Tamilus

The best Tamil Aggregator | Tamilus

9/26/2011

நன்றி மறந்தோமா நாம்...அன்புள்ள கடிதத்திற்கு..


ருக்கு போனவுடன்
கடிதம் எழுதச் சொல்லும்
குரல்களைக் கேட்க முடியவில்லை
பேருந்து நகரும் தருணங்களில் ....

தூரத்து உறவுகளின்
நல விசாரணைகள்
முடிந்து போகின்றன
தொலைப் பேசியிலேயே ....

தேசம் கடந்த
தகவல் தொடர்புக்கு
ஈ - மெயில், பிளாக்,பஸ்,பேஸ்புக்,ஜி +....

தோ
வருகிறது 
விஜயதசமி,
இனி 
கொலுக்களில் மட்டுமே
வீற்றிருக்குமோ
அஞ்சல் பெட்டி ...

38 comments:

 1. காலப்போக்கில் கடிதமுறை முற்றாக அழிந்தாலும் ஆச்சரியம் இல்லை.

  ReplyDelete
 2. இனிய காலை வணக்கம் பாஸ்,
  நீண்ட நாட்களின் பின்னர் உங்களிடமிருந்து நல்லதோர் கவிதை.

  மாற்றங்களைக் கடந்து செல்லும் வாழ்க்கை முறைக்கு அமைவாக பாவனையிலிருந்து மறைகின்ற பாரம்பரியங்களைப் பற்றிய ஆழ்மன அக்கறையினை இக் கவிதை தாங்கி நிற்கிறது.

  ReplyDelete
 3. இந்த மாற்றம் கட்டாயம் தேவைதான்...

  ReplyDelete
 4. என்ன செய்வது சகோதரா ,காலம் மாறிப் போச்சு ,வேற என்ன சொல்ல

  ReplyDelete
 5. இப்போது கொலுக்களில், எதிர்காலத்தில் மியூசியத்தில்.

  ReplyDelete
 6. கவிதை சூப்பர்
  காலப்போக்கில் மறைந்துவரும் பண்டைய நடைமுறைகளில் கடிதமும் ஒன்றாகியுள்ளது

  ReplyDelete
 7. எழுதும் பழக்கமே இன்று குறைந்து வருகிறது என்பது எனக்கும் குறையாகத்தான் இருந்தது. அழகாக கவிதைப்படுத்தி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 8. Unmaithan.......
  Super...kavithai.....

  ReplyDelete
 9. என்ன பண்றது, வளர்ச்சி என்ற பெயரில் பல நல்ல விஷயங்கள் எல்லாமே காணாமல் போய்விட்டது.

  ReplyDelete
 10. உண்மைதான், கடிதங்கள்படிக்கும் சந்தோஷமே இல்லாப்போச்சுதான்.

  ReplyDelete
 11. இதோ

  வருகிறது

  விஜயதசமி,

  இனி

  கொலுக்களில் மட்டுமே

  வீற்றிருக்குமோ

  அஞ்சல் பெட்டி ...

  அழகான கவிதை
  நிகழ்கால நிகழ்சியை அப்படியே
  எடுத்துக் காட்டும் அசத்தல்
  வரிகள் நன்றி!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 12. நல்லதாக நச்சென்று ஒரு கவிதை

  ReplyDelete
 13. நன்றி கொன்றோமில்லை

  நமக்குள் இருக்கும்
  கஞ்சத்தனம்
  பொறுமை இன்மை

  எல்லாம் இதற்கு காரணம்

  ReplyDelete
 14. நல்ல கவிதை...நன்றி.

  ReplyDelete
 15. கவிதை ரொம்ப நல்லாருக்குங்க வாத்தியாரே...!

  ReplyDelete
 16. என்ன செய்வது நண்பரே.. மாற்றங்கள் வரும்போது மறக்கப்படுவதும் சகஜமாகி விட்டது.

  ReplyDelete
 17. கடிதம் குறித்த இந்த பதிவு என்னைக் கவர்கிறத் நண்பரே!

  ReplyDelete
 18. பெரும்பாலான அரசு அலுவலக பயன்பாட்டுக்கு மட்டுமே தபால் பயன்பாட்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் காலத்தின் கட்டாயம்.

  ReplyDelete
 19. இன்று செல்லிடப் பேசி (mobile phone) இல்லாதயாரையும் நாம் கண்டிற முடியாது. தகவல் தொடர்பும் பரிமாற்றமும். வேகமாகவும் எளிதாகவும் ஆகிப்போனது. . .நம்முடைய எழுத்துக்களும் கூட இப்பொழுது கணினி மயமாக்கப்பட்டுவிட்டன. . .

  ReplyDelete
 20. இனி
  கொலுக்களில் மட்டுமே
  வீற்றிருக்குமோ
  அஞ்சல் பெட்டி ...//

  நெஞ்சை தொட்ட வரிகள் வாத்தி, அசத்திட்டீங்க போங்க...!!!

  ReplyDelete
 21. உண்மை....
  உண்மை...
  உண்மை...
  கவிதை அருமை.

  ReplyDelete
 22. அஞ்சல் பெட்டிக்கு ஒரு அஞ்சலி

  கொஞ்சம் யோசிக்க வைத்தது... கவிதை

  ReplyDelete
 23. மாற்றம் ஒன்றை தவிர, காலப்போக்கில் எல்லாம் மாயம் -

  ReplyDelete
 24. மாப்ள.. பதிவு காலைல போட்டும் மெயில் லிங்க் இப்போதான் வருது ஏன்?

  ReplyDelete
 25. பாராட்டுகள். இந்த பழைய அந்த கடிதம் உள்வாங்கி பெட்டியை நமக்கு நினைவிற்கு படுத்தியமைக்கு இல்லை இன்னும் காணாமல் போகாமல்தான் இருக்கிறது காலம் மாறினாலும் பல்லாண்டு வாழட்டும்

  ReplyDelete
 26. கருன் சார்,

  காலப்போக்குல மனுசங்களையே மியூசியத்துலதான் பாக்க வேண்டியிருக்கும். பாக்க வர்ரதுக ”ரோபோ”க்களா இருக்கும்!

  கவிதை!

  ReplyDelete
 27. அருமையான கவிதை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 28. //இனி
  கொலுக்களில் மட்டுமே
  வீற்றிருக்குமோ
  அஞ்சல் பெட்டி ...//

  உங்கள் கேள்வியில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது நண்பரே... கடிதம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாமல் போய்விட்டது பலருக்கு....

  ReplyDelete
 29. சேரன் படத்திற்கு பிறகு உங்கள் பதிவு தான் ஞாபகத்தை தூண்டுகிறது... அருமை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. உங்கள் கவிதை பழைய ஞாபகங்களை நினைவுபடுத்துகின்றது அருமை....
  ஆனாலும் முகவரியில் ஆள் இல்லை என திரும்பிவரும் அவஸ்தை இல்லை,
  ஸ்டாம்ப் ஒட்டாத தபால்களுக்கு அபராதம் செலுத்தும் தண்டனை இல்லை

  ReplyDelete
 31. இந்த அழகிய கவிதையை அரசாங்கத்திற்கு அனுப்புங்களேன்.

  ReplyDelete

அலோ..ஒரு நிமிடம் ..உங்க "கருத்தை சொல்லிட்டு போங்க"