ச்சி..... வஞ்ச புகழ்ச்சி

  ReplyDelete
 4. இனிய காலை வணக்கம் பாஸ்...

  இருங்க படிச்சிட்டு வாரேன்.

  ReplyDelete
 5. சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளைப் புட்டு வைத்திருக்கிறீங்க.

  ஹே...ஹே...

  ReplyDelete
 6. வணக்கம் பாஸ்

  அருமையான பதிவு

  ReplyDelete
 7. பாவம்பா அவங்க, எவ்வளவு அடியை தான் தாங்குவாங்க. அதனால தான் முடியலன்னு ஒதுங்கிட்டாங்க.

  செம காட்டு காட்டியிருக்கீங்க நண்பா.

  ReplyDelete
 8. ரெண்டுமே காலி பெருங்காய டப்பாதான்

  ReplyDelete
 9. கடைசி வரியில் ஆதங்கத்தை கொட்டியிருக்கீங்க..

  ReplyDelete
 10. மாப்ள உன்னோட காமடிக்கு எல்லையே இல்லையாய்யா ஹிஹி!

  ReplyDelete
 11. கேப்டனுக்கு ஒரு சான்ஸ்ன்னு சொல்லுங்க..

  ReplyDelete
 12. //மாப்ள உன்னோட காமடிக்கு எல்லையே இல்லையாய்யா ஹிஹி!///

  repeatu...

  ReplyDelete
 13. கருப்பு கேப்டன் செருப்பு தேஞ்சி போயிடுச்சி . உள்ளாட்சி தேர்தல்ல இவரு தனியா நின்னு ஜெயித்து இந்தியா பிரதமர் ஆகிடுவாரு .

  ReplyDelete
 14. ரொம்பதான்
  குறும்பு பண்றீங்க கருன்
  தாங்முடியல!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 15. பாவம் சார் வை கோ வும் ராமதாசும்
  எவ்வளவுதான் தாங்குவாங்க
  விட்டுருங்க சார் பாவம்
  த.ம 13

  ReplyDelete
 16. சும்மா கூத்து கட்டுராங்கய்யா ....

  ReplyDelete
 17. உலகமே வியக்கும் தலைவர்கள் இவர்கள்தான், மாற்று கருத்துக்கு இடமே இல்லை ஹி ஹி போங்கடாங்....

  ReplyDelete
 18. நல்லாவே கோபப்படுறீங்க ஹா ஹா ஹா ஹா காமெடியை போட்டுகிட்டு....

  ReplyDelete
 19. அரசியல் எண்டா இதெல்லாம் சகிச்சு தானே ஆகணும் ))

  ReplyDelete
 20. இவங்கட அரசியல என்ன வென்று சொல்வது பாஸ்...........

  ReplyDelete
 21. கடைசி லைன் ரிப்பீட் மச்சி

  ReplyDelete
 22. உலகத்தலைவர்னு சொன்னீங்களே உங்களுக்கு நக்கல் தானே? சொல்றதெல்லாம் சொல்லிட்டு அதென்ன கடைசி வரி?

  ReplyDelete
 23. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா......

  ReplyDelete
 24. இதில்ல எதுவும் நடக்குமுங்க..

  ReplyDelete
 25. ஓ, இது அரசியல் பற்றிய பதிவா. நான் இல்லேப்பா.

  ReplyDelete
 26. செம காமெடி நண்பா.

  ReplyDelete
 27. பதிவின் கடைசி வரியில் நீங்களே கமண்ட்டையும் போட்டுட்டீங்களே அய்யா!!!!

  ReplyDelete
 28. ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!ஹி!

  ReplyDelete
 29. வஞ்சப் புகழ்ச்சி அணி. என்றாலும்,ஏன் மற்ற தலைவர்களுக்கு இந்த புகழ்ச்சி கிடையாதா?அதற்காக உடனே இதைச் செய்யாமல்,கொஞ்சம் காலம் கடந்து புகழலாம்ப்பா.எங்களால் தாங்க முடியாது.

  ReplyDelete
 30. வஞ்சப் புகழ்ச்சி அணி இல்லை வஞ்சப் புகழ்ச்சி ஆணி, இப்படியா ஆப்பு அடிக்கறது?

  ReplyDelete
 31. இந்தியாவிற்கு தேச துரோகம் செய்ய விடுதலைப்புலிகளிடம் பிச்சை எடுத்த காசை வைக்கோ - தீக்குளித்து செத்து போகிறவங்களுக்கு பிச்சை போட்டது போக - வைக்கோலுக்கும், நாஞ்சில் சம்ம்பத்துக்கும் பங்கு போடுவதை விட்டு, தேர்தலில் நின்று ஏன் வீண் செலவு செய்யணும்?

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"